முருகநோலன் : தம்பிங்களா. சூப்பர் ஸ்டார் கால்ஷீட் கெடைச்சிருக்கு. இது வரைக்கும் யாருமே பண்ணாத ஒரு கதையை பண்றோம். சூப்பர் ஸ்டாரை நேரா கோட்டைக்கு அனுப்புறோம். லைக்கா கம்பெனி. 250 கோடியை ஆட்டையை போடுறொம்.
உதவி இயக்குநர் : சார் நீங்க இந்நேரம் ஒரு கதையை மனசுல வச்சிருப்பீங்களே சார்.
முருகநோலன் : இருக்குடா. இருக்கு. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ஒரு ஒன்லைன்.
உதவி இயக்குநர் : சொல்லுங்க சார். சொல்லுங்க
முருகநோலன் : ரஜினி ஒரு போலீஸ் ஆபீசர். ஒரு சர்வதேச தாதாவை ஒண்டியாளா காலி பண்றாரு.
உதவி இயக்குநர் : இது மாதிரி படம் எதையும் கிறிஸ்டோபர் நோலன் எடுக்கலையே பாஸ்.
முருகநோலன் : என்னடா திமிரா ? டைட்டில்ல உன் பேரு வரணுமா வேணாமா ?
உதவி இயக்குநர் : ஐயோ. இல்ல பாஸ். இது ஒரு வித்தியாசமான ஒன்லைன். இது வரைக்கும், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் எதுலயுமே இதை எடுத்ததே இல்ல. ரஜினி இன்ஸ்பெக்டரா ? ஏசியா பாஸ் ?
முருகநோலன் : இடியட். சூப்பர் ஸ்டார்டா அவரு. 90 கோடி சம்பளம் வாங்கிட்டு இன்ஸ்பெக்டரா நடிச்சா அவரு மரியாதை என்ன ஆவறது ?
உதவி இயக்குநர் : டி.சியா பாஸ்
முருகநோலன் : நோ. கமிஷனர். சிட்டியவே ஒத்தை ஆளா கலக்குறாரு.
உதவி இயக்குநர் : மகாபலிபுரத்துல ஒரு ஃபைட் வச்சுக்கலாம் பாஸ். சாயிற மாதிரி இருக்குற அந்த உருண்டை பாறையை, வாயாலயே ஊதி பறக்க விடுற மாதிரி ஒரு சீன் வைச்சுக்கலாம்.
முருகநோலன் : டேய் ஃபூல். அவர் சென்னை கமிஷனர் இல்லை. மும்பை கமிஷனர்.
உதவி இயக்குநர் : மும்பையில அண்டர்வேர்ல்ட் டானையெல்லாம் காலி பண்ற மாதிரி கேரக்டரா பாஸ்.
முருகநோலன் : கரெக்ட். ஆனா அதுக்கு முன்னாடி அவரு டெல்லி கமிஷனர். டெல்லியில எல்லா தீவிரவாதி, ரவுடிகளை ஒரே ஆளா காலி பண்றாரு.
உதவி இயக்குநர் : டெல்லியில கமிஷனரா இருக்குறவரு, எப்படி பாஸ், மும்பை கமிஷனரா ஆக முடியும் ? ஒரு ஸ்டேட்டுக்கு அலாட்மெண்ட் போட்டா கடைசி வரைக்கும் அங்கதானே இருக்க முடியும் ?
முருகநோலன் : இங்கதான் லாஜிக் இடிக்காம ஒரு சீன் வைக்கிறோம். உள்துறை அமைச்சரே நேர்ல கூப்புட்டு மும்பையில போதை பொருள் அதிகமாயிருச்சு. நீங்கதான் கட்டுப்படுத்தணும்னு சொல்றாரு. உடனே ரஜினி மும்பை கெளம்பறாரு.
உதவி இயக்குநர் : பிரமாதம் பாஸ். ஓப்பனிங் பைட் இருக்கா பாஸ் ?
முருகநோலன் : ஒப்பனிங்லயே வில்லனோட பர்த்டே பார்ட்டி. ஒரு 400 ரவுடிங்க கையில துப்பாக்கியோட இருக்காங்க. ரஜினி கத்தியோட போயி அவங்க அத்தனை பேரையும் துவம்சம் பண்றாரு.
உதவி இயக்குநர் : எப்படி பாஸ். ரஜினி உள்ள நுழையும்போதே வில்லன் கால் நடுவுல சுட்டுட்டான்னா படம் முடிஞ்சுடுமே.
முருகநோலன் : இடியட். சூப்பர் ஸ்டார்டா அவரு. வில்லன் துப்பாக்கி வைச்சிருந்தா இவரும் துப்பாக்கியால சுட்டா அதுல என்ன ஹீரோயிசம் இருக்கு ? ஒரே ஒரு கத்தியை வச்சு 400 பேரையும் காலி பண்றாரு.
உதவி இயக்குநர் : நம்பற மாதிரியாவா பாஸ் இருக்கு ?
முருகநோலன் : ஒரே குண்டுல 400 பாகிஸ்தான் தீவிரவாதி செத்துட்டாங்கன்னு சொன்னதை நாடே நம்பி மோடிக்கு ஓட்டு போடலையா ? இது சினிமா. என்ன வேணாலும் பண்ணலாம்.
ஹோம் மினிஸ்டர் சொன்னதை கேட்டு ரஜினி அவர் மகளை கூப்புட்டுக்கிட்டு மும்பை வர்றாரு. ஏர்போர்ட்டுலயே அதிகாரிங்க பெரிய பிரச்சினைன்னு சொல்றாங்க.
உதவி இயக்குநர் : ரஜினி பொண்ணு எல்கேஜி படிக்குதா பாஸ்
முருகநோலன் : இடியட். ரஜினி பொண்ணு காலேஜ் முடிச்சிருச்சு.
உதவி இயக்குநர் : சூப்பர் ஸ்டாருக்கு இவ்வளவு பெரிய பொண்ணா இருந்தா நல்லா ரசிகர்கள் ஏத்துப்பாங்களா பாஸ் ?
முருகநோலன் : மண்சோறு சாப்புடுற முட்டாப் பசங்க அவனுங்க. ரஜினி எல்கேஜி படிக்கிறாருன்னு சொன்னாக் கூட ஏத்துக்குவாங்க.
கதையை கேளு மேன். ஏர்போர்ட்டுலயே துணை முதல்வரோட பொண்ணையும் அவ ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரையும் ஒரு போதை மருந்து கும்பல் கடத்திடுச்சுன்னு தகவல் சொல்றாங்க. ரஜினி ஏர்போர்ட்டுல இருந்து நேரா விசாரணையை ஆரம்பிச்சு, ஒரு ஷூ வாங்குன பில்லை வச்சு தீவிரவாதியை கண்டுபிடிக்கிறாரு.
உதவி இயக்குநர் : ஷூ பில்லை வைச்சு எப்படி பாஸ் வில்லன் இருக்குற இடத்தை கண்டுபிடிக்க முடியும் ?
முருகநோலன் : அதுதாண்டா சூப்பர் ஸ்டார். கண்டுபிடிக்கிறாரு. கண்டுபிடிச்சு, துணை முதல்வரோட மகளை மட்டும் அவரே அடைச்சு வச்சுட்டு மத்த ரெண்டு பேரையும் விடுவிக்கிறாரு.
உதவி இயக்குநர் : ஏன் பாஸ் அந்த பொண்ணை மட்டும் வச்சுக்கிறாரு ?
முருகநோலன் : அங்கதான் ட்விஸ்ட் வைக்கிறோம். துணை முதல்வர் ரவுடிகளுக்கு ஆதரவு தர்றாரு. அவரு பொண்ணு கிடைக்கலன்னா கவலையில இருப்பாரு. அந்த சாக்குல ரெண்டே நாள்ல சிட்டியில மொத்த ரவுடியையும் காலி பண்றாரு.
உதவி இயக்குநர் : செம்ம பாஸ். ஆனா ரொமான்ஸே இல்லையே பாஸ்.
முருகநோலன் : இங்கதான் நயந்தாராவை கொண்டு வர்றோம். நயன் தாராவை பாத்த ரஜினி உடனே லவ் ஆயிடுறாரு. ரஜினியோட பொண்ணும் அப்பா நீங்க உடனே உங்க லவ்வை சொல்லுங்கன்னு தொல்லை பண்ணுது. ரஜினி தினமும் நயன் தாரா பின்னாடியே பாலோ பண்றாரு.
உதவி இயக்குநர் : பாஸ். ரஜினி மும்பை நகரத்தோட கமிஷனர். 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்போட இருக்கணும். அவரு பொறுக்கிப் பசங்க மாதிரி பொண்ணு பின்னாடி சுத்துற மாதிரி வச்சா நல்லாவா இருக்கும். இந்த மாதிரி பொண்ணுங்க பின்னாடி சுத்துற பசங்களை அரெஸ்ட் பண்றதுதானே கமிஷனர் வேலை.
அது இல்லாம கமிஷனர் ஆகணும்னா கொறைஞ்சது 50 வயசாவது ஆயிருக்கணும். இந்த வயசுல பொண்ணு பின்னாடி சுத்துனா, இந்த வயசுல உனக்கு ரொமான்ஸ் கேக்குதாடா கெழட்டுப் பயலேன்னு செருப்பை கழட்டி அடிக்க மாட்டாங்க ?
முருகநோலன் : இவரு சாதாரண ஸ்டார் இல்லடா. சூப்பர் ஸ்டார். அவர் பண்ணா ஜனங்க ஏத்துக்குவாங்க.
உதவி இயக்குநர் : சரி. நயன் தாரா ரஜினி லவ்வை ஏத்துக்குவாங்களா ?
முருகநோலன் : இந்த இடத்துல ஒரு வித்தியாசமான லவ்வை காட்ட போறொம். என்னை பின்னாடியே ஒருத்தன் பாலோ பண்ணிட்டு வர்றான்னு நயன் தாரா புகார் குடுக்க கமிஷனர் ஆபீசுக்கே வர்றாங்க.
வந்து பாத்தா அந்த கமிஷனரே ரஜினிதான்.
உதவி இயக்குநர் : செருப்பை கழட்டி சப்புன்னு வச்சாங்களா ?
முருகநோலன் : நோ. சாரி சார். நீங்கதான் புது கமிஷனருன்னு எனக்கு தெரியல. வாங்களேன் ஒரு கப் காப்பி சாப்புடலாம்னு கூப்புடுறாங்க. அப்படியே லவ் டெவலப் ஆகுது.
உதவி இயக்குநர் : பின்னிட்டீங்க பாஸ். வில்லன் என்ன ஆனான் பாஸ் ?
முருகநோலன் : இப்போ வரைக்கும் சின்ன வில்லன். இண்டர்வல் ப்ளாக்குக்கு அப்புறம் பெரிய வில்லன். சின்ன வில்லன், திடீர்னு பெரிய வில்லனுக்கு பயந்து போயி ரஜினி பொண்ணுக்கு போன் பண்ணி உங்க அப்பாகிட்ட பேசணும்னு சொல்றான். அப்பா வெளியில போயிருக்குன்னு அந்த பொண்ணு சொல்லுது.
உதவி இயக்குநர் : ஏன் நேரா ரஜினிகிட்டயே பேசிருக்கலாமே. எதுக்கு பொண்ணுகிட்ட பேசணும் ?
முருகநோலன் : அந்த பொண்ணுக்கு டயலாக் வேணாமா ? படம் பூரா லூசு மாதிரி சிரிச்சிக்கிட்டே இருந்தா நல்லாவா இருக்கும் ?
இண்டர்வெல் ப்ளாக்குக்கு அப்புறம் பெரிய வில்லனை அறிமுகப்படுத்தறோம். அவன் சின்ன வில்லனை கொல்றான்.
உதவி இயக்குநர் : இந்த இடத்துல ஆடியன்ஸ், டேய் எங்களையும் சேத்து கொல்லுடா. புண்ணியமா போகும்னு கதறுவாங்க பாஸ். பின்னுறீங்க.
முருகநோலன் : இந்த இடத்துல ஒரு ஆக்ஷன் ப்ளாக் வைக்கணும். ரஜினியும் அவரு பொண்ணும் எலக்ட்ரிக் ட்ரெயின்ல போறாங்க. அப்போ ஒருத்தன் பாலோ பண்றான்.
உதவி இயக்குநர் : பாஸ். அவரு மும்பை கமிஷனர். அவரு எதுக்கு ட்ரெயின்ல போகணும்.
முருகநோலன் : நாளை பின்ன அரசியலுக்கு அவர் வருவாருடா. கார்லயே போயிக்கிட்டு இருந்தா மக்கள் என்ன நினைப்பாங்க. ட்ரெயின்ல போனாத்தான் ரஜினி ஒரு எளிய மராத்தி பிள்ளைன்னு நினைப்பாங்க.
உதவி இயக்குநர் : சூப்பர் பாஸ்.
முருகநோலன் : அப்போ ரஜினி அவர் பொண்ணுக்கிட்ட, பூ போட்ட சட்டை போட்டுக்கிட்டு செல்போனை நோண்டிக்கிட்டு ஒருத்தன் இருக்கானா பாருன்னு கேக்கறாரு. அவ ஆமாம்னு சொல்லவும், ரஜினி அவன் கிட்ட போயி, தனியாத்தான் வர்றேன்னு சொல்லுன்னு சொல்லுறாரு.
ரஜினி ரயில்வே ஸ்டேசன்ல இறங்குனதும், ஒரு வித்தியாசமான பைட்டு.
உதவி இயக்குநர் : என்ன வித்தியாசம் பாஸ் ?
முருகநோலன் : 30 பைட்டர்ஸ் வர்றாங்க. ரஜினி உக்காந்துக்கிட்டே பைட் பண்றாரு.
உதவி இயக்குநர் : ஏன் பாஸ் உக்காந்துக்கிட்டே பைட் பண்றாரு ?
முருகநோலன் : 70 வயசு ஆகுதுடா. அவர் வயசுக்கேத்த ரோல் குடுக்கணும்னா வீடு படத்துல சொக்கலிங்க பாகவதர் ரோல்தான் குடுக்கணும். அதான் அவர் வயசுக்கேத்த மாதிரி, உக்காந்துகிட்டே பைட்டை ஆரம்பிக்கிறாரு.
30 பைட்டர்ஸையும் பறக்க விடுறாரு. அவர் கோட்டை விரிச்சதும், 8 பேர் பறக்குறாங்க.
உதவி இயக்குநர் : பரபரப்பா இருக்குது பாஸ்.
முருகநோலன் : மேல கேளு. திடீர்னு பெரிய வில்லன். எங்கடா அந்த கமிஷனர் ? அவனை உடனே கொல்லணும்னு சொல்லிட்டு, ரஜினியும் அவர் பொண்ணையும் அவர் போற கார் மேல லாரியை ஏத்தி கொல்ல முயற்சி பண்றான். லாரி கார் மேல மோதுது.
அப்படியே கட் பண்ணி ஹாஸ்பிட்டலை காட்டுறோம்.
டாக்டர் ரஜினி பொண்ணுக்கிட்ட, உங்க அப்பா கோமாவுல இருக்காருன்னு சொல்றாரு.
உதவி இயக்குநர் : பொண்ணுக்கு ஒன்னும் அடி இல்லையே பாஸ் ?
முருகநோலன் : இல்ல. அங்கதான் ஒரு பெரிய ட்விஸ்ட். டாக்டர், உங்க அப்பா பொழச்சுக்குவாரு. உனக்கு மூளையில மூணு இடத்துல ரத்தக் கசிவு இருக்கு. நீ இன்னும் ரெண்டு மணி நேரத்துல செத்துடுவன்னு சொல்றாரு.
உதவி இயக்குநர் : என்ன பாஸ். கோமாவுல இருக்குற ரஜினி பெட்ல இருக்காரு. ரெண்டு மணி நேரத்துல சாகப் போற பொண்ணு உக்காந்து பேசிக்கிட்டு இருக்கு.
முருகநோலன் : இங்கதான் நம்ப மெடிக்கல் நாலேட்ஜை பயன்படுத்தணும். ரத்தக் கசிவு மூளையில. படுக்க வைச்சா ரத்தக் கசிவு அதிகமாயிடாதா ? அதனாலதான் அந்த பொண்ணு உக்காந்துக்கிட்டு டாக்டர்கிட்ட பேசுது.
உதவி இயக்குநர் : பிரமாதம் பாஸ். பொண்ணு செத்ததும் ரஜினி சோகமாயிடுவாரே…
முருகநோலன் : ஆமா. சோகமாவும் கோவமாவும் ஆயிடுறாரு. இது எல்லாத்தையும் ப்ளாஷ்பேக்குல சொல்றோம்.
உதவி இயக்குநர் : யாரு மூலமா ப்ளாஷ்பேக் பாஸ் ?
முருகநோலன் : அந்த ப்ளாஷ்பேக்குக்கு ஒரு பிரமாதமான சீன் வச்சிருக்கேன். ஆரம்பத்துல ரஜினி எல்லா ரவுடியையும் என்கவுண்ட்டர்ல கொல்றாருன்னு சொன்னேன்ல ? அதை விசாரிக்க தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர் வர்றாங்க. வந்து ரஜினிக்கிட்ட நீங்க பண்ணது எல்லாம் போலி என்கவுண்ட்டர்னு சொல்றாங்க.
உதவி இயக்குநர் : ரஜினி என்ன பாஸ் சொல்றாரு ?
முருகநோலன் : ரஜினி, உடனே துப்பாக்கியை எடுத்து அவங்க தலையில வைக்கிறாரு. அவர் கூட இருக்குற அத்தனை போலீஸும் துப்பாக்கியை எடுத்து நீட்டுறாங்க. ரஜினி, நான் சொல்ற அறிக்கையில கையெழுத்து போடுங்கன்னு சொல்றாரு. அந்த அம்மா பயத்தோட கையெழுத்து போடுது.
உதவி இயக்குநர் : பாஸ் தேசிய மனித உரிமை ஆணைய தலைவரா ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிதான் இருப்பாங்க. அவங்களை ஒரு சாதாரண கமிஷனர் எப்படி துப்பாக்கியை வச்சு மிரட்ட முடியும் ?
முருகநோலன் : அதுனாலதான் இது சூப்பர்ஸ்டார் படம்.
உதவி இயக்குநர் : சரி. ப்ளாஷ் பேக்குக்கு அப்புறம் என்ன நடக்குது.
முருகநோலன் : ரஜினி பொண்ணு இறந்த சோகத்துல வீட்டுக்கு போறாரு. அவர் பொண்ணு போனை எடுத்து பாக்கறாரு. அதுல பொண்ணு ஒரு வீடியோ மெசேஜ் வச்சிருக்கு. அப்பா சின்ன வில்லன் போன் பண்ணாரு. நீங்க நினைக்கிற மாதிரி நம்பளை கொல்ல முயற்சி பண்ணது சின்ன வில்லன் இல்ல. இன்னொரு ஆளுன்னு சொல்லுது.
உதவி இயக்குநர் : ரஜினிக்கு அதிர்ச்சியா இருக்குமே ?
முருகநோலன் : ரஜினி செம கோவமாயிடுறாரு. வண்டியை எடுத்துக்கிட்டு, ஒரு பெரிய க்ரவுண்டுக்கு போயி, ரவுண்ட் அடிக்கிறாரு.
உதவி இயக்குநர் : என்ன பாஸ். கோவமா இருக்குற ஆளு, புதுசா வண்டி கத்துக்கிற மாதிரி க்ரவுண்டுல ரவுண்டு அடிக்கிறாரு.
முருகநோலன் : ரஜினி ரவுண்டு அடிக்கிற அதே நேரத்துல, நடந்ததையெல்லாம் ப்ளாஷ் கட்டுல காட்டுறோம். ரஜினி ரவுண்டு அடிச்சிக்கிட்டே நடந்ததையெல்லாம் நினைச்சு பாக்கறாருன்றதை ஆடியன்சுக்கு புரிய வைக்கிறோம்.
உதவி இயக்குநர் : பின்னுறீங்க பாஸ்.
முருகநோலன் : ரஜினி கோவத்துல, மும்பையில இருக்குற எல்லா ரவுடியையும் கன்னா பின்னான்னு சுடுறாரு. இந்த நேரத்துல மனித உரிமை ஆணையம் அவரு மேல நடவடிக்கை எடுக்குது.
உதவி இயக்குநர் : என்ன நடவடிக்கை பாஸ் ?
முருகநோலன் : அவரை சஸ்பெண்ட் பண்ணி ட்ரான்ஸ்பர் பண்ணுறாங்க.
உதவி இயக்குநர் : பாஸ் சஸ்பெண்ட் பண்ணா வீட்டுலதானே இருக்கணும். ட்ரான்ஸ்பர் எப்படி பண்ண முடியும் ?
முருகநோலன் : அது மும்பை போலீஸ் டா. அங்க ரெண்டும் பண்ணுவாங்க.
உதவி இயக்குநர் : சூப்பர் பாஸ்.
முருகநோலன் : இந்த நேரத்துல ரஜினி பெரிய வில்லன் இருக்குறதை கண்டு புடிச்சிடுறாரு. ஆனா அவரை சஸ்பெண்ட் மற்றும் ட்ரான்ஸ்பர் பண்ணிடுறாங்க. டெலிகேட் பொசிசன்ல ரஜினி இருக்காரு.
ஆடியன்ஸும் பதட்டத்துல இருக்காங்க.
உதவி இயக்குநர் : படம் எப்போ முடியும்ன்ற பதட்டமா பாஸ் ?
முருகநோலன் : நோ. ரஜினியை சஸ்பெண்ட் மற்றும் ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்களே. எப்படி வில்லனை முறியடிப்பாருன்ற பதட்டம்.
டக்குன்னு நாம ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம்.
அந்த நேரத்துல ரஜினியை கூப்புடுற டிஜிபி, உங்களுக்கு பிசிக்கல் பிட்னெஸ் இல்ல. அதனால நீங்க வேலை பாக்க முடியாது. ரிசைன் பண்ணிடுங்கன்னு சொல்றாரு.
உதவி இயக்குநர் : பாஸ். மனித உரிமை ஆணைய உத்தரவாலதானே ரஜினி சஸ்பென்ட் ஆனாரு. நீங்க திடீர்னு பிசிக்கல் பிட்னஸ்னு ஒரு புது கதை சொல்லுறீங்க ?
முருகநோலன் : ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்புடுறவங்க. மறந்துடாத.
உதவி இயக்குநர் : புரியுது பாஸ். மேல சொல்லுங்க.
முருகநோலன் : டிஜிபிக்கிட்ட சார் எனக்கு ஒரு நாலே நாலு நாள் குடுங்க. பிசிக்கல் பிட்னஸ் சரி பண்ணிட்டு வர்றேன்னு சொல்றாரு.
உதவி இயக்குநர் : வாக்கிங் ஸ்டிக் வச்சுக்கிட்டு நடக்க வேண்டிய வயசுல எப்படி பாஸ் நாலு நாள்ல பிசிக்கல் பிட்னஸ் சரி பண்ணுவாரு ?
முருகநோலன் : அதுக்காக ஒரு ஸ்பெசல் சீன் வச்சிருக்கேன். ரஜினி நேரா ஜிம்முக்கு போறாரு. 140 கிலோ வெயிட்டை போட்டு கண்டினியூஸா எக்சர்சைஸ் பண்றாரு. பிசிக்கலா பிட் ஆயி மசில்ஸ் காட்டுறாரு. டிஜிபி இம்ப்ரெஸ் ஆகி வேலைக்கு எடுத்துக்குறாரு.
உதவி இயக்குநர் : சூப்பர் பாஸ்.
முருகநோலன் : இந்த நேரத்துல, லண்டன், ஆப்ரிக்கா, சீனாவுல இருந்து, பெரிய வில்லனை தேட ஒரு டீமை அனுப்பறேன்னு சொல்றாங்க. டிஜிபி ரஜினியை கூப்புட்டு, அந்த டீமோட சேந்து வேலை செய்யுங்கன்னு சொல்றாரு.
ரஜினி, முடியாது சார். இது மும்பைக்கே அவமானம். நானே அவனை புடிக்கிறேன்னு சொல்றாரு.
உதவி இயக்குநர் : நயன் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க பாஸ்.
முருகநோலன் : அவங்களுக்கு இண்டர்வெலுக்கு பின்னாடி நாலு டயலாக்தான். நயன் மனித உரிமை ஆணைய தலைவரை பாத்து, அவர் மேல நடவடிக்கை எடுக்காதீங்கன்னு கேட்டுக்கறாங்க.
உதவி இயக்குநர் : ரெண்டு பேருக்கும் டூயட் இல்லையா பாஸ்.
முருகநோலன் : வைக்கலாம்னுதான் பாத்தேன். இருக்குற பாட்டுலயே ரஜினி டான்ஸ்ன்ற பேர்ல கையை மட்டும் ஆட்டிக்கிட்டு இருப்பாரு. டூயட்லயும் கையை மட்டும் ஆட்டிக்கிட்டே இருந்தா நல்லா இருக்காதுன்னு வைக்கல.
உதவி இயக்குநர் : மேல சொல்லுங்க பாஸ்.
முருகநோலன் : வில்லன் ரஜினி மேல கோவமாகி, மும்பை காவல் துறையில இருக்குற நூறு ஆபீஸர்களை கொலை பண்றான். இதை பாத்து போலீஸ் அதிகாரிகள் வேலைக்கு வராம வீட்டுலயே இருந்துடுறாங்க.
உதவி இயக்குநர் : 100 போலீஸ் ஆபீசர்களை எப்படி பாஸ் கொலை பண்ண முடியும் ?
முருகநோலன் : அப்போதான் வில்லன் மோசமானவனா இருக்கானே. ரஜினிக்கு என்ன ஆகும்னு ஆடியன்ஸ் டென்சன் ஆவாங்க.
ஹாஸ்பிட்டலை காட்டுறோம். அதுல, கழட்டி போட்ட போலீஸ் யூனிபார்ம் மலை போல குவிஞ்சு கிடக்குறதை காட்டுறோம். ஆடியன்ஸ் ஃபீலாகி உடம்பெல்லாம் முறுக்கேறி க்ளைமாக்சுக்கு தயார் ஆகறாங்க.
உதவி இயக்குநர் : அட்டகாசம் பாஸ். அப்புறம் என்ன பாஸ்.
முருகநோலன் : அப்புறம் என்ன. ரஜினி ஒத்தை ஆளா, போலீஸ் துணை இல்லாம, வில்லனை போட்டு பொரட்டி எடுத்து கொலை பண்றாரு.
எண்டுல, போலீஸ் யூனிபார்ம் போட்ட ஒரு சின்ன பையன், ரஜினியை பாத்து சல்யூட் வைக்கிறான்.
ரிட்டன் அண்ட் டைரக்டட் பை
ஏ.ஆர்.முருகநோலன்னு டைட்டில் கார்டு ஓடுது.
உதவி இயக்குநர் : நினைச்சு பாக்கும்போதே புல்லரிக்குது பாஸ். ரஜினி இமேஜை உயர்த்துற மாதிரி ஒரு பெப்பி சீன் வைக்கலாமே பாஸ்.
முருகநோலன் : வச்சிருக்கேனே. வச்சிருக்கேன். திடீர்னு ரஜினியை டெல்லிக்கு வரச் சொல்ற மத்திய உள்துறை அமைச்சர் ரஜினியை உங்களை ட்ரான்ஸ்பர் பண்றேன்னு சொல்றாரு.
ரஜினி உடனே என்னை முடிஞ்சா மாத்திப் பாருங்கன்னு சொல்றாரு.
உதவி இயக்குநர் : பாஸ். அவரு மத்திய உள்துறை அமைச்சர். இந்தியாவுல எல்லா ஐபிஎஸ் அதிகாரியும் அவர் கட்டுப்பாட்டுலதான். அவரை எப்படி ஒரு சாதாரண ஏடிஜிபி எதுத்து பேச முடியும்.
முருகநோலன் : இங்கதான் தப்பு பண்ற. அந்த மண்சோறு திண்ணிகள், இதுக்கு விசிலடிச்சு சில்லரைகளை சிதற விடுவானுங்க.
உதவி இயக்குநர் : பாஸ். 250 கோடி பட்ஜெட்டுன்னு சொல்றீங்க. படத்துல செலவுக்கே வேலை இல்லையே..
முருகநோலன் : ஒவ்வொரு ப்ரேமுலயும் 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்டை நிக்க வைச்சு பிரம்மாண்டத்தை காட்டுறோம்.
உதவி இயக்குநர் முருகநோலன் காலில் விழுகிறார்.
முருகநோலன் : எந்திரிப்பா. படத்துல ஓப்பனிங் சாங் லிரிக் என்ன தெரியுமா ?
உதவி இயக்குநர் : என்ன பாஸ் ?
முருகநோலன் : சும்மா கிழி கிழி கிழி.
உதவி இயக்குநர் : இது எதுக்கு பாஸ்.
முருகநோலன் : படம் பாக்க வர்ற ஆடியன்ஸை கிழி கிழின்னு கிழிச்சு அனுப்பறோம். அம்புட்டு பயலும் செத்துடணும்.
உதவி இயக்குநர் தேம்பி தேம்பி ஆனந்தத்தில் அழுகிறார்.
Savukku Shankar always oombing rajini poolu now a days pola…
Andha manushan 70 vayasulayum uzhaichi saapidaraan da unna maadhiri DMK ku mama vaela paathu illa… Go and fuck yourself you Cuckold…
ennathu uzhaichi saapdrana…avane nindu fight pannamudiyathunu thaan ukkanthe fight pannuran, dance nu kaiya thukki thukki kamicha athu uzhaippada?
oh, enna sonnalum nambura mendaliyans neenga thaana?
Change your name asshole, mud eating creature
டேய் மண் சோறு தின்னும் ரஜினி குஞ்சு ஜானு, உன் தலையில் வாயில் ”பீ”
சூப்பர் …பின்னிட்டிங்க …நல்லா கதையை பிரிச்சி மேய்வதால் அவரது அடுத்த பட சான்ஸ் உங்களை தேடி வந்தாலும் வரும் …?
காமெடி என்ற பெயரில் ஒரு கடுப்பு பதிவு…இது வேறு தளத்தில் வந்து இருந்தால் சிரித்து இருக்கலாம்…சவுக்கு தளத்தில் எனும் பொழுது
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ங்கிற விவேக் காமெடி தான் வருது…;-(
ஆப்போசிட் ரசிக குஞ்சுக பதிவு மாதிரி ..கொடும..
திங்கிற மண் சோத்துக்கு இது போதும்
யாருப்பா அந்த உதவி இயக்குனர்… இவ்ளோ தெளிவா இருக்கான்! எப்புடி முருகநோலன்கிட்ட போயி சேர்ந்தான்?
Chumma kizhi🤣🤣🤣
தமிழ் ரசிகர்கள் முட்டாள் என்று இயக்குனர் கள் நம்பி இந்த மாதிரி படத்தை எடுக்கிறார்கள்.
Ithellam paavam my son 😂😂😂😂
Perfect narrative! I felt the same! Murugadoss disappointing! Seems he could not steal any stories this time and tried his own story! But failed miserably!! A sorry movie for Rajini fans! Pity!