நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் 50ம் ஆண்டு விழாவில் பேசுகையில், துக்ளக் பத்திரிக்கையை புகழ்கிறேன் என்று மறைமுகமாக, முரசொலியை இகழ்ந்தார். “முரசொலியை கையில் வைத்திருந்தால் அவன் திமுக என்று சொல்லுவார்கள். துக்ளக்கை கையில் வைத்திருந்தால் அவனை அறிவாளி என்று சொல்லுவார்கள்” என்று பேசினார் ரஜினி.
முரசொலி படிப்பவனை முட்டாள் என்று வெளிப்படையாக கருத்து கூறும் அளவுக்கு ரஜினி துணிச்சலான நபர் அல்ல. தடிக்கு வலிக்காமல் பாம்பை அடிக்கும் தன்மை கொண்டவர் ரஜினி. ஆங்கிலத்தில் Having butter on both sides of the bread என்று கூறுவார்கள். ஒரு வறுமையான காலகட்டத்திலும், ஒரு ரொட்டியின் இரண்டு பக்கமும் வெண்ணை வேண்டும் கேட்கும் ஒரு சுயநலமி. பார்ப்பனர்கள் மனதை குளிர வைப்பதற்காகவே ரஜினி அந்த கூட்டத்தில் அவ்வாறு பேசினார்.
75 ஆண்டுகால பழைமை வாய்ந்த முரசொலி, திராவிட இயக்க வரலாற்றோடும், தமிழக வரலாற்றோடும் பின்னிப் பிணைந்தது கலைஞர், முரசொலியை அப்படி நேசித்தார். அதில் வரும் ஒவ்வொரு எழுத்தையும் அவர் உடல் நலத்தோடு இருந்த வரையில் சரி பார்த்தார்.
கலைஞர் முரசொலியை தன் கட்சித் தொண்டர்களோடு பேசும் ஒரு வடிவமாக மட்டும் பார்க்கவில்லை. அனைத்திந்திய மக்களுக்கும், ஒரு செய்தியை சொல்ல முரசொலியை பயன்படுத்தினார். 2006 திமுக ஆட்சி காலத்தில், மாறன் சகோதரர்களோடு பிணக்கு ஏற்பட்டபோது, மாறன் சகோதரகளை கண்டிக்கவும் முரசொலியைத்தான் பயன்படுத்தினார் கருணாநிதி.
பழைய திமுகவினருக்கு முரசொலியின் அருமை தெரியும். அதிகார வெறியில் மட்டுமே திமுகவில் இருப்பவர்களுக்கு, முரசொலியின் அருமை புரியாது.
மேலும், கலைஞர் தோளில் சுமந்து தெருத் தெருவாக விற்ற முரசொலிக்கு, வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக உதயநிதியை மேலாண் இயக்குநராக்கினால், அதை கட்சிக்காரன் எப்படி மதிப்பான் ?
நுங்கம்பாக்கத்தில் ஸ்னூக்கர் விளையாட்டு மையம் நடத்தியதையும், ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, கருணாநிதி குடும்பம் சம்பாதித்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்கவும், இரட்டிப்பாக்கவும் திரைப்படங்களை தயாரித்த, ஒரு கடத்தல் காரனிடம் ஹம்மர் கார் வாங்கி பயணித்த, மூன்றாம் தர திரைப்படங்களில் நடித்து திரை வாழ்வில் தோல்வியுற்ற உதயநிதிக்கு, முரசொலியையோ, திமுகவின் வரலாறையை பற்றி என்ன தெரியும் ?
இப்படி வளர்ந்த உதயநிதியை, முரசொலியின் மேலாண் இயக்குநராக்கியபோதும் கட்சியில் முணுமுணுப்பில்லை. இளைஞர் அணித் தலைவராக்கியபோதும், முணுமுணுப்பில்லை. சுயமரியாதை பேசி வளர்ந்த கட்சி இன்று கொத்தடிமைகளின் கூடாரமாக மாறி விட்டது.
இந்த பின்னணியில்தான் இன்று முரசொலியில் ஒரு தலையங்கம் வந்துள்ளது. அந்த தலையங்கத்தில், ரஜினிகாந்த்தையோ, துக்ளக்கையோ விமர்சித்து ஒரு வரி கிடையாது.
அம்மி கொத்துபவன் செதுக்கிய அம்பாள் சிலைபோல உள்ளது அந்த தலையங்கம்.
ரஜினி திமுகவை எவ்வளவு கேவலப்படுத்தினாலும், ரஜினியோடு சேர்ந்து வியாபாரம் செய்ய உதயநிதி தயங்குவதில்லை. ரஜினியை வைத்து படம் தயாரிக்க மாறன் சகோதரர்கள் தயங்குவதில்லை. அதன் காரணமாகத்தான், இன்று முரசொலியில், ரஜினியை மயிலிறகால் வருடிக் கொடுக்கும் ஒரு தலையங்கம்.
இதே கலைஞர் உயிரோடு இருந்திருந்து, அவர் முன்னால் இப்படி ஒரு நபர் முரசொலியை இழித்துப் பேசியிருப்பார் என்றால், தயவு தாட்சண்யமின்றி அந்நபரை கலைஞர் விமர்சித்திருப்பார். அவருக்கு, முத்து, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, செல்வி, செல்வம் ஆகியோரை விட, முரசொலியே மூத்த பிள்ளை. முரசொலியைப் பற்றி இப்படித்தான் குறிப்பிடுகிறார் கலைஞர்
“தவழ்ந்தாடும் – தத்தி நடக்கும் – தணலை மிதிக்கும் – விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை முன்வைத்த காலைப் பின் வைக்க நினைத்ததுமில்லை! முரசொலி நான் பெற்ற முதல் குழந்தை! ஆம் அந்த முதற் பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க சென்று வா மகனே! செருமுனை நோக்கி! என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை!
– கலைஞர் மு. கருணாநிதி
அவர் தலையங்கம் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா ? இப்படித்தான் இருக்கும்.
கைகுலுக்கிக் கொண்டு கக்கும் நஞ்சு.
முரசொலி ஏடு, திராவிட இயக்கத்தின் போர்ப்பரணி பேசும் ஏடு மட்டும் அல்ல. அது தமிழர்கள் மற்றும் தமிழ்மொழியின் பெருமை பேசும் ஏடு. ஒரு குறிப்பிட்ட சாதிக்காகவோ, ஒரு மதத்துக்காகவோ நடத்தப்படும் ஏடு அல்ல. அது ஒரு இனத்துக்கான ஏடு. கரையான் புற்றில் கருநாகம் குடிபுகுந்தது போல, ஒருவர் மரணத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஆக்ரமித்தவரால் நடத்தப்படும் ஏடு அல்ல. தமிழுணர்வை முடக்க நினைக்கும் கைபர் கணவாய் வழிவந்தவர்களை எதிர்த்து நடத்தப்படும் ஏடு. ஆட்சியாளர்களுக்கு ஆலாபனை பாடும் ஏடு அல்ல இது. அடக்குமுறைக்கு எதிராக போர்முரசம் கொட்டும் ஏடு இது.
ஆட்சியாளர்களை எதிர்த்ததற்காக எத்தனை அடக்குமுறைகளை சந்தித்தது முரசொலி என்பது, அடுத்தவரின் வசனங்களால் ஒளிபெற்ற நடிகர்களுக்கு தெரியாது. நெருக்கடி நிலையில், பெரிய பெரிய ஊடக நிறுவனங்களே கொடுங்கோல் ஆட்சியின் தணிக்கைக்கும், வரி ஆய்வாளர்களின் வேட்டைக்கும் அஞ்சி துதிபாடிக் கொண்டிருந்தபோது, அன்றைய கொடுங்கோன்மையின் ஊற்றுக்கண்ணாக இருந்த அம்மையாரை ஹிட்லராக வர்ணித்த ஏடு முரசொலி.
தொண்ணூறுகளில் அதிமுகவின் கொடுங்கோல் ஆட்சியில் ஓட ஓட விரட்டப்பட்ட அந்த நடிகருக்கு அன்று அடைக்கலம் கொடுத்தது திமுக என்பதை அந்நடிகர் வசதியாக மறந்து விட்டார். எந்த அம்மையார் விரட்டினாரோ, அந்த அம்மையாருக்கு அஞ்சி “தைரியலட்சுமி” என்று தஞ்சமடையும் கோழை அல்ல முரசொலி.
“உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்” என்று அடுத்தவர் வசனங்களை நம்பி வாழ்வை நடத்தும் நடிகர்களுக்கு, தமிழே உயிராக, தமிழே உணர்வாக தமிழ்தாங்கி வரும் முரசொலியின் அருமை புரியாது.
தமிழுணர்வோடு, அரசியல் செய்திகளையும், உலக செய்திகளையும், தமிழ்கூறும் நல்லுககத்துக்கு வழங்குவதே முரசொலியின் தலையாய பணி. “யார் பிராமணன்” என்று சாதிப் பெருமை பேசும் ஏடு அல்ல முரசொலி. பிற மதத்தினரையும், மதங்களையும் இழிவு செய்து, ஒரு மதத்தை ஒருநாளும், முரசொலி உயர்த்திப் பேசியதில்லை. மாறாக, அண்ணா கூறிய, ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று சமத்துவத்தை போதிக்கும் ஏடுதான் முரசொலி.
தன்னையும், தன்னை சுற்றி உள்ள கூட்டத்தையும் ஆன்மீக அரசியல் செய்வதாக ஏமாற்றி, அந்த ரசிகர்களின் உழைப்பில் வரும் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்தும் நடிகருக்கு, உழைப்பாளிகளின் ஏடான முரசொலியைப் பற்றி தெரியாதது வியப்பில்லை.
தன் திரைவாழ்வின் அந்திம காலத்தில் இருக்கும் அந்த நடிகருக்கு, அடுத்த புகலிடமாக அரசியல் தோன்றுவதில் வியப்பில்லை. அரசியலை அவர் ஓய்வெடுக்கும் முதியோர் இல்லமாக கருதுகிறார். அப்படி ஒரு முதியோர் இல்லத்தை நடத்தி வரும் பார்ப்பன கூட்டத்தின் அங்கீகாரத்தை பெருவதற்காகவே அவர் முரசொலியை இழித்துப் பேசியிருக்கிறார்.
அரசியல் களம் அனைவருக்கும் பொதுவானது. இங்கே ஆண்டானும் அடிமைகளும் மோதலாம். களம் பொதுவானது. ஆனால், இப்படியானதொரு அரசியல் களத்தில், ஏழைகளும், உழைப்பாளிகளும், தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினரும் இருக்கக் கூடாது என்று எண்ணும் ஒரு கூட்டத்தின் அங்கீகாரத்தை பெற அந்த நடிகர் முயல்கிறார். அவர்களை அரசியல் களத்திலிருந்து அகற்றி, அடிமைகளாக்க முயலும் கூட்டத்தில் சேர அந்த நடிகர் தவம் கிடக்கிறார்.
அந்த கூட்டத்தில் அவர் திருமண உறவு கொண்டிருந்தாலும், அவர் அவர்களில் ஒருவராக ஒருநாளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார் என்பதை அந்நடிகர் உணர வேண்டும். கனகலிங்கத்துக்கு பூணூல் அணிவித்த பாரதியாரின் பெருந்தன்மை இப்போது துக்ளக்கை நடத்தும், ஆராதிக்கும் அந்த கூட்டத்துக்கு இல்லை. அந்த நடிகரின் முகமூடியை பயன்படுத்தி மீண்டும் சனாதனத்தை நிலைநிறுத்த முயலும் அந்தக் கூட்டத்தின் சதிச் செயலுக்கு, அந்த நடிகர் இரையாகிப் போனது காலத்தின் கோலமே.
“ஒரு துளி வியர்வைக்கு ஒரு துளி காசு” கொடுத்ததாக அந்த நடிகர் பாடிய தமிழை அழிக்கவும், முடக்கவும் முயலும் அந்தக் கூட்டத்துக்குத்தான் அந்நடிகர் லாவணி பாடுகிறார்.
உயரப் பறக்க நினைக்கும் ஊர்க்குருவி ஒன்றுதான் இப்போது துக்ளக்கை நடத்தி வருகிறது. அந்த ஊர்க்குருவி தன்னை பிதாமகர் என்றும், இந்திய அரசியலை ஆட்டிப் படைக்கும் வித்தகர் என்றும் கருதிக் கொள்கிறது. துக்ளக்கின் ஆசிரியர் சோ பட்ட கடனால் துக்ளக்கை அவர் ஒரு பார்ப்பனருக்கு விற்க, அந்த பார்ப்பனரால் துக்ளக் ஆசிரியரான ஒண்ட வந்த பிடாரியே அந்த ஊர்க்குருவி.
முரசொலி கட்டிடத்தின் மூலத்தை ஆராயும் அந்த பார்ப்பனக் கூட்டம், அந்த ஊர்க்குருவி, துக்ளக் அலுவலகத்தில் அதன் உரிமையாளர்களின் விருப்பத்தை மீறி, அவர்கள் எதிர்ப்பையும் மீறி ஆக்ரமிப்பு செய்து அமர்ந்திருப்பதை, ஊர்க்குருவி புகழ்பாடும் அந்த நடிகர் மறந்து விட்டார்.
தமிழாலும், தமிழக மக்களாலும் வாழ்வைப் பெற்ற அந்த நடிகர் தமிழ் மக்களுக்கு கடமைப் பட்டுள்ளார். தன் கடமையையும், நன்றியையும் மறந்து, தமிழ் மக்களோடு கை குலுக்கிக் கொண்டே நஞ்சை கக்குகிறார் அந்நடிகர்.
அப்படிப்பட்ட ஒருவருக்கு முரசோலி வேம்பாய் கசப்பதில் வியப்பேதும் உண்டோ ?
உதயநிதிக்கு சேவகம் செய்தாலும்கூட சவுக்குக்கு பயன் உண்டு. இன்றைய நிலையில் கலைஞரைப் புகழ்ந்தால் பத்துக்காசுக்கு பிரயோஜனம் உண்டா? அதையும் யோசிக்க வேண்டும்.
கருணாநிதிக்கும் முரசொலிக்கும் சவுக்கு ஏன் வரிந்துகட்டிக்கொண்டு வக்காலத்து வாங்குகிறது என்று பலருக்கும் ஐயம். திராவிட இயக்கம் கடந்த 50 ஆண்டுகளில் பிராமணரல்லாதோர் வாழ்வுரிமைக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதைப் படித்துப் பார்த்துவிட்டு ஆய்வு நோக்கில் அந்த ஐயம் வந்தால் பரவாயில்லை. ஒரு முழுக்கட்டுரையையும் படித்துவிட்டு “உன்னைப்பற்றித் தெரியாதா? நீ தி.மு.க. சொம்பு” என்று ஒரே போடாகப் போடுவதை விமர்சனம் என்று ஏற்க இயலாது. அடிக்கடி சவுக்கு இந்த ‘விமர்சன’த்துக்கு உள்ளாவதைப் பார்க்கிறேன். தி.மு.கவும் கலைஞரும் சவுக்கால் விளாசப்பட்ட கட்டுரைகளை இவர்கள் படித்திருப்பார்களா என்பது ஐயம். அ.தி.மு.க. ஆட்சியைவிட அதிக அளவுக்கு தி.மு.க ஆட்சிதான் சவுக்கால் விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது. தொடக்கம் முதலாகவே சவுக்கைப் படித்துவருவோருக்கு இது நன்றாகவே தெரியும். அவையெலாம் ஒரு புறமிருக்க, ஒரு அடிப்படையை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு சமூக ஆர்வலன் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி-இரு தரப்பாலும் பழி வாங்கப்படுகிறான் என்றால் என்ன பொருள்? அவன் நேர்மையாக இருக்கிறான் என்றுதான் பொருள். அவனது பாதை இடது பாதை என்றும் பொருள்.
சங்கர், தி முக காரர்களை தவிர வேறு யார் முரசொலி வாங்கி படிக்கிறார்கள். ஒரு காலத்தில் உங்கலது தீவிர ரசிகனாக இருந்தேன். ஆனால் அடிக்கடி தடம் புரண்டு விடுகிரிகள். ஏன் என்னை ஒப்பிட சொன்னால் முரசொலி விட thuglakk சிறந்தது. தி மு க கரணை சந்தா கட்ட சொல்லி நடதும் பத்திரிக்கை விட Thuglakk சிறந்தது. உங்கள் சவுக்கை விட முரசொலி படிப்பவர்கள் குறைவே.
துக்ளக் மட்டும் என்ன ஒசியில் படிக்கலாமா செல்லதுரை?
ரஜினியின் பேச்சுக்கு பெரும் கண்டனமெல்லாம் திமுக தரப்பிலிருந்து எதிர்பார்க்கமுடியாது காரணம் அவர்களை இயக்குபவர்களும் அச்சிந்தனை உடையவர்களே! தற்போதைய தலைவர்கள் ஆளும்கட்சி எதிர்கட்சி அனைவருமே பின்னால் எளுதிக்கொடுப்பதையே படிக்கின்றனர் வாசிப்பு பழக்கம் இல்லாதவர்கள் , மேலும் முரசொலி கட்சிக்காரர்களே அநேகம்பேர் படிப்பதில்லை குறிப்பாக திமுக தலைவர்கள் அவர்களிடம் பணம் பெரும் இருப்பு இருப்பதால் ஓடிக்கொண்டுள்ளது இல்லையேல் எப்போதோ இழுத்து மூடியிருப்பர்கள்!
இதை படித்து விட்டு ….சவுக்கு எப்படி வளைந்தது என்று கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க ..சவுக்கார் திமுக சவுக்கு கம்பானார்
https://www.savukkuonline.com/7141/
ஆம் சவுக்கு எப்போதும் எங்கு தவறு நடந்தாலும் கண்டிக்கிறது என்றுதான் அர்த்தம். ரஜினி ரசிகரான குமாருக்கு இது பிடிக்காமல் இருக்கலாம்
திமுகவின் மேடை பேச்சு நாகரீகம்
மகாத்மா காந்தியை – கபோதி
பக்தவச்சலத்தை – குரங்கன் என்றார் கருணா நிதி
ஜீவானந்தத்தை – செவுடு என்றார் கருணா நிதி
காமராஜரை – அண்டங் காக்கைய் என்றார் கருணா நிதி
இந்திரா காந்தியை – விதவை என்றார் கருணா நிதி
நாவலரை – நெட்டை மரம் என்றார் கருணா நிதி
MGR ஐ – ஊமை என்றார் கருணா நிதி
முப்பனாரை – மூளைகோளாறுஎன்றார் கருணா நிதி
கலாம் அவர்களை – கலகம் என்றார் கருணா நிதி
ராஜுவ்காந்தியை – எருமை கண்று…..
ஜெயலலிதாவை – சொல்ல முடியாத வார்த்தைகளால்…..
இப்படி பெருந்தலைவர்களையே கீழ்தரமாக வசைப்பாடிய இவர்கள் ஒரு நடிகரை நாகரீகமாக நடத்துவார்கள் என்று நாம் எதிர்பாப்பது முட்டாள் தனமே……!
முரசொலி அதிகம் படித்தவர்கள் ?..
Really Excellent.. While I am reading I felt kalaingar voice.. Loved
அருமை! கலைஞர் எழுத்தை படித்தது போல் இருந்தது!
முத்தமிழின் முத்தாய்ப்பு
Well written!
Bullshit story
Super
Shankar i read your comment, book .. but pray you remain unbiased
Super
வணக்கம் சவுக்கு சங்கர் . கலைஞர் கருணாநிதி அவர்கள் இருந்தாலும் இப்படி ஒரு தலையங்கம் எழுதி இருப்பாரா என்று என் போன்ற தி மு க காரன் சந்தேகம். உதயநிதி பற்றி நீங்க குறிப்பிட்ட அனைத்தும் உண்மை. என்ன செய்ய கட்சி மாற முடியாது ஆயுள் முழுவதும் தி மு க தான். குறிப்பு எங்க தலைவரே முரசொலி படிக்க மாடடார் என்னத்தை சொல்ல.
கருநாநிதிக்கு சவுக்கு சங்கர் ஏன் இப்படி வக்காலத்து வாங்கி சேவகம் செய்து கொண்டு இருக்கிறார்? இந்த மாநிலத்தில் அரசியல் அட்டூழியம் செய்து ஊழலை அயோக்கியதனத்தை. மாவட்டம் தோறும் ரெளடி வாரிசு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி….. சவுக்கு சங்கரையே ஜாபர் சேட் மூலமாக அடித்து துன்புறுத்தி இலங்கை தமிழர்களுக்கு படுபாதக துரோகம் செய்யவனுக்காக சங்கர் இப்போது….. பணம் பாதாளம்வரை செல்லும் .!!!!!!!????😢
சமபத், துக்ளக் பத்திரிகை அறிவாளிகளின் பத்திரிகை என்று அந்த கோமாளி ரஜினி சொன்னதை ஆமோதிக்கிறீர்களா? இலங்கை போராளிகளை அதிகமாக திட்டியவன் சோ