பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக, தனது இரண்டு செயலர்களோடு விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.
செயலர் 1 : வணக்கம் மேடம். பொருளாதாரத்தை சீர்படுத்துவது தொடர்பா நிறையா ரிசர்ச் பண்ணி, பேப்பர்ஸ் கொண்டு வந்திருக்கேன் மேடம்.
நிம்மி : அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். மொதல்ல அல்வா சாப்புடுங்கோ. நானே பண்ணது.
செயலர் 2 : அதானே. மேடமே அவங்க கையால செஞ்ச அல்வா. அதை சாப்புடாம எகானமி பத்தி பேசற ?
நிம்மி : கரெக்டா சொன்னேள்.
செயலர் 1 : மேடம், ஜி.எஸ்.டியில எதிர்பார்த்த வருவாய் வரல.
நிம்மி : அல்வாவுல ஸ்வீட் கரெக்டா இருக்கா ? திகட்டலையே. நெய்யை தாராளமா விட்டு பண்ணிருக்கேன்.
செயலர் 2 : நாக்குல வச்சதும் அப்படியே கரையறது மேடம். இது மாதிரி ஒரு அல்வாவை என் லைப்புலயே நான் பாத்தது கூட கிடையாது.
நிம்மி : இத்தனை வருஷமா பட்ஜெட்டுக்காக இது மாதிரி அல்வாவை கிண்டனும்னு யாருக்காவது தோணிருக்கா ? என்னமோ பெருசா பீத்திக்கிறா. மன்மோகன் சிங் பெரிய மேதையாம். என்னை மாதிரி அல்வா கிண்டச் சொல்லுங்கோ அவரை…
செயலர் 2 : வாய்ப்பில்ல மேடம். வாய்ப்பே இல்ல. என்னமோ பெருசா ஆக்ஸ்போர்டுல படிச்சுட்டாராம். பெருசா பீத்திக்கிறாரு.
நிம்மி : விடுங்கோ. விடுங்கோ. மோடி ஜிக்கு என் அருமை தெரிஞ்சுதானே என்னை நிதி அமைச்சரா போட்டுருக்கார்.
செயலர் 1 : மேடம். ஐ.எம்.எப் தலைமை பொருளாதார அதிகாரி கீதா கோபிநாத் இந்தியாவோட பொருளாதார வளர்ச்சி பத்தி….
நிம்மி : நிறுத்துங்கோ. அந்த பொம்மனாட்டி என்னை மாதிரி மெது வடை சுடுவாளா ? இல்லை ஊறுகாய்தான் போடுவாளா. என்னமோ பெருசா எல்லாம் தெரிஞ்ச மாதிரி வளர்ச்சி இல்ல. வாழைக்கா இல்லன்னு பேசறா …. வளர்ச்சி இல்லன்னா காம்ப்ளான் வாங்கி குடிக்க சொல்லுங்கோ. அவாளுக்காக வேணா காம்ப்ளானுக்கு பட்ஜெட்ல விலை குறைக்க சொல்றேன்.
செயலர் 2 : எக்சாக்ட்லி மேடம். என்ன திமிரு. நீங்க இருக்கறச்சேவே இப்படி பேசறதுக்கு….
செயலர் 1 : மேடம் அன் எம்ப்ளாய்மெண்ட் ரேட்…
நிம்மி : என்ன மேன் அன் எம்ப்ளாய்மெண்ட் ரேட்… சும்மா இருந்த எத்தனை பேருக்கு ட்விட்டர்ல வேலை குடுத்துருக்கோம் தெரியுமா. வீட்ல இருந்தே வேலை செய்யலாம். நாங்க அனுப்புற போட்டோஷாப்பை ட்விட்டரில் தட்டி விட்டு இந்திய கொடியை போட்டா போதும் டீவீட்டுக்கு 10 ரூவா கொடுக்கறோம் சும்மா கிடையாது கேட்டேளா
செயலர் 2 : கரெக்ட்டா சொன்னேள் போங்கோ, என்னோட கோ பிரதர் கூட பார்ட் டைம்மா இந்த வேலை தான் பார்க்கிறான், கை நிறையா சம்பாதிக்காரன் மேடம்
செயலர் 1: அதில்ல மேடம், பட்ஜெட்டுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு இன்னும் எகனாமிக் சர்வே ரிலீசே பண்ணலை
நிம்மி: நேரம் எங்க இருக்கு? கிறிஸ்துமஸ்ன்றா, நியூ இயர்ன்றா, சங்கராந்தின்றா கண்ணை மூடி தொறக்கறதுக்குள்ள பட்ஜெட் வந்திட்டுத்து. சர்வர் எல்லாம் ஒரே பிஸி
செயலர் 1: மேடம் ஜி சர்வர் இல்ல சர்வேயர்
செயலர் 2 :ரெண்டு வருஷம் முன்ன உத்ராயணத்துக்கு நீங்க மெது வடை போட்டேளே பிரமாதம்
நிம்மி: நான் ட்விட்டரில் படம் தானே போட்டேன், நீங்க எப்படி சாப்பிட்டேள் ?
செயலர் 2 : நீங்க அப்போ டிபன்ஸ்ல இருந்தேள்
நிம்மி: ஓ அதுக்குள்ள டிபன் வந்துடுத்தா? என்ன டிபன்
செயலர் 2 : அய்யோ டிபன் இல்ல மேடம் டிபன்ஸ், சீனாகாரன் எல்லையில் மதில் கட்டிண்டு ஒரே அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருந்தா, அவங்கள அட்டாக் பண்ண முக்கியமான பேப்பர் எடுத்துண்டு கையெழுத்து வாங்க உங்க ஆத்துக்கு வந்தேன்
நிம்மி : என்ன சொல்றேள் சீனா மேல தாக்குதல் நடந்தா பொருளாதாரம் படுத்துக்குமே?
செயலர் 1: இப்போ மட்டும் என்ன செங்குத்தா நிக்குதாக்கும்
நிம்மி: என்ன சொன்னேள்?
செயலர் 2 : செங்கரும்பு வாங்கி நிறுத்தலையானு கேட்கறா?
நிம்மி: நல்ல யோஜனை, ஒரு டஜன் நாளைக்கு வாங்கிட்டு வந்திருங்கோ, நீங்க சொல்லுங்கோ அப்பறம் போர் ஏன் நடக்கல?
செயலர் 2 : நீங்க முக்கியமான வேலையில் இருக்கறதா சொன்னா.. சரி மேடம் பேசி முடிக்கட்டும்னு, பைலை குடுக்க சொல்லிட்டு வெளிய போன் பேச போனேன்
நிம்மி : மேல சொல்லுங்கோ
செயலர் 2 : காகத்துக்கு வடை படையல் வச்சு உங்க ஆத்து சமையக்காரர் கா கானு கூப்பிட்டார். ரொம்ப பசியா இருந்ததேனு நான் அந்த வடையை சாப்பிட்டுட்டு பார்த்தா வடை வச்சிருந்த பிளேட்டுக்கு மேல அந்த ஸ்ட்ரைக்கிங் ஆர்டர் பேப்பர் இருந்தது.
நிம்மி: அட ஆமாம் நான் தான் நம்ம PMO பேப்பர் நன்னா எண்ணெய் உரியும்னு கிழிக்க சொன்னேன்
செயலர் 2 : நல்ல சமயோஜிதமா நீங்க அன்னைக்கு செய்த காரியத்தால போர் வரலை மேடம்
நிம்மி: இப்போ தெரியுதா சூரிய பகவானுக்கு மெது வடை கொடுத்ததால் தப்பிச்சோம்
செயலர் 1: எனக்கு என்னவோ நார்த் பிளாக் வந்த மாதிரி தெரியல. ஐயர் மெஸ்க்கு வந்த மாதிரியே இருக்கு
நிம்மி: நார்த்தங்கா ஊர்கவா, செஞ்சுட்டா போச்சு. அடுத்த வாட்டி நீ வரும் போது தயிர் சாதமும் நார்த்தங்கா ஊர்காவும் தான் ஓகேவா
செயலர் 1: இந்த தடவ தனி நபர் வரி விலக்கு கொடுத்திடலாமா மேடம் ?
நிம்மி: பேஷா கொடுத்திடலாம்
செயலர் 1: சூப்பர் மேடம் இப்போ தான் நீங்க ஒரு நல்ல முடிவா எடுத்திருக்கீங்க
நிம்மி : ஊட்டியில் இருந்து வாங்குங்கோ அங்க தான் விஷேசம்
செயலர் 1: என்ன மேடம் சொல்றீங்க?
நிம்மி : ஆமா வரிக்கினாலே ஊட்டி தானே. நன்னா பொற பொறன்னு வாயில வச்சாலே கரையும்.
செயலர் 1: வரிக்கி இல்ல மேடம் வரி விலக்கு
செயலர் 2: சும்மா இருங்க ஓய்.
மேடம் இப்போ புதுசா முந்திரி வரிக்கி வேற போடறா பிரமாதமா இருக்கும்
நிம்மி : அப்போ அதையே வாங்குங்கோ, பட்ஜெட் பேப்பரோட சேர்த்து பார்லிமென்டில் எல்லா MPக்கும் கொடுங்கோ. நன்னா சாப்பிடட்டும். சாப்புடுட்டாவது நம்மளை கரிச்சு கொட்டாம இருக்கட்டும்.
செயலர் 2 : உடனே ஆர்டர் பண்ணிடுறேன் மேடம்.
நிம்மி : நேக்கு 2 கிலோ, எங்க மன்னிக்கு 2 கிலோ வாங்கிடுங்கோ. சரி இப்போ விஷயத்துக்கு வரேன் இந்த பட்ஜெட்டில் புதுசா ஏதாவது செய்யணும். எல்லாரும் மூக்கு மேல கை வைக்கற மாதிரி இன்னோவேடிவ் ஐடியாஸ் சொல்லுங்க
செயலர் 1: பெட்ரோல் விலை ஏறிகிட்டே போகுது மேடம் அதை GSTகுள்ள கொண்டு வந்துட்டோம்னா பெருவாரியான பொது மக்கள் பயன் அடைவா
நிம்மி: உங்க கிட்ட எதுவும் பெட்டெர் யோஜனை இருக்கா ?
செயலர் 2: இருக்கு மேடம், அரைச்சு விட்ட சாம்பார், அவியல் ரெடி பண்ணி பட்ஜெட் பேப்பரோட சேர்த்து MPகளுக்கு கொடுத்தோம்னா அப்படியே வாயடைச்சு போய்டுவா. இது வரைக்கும் யாருமே இப்படி பண்ணிருக்க மாட்டா
நிம்மி : என்ன பேசறேள்
செயலர் 2: சாரி மேடம் எதுவும் தப்பா பேசிட்டேனா
நிம்மி: பின்ன அரைச்சு விட்ட சாம்பாருக்கு அவியல் எப்படி செட் ஆகும் ? அவரைக்கா பொரியல்னா ஒத்து போகும்
செயலர் 2: பெரியவா பெரியவா தான்
நிம்மி : என்ன ஓய் 5 ட்ரில்லியன் அளவுக்கு பொருளாதாரத்தை கொண்டு போய்டுவேன் இல்ல ?
செயலர் 1: ஆமாமா. ஏற்கனவே 10 ட்ரில்லியன் இருந்தா நீங்க 5 டிரில்லியன் கொண்டு போவேள்.
செயலர் 2 : யோவ் மூடிட்டு உக்காருய்யா.
நிம்மி : என்ன நீங்க இப்படி மரியாதையில்லாம பேசறேள். ஆயிரம்தான் இருந்தாலும், அவர் ஒரு ஐஏஎஸ் ஆபீசர். இப்படியெல்லாம் பேசப்படாது. இப்போ நான் சொல்றேன் பாருங்கோ.
செத்த ஷாத்திண்டு உக்காருங்கோ.
செயலர் 2 : பெரியவா பெரியவாதான். இப்போ பட்ஜெட்டுக்கு என்ன பண்றது மேடம் ?
நிம்மி : போன வாட்டி புறநாநூறு படிச்சேன். இந்த வாட்டி நாலாயிர திவ்விய பிரபந்தம் படிக்கிறேன். எம்.பியெல்லாம் அப்படியே உருகி, கண்ணுல ஜலம் வச்சுன்டுருவா.
செயலர் 2 : நீங்க சொல்றச்சவே என் கண்ணுல ஜலம் கோத்துக்கறது மேடம். நீங்க படிச்சா என்னால அழுகையை கண்ட்ரோல் பண்ணவே முடியாது.
செயலர் 1 : நான் ஒரு ஐடியா சொல்றேன்.
நிம்மி : கிறுக்குத்தனமா ஏதாவது உளறாம உருப்படியா ஏதாவது சொல்லுங்கோ.
செயலர் 1 : நெய் அல்வா, அக்கார வடிசல், மெது வடை, வெண் பொங்கல், மாவடு, மாங்காய் ஊறுகாய், புளியோதரை, நெய் முறுக்கு இதெல்லாம் எப்படி செய்யறதுன்னு பட்ஜெட் புத்தகம் பூரா எழுதிடுவோம். ஒரு பய கேள்வி கேக்க முடியாது.
நிம்மி : இப்பொதான் நீங்கோ உருப்படியா ஐடியா குடுத்துருக்கேள். யு ஆர் ப்ரமோட்டட் அஸ் ஸ்பெசல் செக்ரட்டரி.
செயலர் 2 : மேடம். நான் கூட நன்னா தயிர்சாதம் பண்ணுவேன்.
நிம்மி : சும்மா இருங்கோ. சரியான அசமஞ்சம் நீங்க. உங்களை மாதிரிதானே அவரும் ஐஏஎஸ் படிச்சிருக்கார். எப்படி ப்ரில்லியண்ட்டா ஒரு யோசனை சொன்னா பாருங்கோ. தத்தி தத்தி.
செயலர் 1 : மேடம் இன்னொரு யோசனை.
நிம்மி : சொல்லுங்கோ.
செயலர் 1: போன பட்ஜெட்டை, சிகப்பு துணிப் பையில சுத்தி எடுத்துட்டு வந்தேள். அது கம்யூனிஸ்ட் கலர். அதனாலதான் மொத்த பட்ஜெட்டும் நக்கிட்டு போயிடுச்சு. இந்த வாட்டி கலரை மாத்துங்கோ.
செயலர் 2 : மங்களகரமா பச்சை கலர்ல பை தைக்க சொல்லிடவா மேடம்.
நிம்மி : அபிஷ்டு. அது மாமிஷம் சாப்புடறவா கலர். அதை எப்படி நாம யூஸ் பண்றது.
செயலர் 1 : மேடம். காஞ்சிபுரத்துல சொல்லி, நன்னா காவி கலர்ல ஒரு பையை தைச்சி, அப்படியே காஞ்சி மடத்துல பெரியவா கால்ல வைச்சு ஆசிர்வாதம் வாங்கி எடுத்துட்டு வந்தா, பாராளுமன்றமே ச்சும்மா அதிரும்.
நிம்மி : ப்ரில்லியண்ட் ஐடியா. யு ஆர் ப்ரொமொட்டட் அஸ் கேபினெட் செக்ரட்டரி.
செயலர் 2 : மேடம். அப்படியெல்லாம் ப்ரோமோசன் குடுக்க முடியாது. பிரதமர்தான் குடுக்க முடியும்.
நிம்மி : ஷெத்த மூட்றேளா… நான் சொன்னா மோடி தட்டாம கேப்பார். என்னையெல்லாம் நிதி அமைச்சரா போடும்போதே அவர் எப்படி என்னை நம்பறார்னு புரியுறதோ நோக்கு….
செயலர் 2 : மன்னிச்சிடுங்க மேடம்.
நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் கலந்துரையாடல் நிறைவடைந்தது.
-டெல்லியிலிருந்து நமது பிரத்யேக ரெப்போர்ட்டர்-
you should be slippered SAVUKKU. do you have guts to talk about Congress / DMK / ……
Savukku also spits hIs brahmin hatredness.. He is also from that same thravidiyas group naa
What kind of silly reply is that? Why would he talk about Congress and DMK when they are not in power and not involved in the budget making?
Hilarious with little truth. Good..
I need only the news nothing else.
you lost your credibility Mr.Savukku sir…..i was interested in following you…but after seeing your biased and very much tamil nadu type media coverage, i dont even see your article..
Your article is in very bad taste. Can you write such article about Sonia and Rahul.
Don’t disgrace your self
இந்தியாவின் எதிர்காலத்தை நினைத்தால்………
தயிர் வடை சாப்பிடனும் பாேல தாேனுதா நண்பரே….?
தயிர் வடை சாப்பிட்டபின் கண்ணீர் விட்டு அழ வேண்டும் என்று தோன்றுகிறது நண்பரே