சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார். இயக்குபவர் சிறுத்தை சிவா.
தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் கதை சொல்கிறார்.
க.மாறன் : சிவா. இது வரைக்கும் வந்த எந்த ரஜினி படம் மாதிரியும் இது இருக்கக் கூடாது. டோட்டலா டிப்பரண்ட்டா இருக்கணும். வேற லெவலுக்கு கதை இருக்கணும்.
சி.சிவா : சார். ஒரே கள்ளக் காதல் சப்ஜெக்டை வைச்சு நீங்க ஒம்பதாயிரம் சீரியல் எடுக்கலையா ? எந்த கதை எடுத்தாலும் ரஜினிக்குன்னு இருக்குற ப்ராண்ட் வேல்யூவுக்காக படம் ஓடும் சார்.
க.மாறன் : சரி கதையை சொல்லுங்க. நடுவுல நெறைய்ய பொலிட்டிக்கல் பன்ச் இருக்கணும். நாளை பின்ன குடும்பத்துக்குள்ள சண்டை வந்தா அப்படியே ரஜினி பக்கம் போயிடணும். அதுக்கு ஏத்த மாதிரி சீன்ஸ் வைங்க.
சி.சிவா : ஓப்பனிங் சீனே மாஸ் சார். தமிழ்நாடு அரசோட கடன் அதிகமா ஆயிடுது. முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் கவலையில மீட்டிங்குல இருக்காங்க. கடனை வசூலிக்க உலக வங்கி, ஜப்பான் வங்கி, ஆசிய வளர்ச்சி வங்க ஆட்கள் அமீனாவோட தலைமைச் செயலக வாசல்ல நிக்கறாங்க. எங்களை காப்பாத்த ஆளே இல்லையான்னு முதல்வர் தலையை கையில புடிச்சிக்கிட்டு கவலையா இருக்காரு.
க.மாறன் : அப்புறம் ?
சி.சிவா : இனிமே வேற வழியே இல்ல. தமிழ்நாட்டை வித்துட வேண்டியதுதான்னு முதல்வர் வங்கி அதிகாரிகளை சந்திக்க போறாரு. தமிழ்நாட்டை எடுத்துக்கங்க. எங்ககிட்ட திருப்பி குடுக்க பணம் இல்லன்னு சொல்றாரு. வங்கி அதிகாரிங்க, ஒரே ஒருத்தர் இருக்காரு உங்களை காப்பாத்தன்னு சொல்றாங்க.
இந்த இடத்துல அனிருத்தை வச்சி, காது கிழியிற மாதிரி ஒரு பிஜிஎம் போடுறோம். கட் பண்ணி க்ரேன் ஷாட்டுல அப்படியே ஜூம் பண்றோம். ஆன்மீக வட்டிக்கடைன்னு ஒரு போர்ட்டை காட்டுறோம். உள்ள, ரஜினி ஒரு திவான்ல உக்காந்துக்கிட்டு,
கவுண்ட்டிங் மிஷின்ல பணத்தை எண்ணிக்கிட்டு இருக்காரு.
திரும்ப கட் பண்றோம். தமிழ்நாடு சி.எம் “நான் உடனே ஆன்மீக வட்டிக் கடைக்கு போறேன்னு” சொல்றாரு. அடுத்த சீன்ல, முதல்வர் அமைச்சர்கள்லாம் வட்டிக் கடை வாசல்ல நின்னு “அய்யா.. தர்ம பிரபுன்னு” கோரசா கத்தறாங்க.
ரஜினி வெளிய வந்து “எட்டு எட்டா வட்டி விகிதத்தை பிரிச்சிக்கோ, அதில் எந்த எட்டில் நீ இப்போ இருக்க தெரிஞ்சிக்கோ” அப்படினு ஒரு பன்ச் விட்றார்
அங்க விசில் சத்தம் பறக்கும் பாருங்க ரசிகருங்க சில்லரையை தியேட்டர் முழுக்க செதற விடுவாங்க.
க.மாறன்: நோ நோ, தலைவர் ரசிகர்கள் எல்லாம் 60 ப்ளஸ். 3 நிமிஷம் மூச்சை புடிச்சு விசில் அடிச்சா தியேட்டர் முழுக்க டெட் பாடிதான். ரிஸ்க் வேண்டாம் சிவா.
சி.சிவா : நீங்க சொல்றதும் சரி தான், நான் அனிருத் கிட்ட சொல்லி BGMல விசில ஏத்திட சொல்றேன் டோன்ட் ஒரி சார்.
முதல்வர் ரஜினி சார் கிட்ட ஆன்மீக வட்டினா என்னனு கேட்கறார். அதுக்கு தலைவர் சொல்றார் வர்ணாசிரம முறை படி ஒவ்வொரு வர்ணத்துக்கும் வேற வேற மாதிரி வட்டி வாங்கறது தான் சார் ஆன்மிக வட்டி. பிரமணாள்க்கு வட்டி இல்ல, சூத்ராளுக்கு 18%, தலித்துக்கு 24% வட்டி
க.மாறன்: அப்போ தமிழ்நாடு அரசுக்கு எவ்வளவு வட்டி ?
சி.சிவா : தமிழ்நாட்டில் துக்ளக் எத்தனை பிரதி விக்குதுன்னு ரஜினி சார் கேட்கறார்
க.மாறன்: துக்ளக்கும் வட்டிக்கும் என்ன சம்பந்தம் சார்?
சி.சிவா : இருக்கு சார், துக்ளக் படிக்கறவன் அறிவாளியா தான் இருப்பான், அறிவாளினாலே பிராமணாள் தானேனு சொல்றார்.
க.மாறன்: பிரில்லியண்ட். ஆனா தமிழ்நாட்டில் துக்ளக் சர்குலேஷன் கம்மியாச்சே
சி.சிவா : அதான் 18% வட்டினு ரஜினி சார் டீல் முடிக்க பார்க்கிறார், அப்போ அவரோட கணக்குபிள்ளை. இது தான் சார் சான்ஸ் நீங்க குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்து தமிழ்நாட்டை காப்பாத்தி விட்டா, உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் நீங்க வருங்காலத்தில் முதல்வர் ஆய்டலாம்னு ஐடியா கொடுக்கிறார்
க.மாறன் : யார் அந்த கேரக்டர் ?
சி.சிவா : அவர் பேரு சிஷ்ய மூர்த்தி, ரொம்ப நாளா ரஜினி சார் கிட்ட கணக்கு பிள்ளயா வேலை பார்ப்பவர், மைலாப்பூர்காரர் அவர் சொல்றதை அப்படியே நம்பிருவார் ரஜினி சார்.
க.மாறன் : வெறும் கணக்குப் பிள்ளையா ? கேரக்டர் டம்மியா இருக்கே.
சி.சிவா : நோ நோ சார். அவரு பாதி கணக்குப் பிள்ளை. பாதி ப்ரோக்கர். அமெரிக்க அதிபர் தேர்தல்ல யாரு ஜெயிக்கணும்ன்றதை இங்க இருந்தே முடிவு பண்ணுவார்.
க.மாறன் : சரி படத்துல என்ன ட்விஸ்ட்?
சி.சிவா : கணக்கு பிள்ளை தான் சார் ட்விஸ்ட். அவர் தான் தமிழ்நாட்டுக்கு வட்டிக்கு விடற ஐடியாவயே ரஜினி சாருக்கு கொடுத்தது, ஆனா உண்மையா முதல்வரும், ஆடிட்டரும் ரஜினி சார் கிட்ட 8% வட்டி வாங்கி அவரோட கஸ்டமர் கிட்ட 10% வட்டிக்கு விடறாங்க
க.மாறன் : செம்ம சிவா
சி.சிவா : ஒரு பக்கம் பெரிய அமௌன்ட்க்கு கம்மியான வட்டி வருது இன்னொரு பக்கம் ரஜினி சார் கிட்ட வட்டிக்கு வாங்கறவங்க கம்மி ஆயிட்டே போறாங்க, அவருக்கு நிதி நெருக்கடி அதிகம் ஆயிட்டே போகுது
க.மாறன் : இப்போ தான் சார் படம் சூடு புடிக்குது
சி.சிவா : ஒரு நாள் சிஷ்ய மூர்த்தி ரஜினி சார் கிட்ட வந்து, ஆளும் கட்சிக்காரங்க எல்லாருக்கும் ஆண்மை பரிசோதனை பண்ணனும் முதல்வர் கிட்ட காசு இல்ல, நீங்க வட்டி இல்லாம கடன் கொடுத்தா, எல்லாரும் ஆண்மகன்னு நிரூபிச்சிடலாம். அப்பறம் உங்களையே முதல்வரா ஏத்துக்கறதா சொல்றங்கனு சொல்லி ரஜினி சார் கிட்ட இருந்த கடைசி பணத்தையும் வாங்கறது மட்டும் இல்லாம, பணம் பத்தலன்னு சொல்லி 10% வட்டிக்கு அவரோட பணத்தையே அவருக்கு தெரியாம வட்டிக்கு விடறார் அந்த கணக்கு பிள்ளை.
க.மாறன் : பிரில்லியண்ட்டா இருக்காரே அந்த கணக்கு பிள்ளை
சி.சிவா : ஒரு வாரம் ஆகியும் தன்னை முதல்வர் ஆக்க கவர்னர் கூப்பிடலையேன்னு . கவலையில், முதல்வரை பார்க்க கட்சி ஆபிஸ்க்கு போறார் ரஜினி சார். அங்க உள்ளையே விடாம வெயிலில் உக்கார வச்சிராங்க, சாயந்தரம் ஆகியும் உள்ள போக முடியல. பைப்பை புடிச்சு ரஜினி சார் ஏறி
க.மாறன் : எது பைப்பை புடிச்சு ஏறி போறாரா?
சி.சிவா : டூப் தான் சார் ஆடியின்ஸ் ரெஸ்பான்ஸ் மட்டும் பாருங்க, மினிமம் 10 பேராவது எமெர்ஜெண்சி வார்டுக்கு போவாங்க. கதையை கேளுங்க, பைப்பை புடிச்சு ஏறி பார்த்தா கணக்கு பிள்ளையும், முதல்வரும் ரஜினி சாரை ஏமாத்தினத்தை பத்தி பேசி சிரிச்சிட்டு இருக்காங்க.
இதை பார்த்து கொலை வெறி ஆகி ஜன்னலை உடைச்சிட்டு உள்ள போறார் ரஜினி சார். முதல்வர் பாதுகாப்பு படை, ரஜினியை தடுக்குது. கருப்புப் பூனைப் படை துப்பாக்கி எடுத்து சுடறாங்க. ரஜினி பல்லால அந்த புல்லட்ஸையெல்லாம் கடிச்சி துப்பறாரு.
துப்பிட்டு ஒரு பன்ச் டயலாக் பேசறாரு. “அன்னைக்கு அந்த ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி காட்டுக்கு போனான்.
இன்னைக்கு இந்த சிஷ்யமூர்த்தியால ரஜினி காட்டுக்கு போறான்.
சும்மா போற நான் சுகர் பேசண்ட்டா திரும்ப வர்றேன்னு” ஒரு பன்ச் டயலாக் பேசறாரு.
க.மாறன் : இது பன்ச் டயலாக் மாதிரியே இல்லையே.. நோயாளி ஹாஸ்பிட்டல் போற மாதிரியே இருக்குதே.
சி.சிவா : இல்ல சார். ரஜினி ரசிகர்ஸ் 60 பர்சண்ட் சுகர் பேசண்ட்டுன்றதை மறந்துட்டீங்க.
க.மாறன் : மீதி 40% ?
சி.சிவா : மூளை வளர்ச்சி இல்லாதவங்க.
க.மாறன் : இந்த இடத்துல இண்டர்வல் ப்ளாக் வைச்சா செம்மயா இருக்கும் சிவா.
சி.சிவா : நோ நோ ரஜினி சார் படத்துக்கு இன்டெர்வல் வைக்க கூடாதுனு ரசிகர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்காங்க சார்
க.மாறன் : என்னவாம் ?
சி.சிவா : எல்லாம் சுகர் பேசண்ட், இண்டெர்வல்ல போய் கேக்கு, பிஸ்கட்டு, ஜூஸ், காப்பின்னு குடிச்சிட்டு சுகர் ஏறிடுதாம். அதனால ரஜினி படத்துக்கு இனிமே இண்டர்வலே கூடாதுன்னு தீர்மானம் போட்டு இருக்காங்க.
க.மாறன் : ஓகே ஓகே, இப்போ காட்டுக்குள்ள என்ன பண்றார் ரஜினி சார் ?
சி.சிவா : பர்ஸ்ட் ஹாப் முடிஞ்சதும் காட்டுக்குள்ள நடக்கறதை நாம காட்டறதில்ல. இந்த இடத்துல ஒரு ப்ளாஷ் பேக் இருக்கு. இந்த இடத்துலதான் வுமன் எம்பவர்மெண்ட்டை கொண்டு வர்றோம். ரஜினி குடும்பம் கஷ்டத்துல இருக்கு. ரஜினி, மனசு வெறுத்து இமயமலைக்கு போலாமான்னு நினைக்கிறாரு. அப்போ ரஜினியோட பெரிய பொண்ணு, சாணி மிதிச்சு, வரட்டி தட்டி குடும்பத்தை காப்பாத்துது.
க.மாறன் : வரட்டி வித்து எப்படிங்க இவ்வளோ பெரிய பணக்காரனா ஆக முடியும் ?
சி.சிவா : அங்கதான் ட்விஸ்ட் வச்சிருக்கேன். சாணி மிதிக்கிற ரஜினியோட பொண்ணு, திடீர்னு பெரிய பரதநாட்டிய டான்சரா ஆயிடுது.
க.மாறன் : சாணி மிதிச்சிட்டு எப்படி சிவா பரதநாட்டிய டான்சரா ஆக முடியும் ?
சி.சிவா : ஏன் ? சாணி மிதிக்க தெரிஞ்சா போதாதா ? தனியா வேற பரதநாட்டியம் கத்துக்கணுமா ?
க.மாறன் : சரி. பைட் இல்லையா ?
சி.சிவா : சொல்ல மறந்துட்டேன். ஓப்பனிங்க் சீன் முடிஞ்சதுமே பைட்தான்.
ரஜினி வைச்சிருக்குற வட்டி கடை வாடகை பில்டிங். ரஜினிக்கு வாடகை குடுக்குறது புடிக்கவே புடிக்காது. பில்டிங் ஓனர் வாடகை குடுன்னு கேட்டு வர்றான். “என்னடா கேட்டன்னு” சொல்லி, அவனை பொரட்டி பொரட்டி அடிக்கிறாரு. இந்த சீன்ல ஆடியன்ஸ் எமோஷனலா அவர் கூட அட்டாச் ஆயிடுவாங்க. இந்த சீனை பாத்த ரஜினி ரசிகர்கள், இனிமே நம்பளும் வாடகை குடுக்கக் கூடாதுன்னு உறுதிமொழி எடுத்துக்குவாங்க. ரஜினிக்கு ஏன் வாடகைன்னாலே கோவம் வருதுன்றதுக்கு ஒரு ப்ளாஷ்பேக் வச்சிருக்கேன்.
பைட் முடிஞ்சதும் ஒரு சாங்க். லிரிக் கூட ரெடி பண்ணிட்டேன்.
“வரணும். நீதான் வரணும் உனக்கு
வட்டியை நாங்க தரணும், நாங்க தரணும்”
அப்படின்னு, வட்டிக்கு கடன் வாங்குனவங்க எல்லாம் கோரஸா பாடறாங்க.
க.மாறன் : பிரமாதம். லவ் இல்லையா ?
சி.சிவா : இருக்கு. ஏகப்பட்ட லவ் இருக்கு. ரஜினி பொண்ணுங்களுக்கே ஒரு லவ்.
ரஜினி பொண்ணு லவ் பண்ற பையனுக்கு வேலையே, நல்லா சந்தோசமா வாழற புருசன் பொண்டாட்டிக்கு டைவர்ஸ் வாங்கி குடுக்குறதுதான்.
க.மாறன் : வக்கீலா ?
சி.சிவா : நோ. நோ. அவர் வேலையே, நல்லா இருக்குற குடும்பத்தை பிரிக்கிறதுதான். அவரோட வேலையில எந்த அளவுக்கு அவரு தீவிரம்னா ரஜினியோட ரெண்டாவது பொண்ணுக்கும் டைவர்ஸ் வாங்கி குடுத்துடுவாரு.
க.மாறன் : ஏதும் கள்ளக்காதல் கதையா ?
சி.சிவா : வாட் நான்சென்ஸ் ? இது சன் டிவி சீரியல் இல்ல சார். சூப்பர் ஸ்டார் படம்.
க.மாறன் : நல்லா இருக்கு. மேல சொல்லுங்க.
சி.சிவா : ரஜினி சாருக்கு ஒரு லவ். ரஜினி பொண்ணு சம்பாதிச்ச காசை கந்து வட்டிக்கு விட்டு சம்பாதிச்சிக்கிட்டு இருக்காரு. அப்போ, அவர்கிட்ட வட்டிக்கு வாங்குன சேட்டு வட்டி குடுக்கல. ரஜினி கோவமா கெளம்பி அவர் வீட்டுக்கு போறாரு. போனா சேட்டு கால்ல விழுந்து அழுவுறாரு. “அண்ணே… நாலு வீடுங்களை வாடகைக்கு விட்டு இருக்கேன். அந்த வாடகையை வச்சித்தான் உங்களுக்கு வட்டி குடுக்குறேன். ஒரு பொண்ணு ஒரு வருசமா வாடகை குடுக்கல. நான் உங்களுக்கு எப்படி வாடகை கட்டுவேன்” அப்படின்னு கதறி அழுகுறாரு.
எவ அவன்னு கோவமா ரஜினி கெளம்பி போறாரு. போயி பாத்தா வாடகை குடுக்காம ஏமாத்தறது நயந்தாரா.
பாத்ததும் ஒரு பயர்.
க.மாறன் : அப்புறம் ?
சி.சிவா : ரஜினிக்கு நயன் மேல லவ் வந்ததும், அவர் காதலுக்காக இனிமே நானும் வாடகையே குடுக்கறதுல்லன்னு உறுதி எடுத்துக்கறாரு. அடுத்த சீன்லயே டூயட்.
குலுவாலிலே வட்டி தந்தல்லோ….
வட்டிக்கு வட்டி குட்டி போட்டல்லோ.
இந்த டூயட் முடிஞ்சதும் கரண்ட் சீனுக்கு வந்துடுறோம்.
க.மாறன் : நயனுக்கு ரோல் அவ்வளவுதானா ?
சி.சிவா : இருக்கே. நல்ல வெயிட்டான சீனெல்லாம் இருக்கு. நயன் ஒரு ஸ்கூல் தொடங்கறாங்க.
க.மாறன்: நான் சொல்றேன். ஸ்கூல் தொடங்கி, அப்படியே காலேஜ் கட்டி பெரிய ஆளு ஆகறாங்க. அப்படித்தானே ?
சி.சிவா : நோ. அந்த ஸ்கூல் கட்டிடத்துக்கும் வாடகை குடுக்காம நயன் ஏமாத்தறாங்க. வாடகை கேட்டா பில்டிங் ஓனரை ரஜினி பொரட்டி பொரட்டி அடிக்கிற மாதிரி பீட்டர் ஹெயின்ஸை வச்சு ஒரு பைட் வச்சுடலாம்.
க.மாறன் : இப்போ ரஜினி காட்டுக்கு போற சீன் வருதா ?
சி.சிவா : கரெக்டா சொன்னீங்கா. ரஜினி காட்டுக்கு போறாரு. ரஜினி காட்டுக்கு போறதை தெரிஞ்சுக்கிட்ட வில்லன் சிஷ்யமூர்த்தி ரஜினியை முடக்க ஒரு பெரிய ப்ளான் போடுறாரு.
க.மாறன் : என்ன ப்ளான். சீக்கிரம் சொல்லுங்கா. படபடப்பா இருக்கு.
சி.சிவா : படபடப்பா இருக்கா. இதே மாதிரிதான் ஆடியன்ஸும் சீட் நுனிக்கு வந்துடுவாங்க.
காட்டுக்கு போன ரஜினி, டயர்டாகி ஒரு மரத்துக்கு கீழ உக்காருவாரு. உக்காரும்போது உக்கார்ற இடத்துல ஒரு முள்ளு குத்துது. இந்த இடத்துல பிஜிஎம் ஏத்தறொம். ரஜினி நிலை குலைஞ்சு போறாரு.
க.மாறன் : ப்ரில்லியண்ட். ப்ரில்லியண்ட்.
சி.சிவா : தன்னை குத்துன முள்ளை எடுத்து, கையில வச்சிக்கிட்டு ரஜினி சொல்றாரு.
“டேய் சிஷ்யமூர்த்தி. எந்த முள்ளால என்னை கொல்ல பாத்தியோ, அதே முள்ளால உன்னை கொன்னுட்டு தமிழக மக்களை காப்பாத்தறேன்னு சவால் விடறாரு.
க்ளைமாக்ஸ்ல, அந்த முள்ளால சி.எம்மையும், சிஷ்ய மூர்த்தியையும், எல்லா வில்லன்களையும் கொன்னுட்டு, சி.எம்மா பதவி ஏத்துக்கறாரு. அதான் கதை.
க.மாறன் : பெண்டாஸ்டிக் சிவா. இந்த படம் கண்டிப்பா ஹிட்டு. உடனே அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிக்கங்க.
சி.சிவா : சார் ஒரு வேளை ஓடலன்னா ?
க.மாறன் : ரஜினி வீட்டு வாசல்ல டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் பிச்சை எடுப்பாங்க. நமக்கு என்ன ?
can you write some thing about DK and dmk trust and like this
எப்படி ரஜினியின் விசிலடிச்சான் குஞ்சுகளெல்லாம் இன்னும் விஜய் பற்றி, உதயநிதி ஸ்டாலின் பற்றி இப்படி எழுதுவியான்னு சொல்லி உங்களை திட்டாம இருக்குங்க??
Sir we expecting tnpsc scam
Wow.. Hilarious!! Good portrayal of Rajinikanth ‘s real life. He is a coward!
ஹாஹா செம
Boss super nobody can beat u Sabash Top dear
சும்மா கிழி
சிரித்து சிரித்து ……முடியவில்லை!
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது..
எல்லாரும் என்ன என்னன்னு கேட்டு
நான் சொன்ன பின்னர் அவர்களும் சிரித்தார்கள்..
“”
நோ நோ, தலைவர் ரசிகர்கள் எல்லாம் 60 ப்ளஸ். 3 நிமிஷம் மூச்சை புடிச்சு விசில் அடிச்சா தியேட்டர் முழுக்க டெட் பாடிதான். ரிஸ்க் வேண்டாம் சிவா.
“”
சிந்தனையின் உச்சம்..
வாழ்த்துக்கள்..
Nice narration