சவுக்கு தளத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இன்றோடு ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டன . 2014 ஆம் ஆண்டு இதே 28 பிப்ரவரி அன்று தான் நீதிபதி சி.டி.செல்வம், மகாலட்சுமி என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தடை விதித்தார். மகாலட்சுமியின் கோரிக்கை அவரை அவதூறாக சித்தரித்து எழுதிய கட்டுரைக்காக சவுக்கு தளத்தை நடத்துபவரை கைது செய்ய வேண்டும் என்பதே.
ஆனால் நீதிபதி சி.டி.செல்வம், இதற்காக அந்த தளத்தையே தடை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். இணைப்பு சவுக்கு தளம் சார்பாக ஒருவரும் ஆஜராகாத நிலையில் ஒருதலைபட்சமாக முடிவெடுப்பது தவறு என்பது கூட நீதிபதிக்கு தோன்றவில்லை. பின்னாளில் சவுக்கு சார்பாக அந்த வழக்கில் என் தரப்பு வாதத்தை வைக்க மனு தாக்கல் செய்யப்பட்டபோது, அந்த மனுவை தள்ளுபடி செய்தார். சென்னை மாநகர காவல்துறைக்கு என்னை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு நாள் எனக்கு 2ஜி டேப்புகள் கிடைத்தன. அதை பரிசீலித்து எப்படி வெளியிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், சென்னை காவல்துறை, சவுக்கு தளத்துக்கு வடிவமைப்பு செய்வதற்கு உதவிய முருகைய்யனை கைது செய்த விபரம் தெரிய வந்தது. நான் கைதானால் டேப்பை வெளியிட முடியாது. உடனடியாக டேப் தொடர்பாக டெல்லி செல்ல வேண்டும். விமான நிலையத்திலும், ரயில் நிலையத்திலும், காவல் துறையினர் கண்காணிக்கிறார்கள் என்பதும் தெரியும்.
அப்போது திமுக சார்பாக என்னிடம் 2ஜி டேப்பை வெளியிடாமல் இருப்பதற்காக பேரம் பேசப்பட்டதும், நீதிபதியிடம் கலைஞரை பேச வைத்து, என் மீதான வழக்கை முடித்து வைக்க எனக்கு ஆஃபர் வழங்கப்பட்டதும் உண்மை. நான் முழுமையாக மறுத்து விட்டேன். என் மீதான பிடி இறுகியது. நீதிபதி கடுமையானார்.
நண்பர் உதவியோடு, சென்னையிலிருந்து திருப்பதி வரை காரில் சென்று, திருப்பதியிலிருந்து ஐதராபாத்துக்கு ஒரு விமானம். அங்கிருந்து டெல்லிக்கு விமானம். அந்த சாகச கதையை பின்னர் ஒரு நாள் விரிவாக பார்க்கலாம். டெல்லி சென்று வேலை முடிந்ததும் டெல்லியிலிருந்து கோவை வந்து, கோவையிலிருந்து சென்னை திரும்பினேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் இவ்வழக்கை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் தினந்தோறும் என்னை ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இந்நிலையில் இவ்வழக்கில் எனக்கு முன் ஜாமீன் கிடைத்தது. முருகையனும் ஜாமீனில் வெளிவந்தார். உடனே மகாலட்சுமி என் மீது அடுத்த புகாரை அளித்தார். நான் அவரை மிரட்டியதாக ஒரு ஆடியோ சிடியையும் அளித்தார். அதாவது சவுக்கில் வெளிவந்த கட்டுரையை நீக்க 50 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினேனாம். இதற்கும் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதில் எனக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை.
நான் தலைமறைவாக இருந்தேன். சென்னை காவல்துறைக்கு நான் இருக்கும் இடம் தெரியும். கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய சூட்சுமம் இல்லை. தினமும் பேஸ்புக்கில் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் காவல் துறையினர் நீதிமன்றம் சென்று, ‘பல தனிப்படைகளை அமைத்துள்ளோம். சங்கரை கண்டுபிடிக்கவே முடியவில்லை’ என்று பதில் சொல்லுவார்கள். அப்போது ஜார்ஜ் சென்னை மாநகர ஆணையராக இருந்தார். அவரைப் பற்றி கடுமையாக எழுதியிருக்கிறேன். நீதிமன்றத்தில் ஆஜராகததால் மற்றொரு புறம் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையில், சிபி.சிஐடி போலீசாரும் என்னை தேடி வந்தனர். அவர்களுக்கும் நான் இருந்த இடம் தெரிந்தே இருந்தது என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன். இரு காவல் துறை பிரிவும் என்னை ஏன் கைது செய்யாமல் விட்டார்கள் என்பது எனக்கு இது வரையிலும் புரியவில்லை.
சவுக்கு தளம் தடை செய்யப்பட்டதும், புதிய இணைய முகவரியை பதிவு செய்தேன். அதில் பழைய கட்டுரைகளை ஏற்றி மீண்டும் எழுதினேன். நீதிபதி சி.டி.செல்வம் கடும் கோபம் கொண்டார். அதையும் தடை செய்தார்.
எனக்கும் கோபம் வந்தது. அவர் பெயரிலேயே சிடிசெல்வம் டாட் காம், டாட் ஓஆர்ஜி என்று இணையதளங்களை உருவாக்கினேன். அவர் அதையும் தடை செய்து உத்தரவு இட்டார். அவர் தடை உத்தரவு பிறப்பிப்பார் அந்த உத்தரவு மத்திய தகவல் அமைச்சகத்துக்கு சென்று அவர்கள் அந்த இணைய தளத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க 25 நாட்கள் ஆகும். 25 நாட்கள் முடிகையில் மற்றொரு இணைய தளத்தோடு தயாராக இருப்பேன். இதுபோல பல இணைய தளங்களை நான் திறப்பதும், ஆவர் அதை தடை செய்வதும் ஒரு வருடத்துக்கு நடந்தது. நீதிபதி சி.டி.செல்வத்துக்கு கோபம் உச்சத்துக்கு சென்றது. ஐ.ஜி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவினை இட்டு 2 மாதங்கள் ஆகியும் நான் கைது செய்யப்படவில்லை. நீதிமன்றத்திலேயே காவல் துறை அதிகாரிகளை வெளிப்படையாக “உங்காளால ஒருத்தனை அரெஸ்ட் பண்ண முடியலையா” என்று கத்துவார். அவர்கள் வழக்கம் போல, “தனிப்படை ஆமைத்து தேடுகிறோம்” என்று பதில் கூறுவார்கள்.
அப்போதும் நான் கைதாகவில்லை. எனக்கு பதிலாக சவுக்கு தளத்துக்கு உதவியதாக போத்தி என்பவரை கைது செய்தனர். இணைப்பு
ஒரு கட்டத்தில் நீதிபதிக்கு சென்னை காவல்துறை மீதே நம்பிக்கை இழந்து வழக்கை சிபிஐக்கு மாற்றினார். சிபிஐ அதிகாரிகள் அவசியமில்லாமல் கைது செய்ய மாட்டார்கள் என்பது நன்றாக தெரியும் என்பதால், ஒன்றரை வருடங்கள் கழித்து வீடு திரும்பினேன்.
அதன் பிறகு சிபிஐ விசாரணை நடத்தியது. அவதூறான கட்டுரை எழுதியதாக என் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 50 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாக பொய் புகார் கொடுத்ததற்காக மகாலட்சுமி மற்றும் அவர் தம்பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மகாலட்சுமிக்கு தண்டனை கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். என் சார்பாக போனில் மகாலட்சுமியை மிரட்டியதாக சொல்லப்படும் நபர், மகாலட்சுமி சொல்லித்தான் அவ்வாறு பேசியதாக வாக்குமூலம் அளித்து அப்ரூவராக மாறி விட்டார். இரு வழக்குகளும் இன்னும் நடந்து வருகின்றன.
பின்னாளில் எச்.ராஜா, “ஹைகோர்ட்டாவது மயிராவது” என்று திமிரோடு பேசியபோது, இன்று வீர வசனம் பேசும் ஒரே ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்குக் கூட எச்.ராஜா மீது நீதமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க துணிவு இல்லை. ஆனால் நீதிபதி சி.டி.செல்வம் எடுத்தார். அவர் மீது எனக்கு பல மடங்கு மரியாதை கூடியது. அவர் எழுதிய தீர்ப்பு கவிதை போல இருந்தது.
“மன்னிப்பு கேட்கிறேன்” என்று தலைப்பிட்டு, அவரை பாராட்டி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினேன்.
https://www.savukkuonline.com/15438/
அதைப் படித்து விட்டு அவர் நெருங்கிய நண்பரிடம், “நான் அதையெல்லாம் அப்பவே மறந்துட்டேன்பா. இன்னுமா அந்த பையன் அதை ஞாபகம் வச்சிருக்கான். ஆனா அவனுக்கு திமிரை பாத்தியா…. நான் தப்பு பண்ணேன். நீங்களும் தப்பு பண்ணீங்கன்னு எழுதிருக்கான்” என்று செல்லமாக என்னை கடிந்து கொண்டதாக அந்த நண்பர் கூறினார். மீண்டும் ஒரு முறை நீதிபதி சி.டி.செல்வம் அவர்களிடம் மன்னிப்பு கோரிக் கொள்கிறேன்.
வெகுஜன ஊடகங்களெல்லாம் அமைதியாக இருந்த காலத்தில், காவல் துறையின் நெருக்கடிகளையும் மீறி, 2014ல், தலைமறைவாக இருந்துகொண்டே, சசிகலா ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் நடத்துவதையும், பீனிக்ஸ் மாலில் தியேட்டர் வாங்கியதையும், பல கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்ததையும் சவுக்குதான் வெளிக்கொணர்ந்தது என்பதை பரிசீலிக்க நீதிபதி சி.டி செல்வம் அப்போது தவறி விட்டார். இப்போது புரிந்து கொண்டிருப்பார். ஜெயலலிதா முதல்வராக இருந்தார். ஜெயலலிதாவையும், சசிகலாவையும் எதிர்த்து ஒருவன் எழுதுவது அத்தனை எளிதல்ல.
இந்த ஆறு ஆண்டுகளாக சவுக்கு தளம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. வெகுஜன ஊடகங்கள் எழுதத் துணியாத விஷயங்கள் பலவற்றை எழுதுகிறது. குறிப்பாக நீதித்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து எந்த ஊடகமும் எழுதுவதில்லை. சவுக்கு தொடர்ந்து எழுதி வருகிறது.
எவ்வித லாப நோக்கமும் இல்லாமல்தான் தொடக்கம் முதல் இன்று வரை நடத்தப்படுகிறது. இதை நடத்துவதால், சிக்கல்கள் மட்டுமே மிஞ்சுகிறதே தவிர எந்த லாபமும் இல்லை. ஆனால், இது ஒரு நம்பகமான ஊடகம் என்று லட்சக்கணக்கானோரால் நம்பப்படுவது மட்டுமே இதன் பெரிய பலம். பலர் நம்பி தகவல்களையும் ஆதாரங்களையும் அளிக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் தகவல்கள் அனைத்தும் முழுமையாக சரி பார்த்த பின்னரே வெளியிடப்படுகின்றன. இப்படி ஒரு ஊடகத்தின் அவசியம் உள்ளதை, அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் புரிந்துள்ளனர் என்றே கருதுகிறேன்.
ஒவ்வொரு கட்சியிலும் எனக்கு நண்பர்களும், எதிரிகளும் உண்டு. நண்பர்களும், எதிரிகளும் கூட என்னை நம்புகிறார்கள் என்பது தான் நான் நேர்மையாக செய்திகளை அணுகுகிறேன் என்பதற்கான சாட்சி. திமுகவை எதிர்த்து எழுதுகிறபோது அதிமுகவும், அதிமுகவை விமர்சிக்கும்போது திமுகவும் என்னைப் பாராட்டுவார்கள். இதை நான் புரிந்து கொண்டே செயல்படுகிறேன்.
இதே போல எப்போதும் எதிர்க்கட்சி செய்யும் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம்.
அந்த நெருக்கடியான காலகட்டத்தில் பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன் எனக்கு செய்த உதவிகளை மறக்க முடியாது. சவுக்கு தடையை எதிர்த்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து எழுதினார். நான் பலரை மிரட்டி பணம் சம்பாதித்தேன் என்று என் மீது நான் மதிக்கும் சிலர் கூட குற்றச்சாட்டுகளை சுமத்தியபோது, அவர் என்னை உறுதியாக நம்பினார். அவர் நம்பிக்கையை வீணடிக்காமல்தான் இந்நாள் வரை நடந்து வருகிறேன்.
பெயர் வெளியிட விரும்பாத பல நண்பர்கள் அப்போது எனக்கு பல்வேறு உதவிகளை செய்தனர். இதனாலேயே கஷ்டங்கள் வருகிறபோது என்னால் நிமிர்ந்து நிற்க முடிகிறது. அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
முருகையன் மற்றும் போத்தி காளிமுத்துவுக்கும் சவுக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர்கள் இருபது நாட்கள் இந்த வழக்குக்காக சிறையில் இருந்தார்கள். சிறை அத்தனை சாதாரணமானது அல்ல. ஒரு மனிதனை உலுக்கி, அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடியது. ஒருவரின் தன்மையை மாற்றவல்லது. கடும் மன உளைச்சலைத் தரக்கூடியது.
அவர்கள் இருவரும் இதனால் கடும்கோபம் கொண்டிருக்கலாம். என்னையும் சவுக்கையும் வெறுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி என்னை வெறுக்கவில்லை என்பதை அறிகிறேன். என்னோடு முற்றிலும் மாறுபட்ட கருத்து உடைய ஒருவர் சவுக்குக்கு உதவி செய்த காரணத்தால் கைது வரை சென்று தப்பித்தார். அவரும் சவுக்கை வெறுக்கவில்லை. எனக்கு முன் ஜாமீனும், போத்திக்கு ஜாமீனும் பெற்றுத் தந்த வழக்கறிஞர் மணிகண்டனின் உதவியும் மறக்க முடியாதது.
ஒரு மாபெரும் பத்திரிகை அலுவலகம் மனித ஆற்றலைக் கொண்டு செய்திகளை வெளிக்கொண்டு வருவது போன்றது அல்ல சவுக்கு. நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே செய்திகளை வெளியிடுகிறது. எதிரிகளை எந்தளவுக்கு பெற்றிருக்கிறதோ அதே அளவு பாதிக்கபப்ட்ட பலருக்கும் நியாயம் பெற்றுத்தந்திருக்கிறது. இது சவுக்கின் பெருமையாக கருதுகிறேன். தேசிய ஊடகம் மட்டுமே கவனம் செலுத்தி வந்த செய்திக் கட்டுரைகளை தமிழில் தொடர்ந்து சவுக்கு வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் சவுக்கில் செய்தி வெளியிட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளுடன் வருபவர்கள் இந்தத் தளத்தின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை முக்கியமானது.
தொடர்ந்து சவுக்கினை வாசிக்கிற, புதிதாய் வாசிக்கும் இளைய தலைமுறையினர் என உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக, தொடர்ந்து எழுதுவேன், செயல்படுவேன் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். எந்த சிரமத்தையும் இதன் பொருட்டு எதிர்கொள்ள என்னால் இயலும்.
தொடர்ந்து எனக்கு பேராதரவு தரும் என் அன்பு வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
தோழமையுடன்.
சவுக்கு சங்கர்.
Congrats Savukku. You are always doing excellent work.
Congrats and wish you all the best.
My perspective on the lawyers and police are on the negative side only. But I have been reading your articles for sometime, my impression is that there are some good lawyers as well as the good police whom helped you a lot with out arresting.
Also on Mr.TN. Goplan, seems he is like a father figure ignoring all your tantrums as well as over looking the insults :-). I may be wrong, but based on the comments in some of the older posts, this is another impression.
Congrats and wish you all the best.
My perspective on the lawyers and police are on the negative side only. But I have been reading your articles for sometime, my impression is that there are some good lawyers as well as the good police whom helped you a lot with out arresting.
Also on Mr.TN. Goplan, seems he is like a father figure ignoring all your tantrums as well as over looking the insults :-). I may be wrong, but based on the comments in some of the older posts, this is another impression.
What do you think about Dhraupadhi movie Savukku.Please write an article on this movie
Super sir unkal Pani mealum serakka vazhtukeran eppothum ungàl unmithanmku eatrum eam pontravarkalen atharvu undu nàtre sir
கடந்த 1 வருடமாக தங்களின் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களின் நேர்மை மிகவும் பிடித்திருக்கிறது. ஏதோ ஒரு ஊடகத்தின் தங்களின் புத்தகம் பற்றி கேள்விப்பட்டு அதை உடனே தபாலில் வரவழைத்து ஒரே மூச்சில் படித்து முடித்து மிகவும் ஆச்சரியப் பட்டேன். இந்த சிறிய வயதிலேயே நேர்மையை கட்டிக்காக்க நீங்கள் எடுத்த முயற்சிகள் தைரியமாக அதை எதிர்கொண்ட விதமும் மிகவும் பாராட்டுக்குரியது. அன்று முதல் தங்களின் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன்.
நான் ஒரு உண்மை விரும்பி. எனக்கு வயது தற்போது 67. என்னுடைய பணிக் காலத்தில் லஞ்சம் வாங்காமல் நேர்மையுடன் பணி முடித்து ஓய்வு பெற்றவன். இருவர் மனப்பான்மையும் ஒன்று போலிருத்தலும் தங்கள் மேல் பிடிப்பு ஏற்பட காரணமாக அமைந்துவிட்டதாகவும் இருக்கலாம். உங்களின் பணி இந்த விதமாகவே தொடரட்டும். தாங்கள் மேலும் சாதனை செய்ய விரும்புகிறேன் வாழ்த்துகிறேன். இவை எல்லாம் கைகூட தாங்கள் பூரண நலத்துடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Great Sir..Congrats..
வாழ்த்துகள்
எதிர்கருத்துக்கள் இருந்த போதும் நாங்க நம்புறோம்யா
Appreciate & immense gratitude sir. One of the pillar of democracy..
வாழ்த்துக்கள்
Congrats savukku.
ஒரு ஏழை மாணவியின் தற்கொலை, அந்த பள்ளி தாளாளர் மீதான வழக்கு என்னவாயிற்று? நீதி கிடைத்ததா? மனதை முள் போல் நெருடிக்கொண்டிருக்கும் செய்தி அது….
Congrats Sankar. I concurred with your views.
தங்களின் பணி அசாத்தியமானது. இவ்வளவு தடைகளையும் மீறி அறன் வழி நிற்பதற்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக அருமை ஐயா…..god bless you
( Naan உங்கள் ரசிகன்)
Great Savukku. God bless you.
பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்து சங்கர் (y)
Good job
Semma sir…🙏
Well done savukku,
Can u please write about current delhi unrest, who is behind this unreat
Congratulations
Wishes. Happy that we traveled with you during those times.
வாழ்த்துக்கள் அன்பரே.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்👏👏
அப்பாடா….. இங்கதான் சங்கிகள் வந்து கதறாம இருக்காங்க…….
வாழ்த்துக்கள் அண்ணா ஊடகங்கள் வெளியிடதயங்கும் செய்திகளையும் துணிச்சலுடன் வெளியிட்டு மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சார் …
வாழ்த்துக்கள் சார்
Super Sankar. Congrats.
வாழ்த்துக்கள் தோழர்…
Best Wishes.
Best wishes
கடுமையான உங்கள் சேவை தொடர நல்வாழ்த்துகள்.வாய்மையே வெல்லும்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா
Heartly wishes savukku….
தொடரட்டும் உங்கள் தொண்டு
வாழ்த்துக்கள். உங்கள் பணி எளிதானதல்ல.
சாதாரண தனியார் நிறுவனத்தில் கூட நேர்மையுடன் uncompromising வேலை செய்வதற்கு எத்தனை எதிரிகள்.
செம்ம அண்ணா
நீ கலக்கு தல !
Valga valarga savukku
தங்கள் பணி தொடர வாழ்த்துகள் சகோ.
நிச்சயம் ஒரு நாள் விடியும். உங்கள் கனவுகள் மெய்ப்படும். வாழ்த்துக்கள் அண்ணா.
Our good things are starts with bad words of other
vaazhththukkal Savukku Sankar.
Unmaiyai entrum urakka kuruvom.
Congratz Savukku!
Congratz Savukku!
கண்ணீரையும், நம்பிக்கையையும் விதைக்கிறது உங்கள் கட்டுரை |