ஹப்பிங்டன் போஸ்ட்டுடன் இணைந்து, சவுக்கு வெளியிட்டு வரும் கண்காணிப்பு தேசம் கட்டுரையின் 2ம் பகுதி.
இந்திய அரசாங்கதத்தால் கொண்டு வரப்படவுள்ள சர்ச்சைக்குரிய தேசிய சமூகப் பதிவேடு குறித்த ஆபத்தினைப் பற்றி மூத்த அதிகாரி ஒருவர் தன்னுடைய கவலையைப் பகிர்ந்துள்ளார். ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கும் இந்த ஒட்டுமொத்த பதிவேடு கோடிகணக்கான இந்தியர்களின் பாதுகாப்பையும், தனியுரிமையையும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும் என்கிறார் இவர். ஆனால் இவரின் எச்சரிக்கை கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன. இதனை ஹஃப்போஸ்ட் இந்தியா பல்வேறு ஆவணங்களின் மூலம் விளக்குகிறது.
இந்த தேசிய சமூக பதிவேடு என்பது குடிமகன்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையை அரசாங்க உதவி பெறும் நலத்திட்டங்களுக்காக தொடர்ந்து கண்காணிக்கும் என்றே கூறப்பட்டது. இதனை ஹஃப்போஸ்ட் இந்தியா முந்தைய செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இதற்கான பதிவு தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் அப்போதைய பொருளாதார ஆலோசகர் மனோரஞ்சன் குமார் இந்தத் திட்டத்தின் மூலமாக ஒட்டுமொத்தமாக குடிமகன்கள் ஒவ்வொருவரைப் பற்றிய கண்காணிப்பையும் சுலபமாக மேற்கொள்ள பயன்படுத்தப்படும் என்ற ஆபத்தை உணர்ந்தார்.
“இது போன்று கண்காணிப்பது என்பது அறத்தினை மீறிய செயலாக அதிகாரத்தாலும், கண்காணிக்கும் அமைப்பினாலும் மேற்கொள்ளப்படுகிறது” என்றார் குமார். இந்தத் திட்டம் எப்படி தனியுரிமையை பாதுகாக்க முடியும் என்கிற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார். இதுகுறித்து கிராம மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது ஹஃப்போஸ்ட். விளக்கம் பெறப்பட்டால் வரும் கட்டுரையில் அது இணைக்கப்படும்.
2015, நவம்பர் மாதம் 27ம் தேதி அன்று, கிராம வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் அப்போதைய பொருளாதார ஆலோசகர் மனோரஞ்சன் குமார் தேசிய சமூகப் பதிவேட்டின் நோக்கம் குறித்து ஒரு குறிப்பினை எழுகிறார். அதன்படி, நாட்டின் ஏழை குடிமகன்களுக்கு அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகள் சென்றடைந்தது குறித்து அறிந்து கொள்ளும் வெளிப்படையான புதிய வழியாக இது இருக்கும் என்றிருந்தார்.
இப்போது இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. திட்டமும் முடியும் தருவாயில் உள்ளது. இப்போது குமார் இந்தத் திட்டத்தின் நோக்கம் குறித்து அச்சம் கொண்டிருக்கிறார். மிக நல்ல நோக்கத்துக்காக தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டம் 1.2பில்லியன் குடிமகன்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் அழிக்கவிருக்கிறது என்பதே அவரது அச்சத்துக்கு காரணமாக அமைந்திருக்கிறது. காலம் கடந்திருந்தாலும், அவரது அச்சத்தில் நியாயம் இருக்கிறது.
இது குறித்து ஸ்ரீனிவாச கோடலி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கை பெற்றிருந்தார். இவர் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் மற்றும் இணைய ஆராய்ச்சியாளருமாவார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இவர் பெற்ற அறிக்கையின்படி சமூக பதிவேடு என்பது பல்வேறு டேட்டாபேஸ்களையும் தன்னுள் இணைத்த ராட்சச டேட்டா பேஸ் என்பது தெரிய வந்திருக்கிறது. 1.2 இந்தியக் குடிமகன்களையும் ஆதார் எண்களைக் கொண்டு அவர்களின் ஒவ்வொரு செயபாடுகளையும் இதன் மூலம் கண்காணிக்க இயலும் என்கிறார் ஸ்ரீனிவாச கோடலி.
ஹஃப்போஸ்ட் இந்தியாவின் செய்தி : தேசிய சமூக பதிவேடு என்பது ஒரு இந்தியன் எந்த நகரத்துக்கு குடிபெயர்கிறான், எந்த புதிய பணிக்கு செல்கிறான், எங்கே சொத்துக்கள் வாங்குகிறான், ஒருவருடைய குடும்பத்தில் இறப்பு, பிறப்பு விபரங்கள், எப்போது திருமணம் நடக்கிறது, எப்போது குடிபெயர்கிறார்கள் என்ற அனைத்து விபரங்களும் இந்தத் தேசிய சமூக பதிவேட்டில் இடம் பெறும். இதோடு ஆதார் எண்களைக் கொண்டு ஒருவரின் மதம், சாதி, வருமானம், சொத்து, கல்விப் பின்புலம், திருமணமானவரா, வேலை என ஒரு குடும்பத்து உறுப்பினர்களின் அத்தனை விவரங்களும் கொண்ட ராட்சத டேட்டாபேஸ் அது.
“இந்த சமூக பதிவேட்டுத் திட்டம் முழுமை பெற வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏனென்றால் நலத்திட்டங்களைப் பொறுத்தவரை அரசின் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை இருக்கும் என நினைத்தேன்” என்றார் குமார். சமூகப் பதிவேடு குறித்து ஓய்வு பெற்ற 2019க்குப் பின் குமார் வெளிப்பையாக ஹஃப்போஸ்ட் இந்தியாவுக்கு முதன்முதலாக அளித்த கருத்து இது. “சில துறைகளும், அதிகாரிகளும் கிராம மேம்பாட்டுத் திட்டத்தில் பல்வேறு சாதனைகள் நிகழ்ந்திருப்பதாக பொய்யாக சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். இது நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும். சமூகப் பதிவேட்டிலிருந்து துல்லியமான புள்ளிவிவரங்கள் மட்டுமே பெறப்பட வேண்டும்”
இறுதி வடிவில் உள்ள இந்தப் பதிவேட்டினால் தற்போதைய இந்தியா விரைவில் போலிஸ் ஸ்டேட் என்கிற இடத்தை நோக்கி செல்லும் என்று குமார் முடிவுக்கு வந்திருக்கிறார். இந்தப் பதிவேட்டின் தொடக்கப் புள்ளியில் இதன் ஆதரவாளராய் இருந்த உயரதிகாரியான குமார் தற்போது இந்த டேட்டாபேஸ் அமைப்பு மையப்படுத்தப்பட்டதைக் கண்டு எச்சரிக்கிறார். இந்திய அரசு நிர்வாகம்தான், அரசின் கொள்கை திட்டங்களை வகுக்கும் அச்சாணியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த அரசு நிர்வாகம் இது போன்ற திட்டங்களால் ஏற்படும் பாரதூர விளைவுகளை புரிந்து கொள்ளவில்லை.
“இந்தியா கண்காணிப்பின் அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு போலீஸ் ஸ்டேட்டாக மாறுவதைக் கண்டேன். எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்துக்கும் அதன் குடும்பம் மற்றும் தொழில்களுக்கு குறைந்த அளவிலான கட்டுப்பாடும், அதிக சுதந்திரமும் தரப்பட வேண்டும் என்பதே என் நம்பிக்கை” என்கிறார் குமார்.
துரதிர்ஷ்டவசமாக இன்று அனைத்து அரசாங்க துறைகளும், அரசு சார்ந்த அமைப்புகளும், கண்காணிப்பு முகவர்களாக மாற்றப்பட்டுவிட்டன” என்கிறார். “ஆயுள் காப்பீடு, வங்கித்துறை, வரி அல்லது சொத்து பதிவு என்று எதை எடுத்துக் கொண்டாலும் அனைவரும் குற்றவாளி என்பதான கண்ணோட்டதிலேயே பார்க்கப்படுகிறார்கள். குறைவான சுதந்திரமே குடும்பம் மற்றும் வர்த்தக ரீதியிலான அமைப்புக்குத் தரப்படுகிறது”
சமூக பதிவேடு போன்ற பெரிய டேட்டாபேஸ் என்பது வறுமை ஒழிப்பு குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் புத்திசாலித்தனமான நகர்வு. 2000ஆம் ஆண்டுகளில் மாபெரும் திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய கிராப்புற வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம், உணவுக்கான உரிமை திட்டம், சர்வசிக்ஷா அபியான் போன்றவை எதிர்கால பயனாளர்களை மனதில் கொண்டே உருவாக்கப்பட்டிருந்தன.அரசின் நலத்திட்ட பயன்களை உரியவர்களுக்கு சேர்ப்பது என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும், தேசிய சமூக பதிவேடு என்ற திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குடிமகனையும் கண்காணிப்பது நியாயப்படுத்தப்படுகிறது.
ஆதார் மூலமாக பெறப்பட்டுள்ள அத்தனை புள்ளிவிவரங்களும் ஏற்கனவே மலையளவு குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒரே இடத்தில் குவிக்க ஒரே ஒரு சாப்ட்வேர் மட்டும் எழுதினால் போதுமானது. இதனை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார் குமார் ஹஃபபோஸ்டுக்கு அளித்த நேர்காணலில்.
ஐஐஎம் அஹமதாபாத்தின் பொருளாதாரத் துறை உதவி பேராசிரியர் ரீத்திக்க கேரா இது குறித்து பேசுகையில், “பயனாளர்களை குறிப்பிட்டு பயன்களை கொண்டு சேர்க்க என்ற வாததின் அடிப்படையில் உருவாக்கப்படும் டேட்டாபேஸ்களால், ஒரு குடிமகனாக நமது தனிநபர் சுதந்திரம் மற்றும் உரிமைகளை இழக்கிறோம்.
இதே காரணத்தை கூறித்தான் ஆதாரை உருவாக்கினார்கள். பயனாளிகளுக்காக என்று கூறி பல்வேறு டேட்டாபேஸ்களை இணைத்து ஒற்றை டேட்டாபேஸாக உருவாக்குவது, அனைவரையும் கண்காணிப்புக்கு உட்படுத்தவே. இது வெளிப்படையாக கூறப்படுவதில்லை. அரசுப் பணம் விரயமாவதை தடுக்க என்ற பெயரில், நம் அனைவரையும் கண்காணிப்புக்கு உள்ளாக்குவது வசதியாக மறைக்கப்படுகிறது” என்றார் ரீத்திக்கா.
அரசு ஆவணங்களின்படி, ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் மனோரஞ்சன் குமார், தேசிய சமூக பதிவேட்டின் மிக முக்கிய ஆதரவாளராக இருந்தார். 2015ம் ஆண்டு, இத்திட்டம் உருவாவதற்கு முன், இதை உருவாக்க கருத்துருவை உருவாக்கியதே குமார்தான். இது தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவோடு, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தியதும், உலக வங்கி மற்றும் நித்தி ஆயோக் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியதும் குமார்தான்.
இந்த அனுபவம் குறிந்த்து பகிர்ந்துகொள்ளும் குமார், “ ஒரு சவாலான பணியை கேட்டோம். அது கிடைத்து விட்டது” என்று இந்த கோப்பில் தொடக்க காலத்தில் குமார் பதிவு செய்துள்ளார். மேலும், “சமூக பொருளாதார கணக்கெடுப்பின் அடிப்படையில் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் ஒரு சமூக பதிவேடு வேண்டும். இதற்காக உலக வங்கி உட்பட்ட பலதரப்பட்ட நிபுணர்களின் நிபுணத்துவத்தோடு இதை உருவாக்குவோம்” என்று குமார் பதிவு செய்திருந்தார்.
2016ம் ஆண்டு முழுக்க குமார் இந்த பணியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் 2017ம் ஆண்டில் இவருக்கு இத்திட்டம் குறித்து சந்தேகங்கள் எழுந்தன.
15 மார்ச் 2017 அன்று ஒரு அலுவலக குறிப்பில், இத்திட்டம் குறித்த தனது சந்தேகங்களை பதிவு செய்கிறார் குமார். “தேசிய சமூக பதிவேடு உருவாக்கும் அதே நேரத்தில், தனிநபர் சுதந்திரம் மற்றும் உரிமைகள் குறித்தும் நாம் கவத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக அதிகார வர்க்கம் மற்றும் காவல் அமைப்புகள், தனி நபர் சுதந்திரத்தை மீறுவதற்கும், தவறான வழிகளில் இதை பயன்படுத்துவதற்கும் தயங்காத சூழலில், இது குறித்த கவனம் தேவை” என்று குமார் பதிவு செய்கிறார். அமெரிக்காவில், இது போன்ற ஒரு திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதற்கான முக்கிய காரணம், தனிநபர் சுதந்திரம் எந்த விதத்திலும் மீறப்படாமல் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதே” என்று பதிவு செய்தார் குமார். ஆனால், குமாரின் குறிப்புக்கு வேறு எந்த அதிகாரியும் பதில் சொல்லவில்லை.
ஒரு புறம் உச்சநீதிமன்றம், தனிநபர் சுதந்திரம் மற்றும் ஆதார் குறித்த வழக்குகளை விசாரித்துக் கொண்டிருக்க, மோடி அரசோ, ஏறக்குறைய அனைத்துக்கும் ஆதாரை கட்டாயமாக்கும் விதிகளை பிறப்பித்துக் கொண்டே இருந்தது. குமார் அந்த குறிப்பை பதிவு செய்த சமயத்தில், ஆதார் விபரங்களும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்ற குமாரின் அச்சம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
“நீங்கள் ஒரு வங்கியில் பணத்தை செலுத்த சென்றாலோ, மருத்துவமனையில் நோயாளிக்கு பணம் செலுத்தினால்லோ, உங்கள் ஆதார் எண் கேட்கப்பட்டு வந்தது. ஆதாரில் உள்ள உங்களின் அத்தனை தகவல்களும் பரிமாறப்படுகிறது. இன்றைய தொழில்நுட்ப உலகில், எதுவுமே ரகசியம் இல்லை.
உங்களின் பயோமெட்ரிக் விபரங்கள் ஒரு காவல் துறை அதிகாரியிடம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த அதிகாரிக்கு ஒரு மோசமான குற்ற வழக்கில் குற்றவாளியை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று கடும் அழுத்தம். அந்த நேரத்தில் அவரிடம் இருக்கும் விபரங்களை அவர் தவறாக பயன்படுத்தமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்” என்று கேள்வி எழுப்புகிறார் குமார். இதுவே நான் அந்த குறிப்பை பதிவு செய்வதற்கான காரணம் என்று கூறுகிறார் குமார்.
ஆகஸ்ட் 2017ல் குமார் தனது கருத்தை பதிவு செய்த சில மாதங்களுக்கு பிறகு, உச்சநீதிமன்றம் ஆதார் வழக்கில் தனது தீர்ப்பை வழங்கியது.
“ஒரு தனி நபரின் சொந்த விபரங்களை பதிவு செய்வது, அந்த விபரங்களின் அடிப்படையில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று மென்பொருளை கொண்டு அலசுவது, அவர் பணியிடத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்று ஆராய்வது, அவருக்கு பிடித்த / பிடிக்காத விஷயங்களை பதிவு செய்வது, அவரின் நடமாட்டங்களை பதிவு செய்வது போன்றவை, அரச கண்காணிப்பே. இது போன்ற விபரங்களை சேகரிப்பது, மத, இன, மற்றும் சாதி அடிப்படையில் வேறுபாடுகளை உருவாக்க வழிவகுக்கும்” என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் எழுதியது.
ஏற்கனவே, ஹப்பிங்க்டன் போஸ்ட் பதிவு செய்தது போல, தொடக்கத்தில் ஆதார இல்லாமல் தேசிய சமூக பதிவேட்டை உருவாக்க முனைந்த அரசு, பின்னர் ஆதார் சட்டத்தை திருத்த முடிவு செய்தது. இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், நீதிமன்றம் உருவாக்கிய பாதுகாப்புகள் அனைத்தும் நீர்த்துப் போகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
“இதுபோன்ற டேட்டாபேஸ்களை பாதுகாப்போடு நிர்வகிக்க உரிய சட்டங்கள் இல்லாத நிலையில், தேசிய சமூக பதிவேடு போன்ற டேட்டாபேஸ்கள் அரசு துறைகளால் முறைகேடாக பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள் இருக்கிறது. அதிகாரத்தில் இருக்கும் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், இந்த டேட்டாபேஸ்களை பயன்படுத்தி, வாக்காளர் விபரங்களை தங்கள் வசதிக்கு ஏற்ப திருத்தி, தேர்தல்களில் முறைகேடு செய்ய முடியும்” என்கிறார் இவ்விவகாரத்தில், அரசின் கோப்பு நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்ற ஆர்வலர் கோடாலி.
ஓய்வு பெற்ற பிறகு ஹப்பிங்க்டன் போஸ்ட்டுக்கு பேட்டியளித்த மனோரஞ்சன் குமார், இப்போது இருக்கும் அமைப்புகளால், தேசிய சமூக பதிவேடு போன்ற ஒரு டேட்டாபேஸின் பாதுகாப்பை உறுதி செய்வது இயலாத காரியம் என்கிறார்.
ஒருவரது கைரேகை அவர் ஒரு இடத்தில் இருந்தார் என்பதற்கான ஆதாரம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் கூறுகிறது. அரசு வசம் உள்ள டேட்டாபேஸ்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்து முடித்த பிறகுதான், நமது விபரங்கள் தவறாக பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்ய முடியும்” என்கிறார் குமார்.
அரசு துறையில் பணியாற்றிய தனது அனுபவம், அரசு அமைப்புகள் அரசின் வரையறையற்ற அதிகாரத்துக்கு ஒரு கட்டுப்பாடாக இருக்க்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறுகிறார் குமார்.
“அரசு அதிகாரிகளின் மீதும் இந்த அமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்திருந்தேன். காவல் துறை, நீதிமன்றங்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். இதன் காரணமாகவே தேசிய சமூக பதிவேடு போன்ற ஒரு திட்டத்துக்கு ஆதரவு அளித்தேன். ஆனால் இன்று எனது பெரும்பாலான நம்பிக்கைகள் பொய்த்து விட்டன.
எனது உரிமைகளை விட அரசின் உரிமைகள் மதிப்பானவை அல்ல. இரண்டுக்கும் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். ஆனால், ஒரு ஜனநாயகத்தில் மட்டுமே, அரசின் உரிமையும், தனி நபரின் உரிமையும் சமமாக பார்க்கப்படும்” என்றார் குமார்.
தொடரும்.
ஆங்கில இணைப்பு
Savuuku Sankar Sir,
As your readers, we always wants your article with proof and explanations. You deviated in some cases (may be misinformed / misguided , please refer comments of your previous articles to know what I refer) but dont give translations from multiple articles. I heard NRC, NPR and CAA as approved and passed in as law by Congress Government in 2003. Now BJP Govt is implementing is implementing it. can you explain what changes it did to 2003 and how it will impact Islam community people ?