6 ஏப்ரல் 2020
சென்னை
வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு,
மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
23, மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே, இந்த நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டைமைக்கும் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பு கொண்டாடப்படாமல் போவது போல அவர்களின் வாழ்வாதார இழப்பும் கண்டுகொள்ளப்படாமல் சென்றுவிடக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகத்தான்.
நான் கடிதம் எழுதியததற்கு அடுத்த நாள், மக்களிடம், “லாக்டவுன்” என்கின்ற மிகக்கடுமையான ஒரு புதிய அறிவிப்பு செய்யப்பட்டது.
லாக்டவுன் என்றால் என்ன என்று புரிவதற்கான அவகாசம் கூட கொடுக்கப்படாமல் “டீமானிடைசேசன்” போன்றே இந்த புதிய அறிவிப்பையும் நாடு கேள்விப்பட்டது.
அந்த அறிவிப்பை கேட்ட பிறகு, ஒரு நிமிடம் திகைப்பிற்குள்ளானாலும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்கின்ற முறையில் நீங்கள் சொல்வது சரியானதாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையில், உங்களை நம்பலாம் என்கின்ற முடிவிற்கு வந்தேன்.
டீமானிடைசேசன் போதும் கூட நான் உங்களை நம்பலாம் என்று தான் முடிவெடுத்தேன்.
ஆனால் காலம் எனது முடிவு தவறென்று உணர்த்தியது. உங்களது முடிவும் தவறு என்றே காலம் கட்டியம் கட்டி சொன்னது.
முதலாவதாக, இந்த பெரும் தேசத்தின், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் நீங்கள் தான் என்று உங்களிடம் நான் உறுதியளிக்கின்றேன். உங்கள் நானாகிய, நானும் இப்பேரிடர் காலத்தில் உங்கள் வழிகாட்டுதலின் படி செல்வதற்கு தயாராக உள்ளேன். இன்றைய காலகட்டத்தில் உங்களுக்கு அமைந்தது போல ஒரு பெரும் கூட்டம் வேறெந்த நாட்டின் தலைவருக்கும் அமையவில்லை.
நீங்கள் சொன்னாலே அக்கூட்டம் கேட்கின்றது.
இன்றைய சூழலில், இந்த தேசமே நம்பிக்கையுடன் எழுந்து நின்று பிரதமர் அலுவலகம் சொல்வதைக் கேட்பதற்கு தயாராக உள்ளது.
இந்த நாட்டிற்காக தன்னலமின்றி சேவை செய்து கொண்டிருக்கும் சுகாதரத்துறை ஊழியர்களுக்கும், மருத்துவர்களுக்கும், நாம் நமது நன்றியினை கைதட்டல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று நீங்கள்
சொன்னவுடன் உங்கள் கருத்திற்கு எதிர்கருத்து கொண்டோர் கூட கைதட்டி உற்சாகமூட்டினர் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
உங்களுடைய ஆணைக்கும் விருப்பத்திற்கும் இணங்கி நடக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை உங்களுக்கு அடிபணிகின்றோம் எனத் தாங்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.
என் மக்களின் தலைவனாக உங்களைக் கேள்வி கேட்பது எனது ஜனநாயகக் கடமையாகும். எனவே எனது கேள்விகளில் நெறிமுறைகள் ஏதும் இல்லாமலிருப்பதாக நீங்கள் கருதினால் தயை கூர்ந்து மன்னிப்பீராக.
நான் மிகவும் அச்சப்படும் ஒரு விசயம் என்னவெனில், டீமானிடைசேசன் நேரத்தில் நடந்தது போன்ற ஒரு பெரும் தவறு இம்முறை, அதை விட மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தான்.
டீமனிடைசேசன் ஏழை, அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பையும் வாழ்வாதாரத்தையும் அடித்து பிடுங்கியது, ஆனால் சரியாக திட்டமிடப்படாத, இந்த லாக்டவுன் நம் அனைவரின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் ஆபத்தை நோக்கி செலுத்துகிறது.
ஏழைமக்களுக்கு உங்களைத் தவிர கேட்பதற்கு வேறு யாரும் இல்லை அய்யா.
ஒரு புறம் நீங்கள் செல்வந்தர்களை குடும்பத்தினருடன் இரவு நேர கேளிக்கைகளை காண அழைக்கின்றீர்கள், மறுபுறம் ஏழைகளை அவமானமாக உணரும் ஒரு சூழலில் தள்ளுகின்றீர்கள். உங்களுடைய உலகம் எண்ணைய் விளக்குகளை தங்கள் பால்கனிகளில் ஏந்திகொண்டிருக்கின்ற பொழுது, ஏழைகள் தங்கள் வீட்டில் உணவு செய்வதற்குக் கூட எண்ணைய் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இறுதியாக நடந்த மக்களுடனான உங்கள் இரண்டு உரையாடல்களும், மக்களை அமைதிப்படுத்தும் நோக்கத்தில் அமைந்தது. அது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்றும் கூட, ஆனால் அமைதியாக இருப்பதை விட மக்களுக்கு மிக முக்கியமான தேவைகள் இருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற மனநல யுக்திகள் வளர்ந்த நாடுகளில் வாழும் பெரும் செல்வந்தர்கள் தங்கள் பால்கனியில் வந்து நின்று கைதட்டி தங்களுக்கு இருக்கும் கவலைகளை மறப்பதற்கு வேண்டுமானால் பயன்படும். ஆனால் தாங்கள் வசிப்பதற்கு ஒரு சிறு ஓலைக்குடிசை கூட இல்லாத ஏழை எந்த பால்கனியில் வந்து கைதட்டி விளக்கேற்ற முடியும்?
தனது உழைப்பினாலும், வியர்வையினாலும், ரத்தத்தினாலும் இந்த நாட்டையும் நாட்டு மக்கள் அனைவரின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக ஒரு பெரும் அடித்தளமாக இருக்கும், அடித்தட்டு மக்களை ஒதுக்கிவைத்து, வெறும் பால்கனிவாழ் மக்களின் பால்கனி அரசாக தாங்கள் தங்கள் அரசை நிர்வகிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
தினசரி செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் வேண்டுமாயின் தினசரிக் கூலிகள் குறித்த செய்திகள் வராமல் இருக்கலாம். ஆனால் நம் அனைவரின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர்களின் பங்கு அளப்பரியது.
இந்த நாட்டின் மிகப் பெரும்பான்மையினர் அவர்கள் தான். இந்த நாட்டில் மிகப்பெரும் பங்கும் அவர்களுடையது தான்.
அடித்தளத்தை அசைத்துப்பார்த்தால், மேல்தட்டு சிதறிவிடும் என்பது தான் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. அறிவியலும் அதை ஒத்துக் கொள்ளும்.
மேல்தட்டில் இருப்பவர்கள் அடித்தட்டில் இருப்பவர்கள் மீது திணித்த முதல் தொற்று நோயும், நெருக்கடியும் இதுதான்.
அய்யா, அதிலும் மிக முக்கியமாக தாங்கள் அடித்தட்டு மக்களை காப்பாற்றுவதை தவிர்த்து, மற்ற அனைத்து விசயங்களிலும் கவனம் செலுத்துவது போலவே இருக்கின்றது.
கோடிக்கணக்கான தினக்கூலிகள், வீட்டு வேலை செய்பவர்கள், டாக்சி டிரைவர்கள், மிதி வண்டி ஓட்டுநர்கள், சாலையோர சிறு கடை வைத்திருப்பவர்கள் என அனைவரும், எதேனும் ஒரு சிறு வெளிச்சமாவது தங்கள் வாழ்வில் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்கையில் நன்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் மேல்தட்டு நடுத்தட்டு மக்களின் கோட்டைகளை காப்பாற்றுவதை மட்டும் நமது குறிக்கோளாய் வைத்திருக்கின்றோம்.
நடுத்தர மக்களையோ அல்லது மேல்தட்டு மக்களையோ ஒதுக்கிவைத்துவிட வேண்டும் என்று என்னை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம்.
நான் உங்களை கேட்டுக்கொள்வது எல்லாம் சமூகத்தில் எவரையும் ஒதுக்கிவைக்காமல் அனைவருக்கும் சமமமாக நடத்தவேண்டும் என்பது தான்.
என்னைப் பொறுத்தவரை “எந்த ஒரு மனிதனும் பசியுடன் உறங்கச் செல்லக்கூடாது” என்பது தான். அதை தான் நீங்கள் செய்திட வேண்டும் என நான் உங்களிடமும் பரிந்துரை செய்கின்றேன்.
கோவிட் 19 தொடந்து பல பேரை தொற்றிப்பரவும் என்றாலும், நாம் பசி, சோர்வு, இழப்பு எனும் பெரும் பிணிகளை பெற்றெடுக்கும் கருவறையை உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்.
பசி, சோர்வு, இழப்பு (Hunger(H), Exhaustion(E) and Deprivation(D) என்பதைச் சுருக்கி HED ’20 எனும் பிணி இன்று பார்ப்பதற்கு சிறிதாக தெரிந்தாலும் கோவிட்19 விட மிகக்கொடிய உயிர்கொல்லியாக இருக்கும். கோவிட்-19 நம்மிடம் இருந்து மறைந்த பின்னரும் இந்த HED’20 எனும் பிணி நம்மிடம் இருக்கும்.
சரிவுகளை சரி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்று புரிந்துகொள்வதை விட்டு, தாங்கள் எப்பொழுதும் கையிலெடுக்கும் தேர்தல் நேரத்து பிரச்சார யுக்திகளிலேயே இருக்க விரும்புவதை நாம் காண்கின்றோம்.
பொறுப்புள்ள நடவடிக்கைகளை மக்கள் கையிலும், வெளிப்படைத்தன்மையை மாநில அரசுகளின் கைகளிலும் கொடுத்துவிட்டு நீங்கள் உங்களுக்கு வசதியான ஒரு நிலையில் இருந்து கொள்கிறீர்கள்.
இந்திய நாட்டிற்காக அல்லும் பகலும் அயராமல் தங்கள் நேரத்தையும் அறிவையும் பயன்படுத்தும் பல்வேறு அறிவாளிகளுக்கு தாங்கள் இதையே உணர்த்துகிறீர்கள்.
அறிவாளிகள் என்று சொல்லியது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும், ஏனெனில் தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் அது பிடிக்காத வார்த்தை என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் பெரியாரையும் காந்தியையும் பின் தொடர்பவன் அவர்கள் அறிவாளிகள் என்பதும் எனக்குத் தெரியும்.
“நீதியையும்” “சம நிலையையும்” “வளர்ச்சியையும்” நோக்கி நம் அனைவரையும் வழிகாட்டுவது அறிவு மட்டுமே. பிரச்சார யுக்திகளின் மூலமாக மக்களை உற்சாகத்தில் மட்டுமே வைத்திருக்க முயலும் உங்கள் நிறுவனத்தின் கவனமும் நோக்கமும், மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக செய்யவேண்டிய விசயங்களில் கவனம் செலுத்தமால் புறந்தள்ளுகிறது.
இது போன்ற ஒரு தொற்று நோய் பரவி இருக்கின்ற காலத்தில், நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை முதன்மையாக இருக்க வேண்டிய ஒரு நேரத்தில், நாடு முழுதும் பல்வேறு இடங்களில் பல்வேறு மதரீதியான கூட்டங்களை தடுத்திருக்கவேண்டிய உங்கள் அரசு செய்யவில்லை. இது போன்ற இடங்களே சமூக தொற்றுகளை அதிகம் பரவச் செய்தது. இது போன்ற அலட்சிய போக்கினால் ஏற்பட்ட
உயிர் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது?
உலக சுகாதார அமைப்பிற்கு சீன அரசு , டிசம்பர் 8 ம் தேதி தான் கொரோனா பாதித்த முதல் நோயாளி குறித்தத் தகவலைத் தெரிவித்தது. கொரோனாவின் தீவிரத்தையும் வீரியத்தையும் மக்களும் அரசாங்கங்களும் புரிந்து கொள்ள ஓரளவு காலம் தேவைப்பட்டது என்பதைக் கருத்தில் கொண்டாலும்,
பிப்ரவரி முதல் வாரத்திலேயே , இந்தக் கொரோனா, உலகம் இது வரைக் கண்டிராத அளவு சேதம் விளைவிக்கப் போகும் அபாயத்தை உணர்ந்தது.
ஜனவரி 30 , இந்தியா , தனது முதல் கொரோனா நோயாளி குறித்த விவரங்களை வெளியிட்டது. இத்தாலியில் என்ன நடந்தது என்பதைக் கண் கூடாகப் பார்த்த பின்பும், நாம் பாடம் கற்கவில்லை. திடீரென அறியாமை உறக்கத்திலிருந்து கண் விழித்த போது, நிலைமையின் தீவிரம் உணர்ந்து, நான்கே மணி நேர கால அவகாசம் கொடுத்து, 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசத்தை முடக்கினோம்.
நான்கு மாதங்கள் யோசிக்கவும் செயல்படவும் இருந்த போதிலும் , அந்த நான்கு மாதங்களைக் கடந்து, திடீரென தீவிரம் புரிந்து, 1.4 பில்லியன் மக்களுக்கு 4 மணி நேரம் மட்டுமே கால அவகாசம் கொடுத்து, லாக்டவுன் அறிவிக்கப்பட்டது .
பிரச்சனைகள் தீவிரம் அடையும் முன்பே தீர்வுகளைத் தயார் நிலையில் வைப்பவர்கள் தான் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள். மன்னிக்கவும் ஆனால் இந்த முறை உங்கள் தொலைநோக்குத் தோற்று விட்டது.
மக்களிடமிருந்து வரும் ஆக்கப்பூர்வமான எதிர்மறை விமர்சனங்களைக் கையாள்வதிலும், அத்தகைய விமர்சனங்களுக்கு பதில் விமர்சனம் அளிப்பதிலும் உங்கள் அரசும், அரசு அதிகாரிகளும் செலவிட்ட நேரத்தையும், பலத்தையும் சற்று திசை திருப்பி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் செலவழித்திருக்கலாம்.
தேசத்தின் நலனை முன்னிறுத்தி, சில நல்உள்ளங்களின் தன்னலமற்றக் குரல்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை செவிமடுக்காமல், அக்குரல்களை மாற்றுக் குரல்களாலும் , நையாண்டிகளாலும் புதைத்து, அக்குரல்களுக்கு சொந்தமானவர்களை தேசத்திற்கு எதிரானவர்கள் என்று முத்திரைக் குத்தும் பணியில் அயராது ஈடுபட்டுவருகின்றனர் உங்கள் சேனைப் படையினர்.
தைரியம் இருந்தால் என்னை இந்த தேசத்திற்கு எதிரானவன் என்று வேண்டுமானால் அழைத்துப் பாருங்கள்!!
இவ்வளவு பெரிய / தீவிரமான ஒரு தேசிய இக்கட்டிற்கு சரியான முறையில் தயாராகவில்லை என்று மக்களை குறை சொல்ல முடியாது.
ஆனால் உங்களை குறை சொல்லலாம் ; சொல்லுவோம் .
மக்களின் அடிப்படை வாழ்வையும் வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதற்காகத் தானே இந்த அரசும், அரசு அதிகாரிகளும்…..?
இது போன்ற பேரிடர்கள் இரண்டு காரணங்களுக்காக வரலாற்றின் பக்கங்களில் பதிவிடப்படுகின்றன, ஒன்று : இதன் விளைவால் ஏற்படும் உயிர் சேதமும், நோயின் வலிகளும். இரண்டாவது, இதன் தாக்கம் ஏற்படுத்தும் சமூக – கலாச்சார மாற்றங்கள் மக்களுக்குக் கற்றுத் தரும் பாடம். நீண்ட காலத்திற்கு மக்களிடையே மிகப்பெரும் பாதிப்பேற்படுத்தக் கூடிய இந்த கரோனா, நம்மைத்தீண்டியது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது.
இது வரை இது போன்று இயற்கை நம்மிடம் சீறியதில்லை.
உண்மையான அக்கறையுடன் இருக்கும் குரல்களை கேட்க வேண்டிய காலமிது. அனைத்து பிரிவினைக் கோடுகளையும் அழித்து, சங்கநாதமிட்டு அனைவரையும் உங்கள் பக்கத்தில் வைத்திருந்து உதவிகளை பெறவேண்டிய நேரமிது.
மக்கள் பலமே நாட்டின் பலம், எத்தனையோ பேரிடர்களை எதிர் கொண்டு, அவற்றை ஒன்றாகக் கடந்துள்ளோம், இதையும் கடப்போம் ஒன்றாக…. சிதறிப் பிரிந்தல்ல.
இப்பேரிடர் நம் அனைவரையும் இணைக்கவேண்டுமே தவிர எந்தப்பக்கத்தில் யார் பிரிந்து நிற்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான நேரமல்ல .
நாங்கள் கடுங்கோபத்தில் இருக்கின்றோம், இருந்தாலும் உங்களுடன் இருக்கின்றோம்.
ஜெய்ஹிந்த்
கமல் ஹாசன்
தலைவர்
மக்கள் நீதி மய்யம்.
அது என்ன திறந்த மடல்
Let me just say this article stupid and wrong post.
You are in the wrong place Thiyagarajen; this is not Poes Garden. This is a forum for people with some critical thinking capability, not for “jalras” like you
இது தான் உச்சகட்டம்.. ” அறிவாளிகள் என்று சொல்லியது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும், ஏனெனில் தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் அது பிடிக்காத வார்த்தை என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் பெரியாரையும் காந்தியையும் பின் தொடர்பவன் அவர்கள் அறிவாளிகள் என்பதும் எனக்குத் தெரியும். ” யார் சொன்னார் என்பதை விட என்ன சொன்னார் என பார்க்க வேண்டும் அதிலும் அவர் சொன்னது உண்மையா என கவனிக்க வேண்டும் அந்த வகையில் கமல் சொன்னது அத்தனையும் உண்மைதான்..(கமல் மீதும் அவரது சுய வாழ்க்கையை பற்றி விமர்சனம் உண்டு என்றாலும் கூட அது பொது மக்களின் வாழ்க்கையை பாதிக்கவில்லை என்பது கருத்தில் கொள்ள வேண்டியது..
You are the only true indian Boss.
“Hats off”, Kamal. Where is your Poes Garden friend?
மனதில் பட்ட தர்ம,அதர்மங்களை சுட்டும் தலைவனை நாட்டின் மீது அக்கறை கொண்ட மக்கள் மதிப்பர்.
கமலை பாஜக வின் நிழல் அணி என்றார்கள். இந்த கடிதத்திற்கு பிறகு என்ன சொல்வார்கள்.
எல்லா கட்சிகளிடமும் உள்ளூர் குமுறல் இருந்தும் வெளிக்காட்ட தயங்கிய நேரத்தில் மக்களின் குமுறலை கமல் தெளிவாக கடிதத்தில் எழுதி விட்டார்.
கோவிட் 19 விசயத்தில் மத்திய அரசின் பங்கு தான் என்ன ? என்றே இன்று வரை புரியவில்லை. அனைத்து விசயங்களையும் மாநில அரசே பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் Data Collection மட்டுமே செய்வார்களா?? நீட் எக்சாம்க்கு மட்டும் இது செல்லாது.
திமுக சரியான வாய்ப்பை இழந்து விட்டது.
சமூக அக்கறையுடனும் மனதில் அச்சமின்றியும் எழுதப்பட்ட மடல். திரு.கமல்ஹாசன் மீது பலரும் கடுங்கோபம் கொள்வர்.
மைய அரசின் மைய இழையை இழுத்துப் பார்த்துள்ளார்.
நடுத்தர மக்களிடமிருந்து பிடுங்கி மேல்தட்டு மக்களிடம் கொடுப்பது மோடியின் கெட்ட பழக்கம். ஏழைகள் என்று ஒரு இனம் இருப்பதே இந்த பனியாவுக்கு தெரியாது.
Let him be Loyal and honest to his Film producers after that he can advise others. I think Savukku lost its vision publshing such useless peoples’s letter.
You are the only true indian Boss.
Sir very good letter one appreciate mr kamalhasan we will wait and watch sir
உலகின் அதிசக்தி வாய்ந்த மிகச்சில நாடுகளில் ஒன்றான இந்தியாவின் மாண்புமிகு பாரத பிரதமர் எப்படி இதனை கண்டுகொள்ளாமல் விட்டார் ? அனைத்து தள மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பிரதமர் விளையாட்டு வீரர்களுடன் காணொளியில் பேசியதின் மூலம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார் ? இது அறியாமையா ? அலட்சியமா ? புரியவில்லை.
Surprise & open comments from kamal
தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கான தலைவர் கமல்ஹாசன்
👍