ஆமா ஜி : வணக்கம். முயங்கிய கைகள் ஊக்க பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்.
மாமா ஜி : என்ன ஜி. திருக்குறள்லாம் சொல்றீங்க.
ஆமா ஜி : பெரிய ஜி திருக்குறளோட புகழை பத்தி ட்வீட் போட்டு இருக்காரு. நாம கண்ணை மூடிக்கிட்டு அதை பாலோ பன்ண வேண்டாமா ?
மாமா ஜி : அதெல்லாம் சரிதான் ஜி. நீங்க சொல்றதோட பொருள் என்ன தெரியுமா ?
ஆமா ஜி : நாம என்னைக்கு ஜி அர்த்தத்தையெல்லாம் பாத்துருக்கோம். ஒரு எழவும் புரியலனா கூட சமஸ்கிருதமே சிறந்ததுன்னு பேசறதில்லையா ?
மாமா ஜி : அதுவும் சரிதான். ஆனா இந்த மாதிரி குறளையெல்லாம் பொது வெளியில சொல்லாதீங்க ஜி.
ஆமா ஜி: ஏன் ஜி ?
மாமா ஜி : இது காமத்துப்பால் ஜி.
ஆமா ஜி : எந்த பாலா இருந்தாலும் பால் ஹாரிஸ் கிட்ட சொல்லி நம்ம சேகர் ஜிக்கு ஒரு 15 பாக்கெட் போட சொல்லுங்க ஜி
மாமா ஜி: என்ன ஜி சம்மந்தம் இல்லாம ஏதேதோ பேசறீங்க?
ஆமா ஜி : சம்பந்திக்கு காண்ட்ராட் வேணும்னா இதெல்லாம் செஞ்சு தானே ஆகணும் ஜி
மாமா ஜி : என்ன ஜி இப்படி படுத்தறீங்க?
ஆமா ஜி : சரி இந்த குறளுக்கு என்ன அர்த்தம் ஜி?
மாமா ஜி : நெருக்கமா கட்டி புடிக்கும்போது காற்று புகுந்துட முடியாத அளவுக்கு கட்டி புடிக்கணும்னு பொருள்
ஆமா ஜி : உண்மையா திருக்குறளை பாலோ பண்றது நம்ம மோடி ஜி தான் ஜி
மாமா ஜி : எப்படி சொல்றீங்க?
ஆமா ஜி : இங்க பாருங்க ஜி
மாமா ஜி: ஜி இவரு யாரு தெரியும்ல பெரிய விஞ்ஞானி, மூத்திரத்தை வச்சு கொரோனாக்கு சூத்திரம் கண்டுபிடிச்சவர். கருப்பா இருக்கறதால நோபல் பரிசு மிஸ் ஆயிடுச்சு
ஆமா ஜி : என்ன ஜி ? ஆம் நான் கருப்பு தான் எனக்கு லைக் கிடைப்பது கஷ்டம் தான்ற மாதிரி கன்றாவி
மாமா ஜி : அதெல்லாம் கண்டுக்காதீங்க ஜி
ஆமா ஜி சரி நம்ம ஜிக்கு ஏன் திடீர் தமிழ் ஆர்வம்?
மாமா ஜி : எலெக்சன் டைம் ஜி. தேர்தல் நெருங்குச்சுன்னா நம்ப பெரிய ஜி பல வேசம் கட்டுவாரு பாத்திருக்கீங்கள்ல. தமிழ்நாட்டுல தேர்தல் வரப்போகுதுன்னுதான் பெரிய ஜி உக்கிரமான தமிழ் ஆர்வலரா ஆகுறாரு. இப்படி திருக்குறள் பெருமை பேசிட்டு இன்னொரு பக்கம் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துல திருக்குறளை நீக்குறாங்கல்ல. ஜி வேசம் கட்டுறது புதுசா என்ன ? ஏதாவது நல்லதா முருக பெருமான் பாடல் பாடுங்க ஜி.
ஆமா ஜி : என்ன ஜி பித்தலாட்டமா இருக்கு ? நாம என்னைக்கு தமிழ்க் கடவுளையெல்லாம் மதிச்சிருக்கோம். சமஸ்கிருத கடவுளைத்தானே தூக்கி வச்சி ஆடிருக்கோம் ? தமிழ்கடவுள் முருகன், சிறு தெய்வங்களையெல்லாம் ஒழிச்சி கட்டணும்னுதானே நம்ப திட்டம் ?
மாமா ஜி : தேர்தல் வருது ஜி. இந்த நேரத்துல, தமிழ் கடவுள், தமிழ் பெருமையெல்லாம் பேசணும். நம்ப மதுவந்தி மேடம் பாத்தீங்களா. முருக கடவுள் பெருமையை பாட, பாசிட்டீவ் எனர்ஜியோட நிக்கிறாங்க..
ஆமா ஜி : இவங்க அடுத்து முருகனுக்காக அலகு குத்தி காவடி எடுப்பாங்களா ஜி ?
மாமா ஜி : இதெல்லாம் சூத்திரனுங்க செய்யறது ஜி. மேடம் செய்ய மாட்டாங்க. இந்த மாதிரி தீடீர் முருகபக்தை வேசம் கட்டி கட்சியில பெரிய பதவியை புடிக்கிறதுதான் ஜி அவங்க நோக்கமே.
ஆமா ஜி : அது சரி ஜி, முன்னாடி முருகனுக்கு பூணுல் போட்டு விட்ட போது, ஏன் இப்படி தமிழ் கடவுளை இழிவு படுத்தறீங்கன்னு எல்லாரும் கேட்டாங்க
மாமா ஜி : ஆமா நன்னா நியாபகம் இருக்கே
ஆமா ஜி: அதுக்கு நம்ம ராஜா ஜி கடவுளை தமிழ் கடவுள் சமஸ்கிரத கடவுள்னு பிரிச்சு பார்க்கறது அயோக்கிய தனம்னு சொன்னாரே
மாமா ஜி : அதுக்கு என்ன இப்போ
ஆமா ஜி : அப்பறம் நம்மளே இன்னைக்கு தமிழ் கடவுள்னு தட்டை தூக்கிட்டு நின்னா செருப்பால அடிக்க மாட்டாங்க ?
மாமா ஜி: அடிச்சா வாங்கிக்கோங்க ஜி அதுக்கு தானே உங்கள மாதிரி சூத்திரப்பசங்களை கட்சியில் வச்சிருக்கோம்
ஆமா ஜி : என்ன சொன்னீங்க?
மாமா ஜி : இல்ல ஜி உங்கள மாதிரி கம்பு சுந்தர பசங்கனு சொல்ல வந்தேன்
ஆமா ஜி : அதுவும் சரிதான் ஜி. பெரிய ஜி புது லுக் வச்சுட்டார் பாத்தீங்களா ?
மாமா ஜி: உண்மைதான் ஜி. மராட்டிய மன்னர் சிவாஜி மாதிரி லுக் வச்சிருக்கார்.
ஆமா ஜி : மகாராஷ்டிர மாநிலத்துல தேர்தல் இப்போதைக்கு இல்லையே ஜி.
மாமா ஜி : என்ன ஜி நீங்க. ஒரு மாநிலத்துல தேர்தல் தானா எப்படி வரும். கவர்மெண்ட்டை கவுத்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கறது பெரிய ஜிக்கும் அமித் ஜிக்கும் கைவந்த கலை ஆச்சே. இப்போ பாருங்க. ராஜஸ்தான்ல மட்டும் தேர்தல் நடக்குதா என்ன ? எம்.எல்.ஏங்களை விலைக்கு வாங்க ஆரம்பிச்சிட்டார் பாருங்க பெரிய ஜி.
ஆமா ஜி : மொதல்ல மத்திய பிரதேசத்தை கவுத்தாங்க. இப்போ ராஜஸ்தானை கவுக்க போறாங்க. ஏன் ஜி இப்படி பண்றாங்க ?
மாமா ஜி : எந்த மாநிலத்துலயும் ஒரு ஆட்சி நல்லா நடந்தா பெரிய ஜிக்கும் அமித் ஜிக்கும் புடிக்கவே புடிக்காது ஜி. அது எப்படி ஒரு ஸ்டேட்ல மட்டும் மக்கள் நல்லா இருப்பாங்கன்னு எப்படியாவது கவர்மெண்ட்டை கவுத்துடுவாங்க. மக்களுக்கு, வளர்ச்சித் திட்டங்கள் அறிவிச்சு செயல்படுத்துனா மாநிலம் முன்னேறிடாதா ? அதனால கவர்மெண்ட்டை கவுத்துட்டு, பசு பாதுகாப்பு, ராமர் கோவில்னு ஒரு ப்ளோவா போகணும்.
ஆமா ஜி : ராமர்னு சொன்னதும் ஞாபகம் வருது ஜி. நேபாள் பிரதமர் ராமரே அவங்களோடதுன்னு சொல்லிட்டாரு ?
மாமா ஜி : உண்மைதான் ஜி. உபியில இருக்குற மொட்டை ஜி கூட ரொம்ப அப்செட். ராமர் கோவில் கட்டறேன்னு பெரிய ஜியை வர வைச்சு ஒரு பெரிய பில்டப் பண்ணலாம்னு ப்ளான் போட்டு இருந்தாரு. அந்த சாமியே உன்னுது இல்லன்னு சொல்லிட்டாரு. ரொம்ப அசிங்கமா போச்சு ஜி.
ஆமா ஜி : யாருக்கு அசிங்கம். நம்ப பெரிய ஜிக்கா ?
மாமா ஜி : அட நீங்க வேற. அவரு என்னைக்கு அசிங்கத்தை பாத்திருக்காரு. 2002ல இருந்து கூசாம பொய் பேசி மாட்டிக்கிட்டுத்தான் இருக்காரு. 87ம் ஆண்டுல டிஜிட்டல் கேமராவுல போட்டோ எடுத்து, ஈமெயில் அனுப்புனேன்னு கூசாம புளுகுன ஆளுதானே ஜி அவரு.
ஆமா ஜி : அதுவும் சரிதான். நம்ப மாரி ஜி என்ன ஜி திடீர்னு பத்திரிக்கையாளர்களை தாக்கறதுக்கு இறங்கிட்டாரு ?
மாமா ஜி : மாரி ஜியை புலிட்சர் விருது வாங்குன பத்திரிக்கையாளர் ரேஞ்சுக்கு நம்ப பக்தா தலையில தூக்கி வச்சிட்டு ஆடுறா. மாரி, துணி எக்ஸ்போர்ட் கம்பெனியில வேலை பாத்தப்போ, நான் உங்க நாட்டுக்கே வந்து எங்க கம்பெனி சட்டை பேண்ட்டு பத்தி விளக்குறேன். சீனாவுக்கு டிக்கெட் போட்டு குடுங்கன்னு கேட்ட ஆளுதான் ஜி.
நல்ல விஷயங்களை அறிவோட பேசுனா நம்ப ஆளுங்களுக்கு புடிக்கவே புடிக்காது. அதான் மாரி ஜியை பீல்டுல இறக்கி விட்டாங்க. மாரி மாதிரி கிறுக்குத்தனமா பேசுனா, நம்ப பக்தா பரவசம் ஆயிடுவா.
சீன அதிபர் ஜின்பிங், ஸ்டாலினோட ஒன்னு விட்ட சித்தப்பா. தாவூத் இப்ராஹிம் வீட்டு கல்யாணத்துல மட்டன் பிரியாணியில லெக்பீஸ் கேட்டு ஸ்டாலின் தகராரு பண்ணதுக்கான ஆதாரம் இருக்கு. கொரொனாவுக்கு மருந்தை கண்டுபிடிச்சிட்டு ஸ்டாலின் ஒளிச்சு வச்சிருக்கார். மக்களுக்கு குடுக்க மாட்றாருன்னு பேசணும். அதைத்தான் நம்ப பக்தா விரும்புவாங்க.
ஆமா ஜி : நியூஸ் 18 குணசேகரனை ஏன் போட்டு தாக்கறாரு மாரி ஜி ?
மாமா ஜி : குணசேகரன், ஒருத்தர்தான், காஞ்சி மடத்தை சேர்ந்த விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ஏன் எந்திரிச்சு நிக்காம அவமானப் படுத்துனாருன்னு தமிழ்நாட்டுல இருக்குற எங்களவாளுக்கு அவ்வளவு கோவம். அதனாலதான் மாரி ஜியை எங்களவா தூண்டி விட்டு பேச சொன்னாங்க.
ஆமா ஜி : அதுக்கு ஏன் மாரி ஜியை பேச சொல்லணும் ? அவங்களே பேசலாமே ?
மாமா ஜி : என்ன ஜி இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க ? இந்த மாதிரி வேலைகளையெல்லாம் செய்யறதுக்குத்தான் நாங்க மாரி ஜி மாதிரி அடியாட்களை வளத்து வச்சிருக்கோம். எங்களவா மாரி மாதிரி பேசுனா நன்னாவா இருக்கும் ?
ஆமா ஜி : அவர் கூட குணசேகரன் மற்றும் நியூஸ் 18 இதர ஊழியர்களை வேலை நீக்கம் செய்யணும்னு எல்லாரையும் மெயில் அனுப்ப சொன்னாரே.
மாமா ஜி : ஆமா 700 மெயில் போயிருக்கறதா சொன்னாஙக.
ஆமா ஜி : 700 மெயில் அனுப்பியும், நியூஸ் 18 குணசேகரனை வேலையை விட்டு தூக்கலையே ? இப்படி பண்ணா என்ன அர்த்தம் ?
மாமா ஜி : மாரியை மயிரா கூட மதிக்கலன்னு அர்த்தம். நியூஸ் 18 பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஜி. மாரி ஜி மாதிரி கோமிய பிரியர் சொல்றதையெல்லாம் நியுஸ் 18 கேக்க ஆரம்பிச்சா, நாளைக்கு போற வர்றவனெல்லாம் இவனை நீக்கு, அவனை நீக்குன்னு சொல்லுவான். இதுக்கு எது எண்டு ?
ஆமா ஜி : அதுவும் சரிதான். ஆனா மாரி ஜி, நியூஸ் 18 நிர்வாகம் உங்கள் புகாரெல்லாம் உண்மைதான். இன்னும் தகவல் குடுங்கன்னு மெயில் அனுப்பிருக்கறதா சொன்னாரே ?
மாமா ஜி : அதுக்கு அப்புறம் நடந்ததை பாக்கலையா ? இவர் நியூஸ்18ல இருந்து யாரு மெயில் அனுப்பிருக்கறதா சொன்னாரோ, அவரே மாரி ஜி காட்டுன ஈமெயில் போலின்னு சொல்லிட்டாரு.
There is a forged email in my name circulating on Twitter and WhatsApp. My office has initiated legal action in the matter.
— Vinay Sarawagi (@jagora) July 10, 2020
ஆமா ஜி : என்ன ஜி இப்படி புளிச்சுன்னு துப்பிட்டாரு ? மாரி ஜி அவமானத்துல செத்துட்டாரா ?
மாமா ஜி : தப்பு பண்றீங்க ஜி. தப்பு பண்றீங்க. கும்புடுறதுக்கு சாமியும், குடிக்க கோமியம் இருந்தா போதும் மாரி ஜிக்கு. இது மாதிரி பல புது புது ஐட்டங்களை எடுத்து வீசுவாரு.
ஆமா ஜி : ஆனா மாரி ஜி பம்மிட்டாரே. மெயில் வந்ததா போட்ட ட்வீட்டை டெலிட் பண்ணிட்டு தூத் கா தூத், பாணி கா பாணின்னு, சாணி மிதிச்சிட்டு இருக்காரே ஜி.
மாமா ஜி : என்ன ஜி இப்படி சொல்றீங்க. நம்ப குருநாதர் யாரு ?
ஆமா ஜி : சாவர்க்கர் ஜி.
மாமா ஜி : அப்புறம் என்ன கேள்வி கேக்கறீங்க ? தமிழ்நாட்டுல புகழ்பெற்ற தர்ம போராளி எச்.ராஜா ஜி. என்ன அதிகாரமா, “ஹைகோர்ட்டாவது மயிராவதுன்னு” சொன்னாரு.
ஆமா ஜி : ஆமா சொன்னாரு.
மாமா ஜி : அதே வேகத்துல ஹைகோர்ட்டுல மன்னிப்பு கேக்கலையா. அவர் பாதையிலதான் மாரி ஜியும் நடக்குறாரு.
ஆமா ஜி : இது கேவலமான பொழப்பு இல்லையா ஜி ?
மாமா ஜி : நம்ப கட்சியே கேவலமான கட்சிதானே ஜி. இதை போயி பெருசா கேக்கறீங்க ?
ஆமா ஜி : தமிழ்நாட்டு பிஜேபி தலைவர் முருகன் ஜி ரொம்ப தீவிரமா செயல்படுறாரே ஜி. தாமரை தமிழ்நாட்டுல மலந்துடுமா ஜி.
மாமா ஜி : டெப்பனட்லி ஜி. என்ன இப்படி நம்பிக்கை இல்லாம கேக்கறீங்க. கட்சியில புதுசா நமீதா மேம், காயு மேம், மதுவந்தி மேம்கெல்லாம் முருகன் ஜி பதவி குடுத்துருக்காரு. இவங்க இறங்கி பிரச்சாரம் பண்ணாங்கன்னா, தாமரை பெருசா வளந்துடும் ஜி.
ஆமா ஜி : மது மேம், காயு மேம் வாயை தொறந்தாலே, ஜனங்க, கொலை வெறியாகி டிவியை உடைச்சிருக்காங்களே ஜி.
மாமா ஜி : அது எதிரிகளோட விஷம பிரச்சாரம் ஜி. மது மேம் வீடியோக்களை பாத்துட்டு, இந்த லாக்டவுன் சமயத்துல, பல பள்ளிகளில் அதை பாடமா வச்சிருக்காங்க. அவ்வளவு ஏன். நம்ப சென்னை ஐஐடியில கூட கணிதத் துறையில, மது மேம்கு, கவுரவ பேராசிரியர் பதவி குடுக்கப் போறாங்க.
ஆமா ஜி : கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு ஜி. சீக்கிரம் சந்திப்போம் ஜி.