வீட்டு வசதித் துறையின் நிலத்தை மோசடியாக ஒதுக்கீடு பெற்று, அதில் வியாபாரம் செய்ததாக முன்னாள் உளவுத் துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட் உள்ளிட்டோர் வீடுகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை சவுக்கு மழிக்சிச்சியோடு அறிவித்துக் கொள்கிறது
சோதனை நடைபெறும் ஜாபரின் அண்ணா நகர் வீடு
வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகளை சமூக சேவகர் என்ற பிரிவின் கீழ் மோசடியாக ஒதுக்கீடு பெற்றதாக, கருணாநிதியின் முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கம், அவர் மகன் ராஜாசங்கர், நக்கீரன் காமராஜ், கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளான பாண்டியன், விநோதன், கணேசன் ஆகியோர் வீடுகளிலும், அவர்கள் வீட்டை விற்ற ஆயில் சண்முகத்தின் மகள் பத்மா வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த வெற்றியை சவுக்கு தனது வாசகர்களுக்கு காணிக்கையாக்குகிறது. நன்றி உறவுகளே,.