இன்றைய தினகரன் நாளேட்டிலும், நேற்றைய தமிழ் முரசு இதழிலும் ஜாபர் சேட் வீட்டில் நடந்த சோதனையைப் பற்றிய செய்தியோடு ஒரு பெட்டிச் செய்தி.
“தானே முன் வந்து தனிப்படையில் சேர்ந்த ஜெயலட்சுமி” என்ற தலைப்பில் வந்த செய்தி.
“ஜாபர்சேட் வீட்டில் சோதனை நடத்தும் விஜிலன்ஸ் டீமில் முக்கியமானவர் கூடுதல் எஸ்பி ஜெயலட்சுமி. இவர், இதற்கு முன்பு ஜாபர்சேட்டுடன் உளவுத்துறையில் பணியாற்றினார்.
கடந்த ஆட்சியில், மார்க்சிஸ்ட் தலைவர் பிருந்தாகரத்தை மதுரை மாவட்ட போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய தகவல் உளவுத்துறை மூலம் சரியான நேரத்தில் அப்போதைய முதல்வருக்கு தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, கூடுதல் எஸ்.பி. ஜெயலட்சுமியை ஜாபர்சேட் திட்டியிருக்கிறார். அதிகாரிகள் பலர் முன்னிலையில் தன்னை ஜாபர்சேட் திட்டியது பற்றி அப்போதே பலரிடம் வருத்தப்பட்டிருக்கிறார் ஜெயலட்சுமி. இன்று ஜாபர்சேட் வீட்டில் ரெய்டுக்காக கிளம்பிய டீமுடன், தானாகவே முன்வந்து அவரும் சேர்ந்து கொண்டதாக தெரிகிறது. ரெய்டு நடந்த போது, டீமில் இருந்த அதிகாரிகளுக்கு பல முக்கிய தகவல்களை சொல்லி ஜெயலட்சுமி உதவியதாக கூறப் படுகிறது.”
இந்தச் செய்தியின் பின்னணியைப் பார்க்கும் முன், இந்தச் செய்தியை வெளியிட்டவர் யார் என்று பார்ப்போம். தினகரன் இதழின் தலைமை நிருபர் சுரேஷ். யார் இந்த சுரேஷ் ?
சுரேஷ்
சுரேஷ் என்கிற சுரேஷ் வேதநாயகம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டையில் பிஎஸ்சி படித்து, வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தவரை, இவர் தாய் மாமன் பாக்கியநாதன், சென்னைக்கு வரவழைத்து பத்திரிக்கையாளர் ஆக்குகிறார்.
அப்படித் தான் இந்த சுரேஷ் பத்திரிக்கையாளர் ஆகிறார். மாலைச் சுடர் பத்திரிக்கையில் சிறிது காலம், பணியாற்றிய பின்னர் திருச்சி தினமலர் பத்திரிக்கையில் க்ரைம் பீட் பார்க்கிறார். க்ரைம் பீட் பார்க்கத் தொடங்கியதும், இந்த சுரேஷ் தன்னை டிஜிபியாக கருதிக் கொள்ளத் தொடங்கி விட்டார். இவர் அடிக்கும் லூட்டிகள் சொல்லி மாளாது.
ஒரு முறை சென்னை மாநகர கமிஷனர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஒரு சாராய பாக்கெட்டை எடுத்து காட்டினார். இந்தச் சாராய பாக்கெட், மைலாப்பூர் ஏரியாவில் விற்கப் படுகிறது என்று கூறி, அதிர்சியை ஏற்படுத்தினார். பத்திரிக்கையாளர்கள், இவரை சிறந்த புலனாய்வு நிருபர் என்று பாராட்டினார்கள். மறு நாளே, மைலாப்பூர் உதவி ஆணையரைச் சந்தித்து, குற்றாலம் டூர் போக வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று பணம் வாங்கிய விபரம் தெரிய வந்ததும், பத்திரிக்கையாளர்கள் காறித் துப்பினர்.
இதுதான் இந்த சுரேஷின் லட்சணம். பத்திரிக்கையாளர் என்ற போர்வையில், கட்டப் பஞ்சாயத்து செய்வது, அதிகாரிகளுக்கு ப்ரோக்கர் வேலை செய்வதுதான் இவரது முழு நேரத் தொழில். நக்சலைட் ப்ரகாஷ் இவரது நெருங்கிய நண்பர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தமிழகத்தின் மிக மிக மிக மிக மிக நேர்மையான அதிகாரிகளில் ஒருவரான துக்கையாண்டிக்கு இவர் மிகவும் நெருக்கம். இந்த அதிகாரிகளைப் பற்றி ஆகா ஓகோ என்று பாராட்டி செய்தி வெளியிடுவார். இவருக்கு நெருக்கமான இது போன்ற பாராட்டுக்களை பெற்ற அதிகாரிகள் துக்கையாண்டி, மவுரியா, காந்திராஜன் போன்றவர்.
தினகரன் நாளேட்டிலும், செய்தி வெளியிடுவதை விட, தினகரன் நிர்வாகம் சார்பில், கட்டப் பஞ்சாயத்து செய்வதையே முழு நேரத் தொழிலாகக் செய்து வருகிறார். கருணாநிதி ஆட்சி காலத்தில், அரசு கேபிள் செயல்படுத்தப் படுகையில், சன் டிவி நிர்வாகம் சார்பாக, கேபிள்கள் அறுத்தெறியப் பட்டன. அந்த கேபிள்களை அறுத்தெறிவதிலும், க்ரைம் பீட் பார்க்கும் பொழுது கிடைத்த தொடர்புகளை வைத்து, ரவுடிகளை விட்டு கேபிள்களை அறுத்ததிலும், அதில் காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் பார்த்துக் கொண்டதிலும், இந்த சுரேஷுக்கு முக்கிய பங்கு உண்டு.
தினகரன் ஆசிரியர் ஆர்.எம்.ஆர் ரமேஷுக்கு மிகவும் நெருக்கமானவர் இந்த சுரேஷ். இந்த ரமேஷுக்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்து, அந்தப் பத்திரிக்கையில் பணியாற்றும் மற்றவர்களை போட்டுக் கொடுத்து இதன் மூலம், பிழைப்பை நடத்துபவர்தான் இந்த சுரேஷ்.
இப்படிப் பட்ட சுரேஷ் தான் கூடுதல் எஸ்பி ஜெயலட்சுமி, ஜாபர் சேட் வீட்டுக்கு ரெய்டுக்குச் செல்கையில், தானாக வந்து பங்கெடுத்தார் என்று செய்தி வெளியிட்டிருக்கிறார்.
லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகள் என்பவை ஒரு அறுவை சிகிச்சைக்கான நேர்த்தியோடு செய்யப் படும். எந்த அதிகாரி எந்த இடத்திற்கு செல்ல வேண்டும், எத்தனை பேர் செல்ல வேண்டும், செல்லும் இடம் எது என்பன போன்ற விபரங்கள், முதல் நாளே முடிவு செய்யப் பட்டு மிகுந்த ரகசியமாக வைக்கப் படும். இந்த அதிபுத்திசாலி எழுதுவது போல கடைசி நேரத்தில் நானும் வருகிறேன் என்றெல்லாம் எப்போதும் நடைபெறாது.
சரி, அப்படி இருக்கையில் எதற்காக சுரேஷ் இப்படி செய்தியை வெளியிட்டார் ? அதை சுரேஷே தன் வாயால், மற்றொரு நண்பரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “நியூஸ் எப்படி போட்டேன் பாத்தியா…. ? நேத்து நான் போன் பண்ணி நியூஸ் குடுன்னு கேட்டா, அந்தம்மா போன எடுக்கவேயில்ல… அந்தம்மா நியூஸ் குடுக்கலன்னா எனக்கு நியூஸ் கிடைக்காதா ? அதான் இப்படி நியூஸ் போட்டு காலி பண்ணிட்டேன். இனிமே என் போன எடுக்கலன்னா, இப்படித் தான் காலி பண்ணுவேன்” என்று கூறியிருக்கிறார்.
அதிகாரிகள், முக்கியமான சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது, இது போன்ற லூசுப் பயல்களின் போனை அட்டென்ட் செய்ய மாட்டார்கள். அவர்கள் சோதனை போட வந்திருக்கிறார்களா, இந்த லூசுப் பயல் போனை அட்டென்ட் பண்ண வந்திருக்கிறார்களா ? பணியைச் செய்யும் அதிகாரிகளைப் பற்றி அவதூறாக இது போன்ற செய்திகளைப் போடுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது.
இப்படி செய்தி போடும், சுரேஷ், இவர்கள் பத்திரிக்கையின் உரிமையாளர், கலாநிதி நாளை கைது செய்யப் படும் போது இப்படி செய்தி போடுவாரா ?
இந்த சுரேஷ் இது போல அதிகாரிகளை மிரட்டும் போக்கை இன்றோடு கைவிடுவது அவருக்கு நல்லது. இல்லையென்றால், சுரேஷ் சக்சேனாவுக்கு அடுத்த செல்லில் இருக்கும் நாள் வெகு தொலைவில் இருக்காது.