மாமா ஜி : வணக்கம் வாங்க ஜி, எப்படி இருக்கீங்க?
ஆமா ஜி: நமஸ்காரம் நல்லா இருக்கேன் ஜி
மாமா ஜி: .ராஜா ஜிக்கு நேத்துல இருந்து போன் போடறேன் லைனே கிடைக்கமாட்டேனுதே ஜி
ஆமா ஜி: அதை ஏன் ஜி கேட்கறீங்க, ஆண்மை இருக்கானு ட்வீட் போட்டதும் போட்டார், எவனோ ஒருத்தன் இலவச ஆண்மை பரிசோதனைக்கு அணுகவும்னு அவர் நம்பரை போட்டு சுத்தல்ல விட்டுட்டான்.
மாமா ஜி : அய்யயோ அப்பறம் என்ன ஆச்சு ?
ஆமா ஜி: சிவராஜ் வைத்திய சாலைக்கு போறவன் பூரா ஜிக்கு போன் போட்டு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டான், அதனால இப்போ தான் நம்பர் மாத்தினாரு
மாமா ஜி : மேல சொல்லுங்க ஜி
ஆமா ஜி: அவன் சும்மா போட்டிருந்தாலும் பரவாயில்லை ஜி, சுயசார்பு முறையில் பரிசோதனை செய்து தரப்படும்னு வேற போட்டு விட்டுட்டான்
மாமா ஜி : ஏதே
ஆமா ஜி: இது பத்தாதுன்னு ஆண்மை பரிசோதனை ரிசல்ட் நெகடிவ் வந்தா கவலை படாதீங்கனு #லேகியம்விற்கும்மோடி னு ட்ரெண்ட் வேற பண்ணறானுக ஜி
மாமா ஜி : நாம பார்க்காத அசிங்கமா ஜி
ஆமா ஜி: இந்த வேல் பூஜை ரொம்ப ஈஸியா முடிஞ்சிடுச்சு ஜி, மாப் குச்சி, TMT கம்பினு எதையோ வச்சு ஒப்பேத்திட்டோம். விநாயகருக்கு என்ன ஜி பண்ணப்போறோம்
மாமா ஜி : அதுக்கு தான் ஜி இவ்வளவு பிரச்னையே, இந்த பழனிக்கு பாருங்க எவ்வளவு அதப்பு? ஊர்வலம் போகக்கூடாதுனு நமக்கே ஆர்டர் போடறார் ஜி
ஆமா ஜி: யாரு ஜி பழனி? ஏரியா இன்ஸ்பெக்டரா?
மாமா ஜி : அட நம்ம சிஎம் ஜி
ஆமா ஜி: ஒ நம்ம இப்போ எல்லாம் சிஎம் பேரை சொல்லி கூப்பிட ஆரம்பிச்சாச்சா?
மாமா ஜி : பின்ன பழனி தானே பேரு, நம்ம கிட்ட வம்பு பண்ணினா அப்பறம் அவரை எல்லாம் sv சேகர் ஜி டீல் பண்ற மாதிரி தான் ஜி பண்ணனும்
ஆமா ஜி: அதுவும் சரி தான் ஜி, நாம பார்த்து வளர்த்து விட்ட ஆளு. சரி ஜி நம்ம சேகர் ஜி முன் ஜாமின் போட்டிருக்காராம் கிடைக்குமா?
மாமா ஜி : கொடுக்காம எங்க ஜி போவாங்க? ஒருவேளை கிடைக்கலைனு வைங்க நம்ம மாரி கிட்ட சொல்லி ஏற்கனவே ஒரு வீடியோ இருக்கு அத விட சொல்ல வேண்டியது தான்
ஆமா ஜி: என்ன ஜி வீடியோ
மாமா ஜி : நம்ம முதல்வருக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்குனு தான்
ஆமா ஜி : என்ன ஜி சொல்றீங்க?
மாமா ஜி : நம்ம சேகர் ஜிக்கு பழனிச்சாமி பால் பாக்கெட் போட்டாரில்ல
ஆமா ஜி : ஆமா ஜி
மாமா ஜி: எப்பவும் நம்ம சேகர் ஜி 6% கொழுப்பு இருக்க ஆரஞ்சு பாக்கெட் தான் வாங்குவாரு
ஆமா ஜி : சரி
மாமா ஜி : அவருக்கு போய் பச்சை பாக்கெட் போட்டிருக்கார், பச்சை கலர் யாரோடது? பாகிஸ்தானோடது
ஆமா ஜி : பிரமாதம் ஜி, மனுஷன் ஆடிப்போயிடுவார் ஜி. சரி ஜி நம்ம சூர்யா நடிச்ச சூரரைப் போற்று படம் அமேசான்ல ரிலீஸ் ஆகுதாமே ஜி.
மாமா ஜி : அதுக்கு என்ன ஜி
ஆமா ஜி : இல்ல ஜி தியேட்டர்ல ரிலீஸ் செஞ்சா, உணர்வு புண் பட்டிருச்சுனு தியேட்டர் முன்னாடி ஆர்ப்பாட்டம் செஞ்சு கல்லா கட்டலாம். இப்போ அதுக்கு வழி இல்லையே
மாமா ஜி : நம்ம மாரிகிட்ட சொல்லி அமேசானுக்கு லெட்டர் போட சொல்லாம் ஜி, தூக்கிருவோம்.
ஆமா ஜி : ஜி நியூஸ்18 அம்பானியோடது, செய்டா அம்பினா செஞ்சிடுவான். இவன் வெள்ளைக்காரன், பாவாடை வேற ஜி வாயிலேயே மிதிப்பான்
மாமா ஜி : ஜி எனக்கு தெரியாதா அது, வெள்ளைக்காரன்கிட்ட நம்ம முன்னோர் பயன்படுத்திய ஆயுதத்தை தான் பயன்படுத்தனும் ஜி
ஆமா ஜி : என்ன ஆயுதம் ஜி அது ?
மாமா ஜி : நாக்கு தான்
ஆமா ஜி : என்ன ஜி டபுள் மீனிங்கா
மாமா ஜி : யோவ் போன் போட்டு கெஞ்சணும்னு சொல்றேன் ஜி
ஆமா ஜி : கெஞ்சினாலும் ஆதாரம் கேட்பானே
மாமா ஜி : அதுக்கும் ஒரு கான்செப்ட் மாரி தம்பி வச்சிருக்கார் ஜி
மாமா ஜி : சூர்யா நடத்தற அறக்கட்டளை பேரு அகரம், அதுல பசங்கள படிக்க வைக்கணும்னு சொல்றார்
ஆமா ஜி : ஆமா சொல்றார்
மாமா ஜி : அவர் தம்பி கார்த்தி நடத்தற அறக்கட்டளை பெரு உழவன், அதுல பயிர் செய்ய விரும்புனு சொல்றார்
ஆமா ஜி : அதுக்கு என்ன ஜி இப்போ ?
மாமா ஜி: இதுல ஒரு குறியீடு இருக்கு ஜி அந்த லோகோ பாருங்க
பள்ளிக்கூடம் போக வேண்டிய பிள்ளையை கலப்பை எடுத்துட்டு உழவு வேலை பார்க்க சொல்றரர்
ஆமா ஜி : அட ஆமா
மாமா ஜி : சூர்யா காபி குடிங்க உடம்புக்கு நல்லதுன்னு சன் ரைஸ் விளம்பரத்தில் நடிக்கிறார், சன் ரைஸ்னா உதய சூரியன் தானே? உதயசூரியன் யாரோட சின்னம் ? புரிஞ்சுதா ? தெரிஞ்சுதான்னு
எதையாவது உருட்டி விட்டு அவன்கிட்ட கேப்போம் ஜி
ஆமா ஜி : இப்போ எல்லாம் மாரி ஜி வீடியோ ரொம்ப மொக்கையா இருக்கு ஜி. 10 நிமிசத்துலயே தூக்கம் வருது ஜி, தெரிஞ்சதா புரிஞ்சதான்னு மாடுலேஷன் மாத்த சொல்லுங்க ஜி
மாமா ஜி : அதுக்கு தான் மதன், கிஷோர்னு ஒன்னுக்கு ரெண்டா ரெடி பண்ணினோம் அதுக்குள்ள அடிச்சிக்கிறானுங்க
ஆமா ஜி : ஒன்னுக்குனாளே நமக்கு ராசி இல்ல ஜி
மாமா ஜி : ஜி நான் எந்த ஒன்னுக்கு சொல்றேன் நீரு எந்த ஒன்னுக்கு சொல்றீங்க
ஆமா ஜி : சாரி ஜி, இப்போ எல்லாம் யாராவது வீட்டு வாசலை பார்த்தாலே மூத்திரம் போகணும் போல இருக்கு ஜி
மாமா ஜி : உங்களை எல்லாம் நம்ப முடியாது எதுக்கும் வீட்டு வாசலை ஒரு தடவை பார்த்துட்டு வரேன் ஜி
ஆமா ஜி : நம்ம ஆத்துல எல்லாம் அசிங்கம் பண்ணுவேனா ஜி? ஆனா ஒன்னு ஜி, ஹரேன் பாண்டையா, கவுரி லங்கேஷ்னு சம்பவம் பண்ணிட்டு இருந்த கட்சி இங்க தமிழ்நாட்டில் மூத்திரம் பெஞ்சுட்டு ஓடுற கட்சியா இருக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு ஜி . உச்சா அடிச்சு உயிர் தியாகம் செஞ்சாலும் மூத்திர வாரியாருனு கிண்டல் பன்றானுங்க.
சரி ஜி அப்படி என்ன தான் இந்த கிஷோருக்கும் மதனுக்கும் பிரச்னை
மாமா ஜி : இவனுக ரெண்டு பேரும் என்ன யோக்கியனுகளா, கொள்கைக்காக அடிச்சிக்கிறதுக்கு? பொறாமை தான்
ஆமா ஜி : இவனுங்களுக்கு அதுக்குள்ள என்ன ஜி அவசரம்? நம்ம மோடி ஜி பாருங்க அத்வானி ஜிக்கு பின்னாடி ஸ்பீக்கர் புடிச்சிட்டு ரதயாத்திரை போனார், இணைக்கு ராமர் கோவில் திறப்புவிழாவுக்கு அத்வானியை கூப்பிட கூட இல்ல. தொழிலில் பொறுமை முக்கியம் ஜி
மாமா ஜி :இவ்வளவு தெளிவா பேசறீங்கனா உங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் ஜி இருக்கணும்
ஆமா ஜி : அய்யோ ஜி உங்களுக்கு போய் துரோகம் பன்னுவனா? செருப்பா இருப்பேன் ஜி.
மாமா ஜி : அதை விடுங்க இன்னைக்கு மோடி ஜி வீடியோ பார்த்தீங்களா சும்மா தெறிக்க விட்டிருக்கார்
ஆமா ஜி : அவர் வீடியோவும் வந்திருச்சா? நேத்து தான் எடியூரப்பா வீடியோ வந்து நம்மல நாறடிச்சானுக. #கஜகஜாபாஜகன்னு போட்டு ட்ரெண்டிங் பண்ணி ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுனானுங்க ஜி.
மாமா ஜி : அது இல்ல ஜி, மோடி ஜி மயிலும் இருக்க வீடியோ பார்க்கலயா? இந்தாங்க பாருங்க
ஆமா ஜி : ஜி எனக்கு ஒரு டவுட்
மாமா ஜி : கேளுங்க ஜி
ஆமா ஜி : இந்த வீடியோவில் மயில் ரெண்டு நாள் தோகையை விரிச்சு இருந்தது
மாமா ஜி : ஆமா ஜி அதுக்கு என்ன ?
ஆமா ஜி : மயில் எப்போ தொகையை விரிக்கும் ?
மாமா ஜி : அது பெண் மயிலை பார்த்து கிளுகிளுப்பில் தோகையை விரிக்கும்
ஆமா ஜி : அப்போ நம்ம ஜி வாக்கிங் போற சமயமா பார்த்து ஒரு லேடி பேர்டா செட்டப் பண்ணி அந்த மயிலுக்கு மூட் ஏத்திருக்கோமா ஜி ?
மாமா ஜி : ஜி இதெல்லாம் எதிர் கட்சிக்காரன் கேட்டா நம்மள பத்தி என்ன நினைப்பான் ? உங்களை எல்லாம் இவ்வளவு நேரம் பேச விட்டதே தப்பு, போய் கொழுக்கட்டை எங்கயாவது கிடைச்ச வாங்கிட்டு வாங்க கிளம்புங்க