ஆமா ஜி : ஜி ரெடி ஆயாச்சா? முகூர்த்தம் முடியறதுக்குள்ள போகணும் ஜி
மாமா ஜி: இருங்க ஜி அவரசரத்துக்கு அண்டர்வேர் கூட கிடைக்க மாட்டேனுது, எல்லாத்தையும் துவைச்சு காயவே இல்ல
ஆமா ஜி : அவரசரத்துக்கு தப்பில்லை அந்த மாஸ்க்கை எடுத்து மாட்டி அட்ஜஸ்ட் பண்ணுங்கோ
மாமா ஜி: சரியா வருமா ஜி
ஆமா ஜி : எல்லாம் வரும் இறுக்கி மாடுங்க ஜி டைம் ஆச்சு
மாமா ஜி: சரி வாங்க போலாம்
ஆமா ஜி : அட அட நல்ல கூட்டம் ஜி, கொரோனா காலத்துலையும் மண்டபம் நிரம்பி வழியுது
மாமா ஜி: எல்லாம் நம்ம கட்சிக்காரன் தான் ஜி, ஆர்ப்பாட்டம்னா ஒரு பய வரமாட்டான். சாப்பாடுன்னதும் மொத ஆளா வந்தரானுக
ஆமா ஜி : ஜி அங்க பாருங்க நம்ம போர்டு தம்பி
மாமா ஜி: வாப்பா மாரிதாஸ்
மாரி : வாப்பானு கூப்பிடாதீங்க ஜி, அப்பறம் நான் முஸ்லீம்னு கிளப்பி விட்ருவாங்க
ஆமா ஜி : என்ன ஜி இவ்வளவு உஷாரா இருக்கீங்க
மாரி : எத்தனை பேருக்கு இப்படி ஆப்பு வைக்கிறோம் ஜி அதான். சரி ஜி நீங்க கட்சியில் சீனியர் அதனால கேட்கறேன். இந்த அண்ணாமைலைக்கு எல்லாம் வந்ததும் துணை தலைவர் பதவி குடுக்கறீங்க, என்னை கண்டுக்கவே மாட்டேன்கறாங்களே ஜி
மாமா ஜி: அதை ஏன் ஜி கேட்கறீங்க, எஸ்வீ சேகர் ஜீயும் இதை தான் சொல்லி வருத்தப்படறார். எப்போ எது நடக்கணுமோ அப்போ சரியா நடக்கும் ஜி
அதிபர் சீமான் வந்து அருகில் அமர்கிறார்
ஆமா ஜி : வணக்கம் சீமான் ஜி, மாப்பிள்ளை உங்களுக்கு தெரிஞ்சவரா
அதிபர் : ஜினு கூப்பிடாதீங்க அண்ணன்னு கூப்பிடுங்க, ஆமா மாப்பிள்ளை ரொம்ப தெரிஞ்ச பையன், நான் பார்த்து வளர்த்து விட்டேன் ஆனா இன்னைக்கு அவன் மேடையில் நான் இங்க கீழ.
மாமா ஜி: பேச்சில் ஒரு விரக்தி தெரியுதேண்ணே
அதிபர் : கேள்விப்பட்டிருப்பீங்க, ஒரு தம்பிய ஏணியில் ஏத்தி விட்டேன் மேல ஏரி வாயில மூத்திரம் பேஞ்சிட்டான்
ஆமா ஜி : நீங்க எதுக்கு அண்ணே சுப்பையா ஜியை ஏணியில் ஏத்தி விட்டீங்க?
அதிபர்: சுப்பையா இல்ல தம்பி, கல்யாண சுந்தரம்
மாரி : பேரை பார்த்ததும் தெரிய வேண்டாமா? கல்யாணத்துல முதல் எழுத்து க, சுந்தரத்தில் முதல் எழுத்து சு. அதுலயே காசுனு வருதே தெரிஞ்ச்சா புரிஞ்ச்சா
மாமா ஜி: இன்னொரு தம்பி கூட போய்ட்டாருனு கேள்வி பட்டேன்
அதிபர் : ராஜிவ் காந்தி, அவனும் போயிட்டான்
மாரி: ராஜிவ் காந்தினு பேரை பார்த்தாலே தெரியலையா எல்லா பிரச்னைக்கும் நேரு தான் காரணம்.
அதிபர் : யாரோ கட்சிக்குள்ள இருந்தே துரோகம் பண்றங்க
மாரி: எனக்கு என்னவோ சாட்டை துரைமுருகன் மேல தான் சந்தேகமா இருக்கு
அதிபர் : எப்படி சொல்றீங்க?
மாரி : அவர் பேரில் சாட்டை இருக்கு, உங்க கட்சியை உடைச்ச சங்கர் பேரில் சவுக்கு இருக்கு
அதிபர் : சரி
மாரி: சவுக்கு சங்கர் திமுக கைகூலி, துரைமுருகன் திமுக பொது செயலாளர். இப்போ புரியுதா
அதிபர் : உங்களுக்கு நல்ல எதிர் காலம் இருக்கு தம்பி. அந்த சவுக்கு சங்கர் மட்டும் கையில் கெடைச்சான் நோண்டி எடுத்திருவேன்
ஆமா ஜி : எது மூக்கையா?
மாமா ஜி: சும்மா இருங்க ஜி அவரே சோகத்துல இருக்கார். இதுல பாருங்க “அணைத்து விதமான கட்சிகளையும் இங்கு சில்லறையாகவும், மொத்தமாகவும் உடைத்து தரப்படும், உபையம் சவுக்கு சங்கர் “னு மீம் போடறானுக. எங்க கட்சிலயும் ஒருத்தரையும் விட மாட்டேங்கறான் ஜி, அண்ணாமலை, கல்வெட்டு ரவினு யாரை சேர்த்தாலும் கொடைச்சல் குடுக்கறான்
ஆமா ஜி : நாம வேணா கூட்டமா போய் சங்கர் வீட்டுக்கு முன்னாடி ஒண்ணுக்கு அடிச்சிட்டு வந்திறலாம் ஜி
மாமா ஜி: வேணாம் யா, உங்கள சவுக்கு சங்கர் வீட்டுக்கு போக சொன்னா டைரக்டர் சங்கர் வீட்ல போய் ஒண்ணுக்கு அடிச்சு பிரச்னை பண்ணவா?
ஆமா ஜி : ஏதோ ஒரு தடவ பத்மாவதி படத்துக்கு பிரச்னை பண்றதுக்கு பதில் பாகுமதிக்கு பண்ணிட்டோம், அதுக்காக அதையேவே சொல்லுவீங்க ?
மாமா ஜி: அத விடுங்க ஜி. சீமான்ணே, கல்யாண சுந்தரம் உங்க கிட்ட பேச முயற்சித்தும் நீங்க அனுமதி கொடுக்கலைனு சொல்றாரே?
அதிபர் : நாம் தமிழர் மாதிரி ஜனநாயக கட்சி நீங்க எங்கேயுமே பார்க்க முடியாது, அவர் சொல்றது அப்பட்டமான பொய். ஒரு அடிமட்ட தொண்டன் கூட எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும்
ஆமா ஜி : நிஜமாவா, இதுக்கு முன்னாடி தொண்டர் யாரும் உங்ககூட பேசிருக்காங்களா?
அதிபர்: ஏன் இல்ல, இப்படி தான் போன தேர்தல் சமயம் ஒரு தம்பி என்னை நேரடியா கூப்பிட்டு. ஏன் கட்சிக்கு உழைக்கறவங்களுக்கு சீட் கொடுக்கலைனு முறையிட்டார்
மாமா ஜி: செம்ம, அப்பறம் நீங்க என்ன செஞ்சீங்க ?
அதிபர் : போனை வை டா ங்கோத்தா ன்னேன். புஹா புஹா புஹாஹாஹா
ஆமா ஜி : இது தான் ஜனநாயகமா ? அருமை
மாரி: கேட்கறேன்னு தப்ப எடுத்துக்க கூடாது, நீங்க ஏன் நம்ம கட்சியில் உங்க கட்சியை இணைக்க கூடாது? ரெண்டு கட்சிக்கும் ஒற்றுமை நெறய இருக்கு
அதிபர் : அப்படி என்ன ஒற்றுமை சொல்லுங்க கேட்போம்
மாரி: நாங்க திடீர் முருக பக்தர்
அதிபர் : எங்களுக்கு முருகன் முப்பாட்டன்
மாரி : நாங்க எல்லா பிரச்னைக்கும் காங்கிரஸ் தான் காரணம்னுவோம்
அதிபர்: நாங்க திராவிடம் தான் காரணம்னுவோம்
மாரி: வேதத்துல இல்லாத மருந்தே இல்லன்னுவோம்
அதிபர் : நாங்க மரபு வழி மருத்துவும் பார்க்க சொல்லுவோம்
மாரி: நாங்க பக்கோடா கடை போட்டு பொழைக்க சொல்லுவோம்
அதிபர் : நாங்க மாடு மேய்க்க சொல்லுவோம்
மாரி : நாங்க பேருக்கு பின்னாடி ஜோசப் இருக்கானு பார்ப்போம்
அதிபர் : நாங்க ஜாதிய கண்டுபிடிக்க யூரின் டெஸ்ட் எடுப்போம்
மாரி : நாங்க ராமர் கோவில் கட்ட கலெக்ஷன் போடறோம், நீங்க பிரபாகரன் கூட இருக்க ஒத்த போட்டோவை வச்சு கல்லா கட்டறீங்க
மாரி : நீங்க ஆமை, அரிசி கப்பல்னு கதை சொல்லுவீங்க, எங்க ஜி மான் கி பாத்தில் நல்லா வடை சுடுவார். புரிஞ்ச்சா தெரிஞ்ச்சா
அதிபர் : வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
மாமா ஜி: ஏன் அண்ணே அப்படி சொல்றீங்க?
அதிபர் : இதுல நுட்பமா நீங்க ஒன்னு விளங்கிக்கிடனும் தம்பி, நம்ம ரெண்டுபேரோட இலக்கு ஒண்ணா இருக்கலாம் ஆனா பயணம் செய்யற பாதை வேறயா இருக்கணும் அப்போ தான் வசூல் கொறையாது. மாரி தம்பி நீ நம்ம கட்சியில் சேர்ந்துறேன் மாணவர் பாசறை தலைவர் ஆக்கிடறேன்
மாரி: சரியா வராது, போர்டு வச்சு பேசி பேசி பழகிட்டேன், மேடையில் பேச வராது .
அதிபர்: சரி புலி வேட்டைக்கு நேரம் ஆச்சு கிளம்பறேன்
மாமா ஜி : கல்யாணத்துக்கு வந்திட்டு சாப்பிடாம போறீங்களே
அதிபர் : இப்படி தான் கண்டியில் தலைவரோட சாப்பிடும் போது பின்னாடி ஒரு பையன் நின்னு நான் என்ன சாப்பிடறேன்னு குறிப்பு எடுத்து கிட்டு இருந்தான்
மாமா ஜி : அப்பறம் ஜி
அதிபர் : கை கழுவிட்டு கிளம்பும் போது காசை எடுன்னு கழுத்தில் கத்திய வச்சிட்டான், அதுல இருந்து வெளிய சாப்பிடறது இல்ல
ஆமா ஜி : அது கண்டி இல்லையாமே கிண்டில சாப்டுட்டு காசு குடுக்காம எஸ்கேப் ஆனா சம்பவம்னு கேள்விப்பட்டேன்
அதிபர் : தம்பிக்கு உள்விவரம் நெறய தெரிஞ்சிருக்கு நான் கிளம்பறேன்
ஆமா ஜி : நாமளும் கிளம்பலாம் ஜி
மாமா ஜியும், ஆமா ஜியும் கிளம்பி வெளிய வரும் போது H.ராஜாவும் அவரது அட்மினும் மண்டபத்துக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்
ராஜா ஜி : ஏன்டா அம்பி நான் தான் அவசரத்துக்கு கிளம்பிட்டேன் அந்த மாஸ்க் மறந்துட்டேனு நீயாவது சொல்லக்கூடாத
அட்மின் ஜி : சாரி ஜி கவனிக்கல
ராஜா ஜி : இப்படி தான் கவனிக்கலை கவனிக்கலைனு போஸ்ட் போட்டு செருப்படி வாங்கி வைக்கற. போ போய் மாஸ்க் வாங்கிட்டு வா
அட்மின் வண்டி எடுக்க பார்க்கிங் செல்லும் போது முன்னே போய்ட்டு இருந்த மாமா ஜியின் மாஸ்க் கழண்டு கீழே விழுந்தது, அதை எடுத்த அட்மின் ஜி
அட்மின் ஜி : ஹலோ மாமா ஜி ஹலோ. என்ன கூப்பிட்டா போயிட்டே இருக்காரு, மாஸ்க் வேற போட்டிருக்கார் ஒருவேளை எக்ஸ்ட்ரா மாஸ்க்கோ. சரி இதையே ராஜா ஜிக்கு கொடுப்போம்
ராஜா ஜி : வாங்கிட்டு வந்துட்டயா எங்க குடு, என்னடா சூடா, ஈரமா இருக்கு ஒரு மாதிரி வாசனையவும் இருக்கு
அட்மின் ஜி : அது வந்து சாணிடைஸர் போட்டு வாங்கிட்டு வந்தேன் ஜி அப்படி தான் இருக்கும்
ராஜா ஜி : நல்ல இருக்கு டா, எந்த ஆன்டி இந்தியன்ஸ் மூச்சு காத்தும் பட கூடாது வா போலாம்