நாம் தமிழர்கள் தானே….? அரசியல் ரீதியாகப் பார்த்தால் நமக்கு துரோகம் இழைத்தது ஒரு கட்சி. எதிரி, காங்கிரஸ் கட்சி. பல முறை நாம் விவாதித்தது போலவும், இயற்கை நியதியைப் போலவும், எதிரிகளை நாம் மன்னிக்கலாம். ஆனால் துரோகிகளை மன்னிக்கவே முடியாது.
அது போலவே துரோகிகளை நாம் பழி தீர்த்து விட்டதாகவே சவுக்கு கருதுகிறது. இன்றும் பல பேர், கருணாநிதியை தூக்கில் போட வேண்டும், கனிமொழியை தூக்கில் போட வேண்டும், ஜெகத் கஸ்பரை தூக்கில் போட வேண்டும், நக்கீரன் காமராஜை தூக்கில் போட வேண்டும் என்று குறுஞ்செய்தி மூலமாகவும், மற்ற தொலைத் தொடர்பு வழி முறைகள் மூலமாகவும் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சவுக்கு தூக்கு தண்டனைக்கு எப்போதுமே எதிரானது என்பது ஒரு புறம் இருக்கட்டும். தூக்கு ஒரு தண்டனையா ? அது ஒரு தண்டனையாக இருந்து விட்டால், எதற்காக இத்தனை தற்கொலைகள் ? தூக்கில் போட்டு விட்டால், கருணாநிதி ஒரு வினாடியில் இறந்து விடுவார். அதுவா நமக்கு வேண்டும் ? கருணாநிதி அணு அணுவாக சாக வேண்டாமா ? சக மனிதனை காப்பாற்றும் வலு இருந்தும், அந்த சக மனிதன் குண்டு வீச்சால், ரத்தத்தை இழந்து இறப்பதை புறக்கணித்து, ஸ்பெக்ட்ரமில் வந்த லஞ்ச பணத்தை எண்ணிக் கொண்டிருந்த ஒரு மனிதன் ஒரு வினாடியில் சாகலாமா ? அப்படிப் பட்ட கருணாநிதி அணு அணுவாக துடி துடித்து, வேதனையில் நெளிந்து, மனம் புழுங்கி, கையறு நிலையை உணர்ந்து, அவமானப்பட்டு, தற்கொலை செய்து கொள்ளக் கூட வலுவில்லாத நிலையில், வேதனைப் பட வேண்டாமா ?
அதனால் தான் கருணாநிதி உட்பட யாருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கப் படவே கூடாது என்று சவுக்கு கருதுகிறது. சொந்த மகள் சிறையில் வாடுகையில், அதற்கு காரணமான காங்கிரஸ் கட்சியின் காலை நக்கிக் கொண்டிருப்பதை விட, கருணாநிதிக்கு வேறு என்ன தண்டனை வேண்டும் ? பொதுக்குழுவில் தீர்மானம் போட்டு, சிபிஐ அமைப்பை கண்டிக்கத் தெரிந்ததே !!! அந்த சிபிஐ அமைப்பை மேற்பார்வை செய்யும் கட்சியாக உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியை கண்டிக்கத் துப்பு இருக்கிறதா கருணாநிதிக்கு ? கேவலம், தான் பெற்ற மகன்களையே கட்டுப் படுத்தத் தெரியாத கருணாநிதிக்கு இனி வாழ்க்கை முழுவதும் துன்பம் தான்.
துரோகிக்கு உரிய தண்டனையை வாங்கிக் கொடுத்தாகி விட்டது என்றே சவுக்கு நினைக்கிறது. சரி.. இப்போது எதிரியை பழி வாங்க வேண்டாமா ?
அதற்கு என்ன செய்ய வேண்டும் ? நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். எதிரியே புதைகுழியை நோக்கிப் போகும் போது நாம் என்ன செய்ய வேண்டும் ? அருகில் கயிறு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எதிரியான காங்கிரஸ் புதைகுழிக்குப் போகிறதா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆச்சர்யப் படாதீர்கள். குண்டு வீச்சில் தன் பச்சிளம் குழந்தையை பறிகொடுத்த பல தாய்மார்கள்ஒரு தாய் விட்ட சாபம் சும்மாவா விட்டு விடும் ?
திங்கட் கிழமை பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறதல்லவா ? அப்போது பாருங்கள் தமாஷை. இத்தனை நாள் வரை, பாரதீய ஜனதா கட்சிக்கு ஊழலைப் பற்றிப் பேச தகுதி இல்லை என்று, காங்கிரஸ் கட்சி சார்பாக கொடுத்த காசுக்கு கூவும் அபிஷேக் மனு சிங்வி, மனீஷ் திவாரி ஆகியோர் இனி பேச முடியாத வண்ணம், எடியூரப்பாவை பதவி விலகச் சொல்லி பாஜக உத்தரவிட்டு விட்டது. இன்றைய இரவு நிலவரம் வரை, எடியூரப்பாவும் பதவி விலகி விட்டார். இனி பாஜக கட்சியைப் பற்றி ஊழல் என்று நாக்கு மேல் பல்லைப் போட்டு சொல்ல முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி ஆகி விட்டது.
அடுத்து என்ன ஆகும் ? இப்போதுதான் கதாநாயகன் ஆகிறார் ஆண்டிமுத்து ராசா. பாஜக வட்டாரத் தகவல்களின் படி, மன்மோகன் சிங் பதவி விலகும் வரை பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மன்மோகன்சிங் ஒரு சூடு சொரணையற்ற (எருமை மாடு என்றால் திட்டுகிறார்கள்) என்ன சொல்வது ? பஞ்சாயத்து வெற்றிலைத் தொட்டி. பஞ்சாயத்து தலைவர்கள் வெற்றிலையை மென்று விட்டு துப்புவார்கள் அல்லவா ? (இப்போ சவுக்கை திட்ட முடியாதே….. !!!!)
தகத்தகாய கதிரவன், அருமைத் தலைவன் ஆ.ராசா, மன்மோகன் சிங்குக்கு தெரிந்தே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அத்தனை முடிவுகளும் எடுக்கப் பட்டன. தைரியம் இருந்தால், இந்த முடிவுகள் பற்றித் தெரியாது என்று, ப.சிதம்பரத்தையும், மன்மோகன் சிங்கையும் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று நீதிமன்றத்தில் கர்ஜ்த்தார். இவ்வாறு நீதிமன்றத்தில் ராசா சொன்ன விவகாரத்தை பாஜக சும்மா விடப் போவதில்லை. சவுக்குக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் படி, பாஜக, இடது சாரிகளோடு, பாராளுமன்றத்தில் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்து ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது.
காங்கிரஸ் போன்ற, ஒரு கேடு கெட்ட, மானங்கெட்ட, வெட்கமில்லாத கட்சியை உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது. அதன் தலைவியாக, வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி, இன்று ஒரு வெள்ளைக் காரியை தலைவியாகக் கொண்டு கட்சி நடத்துவது காலத்தின் கோலமல்லவா ? சவுக்கு தனது வாசகர்களுக்கு சவால் விடுகிறது. எனக்கு சூடு சொரணை இருக்கிறது என்று நிரூபிக்கக் கூடிய ஒரே ஒரு காங்கிரஸ் கட்சிக் காரனைக் காட்டுங்கள் பார்போம் ? முடியாது உங்களால். ஏனென்றால், அத்தனை காங்கிரஸ் காரனும், ஒத்துக் கொள்வான், “சாரி சார். அதுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது” என்று. நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு சேப்பாக்கம் நுழைவாயில் வழியாக நுழைந்தீர்கள் என்றால், அங்கே குதிரைகள் கட்டப் பட்டிருக்கும். அந்த குதிரைகள் போடும் விட்டையை எடுத்து, அதுதான் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது என்று அறிவிப்பு வரட்டுமே…… “சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட விட்டையே…… எங்கள் தலைவர் தலை சொட்டையே (தங்கபாலு)” என்று டபுள் பிட் போஸ்டர் அடித்து தமிழகம் எங்கும் ஒட்டுவார்கள் காங்கிரஸ் காரர்கள்.
பல்வேறு நபர்கள், பல்வேறு கட்சிகள் தொடங்கி பலவீனப்பட்டு, வலுவிழந்து காலத்தில் கரைந்து போகையில், காங்கிரஸ் கட்சி மட்டும் ஏன் இப்படி வலுவாக இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா ? பணம் அய்யா… !!!! பணம். 120 வருடங்களாக நடந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா முழுக்க பல்லாயிரக்கணக்கான கோடிக்கு சொத்து இருக்கிறது. தமிழகத்தை எடுத்துக் கொண்டீர்கள் ஆனால், கோடிக்கணக்கான சொத்துக்களும், பணமும் ஏராளமாக இருக்கிறது. அந்தப் பணத்தையும், சொத்துக்களையும் அனுபவிப்பதற்கு மட்டுமே, ஒரு கூட்டம், குதிரை சாணத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.
உண்மையில், நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்று நினைக்கும் ஒரு தொண்டனாவது ஒரு இத்தாலிக் காரியை தலைவியாக ஏற்றுக் கொள்வானா ? 110 கோடி மக்கள் தொகையைக் கொண்ட, இந்தியாவில் அப்படியா ஒரு தலைவியோ தலைவனோ இல்லாமல் போய் விட்டார்கள் ? இப்படி ஒரு வெளிநாட்டுக் காரியைத் தலைவியாக ஏற்றுக் கொள்வதற்கு, கொல்கத்தா சோனாகஞ்ச் பகுதியில், தன் உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு பெண்ணை தலைவியாக ஏற்றுக் கொள்ளலாமே? அப்படி, தன் உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு பெண், தன்னிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக 2 லட்சம் உயிர்களை அழிக்க சம்மதித்திருப்பார் என்றா நினைக்கிறீர்கள் ?
ஒரு பெண், ஒரு ஆணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. இந்த ஒரே காரணத்துக்காக உலகில், இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டை ஆளும் பொறுப்பை கொடுத்து விட முடியுமா ? காதலித்து மணம் புரிந்து புகுந்த வீட்டை அபகரித்தது இல்லாமல், அந்த வீடு இருக்கும் நாட்டையே அபகரிப்பதை எங்காவது ஏற்றுக் கொள்ள முடியுமா ? அதுதானே நடந்திருக்கிறது நம் நாட்டில் ?
இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், இடது சாரிகளும், பாஜகவும் ஒன்று சேர்ந்து விட்டால், பாராளுமன்றம் அதகளப் படும். இன்றும் 11 மாதங்களுக்குள் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வர இருப்பதால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னா பட்டுக் கொண்டு இருக்கும் காங்கிரஸ் கட்சி போன்ற ஒரு சுமையை முதுகில் ஏற்றிக் கொள்ள, மாயாவதியும் தயாரில்லை, முலாயம் சிங்கும் தயார் இல்லை. அமைச்சர் பதவி கொடுக்காத காண்டில் இருக்கும் லல்லுவும் காங்கிரசுக்கு கைகொடுக்கப் போவதில்லை.
இத்தனை கட்சிகளும் ஒன்று சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடு தூக்குகிறது என்றால், சொந்த ஆட்சி நடக்கும் ஆந்திராவில், தெலுங்கான பிரச்சினையால் காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு தயாராகிக் கொண்டு இருக்கிறது. தெலுங்கானா உருவானால் 13 எம்பி காலி. தெலுங்கானா உருவாகவில்லை என்றால் 10 எம்பி காலி. இது போக, ராஜசேகர ரெட்டியின் மகன் வடிவில் ஒரு பெரிய பூதம் காங்கிரசின் சங்கை அறுக்க காத்துக் கொண்டிருக்கிறது. தன் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு காரணமான காங்கிரஸ் கட்சியை காயடிக்க ஜெகன் மோகன் ரெட்டி காத்துக் கொண்டிருக்கிறார்.
மற்ற மாநிலங்களிலும், மக்கள் காங்கிரசோடு ஒன்றும் காதலாக இல்லை. மேற்கு வங்கத்தில் படு தோல்வியைச் சந்தித்து, பட்டா பட்டி அண்டர்வேரோடு நிற்கும் சிபிஎம் கட்சி, பாராளுமன்றத் தேர்தல் போன்ற ஒரு சூழல் வந்தால் மட்டுமே, கட்சித் தொண்டர்களை உற்சாகப் படுத்த முடியும் என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
சரி, காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று நினைக்கக் கூட தயங்குகிறது. நிதீஷ் குமார் சொன்னது போல, ஒரு மாநிலத்தை நிர்வகிக்கக் கூட அனுபவம் இல்லாத ராகுல் காந்தியால், பள்ளிக் கூட பிள்ளைகளோடு உரையாடுவதைத் தவிர உருப்படியாக வேறு எதுவும் செய்ய முடியவில்லை (சார், தமிழ்நாட்டில் பிள்ளைகள் புத்தகம் இல்லாமல் கஷ்டப் படுகிறார்கள். வந்து அவங்க கூட பேசிக்கிட்டு இருங்க சார்) ஆகையால், ராகுலை நம்பி தேர்தலில் இறங்க முடியாது.
சரி… எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மன்மோகன் சிங்கை ராஜினாமா செய்யச் சொல்லி விட்டு, பிரணாப் முகர்ஜியை பிரதமர் ஆக்கலாம் என்றால், அந்த ஆளை நம்ப முடியாது. மத்திய உளவுத் துறை அளிக்கும் தகவலின் படி, பிரணாப் முகர்ஜி சமீபத்தில் சென்னை வந்து கருணாநிதியை சந்தித்த போது, தன்னை பிரதமர் ஆக்கும் சூழல் வந்தால், தனக்கு ஆதரவு தருமாறும், அப்படி பிரதமர் ஆகும் பட்சத்தில், 2ஜி விவகாரத்தில் இருந்து கனிமொழி மற்றும் திமுகவைச் சார்ந்த அனைவரையும் காப்பாற்றுவதாகவும் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே, கருணாநிதி காங்கிரசுடன் கூட்டணி சுமூகமாக உள்ளது என்று கருத்து தெரிவித்தார். அந்த காரணத்தாலேயே, கோவை பொதுக்குழுவில், கருணாநிதி, காங்கிரஸ் கட்சி, கழுதை மூத்திரத்தில் நனைத்த செருப்பில் தன்னை அடித்தாலும், காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறார்.
ஆனால், மற்ற அனைவரையும் போலவே, கனவு காணுவதற்கு பிரணாப் முகர்ஜிக்கு மட்டும் உரிமை இல்லையா என்ன ? அப்படியே ஒரு வேளை பிரணாப் பிரதமர் ஆன பின், கனிமொழியை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்டாரென்றால், நாம் எல்லாம் சும்மாவா விட்டு விடுவோம் ? அதையும் மீறி, பிரணாப் பிரதமராக நீடிக்க விட்டு விடுவோமா என்ன ?
இவை தவிர்த்தும், காங்கிரஸ் கட்சிக்கே பெரும்பான்மை நிரூபிக்கக் கூடிய அளவில், மத்தியில் பெரும்பான்மை இல்லை. மம்தா பானர்ஜி தன் ஆதரவை கொடுத்தாலும் கூட, கடைசி நேரத்தில், இன்று இப்படி காங்கிரஸ் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் திமுக கூட, ஆதரவை வாபஸ் வாங்குவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்.
இவை எல்லாவற்றையும அலசி ஆராய்கையில், மத்திய அரசு கவிழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. அந்த வாய்ப்புகளை கூர்மைப் படுத்தி, இந்த அரசை கவிழ்க்க வேண்டிய பொறுப்பு, தமிழர்களாகிய நமக்கு மிக மிக அதிகமாக இருக்கிறது.
பல்வேறு இடங்களில் இருக்கக் கூடிய சவுக்கு வாசகர்கள், பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள். பல்வேறு தொடர்புகளை கொண்டவர்கள். உயர் அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் இருப்பீர்கள்.
இந்த அன்பு உறவுகளுக்கு சவுக்கின் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். பாராளுமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், தமிழர்களாகிய சவுக்கு வாசகர்கள், எப்படியாவது, இந்த காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே சவுக்கின் விருப்பம். நாம் தமிழர்களாக, இறந்த ஈழத் தமிழர்களுக்கான ஒரு சொட்டு கண்ணீர் சிந்துவதை விட, எதிரிகளின் சங்கை அறுப்பதே சாலச் சிறந்தது.
காலத்தின் கோலமாக, நாளை இடது சாரிகள் வெளியில் இருந்து ஆதரவு தரும், பாரதீய ஜனதா ஆட்சி கூட அமைய வாய்ப்பிருக்கிறது. அப்படி, இடது சாரிகள் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தார்களேயானால், அது இடது சாரிகளின் அரசாங்கம் தான். ஆளுவது பாஜகவாக இருந்தாலும், உண்மையில் ஆளப்போவது இடது சாரிகள் தான்.
அதற்கு காங்கிரஸ் கட்சியை கருவறுப்பது மிக மிக முக்கியம். உறுதி பூணுங்கள் தோழர்களே……..