நக்கீரன் இதழின் இணை ஆசிரியர் காமராஜ் அவர்களின் மனைவி மீது நில மோசடிப் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லியைச் சேர்ந்த வீ.அன்பழகன் என்பவர் இந்தப் புகாரை உள்துறைச் செயலாளரிடம் இன்று கொடுக்க உள்ளார். தன் கணவர் பெயரில் சொந்தமாக வீடு இருக்கையில் அந்த உண்மையை மறைத்து, வீடு இல்லை என்று பொய்யான சான்றிதழை அளித்து, வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பெற்று, அரசை ஏமாற்றியிருப்பதாக அந்தப் புகாரில் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதே போன்று மோசடியாக வீட்டு மனை ஒதுக்கீடு பெற்றதற்காக முன்னாள் உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட் மீதும், அவர் மகள் மற்றும் மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
ஜெயசுதாவுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப் பட்ட அரசாணை
எனக்கோ கணவருக்கோ வீடு இல்லை என்று ஜெயசுதா அளித்த உறுதிமொழி
சென்னை சேரிப்பகுதிகளில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் பாடம் நடத்தி
அதன் மூலம் சமூக சேவை செய்ததாக ஜெயசுதாவுக்கு வழங்கப் பட்ட சமூக சேவகர் சான்றிதழ்
காமாராஜ் பெயரில் இருக்கும் வீட்டுப் பத்திரம்