மாமா ஜி : ஹலோ ஜி ஹாப்பி நியூ இயர் ஜி
ஆமா ஜி : என்ன ஜி ஹாப்பி? அதான் எல்லாம் புட்டுகிட்டு போய்டுச்சே
மாமா ஜி : ஏன் ஜி இவ்வளவு விரக்தியா பேசறீங்க ?
ஆமா ஜி : பின்ன ரஜினி ஜி வருவார் தாமரை மலரும்னு பார்த்தா இப்படி பேக் அடிச்சிட்டார்
மாமா ஜி : எனக்கும் கவலையா தான் இருக்கு ஜி அதுக்காக நீங்க ஓவரா பீல் பண்றமாதிரி தெரியுதே ஜி
ஆமா ஜி : உண்மை தான் ஜி, இந்தவாட்டி எப்படியும் வந்திருவார்னு நம்பி காசு செலவு பண்ணிட்டேன்
மாமா ஜி : என்ன ஜி சொல்றீங்க? நம்ம கட்சிக்கு கூட செலவு செய்ய மாட்டீங்க , அப்படி என்ன பண்ணீங்க?
ஆமா ஜி : நம்ம போர்டு தம்பி இல்ல ?
மாமா ஜி : யாரு மாரிதாஸா?
ஆமா ஜி : அவரே தான், 3 வருசத்துக்கு முன்னாடி கட்சி ஆரம்பிப்பது உறுதினு தலைவர் சொன்னர்ல?
மாமா ஜி : ஆமா சொன்னார்
ஆமா ஜி: அப்போ மாரி தம்பி என்கிட்ட வந்து கட்சி வளர்ச்சிக்கு நிதி குடுங்க, எப்படியும் நம்ம ஆட்சி தான் அப்போ உங்களுக்கு ஏதாவது வாரியம் போஸ்ட் வாங்கி தரேன்னு சொன்னார்
மாமா ஜி : ஏன் ஜி நம்ம கட்சியிலேயே குடுத்திருப்பாங்களே ஜி
ஆமா ஜி : நல்லா குடுத்தானுக, போன தடவ ஏதாவது கொடுத்தே ஆகணும்னு சண்டை போட்டதுக்கு அப்பறம் எஸ்.வி சேகர் ஜி நாடகத்துக்கு லைப் டைம் பாஸ் குடுத்தாங்க.
மாமா ஜி : உங்களுக்கும் கொடுத்தாங்களா சரியா போச்சு, சரி மேல சொல்லுங்க
ஆமா ஜி : நிதி எல்லாம் பெருசா கொடுக்க முடியாது, வேணும்னா மாசாமாசம் மார்க்கர் பேனா என் செலவுனு சொல்லி இதுவரைக்கும் 2 லட்சம் குடுத்திருக்கேன் ஜி
மாமா ஜி : ஜி அறிவு இருக்கா? இல்ல கொஞ்சமாவது அறிவு இருக்கா
ஆமா ஜி : ஏன் ஜி திட்டறீங்க?
மாமா ஜி : திட்டாம? அவன் வைட் போர்டுல இருந்து டிஜிட்டல் போர்டுக்கு மாறி 4 வருஷம் ஆவுது
ஆமா ஜி : அப்போ திருட்டு பயலா ஜி அவன் ?
மாமா ஜி : பின்ன யோக்கியனா? போங்க ஜி, அந்த காசை நம்ம கட்சிக்கு செலவு செஞ்சிருந்தா..
ஆமா ஜி : செஞ்சிருந்தா? மதுவந்தி ஜி டான்ஸ் டிக்கெட் குடுத்திருப்பீங்க. அதுக்கு அந்த தம்பி நாலு லெக்கின்ஸாவது என் பேரை சொல்லி போடட்டும்
மாமா ஜி : சரி சரி வாங்க நாம வெளிய போகணும்
ஆமா ஜி : எங்க ஜி போறோம்? சொன்னா தானே அதுக்கு தகுந்த மாதிரி ரெடி ஆக முடியும் ?
மாமா ஜி : என்ன ஓய் பாண்ட் சர்ட் மாட்டிட்டு வரவேண்டியது தானே அதுக்கு என்ன இவ்வளவு டீட்டைல் கேட்கறீங்க ?
ஆமா ஜி : என்ன அவ்வளவு ஈஸியா சொல்லிடீங்க ஜி, இப்போ நம்ம கட்சி ஆபிஸ் போறதுன்னு வைங்க காவி துண்டு போட்டுட்டு வரணும், கட்சியில் தலைவரை யாரையாவது தனியா சந்திக்க போறோம்னா கோமியம் வாங்கிட்டு போகணும் இதுவே எதிரி வீட்டுக்கு போகணும்னா 2 லிட்டர் தண்ணிய குடிச்சுட்டு போகணும்
மாமா ஜி : அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க சும்மா கிளம்பினா போதும் ஜி
ஆமா ஜி : ஜி இப்போ எதுக்கு ஜி இவர் வீட்டுக்கு வந்திருக்கோம், ஏற்கனவே காண்டில் இருப்பார்
மாமா ஜி : நீங்க அமைதியா இருங்க ஜி
ஆடிட்டர் ஜி : வாங்க ஜி உக்காருங்க, இவர் யாரு இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையே
மாமா ஜி : இவர் நம்ம கட்சி தான் ஜி, ரொம்ப வருசமா இருக்கார்
ஆடிட்டர் ஜி : அப்படியா இவர் வீடு எங்க இருக்கு
ஆமா ஜி : காசி மேடு ஜி
ஆடிட்டர் ஜி : ஓஹோ காசி மேடா, நீங்க செத்த தள்ளியே உட்காருங்கோ
மாமா ஜி : அவர் யாரு ஜி வீட்டுக்கு நடுவில் நின்னுட்டு இருக்கார்
ஆடிட்டர் ஜி : அவரை தெரியல? அவர் தான் பிரபலம் கமந்த் ராமன் ஜி.
மாமா ஜி : ஜி நீங்களா வாங்க உட்காருங்க நடுவீட்டில் நிக்கறீங்களே
கமந்த் சோமன்: நோ நோ நான் செண்ட்டரிஸ்ட் நடுவில் தான் நிப்பேன்
மாமா ஜி : என்ன ஜி பெரியவா எல்லாம் ஒரே இடத்தில இருக்கீங்க, என்னை எதுக்கு வர சொன்னீங்க ?
ஆடிட்டர் ஜி : வெளிய தலைகாட்ட முடியல, நாக்பூர்ல இருந்து ஒரே பிரஷர்.
ஆமா ஜி : நாம வேணும்னா நாமக்கல் போய்டலாம் ஜி
ஆடிட்டர் ஜி : நாமக்கல்ல என்ன?
ஆமா ஜி : நாமக்கல்ல ஒன்னும் இல்ல ஜி, நாக்பூர் நாமக்கல்னு ஒரு புளோவுல சொல்லிட்டேன்.
கமந்த் சோமன்: ஷீட்
ஆமா ஜி : புது பஸ்டாண்ட் கட்டண கழிப்பிடத்துல போயிக்கலாம் ஜி, டோக்கன் போடறவன் தெரிஞ்சவன் தான்
மாமா ஜி : வாய மூடுங்க ஜி. குரு ஜி , நாம போட்ட எல்லா திட்டமும் இப்படி ஆயிடுச்சே ஜி
ஆடிட்டர் ஜி : நீங்க எல்லாம் ஆம்பளையா? ஒரு திட்டத்தை கூட ஒழுங்கா செயல்படுத்த மாட்டிங்களா?
மாமா ஜி : கோவிச்சுக்காதீங்க ஜி, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டாங்கனு தைரியம் சொல்லி கூட கூப்பிட்டு பார்த்துட்டோம். கடைசி நிமிசத்துல இப்படி பண்ணிட்டார்
ஆடிட்டர் ஜி : நம்ம அறிவுசார் கூட இருந்தும் எப்படி இப்படி ஆச்சு?
மாமா ஜி : எல்லாம் பிளான் பண்ணி அப்பலோல படுத்துட்டார். CCTV ஆப் பண்ணிட்டு கைநாட்டு வாங்கிறலாம்னு ரெட்டி கிட்ட கூட பேசினோம், செருப்பால அடிப்பேன்னுட்டார்
ஆடிட்டர் ஜி : ஓபிஎஸ், தீபா, ரஜினினு எதுவுமே ஒத்து வரல இப்போ என்ன பண்ண போறீங்கன்னு கேட்கறாங்க
கமந்த் சோமன்: நான் வேணும்னா நியூ இயர்க்கு வாழ்த்து சொன்ன ஸ்டாலின் ஏன் ஏகாதேசி வாழ்த்து சொல்லலேனு ஒரு பிரச்சனையா கிளப்பட்டா ஜி?
ஆடிட்டர் ஜி : இதெல்லாம் ஒரு பிரச்சனையா ஜி? நான் பெரிய லெவல்ல பேசிட்டு இருக்கேன். நீங்க முத்துவுக்கு போன் போடுங்க நான் பேசறேன்
ஆமா ஜி : நான் போடறேன், இந்தாங்க பேசுங்க
ஆடிட்டர் ஜி : ஸ்பீக்கர்ல போடுங்க , ஹலோ முத்துவா ?
முத்து: ஏ நான் முத்து தான் பேசறேன் நீ யாரு ?
ஆடிட்டர் ஜி : நான் தான் குரு பேசறேன், நான் அனுப்பினது கிடைச்சுதா ஜி
முத்து: ஏ உன்ன தான் வே தேடிட்டு இருந்தேன், பேதில போறவனே !!
என்ன வே பார்சல் அனுப்பியிருக்க? செத்த பயலே, சவட்டு மூதி ! நான் திருப்பி அனுப்பறேன் நீ மாட்டிட்டு அலைவே செத்த பயலே. வை லே போன
மாமா ஜி : யாரு ஜி இது இந்த கிழி கிழிக்கறான்?
ஆமா ஜி : இவரை தெரியாது? இவர் தான் ஜி.பி.முத்து
ஆடிட்டர் ஜி : இடியட் நான் நம்ம கட்சி முத்துவுக்கு போன் போட சொன்னா கண்டவனுக்கும் ஏன் யா போடற
மாமா ஜி : சாரி ஜி , முத்து இப்போ ஊரில் இல்ல பஞ்சாப் போயிருக்கார். அங்க நம்ம ஜியோ டவர் எல்லாம் அடிச்சு நொறுக்கறதால சிக்னல் கிடைக்காது. என்ன விஷயம் சொல்லுங்க ஜி
ஆடிட்டர் ஜி : நம்ம அடுத்த திட்டம் கமல், அழகிரி கூட்டணி ஏற்பாடு பண்றோம் அதுக்கு ரஜினியை வாய்ஸ் கொடுக்க சொல்றோம்
கமந்த் சோமன்: அதுக்கு கமல் ஒத்துக்கணுமே ஜி
ஆடிட்டர் ஜி :கமல் நம்மவா ஜி எப்படி ஒதுக்க மாட்டார்
கமந்த் சோமன்: நம்மவா வா இருந்தாலும் அவர் நாத்திகம் பேசிண்டுல இருக்கார்
ஆடிட்டர் ஜி : என்ன ஓய் நீங்க, அவர் நாத்திகம் பேசினாலும் ரத்தத்தில் ஊறுனது நம்ம கொள்கை தான். இப்போ பெண்கள் பாதுகாப்பு பத்தி ஒரு பேட்டி கொடுத்திருக்கர் பார்த்தேளா ? நீங்க சொல்லுங்க பெண்களுக்கு ரேப் நடக்க கூடத்துனா அவா என்ன செய்யணும் ?
கமந்த் சோமன்: இது என்னனா கேள்வி? பெண்கள் எதுவுமே செய்ய கூடாது, கண்டவா இருக்க இடத்துக்கு வேலைக்கு போறேன், சினிமா போறேன்னு போறதால தான் தப்பு நடக்கறது
ஆடிட்டர் ஜி : பார்த்தேளா, இதே தான் கமலும் சொல்றார். பெண்கள் அவா பாட்டுக்கு மனசு சுத்தமா இருந்தா எந்த பிரச்னையும் இல்லன்றரர்.
கமந்த் சோமன்: ஆனா நம்ம கருத்துக்கு எதிரா தானே எப்பவும் பேசறார்
ஆடிட்டர் ஜி : என்னைக்காவது மோடி ஜி செஞ்சது தப்புனு வெளிப்படையா சொல்லிருக்காரா? சொல்லுங்கோ
கமந்த் சோமன்: எங்க தப்பு நடந்தாலும் நான் கேட்பேன்னு சொல்றாரே
ஆடிட்டர் ஜி : அதெல்லாம் பெட்டி கேட்கறதுக்கு சிக்னல் ஓய், நீங்க நம்ம பசங்ககிட்ட சொல்லி கமல் கிஸ் அடிச்சிட்டார் அதுக்கு வீடியோ ஆதாரம் இருக்குனு ஒரு ட்வீட் போட சொல்றேன், நீங்க வழக்கம் போல shocking if trueனு RT பண்ணுங்க மத்தத நான் பார்த்துக்கறேன்
கமந்த் சோமன்: எது கிஸ்ஸா? குவிஸ் வேணும்னா பண்ணலாம் கிஸ் எல்லா வேண்டாம் ஜி. தவிர காதல் நாயகன் இதுக்கெல்லாம் பயப்பட மாட்டார் ஆமா பார்க்கரையானு எனக்கே கொடுத்திருவர்
ஆடிட்டர் ஜி : அப்போ என்ன தான் பண்ண சொல்றீங்க ஜி ?
கமந்த் சோமன்: வேணும்னா அவர் கூட நம்மவா ஒருத்தர் இருக்கார், ரிட்டையர்டு ஆபிசர் அவர் கிட்ட சொல்லி இது தான் வெற்றி கூட்டணி அழகிரி செலவு செய்ய ரெடியா இருக்கார்னு நம்ப வைக்கிறேன். நீங்க நம்ம பத்திரிகையில் சர்வே ஒன்னு ரெடி பண்ணுங்க இத வச்சு கமல் ஜிய ரெடி பண்ணிடுவோம்
ஆடிட்டர் ஜி : ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா?
மாமா ஜி : ரஜினி எதுக்கு கொடுக்கணும்? அவரை தேர்தல் சமயம் மாலன் கூட இமையத்துக்கு அனுப்பிருவோம். மயில் சாமி, சின்னி ஜெயந்த் யாரையாவது விட்டு பேச சொல்லி வாட்சப்ல பரப்பிடுவோம்
ஆடிட்டர் ஜி : சூப்பர் ஐடியா ஐ லைக் இட்
மாமா ஜி : சரி ஜி நான் அப்போ வேலைய பார்க்கறேன் வரேன் ஜி
ஆமா ஜி :கொஞ்சம் தண்ணி கொடுங்க ஜி
கமந்த் சோமன்: போகும் போது வாட்ச்மன் கிட்ட வாங்கி குடுச்சுக்கோங்க ஜி