வசந்தி அக்காவும், அவர் கணவர், ஸ்டான்லி ராஜனும், 1996ம் ஆண்டு, எண் 4, விவி காலனி முதல் தெரு, ஆதம்பாக்கம், சென்னை 88 என்ற முகவரியில் வசித்து வந்தனர். ஏற்கனவே சொல்லியது போல, அக்கா அரசு ஊழியர். அக்காவின் கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக சொல்லிக் கொண்டார். ஆனால் அது போல எங்கேயும் வேலை பார்த்தது கிடையாது என்று அந்த வட்டாரத்தில் விசாரித்ததில் தெரிகிறது.
(1996ல் நம்ப வசந்தி அக்கா)
அக்காவுக்கு அந்த வயதிலேயே, பெரிய்ய்ய்யயய தொழில் அதிபர் ஆக வேண்டும் என்ற ஆசை உண்டு. அதனால் என்ன செய்கிறார், சீட்டு கம்பேனி துவக்குகிறார். அந்த ஏரியாவில் குடியிருந்த வர்களிடம், மாதச் சீட்டு, ஏலச் சீட்டு நடத்துகிறார். இது தவிரவும், அந்தப் பகுதியில் ஓரளவு பணம் வைத்திருந்தவர்களிடம், தனது பைனான்ஸ் பிசினசில் முதலீடு செய்தால், ஒரு வருடத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும் சொன்னதை நம்பி, பல பேர் முதலீடு செய்தனர். ஏறக்குறைய 60 லட்ச ரூபாய் வசூல் செய்து விட்டு, குடியிருந்த வீட்டுக்கு வாடகை கூட கொடுக்காமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்து விட்டு கம்பி நீட்டியதாக அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கூறினார்கள்.
பணத்தை முதலீடு செய்ய வலியுறுத்தி பேசுகையில், அக்கா மிக மிக குழைவாகப் பேசுவார் என்றும், அந்தக் குழைவை நம்பியே, பல பேர் பணத்தை முதலீடு செய்து ஏமாந்ததாகவும் கூறுகிறார்கள்.
2006ல் இருட்டுக் கடை அல்வாக் காரர் (சார் நம்ப ஆற்காடு வீராச்சாமி சார் இது. நெறைய பேர் பின்னூட்டத்துல கேட்டு இருக்கீங்க) மூலமாக, எப்படியாவது எம்எல்ஏ ஆகி விடலாம், ஆகி விட்டால், நமது தொழில் அதிபர் கனவு நிறைவேறும் என்று முயற்சி செய்கிறார். ஆனால் இறுதி நேரத்தில் இவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப் படாமல் போய் விட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.
ஆனாலும், இருட்டுக் கடைக்காரருடனான நெருக்கம், ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து நீடித்தது. இருட்டுக் கடைக்காரரை ஏதாவது பதவி வாங்கிக் கொடுங்கள், என்று தொடர்ந்து நச்சரிக்கிறார். இருட்டுக் காரர், வணிக வரித்துறையிலேயே, நல்ல வசூல் செய்யக் கூடிய இடமாக வாங்கித் தருகிறேன் என்று கூறியதை ஏற்க மறுக்கிறார் அக்கா. சரி என்று, தளபதியிடம் சொல்லி, அக்காவை சிறுபான்மையினர் குழுவின் உறுப்பினராக நியமிக்கிறார் ஆற்காடு. அப்போது, தனது அரசுப் பணியை ராஜினாமா செய்யும் அக்கா, எப்படியாவது தொழில் அதிபர் ஆக வேண்டும் என்று முனைப்புடன் இறங்குகிறார்.
2006ல், இருட்டுக் கடைக்காரர் மற்றும், தளபதியுடனான நெருக்கத்தை அக்கா வளர்த்துக் கொள்கிறார். தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்கிறார். இவரது கணவர், ஸ்டான்லி அருமையான யோசனை என்று கூறுகிறார். யோசனையெல்லாம் நன்றாக இருந்தாலும், முதலீடு வேண்டுமல்லவா ? என்ன செய்வது என்று யோசித்து, வெட்டுவதற்கு ஆடுகளைத் தேடுகிறார்கள். வரதராஜன், கருணாநிதி, ஆப்ரகாம் என்று மூன்று ஆடுகள் சிக்குகின்றன. இந்த ஆடுகளுக்கு மஞ்சள் தண்ணீர் எங்கு தெளித்தார்கள் தெரியுமா ? ரயில் நிலையத்தில்.
அக்கா, இந்த மூன்று ஆடுகளையும், திடீரென்று போன் பண்ணி ரயில் நிலையத்துக்கு வாருங்கள் என்று சொல்லுவார். அங்கே சென்றால், ஸ்டாலினோ, இருட்டுக் கடைக்காரரோ வெளியூருக்கு செல்வதற்காக வருவார்கள். அங்கே நடைமேடையில் கூடியிருக்கும் அல்லக்கைகளோடு அல்லக்கையாக நிற்கும் அக்கா, ஆற்காட்டைப் பார்த்தவுடன் புன்னகைப்பார். ஆற்காடு உடனே அக்காவை அருகில் அழைத்து பேசுவார். இவ்வாறு, ஆற்காடும், தளபதியும் அக்காவிடம் நெருக்கமாக பேசுவதை கண்ட ஆடுகள், மஞ்சள் தண்ணீர் தெளித்த ஆடுகள் தலையாட்டுவதைப் போலவே, வேக வேகமாக தலையாட்டின.
சென்னை மேற்கு மாம்பலத்தில், ஆரிய கவுடா சாலையில், 13ம் நம்பர் கட்டிடத்தில், ஒரு சுபநாளில், ஸ்டான்வின் கம்யூனிக்கேஷன்ஸ், ஸ்டான்வின் பார்மசூட்டிக்கல்ஸ், ஸ்டான்வின் பயோடெக்னாலஜிஸ் என்று மூன்று நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன.
இந்த மூன்று நிறுவனங்களிலும், ஸ்டான்லி ராஜன், அக்கா வசந்தி, வசந்தியின் தம்பி கணேசன், வரதராஜன், கருணாநிதி மற்றும் ஆப்ரகாம் ஆகிய மூவரும் இயக்குநர்கள்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து தொழில் தொடங்கிய முதல் வாரத்திலேயே, மாமா ஸ்டான்லி, (தப்பா நினைக்காதீங்க. அக்காவின் கணவர் என்ற அர்த்தத்தில் தான் மாமா) அந்த மூன்று ஆடுகளிடமும் சென்று, நமது கம்பேனி இயக்குநர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். இயக்குநர்களுக்கென்று ஒரு சொந்த வீடு இருந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால் உங்கள் அனைவருக்கும் ஒரு சொந்த வீடு வாங்கலாம் என்று யோசனை கூறுகிறார்.
பேராசை யாரை விட்டது ? ஏற்கனவே சொந்த வீட்டில் குடியிருந்து ஆடுகளுக்கு, இன்னொரு வீடு என்றால் கசக்கவா செய்யும் ? மூன்று ஆடுகளும் சரி சரி என்று தலையை ஆட்டுகின்றன. ஆடுகள் தலையாட்டுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த மாமா ஆடுகளிடம், கம்பேனி இப்போதுதான் துவக்கியிருக்கிறோம், உடனடியாக கம்பெனியில் பணம் இல்லை, இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் அரசிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஆர்டர் வரப்போகிறது, உடனடியாக வீடு வாங்க வேண்டும் என்பதால், முதலில் உங்களிடம் இருக்கும் பணத்தையும், உங்களின் வீட்டுப் பத்திரத்தையும் கொடுங்கள். வங்கியில் கடன் வாங்கி, வீட்டை வாங்கி விடலாம். பிறகு, மாதத் தவணைகளை கம்பேனியே செலுத்திக் கொள்ளும். ஆர்டர்கள் கிடைத்த பிறகு மொத்தக் கடனையும் உடனே திருப்பிச் செலுத்தலாம் என்று மாமா கூறுகிறார். ஆடுகள் உடனே, ஆளுக்கு ஐந்து லட்ச ரூபாயையும், தங்கள் வீட்டுப் பத்திரங்களையும் மாமாவிடம் கொடுக்கின்றன.
வீட்டுக் கடனுக்கான விண்ணப்பங்களை நிரப்பி, ஒரு வாரம் கழித்து ஒரு நாள் இரவு மாமா ஆடுகளை அழைக்கிறார். என்னவோ ஏதோ என்று ஆடுகள் பதறிப் போய் சென்றவுடன், மாமா ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார். என்னவென்றால், அவர்களின் வீட்டுப் பத்திரங்களை வங்கியில் தொலைத்து விட்டார்கள் என்பதுதான் அது. அதிர்ந்து போன ஆடுகள் என்ன செய்வது என்று கேட்கும் போது, மாமா, ஒன்றும் கவலைப் படாதீர்கள், பத்திரப் பதிவு அலுவலகத்தில் இருட்டுக் கடைக்காரர் போன் செய்து சொல்லி விட்டார், நீங்கள் வந்து கையெழுத்துப் போட்டால், உடனே பத்திரம் தயாராகி விடும் என்று கூறுகிறார். ஆடுகளும் தலையாட்டிக் கொண்டே, அவர் பின்னே செல்கின்றன.
பத்திரப் பதிவு அலுவலகத்தில் வைத்தே, போலிப் பத்திரம் தயார் செய்யப் படுகிறது. பத்திரம் தயார் செய்த இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் ஒரு வீட்டுக் கடன் விண்ணப்பத்தோடு ஆடுகளை மாமா அணுகுகிறார். இப்போது ஆடுகளுக்கு, சந்தேகம் கிளம்புகிறது. இரண்டு ஆடுகள் கையெழுத்து போட மறுக்கின்றன.
அக்கா போன் செய்து ஆடுகளிடம் பேசியும், கையெழுத்துப் போட மறுக்கின்றன ஆடுகள். இரண்டு நாட்கள் கழித்து, ஒரு நாள் மேற்கு மாம்பலத்தில் தனது அறையில் ஒரு ஆடு உட்கார்ந்திருக்கிறது. அப்போது அலுவலகத்தில், பல பேர், அக்காவையும், மாமாவையும் பார்ப்பதற்காக கரை வேட்டிகளோடு வந்திருக்கின்றனர். அந்த நேரத்தில் திடீரென்று அக்கா ஆட்டின் அறைக்குள்ளே நுழைகிறார். நுழைந்தவுடன், தனது புடவை முந்தானையை நழுவ விட்டு, தனது ஜாக்கெட்டின் இரண்டு கொக்கிகளை அவிழ்க்கிறார். ஆடு பதறிப் போய் எழுந்த போது, அக்கா இந்த விண்ணப்பத்தில் உடனடியாக கையெழுத்துப் போடாவிட்டால், வெளியே போய் என்னை பலாத்காரம் செய்ய முயற்ச்சித்தேன் என்று மிரட்டுகிறார். சாதாரணமாக எடுத்துக் கொள்ள இது என்ன பலகாரமா ? பலாத்காரம் அய்யா, பலாத்காரம். வெளியே கட்சிக்காரர்கள் வேறு நிறைய பேர் இருந்ததால், ஆடு வேறு வழியில்லாமல் கையெழுத்துப் போடுகிறது. இதே போல மற்ற இரண்டு ஆடுகளிடமும் அக்கா கையெழுத்து வாங்குகிறார்.
சரி இப்போது சவுக்கு வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். அக்காவும் மாமாவும் வாங்குவது வீட்டுக் கடன். வீட்டுக் கடன், கட்டுமான கம்பெனியின் பெயரிலோ, அல்லது வீட்டு ஓனர் பெயரிலோதானே வங்கியால் வழங்கப் படும், இதனால், அக்காவுக்கும் மாமாவுக்கும் என்ன லாபம், என்ற கேள்வி எழும். இங்கேதான் சவுக்கு வாசகர்கள், அக்காவையும், மாமாவையும் குறைத்து மதிப்பிட்டு விடுகிறீர்கள்.
அக்காவும், மாமாவும், வீடு வாங்க வாங்கிய கடன் எல்லாம், ஸ்ருதிலயா கன்ஷ்டரக்ஷன்ஸ் என்று கட்டுமான நிறுவனம் சார்பில், சாலிகிராமத்தில் கட்டப் படும் ஒரு வீட்டுக்காக. இந்த நிறுவனத்தின் முதலாளி, முரளி என்பவர்.
எழும்பூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் என்ற வங்கியில், நம்ப ஸ்டான்லி மாமா, நான்தான் ஸ்ருதிலயா கன்ஷ்டரக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதலாளி என்று ஒரு வங்கிக் கணக்கை தொடங்குகிறார். வீட்டுக் கடனுக்காக, வங்கிகள் காசோலை அளித்ததும், நேரடியாக இந்த வங்கிக் கணக்கில் செக்கை போட்டு, மொத்தப் பணத்தையும் எடுத்து அக்காவும், மாமாவும், ஏப்பம் விட்டார்கள் என்பதுதான் செய்தி.
இதெல்லாம் சவுக்குக்கும், சவுக்கு வாசகர்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். 2007லியே, அக்கா மீதும் மாமா மீதும் சென்னை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்ததே…. ? குமுதம் ரிப்போர்ட்டரில் இது பற்றி விரிவாக செய்தி வந்துள்ளதே…. ? இதற்குப் பிறகும், அக்காவுக்கு, கட்சியில் பல மூத்த தலைவர்களையெல்லாம் மீறி ராஜ்ய சபா எம்பி கொடுத்தன் பின்னணி என்ன ? பதவி வழங்கிய தமிழ்நாட்டின் மூத்த முதலைதான் விளக்க வேண்டும்.
ராஜ்ய சபா எம்பி ஆனதும், அக்காவுக்கு சுக்கிர திசைதான். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு ? வேறு என்ன நக்குற திசை..
எம்பி ஆனதும் மாமா ஸ்டான்லி மூலமாக மீண்டும் வசூல் வேட்டையை தொடங்குகிறார் அக்கா. பல பேரிடம் இந்த வேலையை முடித்துத் தருகிறேன், அந்த வேலையை முடித்துத் தருகிறேன் என்று, 5 கோடிக்கும் மேல் வசூல் செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு செய்த வசூலை விட, இப்போது செய்த வசூல் அக்காவுக்கு பெரிய நெருக்கடியை கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், எம்.பியிடம் வந்து பணம் கொடுப்பவன் நிச்சயம் பணக்காரனாகத் தான் இருப்பான். சொன்ன வேலையை செய்து முடிக்காவிட்டால், சும்மா விடுவானா என்ன ?
அதனால் கடும் நெருக்கடி கொடுத்ததன் பின்னணியில்தான், மாமா ஸ்டான்லி உடல் நலக் குறைவு காரணமாக அகால மரணமடைந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. மாமாவின் மறைவுக்குப் பிறகு, பணம் கேட்டு வந்தவர்களிடமெல்லாம் அக்கா, என்னிடமா பணம் கொடுத்தீர்கள்.., என் வீட்டுக்காரரிடமல்லவா கொடுத்தீர்கள்… அவர்தான் இறந்து விட்டாரே….. நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது அக்காவுக்கு அல்லக்கையாக, சிபிஐ மற்றும் மத்திய குற்றப் பிரிவு வழக்குகளில் குற்றவாளியாக உள்ள, சுரேஷ் என்ற நபர் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சுரேஷ் பெயரில் ஒரு வெள்ளை நிற டாடா சபாரி வண்டி உள்ளதாகவும், அந்த வண்டியும் போலி ஆவணங்களை கொடுத்து வாங்கப் பட்டதாகவும், இந்த வாகனத்தைத் தான் அக்கா இப்போது பயன் படுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அக்காவும் மாமாவும், சேர்ந்து பொதுத் துறை வங்கிகளில் மோசடி செய்த மொத்தத் தொகை என்ன தெரியுமா ? 13 கோடி.
சரி. இப்போது அந்த ஆடுகளின் நிலைமை என்ன ? ஒரு ஆட்டின் மேல், சென்னை மாநகர காவல்துறை வழக்கு மேல் வழக்காகப் போட்டு, ஆட்டின் விதைப் பைகளை எடுத்து விட்டதால், அந்த ஆடு வாயைத் திறப்பதில்லை. மற்ற இரண்டு ஆடுகளும், எங்கிருக்கிறதென்றே தெரியவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளாக, அந்த ஆடுகள் எங்கே போனது என்றே தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.
இது தவிர அக்கா தனது கல்வித் தகுதியாக, பிஏ, பிஎட், எம்.ஏ (ஆங்கில இலக்கியம்) மற்றும் பி.எல் படித்துள்ளதாக போட்டிருக்கிறார்கள். இந்த பட்டங்கள் வாங்கியதிலேயே சந்தேகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அக்காவின் பிஎல் பட்டம் குறித்து பல சந்தேகங்களை எழுப்புகிறார்கள். சவுக்குக்கும் அந்த சந்தேகங்கள் உள்ளது. இந்தச் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, அக்கா தான் வாங்கிய அனைத்துப் பட்டங்களின் நகல்களையும் சவுக்குக்கு அனுப்பி வைத்தால் சரிபார்த்தபின் திருப்பி அனுப்பப் படும். பட்டங்கள் சரியாக இருந்தால், அக்கா ஒரு அறிவார்ந்த அறிஞர் என்று ஒப்புக் கொள்ளப் படும்.
சவுக்கு முதன் முதலாக, அக்காவைப் பற்றிய தகவல்களை ஆதாரங்களோடு அம்பலப் படுத்தியது, 26.10.2010 அன்று. அன்று காலை முதல் நள்ளிரவு வரை என்டிடிவி இந்து தொலைக் காட்சி, அக்காவின் வண்டவாளங்களை அம்பலப் படுத்தியது. நேற்று, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு, அக்காவைப் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. மற்ற வழக்குகளிலெல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தும், கண்ணாயிரம், அமைதி காப்பதேன்…. ?
ஒரு முறை கண்ணாயிரம் பற்றிய பதிவை படித்த ஒரு பத்திரிக்கையாளர், சவுக்கிடம் கடுமையாக கோபம் கொண்டார். இன்று வரை அவர் சவுக்கிடம் அவர் பேசுவதில்லை. என்னவென்றால், கண்ணாயிரம் ஒரு நேர்மையான அதிகாரியாம் … ? ரொம்ப ஒழுக்கமானவராம்…. (அப்புறம் எதுக்கு ராமசுந்தரம் நடத்துற ரேவ் பார்ட்டிக்கு போறார் ?) ரொம்ப துணிச்சலானவராம்… ?
சரி… இவர் துணிச்சலை பார்ப்போம். அக்கா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள போலி ஆவணங்கள் வேறு எங்கேயும் இல்லை. கண்ணாயிரத்தின் அலுவலகத்தின் பின்னே உள்ள நீதிமன்ற வளாகத்தில்தான் இருக்கிறது. அந்த ஆவணங்களை சரிபார்க்க 10 நிமிடங்கள் கூட ஆகாது…
உண்மையிலேயே, கொஞ்சமாவது துணிவிருந்தால், மக்களின் வரிப்பணத்தில் நாம் ஊதியம் வாங்குகிறோமே என்ற உணர்விருந்தால், இந்திய அரசியல் அமைப்பின் பால் உறுதியாகவும் உண்மையாகவும் நடப்பேன் என்று கண்ணாயிரம் எடுத்த உறுதி மொழி ஞாபகம் இருந்தால், அக்காவின் முன் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கட்டும்.
இது கண்ணாயிரத்துக்கு சவுக்கு விடும் சவால்.