நுகர்பொருள் வாணிப கழகம் மூடு விழாவை நோக்கி போய் கொண்டு இருக்கிறது. காவிர் டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை சாகுபடிகளில் விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு நெல் கொள்முதல் செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட நுகர்பொருள் வாணிப கழகம், இன்று அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளையால், பல கோடி நட்டத்தில் செயல்படுகிறது.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு விலை விண்ணை தொட்டதால், வெளிசந்தையில் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று 1.5.2007 முதல் ரேசன் கடைகளில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில்,ரவை, கோதுமை மாவும் மைதா ஆகியவைகளை மொத்தமாக கொள்முதல் செய்து மலிவு விலையில் விற்க முடிவு செய்யப்பட்டது.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா ஓரு கிலோ ரூ32ம், பாமாயில் ஓரு லிட்டர் ரூ30க்கும், ரவை ரூ17க்கும், மைதா ரூ18க்கும், கோதுமை மாவு ரூ11க்கும் ரேசன் கடைகளில் குடும்ப கார்டுகளுக்கு ஓரு கிலோ வீதம் கொடுக்கப்படுகிறது.
தொடக்கத்தில் கூடுதல் சுமை என்ற புலம்பிய நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், மாத சம்பளத்திற்கு அதிகமாக, கிம்பளம் கிடைப்பதால் அதிகாரிகள் மகழ்ச்சியாக இருக்கிறார்கள்..
நுகர்பொருள் வாணிப கழகம், 2009-10 ஆம் ஆண்டில் ஐ.சி.ஐ.சிஐ வங்கியில் ரூ900 கோடியும், கார்ப்பரேசன் வங்கியில் ரூ500 கோடியும், அலகாபாத் வங்கியில் ரூ400 கோடி ஆக மொத்தம் ரூ1800 கோடி கடன் வாங்கி உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்டாத காரணத்தால். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
துவரம் பருப்பு 9.1.08 முதல் 10.3.08 வரை 17,500 டன், ரூ67.68 கோடிக்கு கொள்முதல் செய்தது. அதாவது ஓரு கிலோ ரூ40 க்கு கொள்முதல் செய்து, ரூ32க்கு ரேசன் கடைகளில் விற்பனை செய்த காரணத்தால், நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சராசரி கிலோவுக்கு ரூ8 நட்டம் ஏற்பட்டது.
இதே போல் 12.5.08 முதல் 31.03.09 வரை 93,735 டன் துவரம்பருப்பை ரூ397 கோடிக்கு கொள்முதல் செய்தது. அதாவது சராசரி ஒரு கிலோ கொள்முதல் ரூ50, ஆனால் ரேசன் கடைகளில் ரூ32க்கு விற்பனை செய்த காரணத்தால், கிலோவுக்கு ரூ18 நட்டம், 93,735 கிலோவுக்கு கணக்கீட்டு பாருங்கள் தலையை சுற்றுகிறதா..
இன்னும் பாருங்கள்…9.4..09 முதல் 25.3.10 வரை 86,590 டன் துவரம் பருப்பை ரூ603 கோடிக்கு கொள்முதல் செய்தது. அதாவது சராசரி கொள்முதல் விலை ரூ65, ஆனால் ரேசன் கடைகளில் ரூ32க்கு விற்பனை செய்ததன் மூலம் நிகர நட்டம் கிலோவுக்கு ரூ33 என்றால் கணக்கீட்டு பாருங்கள்.. நட்டம் ரூ283 கோடி…அம்மாடியோவ்…
12.4.10 முதல் 3.9.10 வரை 29000டன், 178.73 கோடிக்கு கொள்முதல் செய்தார்கள். கொள்முதல் விலை சராசரி கிலோ ரூ63.. ஆனால் விற்ற விலை கிலோ ரூ32.. இதன் மூலம் நட்டம் ரூ88 கோடி…
துவரம் பருப்பு கொள்முதலில் மட்டும் நட்டம் ஏற்படவில்லை இதோ பாருங்கள்.. உளுத்தம் பருப்பு..21.2.08 முதல் 14.9.2010 வரை சுமார் ஓரு இலட்சத்து 37,000 டன் கொள்முதல் செய்யப்பட்டது. சராசரி கொள்முதல் செய்யப்பட்ட உளுத்தம் பருப்பின் ஒரு கிலோ விலை ரூ60-65 வரை. இதனால் ரூ 300 கோடி வரை நட்டம் ஏற்பட்டுள்ளது.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகிய பருப்பு வகைகளை வெளி சந்தையில் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து, மலிவு விலையில் ரேசன் கடைகளில் விற்பனைக்கு அனுப்பப்பட்டதால், இதனால் ஏற்படும் நட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால் இது வரை நிதித்துறையிலிருந்து, நட்டத்தை தொகை விடுவிக்கப்படவில்லை. இதனால் நுகர்பொருள் வாணிப கழகம், வங்கிகளில் கடன் வாங்கி நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு வி.ஐ.பிக்கள், அமைச்சர்கள், வெளி நாட்டு பிரமுகர்கள் ஆகியவர்களுக்கு உணவு வழங்கிய வகையில் மட்டும் செலவான தொகை ரூ3.35 கோடி… இவர்கள் தனியார் விடுதிகளில் தங்குவதற்காக ஓதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ1.25 கோடி ஆனால் செலவானது ரூ1.48 கோடி.. இப்படி பல வகையில் ஏற்பட்ட செலவால் நுகர்பொருள் வாணிப கழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தை மாதம் அறுவடை தொடங்கும் அதற்கான நெல் கொள்முதல் செய்யவதற்கு கோணி சப்ளை செய்தவர்களுக்கு பில் செட்டில் செய்ய முடியவில்லை அதிகாரிகள் புலம்பல் கோட்டை வரை கேட்கிறது…
இந்நிலையில் நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகம் தன்னுடைய உறவினர்கள் சிலருக்கு பணியில் சேர்க்க, அதை பயன்படுத்தி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தங்களுடை உறவினர்களை பணியில் சேர்த்துள்ளார்கள். புதிய பணியில் சேர்க்கப்பட்டவர்களுக்கு, வேலையே இல்லை. வெட்டி சம்பளம் மாதம் ரூ30000 என சுமார் 20 பேர் வாங்கி வருகிறார். இப்படி பல வகைகளிலும் நிர்வாக சீர்கேடை நோக்கி நுகர்பொருள் வாணிபகழகம் பீடு நடை போடுகிறது.
நுகர்பொருள் வாணிப கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று சில நேர்மையான அதிகாரிகள் முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்.. முதல்வர் பார்வை இந்த பக்கம் திரும்புமா..
நன்றி. நம்தினமதி நாளேடு.