காவிரி ஆற்றிலிருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பெங்களூரில் அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்..
இதை தொடர்ந்து பெங்களூரில் இருக்கும் அவரை 28ம் தேதி காலை 11.10 மணிக்கு தொடபுக்கொண்டோம்…
தமிழகத்திலிருந்து வரும் தினமதி பத்திரிகைக்கு பேட்டி வேண்டும் என்று கூறியது, சிரித்துக்கொண்டே நான் சொல்வதை மட்டும் போடுங்க.. சொல்லாதை சேர்த்து போட்டு, மாநில அரசுகளுக்கிடையே மோதல் உண்டாக்கிவிடாதீர்கள் என்ற பேட்டியை தொடங்கினார்..
கேள்வி:காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமே..?
பதில்: காவிரி நடுவர் மன்ற உத்தரவுபடி தண்ணீர் திறந்துவிடும் பிரச்சனை இப்போது எழவில்லை. இது தொடர்பாக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்துள்ளோம், அது தற்போது விசாரணையில் உள்ளது.
கேள்வி: தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக அரசு கோரிக்கை விடுத்ததா..?
பதில் : தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. காவிரி பாசனப் பகுதிகளில் விவசாயத்துக்கு பெங்களூர், மைசூர், மண்டியா போன்ற நகரங்கள், ஊரகப்பகுதி குடிநீர்த் தேவைக்கு மட்டுமே நீர் போதுமானதாக உள்ளது. இதனால் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்க சாத்தியமில்லை.
கேள்வி : உண்மையில் காவிரியில் தண்ணீர் இல்லை, அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவு அறிவிக்கப்படுகிறதா..?
பதில் : காநாடகத்தில் காவிரி பாசனப்பகுதியில் உள்ள அணைக்கட்டுகளின் நீர் இருப்பு, அணைக்கு நீர் வரத்து , கர்நாடகத்தின் நீர் தேவை ஆகியவை குறித்து எதிர்கட்சி தலைவர்களுடன் நீண்ட விவாதம் நடந்தது, அதில் எடுத்த முடிவைதான் உங்களிடம் கூறுகிறேன்.
கேள்வி : காவிரி போதுமான தண்ணீர் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
பதில் : சிரித்துக் கொண்டே.. அடுத்து கேள்விக்கு போகலாமே என்றார்..
கேள்வி: அணைகட்டுகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் அப்படிதானே ?
பதில் : கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124.80 அடி, இன்று இரவுக்கு அணை நிரம்பிவிடும், அணையின் பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.
கேள்வி : தமிழகத்தை தேவைக்கு அதிகமாக இருந்தால்தான், கர்நாடகவுக்கு நெய்வேலியிருந்து மின்சாரம் தருவோம் என்ற தமிழக அரசு பிரச்சனை எழுப்பினால் என்னவாகும்..?
பதில் : நல்ல கேள்வி..தமிழக அரசு அப்படி செய்யாது என்ற நம்பிக்கை இருக்கும்.. அதே நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சனையில் வெளிப்படையாக சில விசயங்களை பகிர்ந்து கொள்ள முடியாது, கர்நாடக மக்களை சிலர் தூண்டிவிட்டு விடுவார்கள்.. அதனால்தான் நாங்கள் வெளிப்படையாக சொல்லாமல், தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிடுவோம்.. எங்களுக்கு அண்டை மாநிலமான தமிழகத்தின் நட்பு எப்போதும் தேவை, மிக்க நன்றி என்று முடித்தார்..
நாமும் போனில் நன்றி தெரிவித்தோம்..
நன்றி நம்தினமதி நாளேடு