டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மீது பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இன்று காலை காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் மனு அனுப்பப் பட்டுள்ளது. அந்தப் புகாரில், மத துவேஷத்தைத் தூண்டி இரு சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்தி, இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டும் வகையிலும், ஒரு மதத்தை அவமானப் படுத்தும் வகையிலும், டிஎன்ஏ என்ற செய்தித்தாளில் சுப்ரமணியன் சுவாமி எழுதிய கட்டுரைக்காக அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு புகார் மனுவை அளித்துள்ளது. இந்தப் புகாரை பிரத்யேகமாக சவுக்கு வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது.