தமிழகம் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான தேர்தலைக் கண்டுவருகிறது. திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒன்று தான் ஆட்சிக்கு வரும் என்பதே தமிழகத்தின் நிலையாக இருந்தது. இரண்டு கட்சிகளும் இருக்கின்றன. கட்டமைப்போடு உள்ளன. ஆனால் நாம் இதுவரை நம்பியது கட்சி என்பதைக் காட்டிலும் தலைமையைத் தான் என்று நிரூபித்துள்ளது இந்தத் தேர்தல்.
அண்ணாதுரை , எம்ஜிஆர் இருவரும் மறைந்தபிறகும் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. ஆனால் கட்சி பலத்த செல்வாக்குடன் இருந்தது. யாரேனும் ஒருவர் உறுதியான தலைமை ஏற்பார்கள் மற்றவர்கள் தலைமையுடன் நிற்பார்கள் என்கிற எண்ணம் மக்களிடையே இருந்தது.
ஜெயலலிதா அவர்கள் இறந்தபிறகு கூவாத்தூர் காட்சிகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை. கருணாநிதி இறந்தபிறகு ஸ்டாலின் நேரடியாக தலைமையேற்று கையில் வேல் பிடித்து பிராச்சாரம் செய்வதையும் மக்கள் மறுப்பதற்கில்லை.
இதனால் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள்.
எந்தக் கட்சியிடம் தமிழகத்தை ஒப்படைப்பது என்கிற குழப்பம் மக்களிடையே நிலவுகிறது.
ஏனெனில் இரு கட்சிகளுமே தங்களின் ஆட்சியின் போது செய்த ஊழல்களுக்கு குறைவில்லை.
அன்பு வாசகர்கள் சேகர் ரெட்டி டைரி குறித்த கட்டுரைகளை சவுக்கில் படித்திருப்பீர்கள். ஒரு கட்சியாவது சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்காமல் இருந்திருக்கிறதா ?
ஒரு மணல் கொள்ளையன், தமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்து, கோடிகளை குவிக்கிறான். அவனிடம் ஒரு அரசியல் கட்சி பாக்கியில்லாமல் அத்துனை பேரும் பிச்சை எடுக்கிறார்கள். சவுக்கு வெளியிட்ட சேகர் ரெட்டி டைரி, ஒரு பெரும் பனிப்பாறையின் சிறு முனை மட்டுமே. எஸ்.ஆர்.எஸ் மைனிங் என்ற ஒரு நிறுவனத்தில் எடுக்கப்பட்ட டைரிதானே இது ? சேகர் ரெட்டி நடத்தும் இதர நிறுவனங்களில் இருக்கும் டைரிகளை எடுத்தால் என்னவெல்லாம் இருக்குமோ ? யார் அறிவார் ?
இன்று தமிழகத்தை சூழ்ந்திருக்கக் கூடிய மிகப் பெரிய ஆபத்து எது ? ஆர்.எஸ்.எஸ் / பாஜக என்ற கொடூர விஷப் பாம்பு. இந்த விஷப் பாம்பை தமிழகத்தில் வளர்த்து விட்டதில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே சம பங்கு இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ், பிஜேபி என்ற பாசிச சக்திகளுக்கு, திமுக மட்டுமே மாற்று என்று மார்தட்டிக் கொள்கின்றனர். பலரும், பிஜேபி வரக்கூடாது, வேறு என்னதான் வழி என்று கேட்கின்றனர் ?
வேறு வழியே இல்லையா என்ன ?
இருக்கிறது ..நமக்குத் தேவை சுயசிந்தனை என்பதை எடுத்துச் சொல்லும் கட்டுரையே இது.
எதிர்க்கட்சியாக இருக்கையிலேயே, திமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகன் சேகர் ரெட்டியிடம் 50 லட்சம் லஞ்சம் பெற்றிருக்கிறார். பொன்முடியும் பணம் பெற்றிருக்கிறார். பல திமுக எம்.எல்.ஏக்கள் பணம் பெற்றுள்ளனர்.
துரைமுருகன், தன் மருமகள் பெயரில் ஒரு கட்டுமான நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கி, Class I காண்டிராக்டர் அந்தஸ்து பெற்று, வேலூரில் ஸ்மார்ட் சிட்டி டெண்டரை எடுத்து நடத்தி வருகிறார்.
இவர்களுக்கு அதிமுகவின் ஊழலைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது ?
அண்ணா சொன்ன “ஆட்டுக்குத் தாடியைப் போல, “நாட்டுக்குக் கவர்னர்” என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 20 ஜூலை 2019 அன்று பேசினார். இணைப்பு.
22 டிசம்பர் 2020 அன்று ஆளுனரை சந்தித்து அதிமுக அமைச்சரவை மீது ஊழல் புகார் அளித்த முக.ஸ்டாலின், “ தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதால் ஆளுநரிடம் 97 பக்க புகார் பட்டியல் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.” என்று பேட்டியளித்தார். இணைப்பு
இது நாளை திமுகவுக்கு நடக்காதா ? ஆளுனருக்கு ஊழல் புகார் விசாரணையை மாநில அரசின் கீழ் இயங்கும் ஒரு துறைக்கு உத்தரவிட அதிகாரம் உள்ளது என்பதை திமுக எதிர்க்க வேண்டுமா வேண்டாமா ? நாளை திமுக ஆட்சியமைத்தால், திமுக அமைச்சர்களை மிரட்ட மத்திய அரசு ஆளுனரை பயன்படுத்தாதா ? அப்போது திமுக எந்த முகத்தை வைத்துக் கொண்டு அந்நடவடிக்கையை எதிர்க்கும் ?
இந்த அளவுக்கா ஸ்டாலினுக்கு அறிவு குறைந்து விட்டது ? வாயை திறந்தால் நான் கலைஞரின் மகன் என்று பெருமை பேசுகிறாரே ஸ்டாலின்….. !!! கலைஞர் இதை செய்திருப்பாரா ?
பிரசாந்த் கிஷோர் என்ற பீஹார் பார்பனனுக்கு எதற்காக வெள்ளைப் பணத்தில் 220 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் ? (உறுதிசெய்யப்பட்ட தொகை)
தங்களை இடதுசாரிகள் என்று அழைத்துக் கொள்ளும் சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் மீது நான் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டேன். அவர்கள், திராவிட கட்சிகளிடம் தட்டேந்தி நிற்கிறார்கள் என்றே பார்க்கிறேன்.
கம்யூனிஸ்டுகள் திமுகவோடு கூட்டணி வைத்ததை பற்றி, ஜெயகாந்தன் இவ்வாறு கூறுகிறார்.
“ஒரு குறைந்தபட்ச அடிப்படை திட்டத்தின் கீழ் ஒன்றுபட முடியாத திமுக, தங்களது உச்சபட்ச லட்சியமான ‘திராவிட நாடு’ என்ற அபத்தத்தை முன்னிறுத்தி அன்றைய ஜனநாயக அரசியல் கடமைகளில் இருந்து நழுவி ஓடிப்போய்விட்ட திமுக, இந்த பதினைந்தாண்டு காலத்தில் நாகரீக ஜனநாயக அரசியலுக்கு புறம்பான எல்லா வ்ழிகளையும் கையாண்டு, எல்லா பேரங்களிலும் ஈடுபட்டு, எல்லாவிதமான சமூக கோழைத்தனங்களுக்கும் ஆட்பட்டு, தனது ‘உயிர் லட்சியத்தையும்’ உதறிய பிறகு, தனது தலைமையில் எந்தவித குறைந்தபட்ச திட்டமும் இல்லாமல், காங்கிரஸை அடித்து விட்டு, கோட்டைக்குள் நுழைந்து விட இது சந்தர்ப்பம் என்று, நிற்கிற பொழுது, இந்த கம்யூனிஸ்டுகள், இந்த கூட்டணியில் எப்படி சேரலாம் என்று யோசிக்க யோசிக்க ஒரு தேசத்தின் அழிந்துவரும் பூர்ஷ்வா ஜனநாயக அரசியலில் கம்யூனிஸ்டுகளும் கலந்து எல்லோருக்கும் முன்னால் கரைந்து போகிற அல்லது தன்னை கெட்டுப் போகிற அந்த “புதிய நோய்” எனக்கு புரியாத புதிராக, விடியாத இருளாக குழப்பிற்று”.
கலைஞர் கருணாநிதியை ஏன் இன்றும் பேசுகிறோம் கொண்டாடுகிறோம் என்றால், எதிரிகளின் திறமையை மதித்தவர் அவர். தன்னை எதிர்த்தவர்களிடம் திறமை இருக்குமேயானால், அவர்களோடு நட்பு கொள்ள விழைபவர்.
ஜெயகாந்தன் உடல் நலிவுற்றபோது, கலைஞர், அவரை அப்போல்லோ மருத்துவமனையில் சேர்த்து, அரசு செலவில் சிகிச்சை அளித்தார். பின்னோர் நாளில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பாராட்டு விழாவில், ஜெயகாந்தன், “கலைஞர் தமிழகத்துக்கு கிடைத்த வாராது வந்த மாமணி” என்று மேடையில் பேசினார். இதை ஜெயகாந்தனின் நண்பர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கலைஞர் ஜெயகாந்தனுக்கு தனிப்பட்ட முறையில் செய்த உதவிகள் சிலவற்றை நான் வெளியே சொல்லக் கூடாது.
ஆனால் 1974ல் இதே ஜெயகாந்தன், கலைஞரைப் பற்றி என்ன எழுதினார் தெரியுமா ?
“திரு கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். திரு அண்ணாதுரைக்கும், கருணாநிதிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எல்லா அரசியல்வாதிகளும் பேசலானார்கள். திமுக என்கிற ஒரு சமூக சீரழிவு இயக்கத்தை, சேர்ந்தவர்களுக்கிடையே, உள்ள குணபேதங்கள், திறமை வித்தியாசங்கள் ஆகியவை குறித்து, நான் ஆராய்ச்சி செய்ததில்லை. ஏனெனில் எந்த மனிதனும், முழுக்க முழுக்க கெட்டவனும் இல்லை; நல்லவனும் இல்லை. அரசியல்வாதிகள் கூட முழுக்க முழுக்க அரசியல்வாதிகளாக இறுதிவரை இருந்துவிடுவதில்லை. எனவே தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மனிதரும் எப்படிப்பட்டவர் என்று அறிகிற அணுகல் முறையே தனிப்பட்ட பழக்கத்தினால்தான்…….
ஆனால் திரு அண்ணாத்துரையின் மரணத்துக்கு பிறகு தமிழகத்தில் வெற்றிகரமாகச் சித்தரித்துவிடப்பட்ட “அண்ணா மாயைக்கு” முன்னால் திரு கருணாநிதி மிகவும் குறைந்தவர் போல் தோற்றமளித்தார். இந்த அண்ணா மாயைக்கு முதல் பொறுப்பும் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியவர் திரு கருணாநிதிதான்.
பொய்யாக ஒருவரை புகழ்ந்து, பொருந்தாத உயரத்தில் ஏற்றுவதன் மூலம் ஒருவன் தனக்குத்தானே எவ்வளவு தீமை செய்து கொள்கிறான் என்பதற்கு திரு கருணாநிதி சரியான சாட்சி. பிறரை விரட்டுவதற்காக, தான் வளர்த்த ஒரு பூதம் பிறரால் வெல்லப்பட்டு தன்னையே நோக்கி திருப்பிவிடப்படுகிற பொழுது, அந்த பூதத்தை உருவாக்கியவன் அதை ஏவவும் முடியாமல், அதற்கு இரையாகவும் முடியாமல், அல்லற்படுகிற நிலையை திரு கருணாநிதி முதல்வர் பதவிக்கு போன நாள்தொட்டே, சந்திக்க நேர்ந்தது.
மோசமான முன்னவனை, ஓர் உதாரண புருஷனாக கொண்டுவிட்டால், பின்னால் வருகிறவனுக்கு பெரும் சோதனையும் வீழ்ச்சியும் ஏற்படும்.”
கழகங்களின் ஆதிக்கம் முடிவுக்கு வரவேண்டும் என்பதில் நானும் உடன்படுகிறேன். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ உயிரோடு இருந்தால் இதை சொல்ல மாட்டேன். ஆனால் இன்று அவர்கள் இருவரும் உயிரோடு இல்லை.
கூட்டணி கட்சிகளை நெருக்கடிக்கு உள்ளாக்கி, பெரிய அண்ணன் அந்தஸ்த்தில் பிச்சை போடுவது போல அவர்களுக்கு இடம் ஒதுக்கியதா இல்லையா திமுக ? அவர்களின் இத்தகைய நடவடிக்கை, தமிழகத்தின் நலனுக்காகவா அல்லது அவர்களின் சொந்த நலனுக்காகவா ?
திமுக முழுப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பது போன்ற ஒரு தீங்கு தமிழகத்துக்கு நேரக் கூடாது என்றே விரும்புகிறேன்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியிடம் இக்கட்டுரைக்காக பேசியபோது, அவர் இவ்வாறு கூறினார்.
“இன்றைய தமிழகத்திற்கு ஊழலை அறிமுகப்படுத்தி வைத்தது தி.மு.க. தான் என்றால் அது மிகையில்லை. அதே போன்று அரசு நடைமுறைகளை எந்த அளவிற்கு கெடுக்க முடியுமோ அந்த அளவிற்கு பாழ்படுத்தியது தி.மு.க. சுயநல அரசியல் என்பதை “ராஜதந்திரம்”, ” சாணக்கியம்” எனகூறியதும்தி.மு.கதான்.’ என்றார். அவர் சொல்வதற்கு பின்புலமாக மிகப்பெரிய ஊழல் வரலாறைக் கொண்டிருக்கிறது திமுக.
திமுக ஆட்சியில் காவல்துறையினரின் கைகள்கட்டப்பட்டிருந்ததை நாடே அறியும். திமுகவினர் நிலஅபகரிப்பில் ஈடுபட்டதையும், அப்பாவி பொதுமக்கள் பார்த்து செய்வதறியாது விழித்ததையும் மறக்க முடியுமா?.
அமைச்சர் பதவியில் இருந்தவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 2ஜிஊழல்வழக்கில்ஆ.ராசாமற்றும் கனிமொழி கைது செய்யப்பட்டதும் இப்போதுதான்.
மதுரையில் தினகரன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதும் திமுக ஆட்சியில்தான். இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொண்டு இலங்கைத் தமிழர்களை அழித்ததும் இந்த திமுகதான்.” என்று கூறினார் அந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி.
சரி. அதிமுகவும் மோசம். திமுகவும் மோசம்.
யாருக்குத்தான் வாக்களிப்பது ?
முதல் Priority 20 பிஜேபி போட்டியிடும் தொகுதிகள். இவை அனைவற்றிலும் பிஜேபி வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் எனக்கு துளியும் மாற்றுக் கருத்தில்லை.
பிஜேபியை எதிர்த்து வெற்றி பெறக் கூடிய சாத்தியம் உள்ள ஒரே கூட்டணி திமுக கூட்டணிதான். திருவண்ணாமலை மற்றும், திருக்கோவிலூர் தொகுதிகளை எடுத்துக் கொள்வோம். அங்கே போட்டியிடும் பிஜேபி வேட்பாளர்களைவீழ்த்த வேண்டும்.
இத்தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் எ.வ.வேலு மற்றும் பொன்முடி, முறையே.
சைதை நீதிமன்றத்தின் பின்னால் உள்ள அரசு நிலத்தை ஆக்ரமித்து, மாமியார் பெயரில் பதிவு செய்தவர்தான் பொன்முடி.
எ.வ.வேலு, முக.ஸ்டாலின் வீட்டுக்கு உப்பு, புளி மிளகாய் வரை அத்தனை செலவுகளையும் பார்த்துக் கொள்பவர். இங்கே பிஜேபியை வீழ்த்துவது எப்படி ? இது போன்ற தொகுதிகளில் டிடிவி தினகரனின் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
உதயநிதி ஸ்டாலின் ?
இவன் ஒரு மிகப் பெரும் தீயசக்தி என்பதை நான் உணர்கிறேன். இத்தொகுதியில் அமுமுக வேட்பாளர், எல். ராஜேந்திரனுக்கு வாக்களியுங்கள்.
Born with a silver spoon என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். This IDIOT was born with a golden spoon.
திமுக கூட்டணியில் உள்ள, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் (வன்னி அரசு தவிர்த்து), மனிதநேய மக்கள் கட்சி ஆகிய வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களியுங்கள்.
காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு மிக மிக அவசியம். காங்கிரஸ் கட்சி இல்லாமல் இருந்திருந்தால், இந்தியா இன்று ஒரு இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும். அரசியல் சாசனத்துக்கு பதில், மனுதர்மம் அரசியல் சாசனமாக அறிவிக்கப்பட்டிருக்கும்.
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்.
திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் அமுமுகவுக்கு வாக்களியுங்கள். அது திமுக தலைமையாகவே இருக்கட்டுமே!!!
மாற்று சக்தியாக, கமலஹாசனையோ, சீமானையோ ஒரு போதும் நினையாதீர். அவர்கள் தமிழகத்தின் விஷ வித்துகள். அவர்கள் தீய சக்திகள். இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தை அவர்கள் தொட்டால், தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்கும்.
சரி. எல்லாவற்றையும் பற்றி பேசுகிறாயே….
எடப்பாடி பழனிச்சாமி ?
அங்கே, டிடிவி கூட்டணியில் இருக்கும் அமுமுக வேட்பாளர் பூக்கடை சேகருக்கு வாக்களியுங்கள்.
எடப்பாடி பழனிச்சாமி வீழ்த்தப்பட வேண்டியவர்.
3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, செய்நன்றி அறிதல் என்ற ஒரு இலக்கியத்தை படைத்ததுதான் தமிழினம்.
குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.
பூக்கடை சேகருக்கு வாக்களித்து, எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துங்கள்.
முதல்வர் பதவிக்காக சசிகலாவின் காலை தொட்டு வணங்கி, கும்பிட்டவர்தானே எடப்பாடி பழனிச்சாமி ?
சசிகலாவால் நான் முதல்வர் பதவிக்கு வரவில்லை என்று சொல்ல நா கூச வேண்டாமா ?
பூக்கடை சேகருக்கு வாக்களித்து, எடப்பாடி பழனிச்சாமியையே வீழ்த்துங்கள்.
பட்டுக்கோட்டையில் ஏடிபி என்று அழைக்கப்படும் தமிழாசிரியர் ஏ.டி.பன்னீர்செல்வம் அய்யாவை நான் சந்தித்து நேர்காணல் நடத்தியபோது அவர் சொல்லியது….
“அய்யா, நீங்களும் நானும் சேர்த்தால் இரண்டு மூளைகள். சமூகம் பலகோடி மூளைகளை கொண்டது. அது தன்னை தகவமைத்துக் கொள்ளும்” என்றார்.
அதை நான் நம்புகிறேன். 3000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தறிவு பெற்ற கீழடி வாரிசுகள் நாம். நம் இனத்தை காப்போம்.
இக்கட்டுரை, இன்று தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் பற்றிய எனது கருத்து. மனதில் பட்டதை சொல்லியிருக்கிறேன். இதில் எவ்விதமான உள்நோக்கமும் இல்லை.
உங்களுக்கு பாரதியாரின் வரிகளைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
“ஊருக்குநல்லதுசொல்வேன்எனக்குஉண்மைதெரிந்ததுசொல்வேன்”
அ.த.பன்னீர்செல்வம் அய்யவுடனான எனது நேர்காணலின் இணைப்பு
https://www.youtube.com/watch?v=vRpEw2d_dAY
இறுதியாக ஒரே ஒரு வார்த்தை.
தவறாமல் வாக்களியுங்கள்.
நான் இன்றுதான் இந்த பதிவை பார்க்கிறேன். என்னுடைய சிந்தனையும் உங்களின் சிந்தனையும் ஒத்து போகிறது. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் அமமுக வுக்கு வாக்களிக்க சொல்கிறீர்கள். நான் தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி. எங்கள் தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு. இவன் ஒரு பொம்பலபொருக்கி. இவனுக்கு எப்படி நான் வாக்களிப்பது? எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் திமுக கட்சி. நோட்டா, சீமான், கமல் இதெல்லாம் waste. நான் யாருக்கு ஓட்டு போட்டு இருக்கலாம்?