தமிழகத்தை மதவாதம் என்கிற பெரும் ஆபத்து சூழ்கிறது என்பதை கடந்த இரண்டாண்டுகளாகவே நான் உணர்ந்திருக்கிறேன். இது எனது தூக்கத்தை கெடுத்தது. எனது மண், மதவாத கைக்குள் போவதை என்னால் சகிக்க இயலவில்லை என்பது மட்டுமல்ல. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
அதை ஒற்றை ஆளாய்எப்படி தடுப்பது என்ற மலைப்பு இருந்தது..
ஆனால் வாளாவிருப்பது ஒரு Option இல்லை என்பதை மட்டும் உணர்ந்தேன்.
கடந்த நான்கு மாதங்களாக, வெறும் 4 மணி நேரம் மட்டுமே உறங்கினேன். எனது உறக்கம், ஆட்டோவிலோ, காரிலோ பயணிக்கையில் மட்டுமே.
என்னைப் போலவே கவலை கொண்ட பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் உறங்கவில்லை. இந்த நான்கு மாதங்களும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளோடு மட்டுமல்லாமல் காவலர் முதல் டிஜிபி வரை உள்ள பல்வேறு அதிகாரிகளோடு பேசினேன். பலரை நேரில் சென்று சந்தித்தேன். பல்வேறு ஊர்களுக்கு பயணித்தேன்.
இவை அனைத்தும் நான் பிறந்த மண், பாசிச சக்திகளின் பிடிக்குள் சிக்கி விடக் கூடாது என்பதற்காக மட்டுமே. நான் ஒரு தனி நபராக, இதை செய்து விட முடியுமா என்று யோசித்தபோது, முயற்சி எடுக்கலாமே…
ஏன் முயற்சி எடுக்கக் கூடாது என்றே தோன்றியது. களத்தில் இறங்கினேன். யு ட்யூப் சேனல்களில் என் மனதில் பட்டதை பேசினேன். சமூக வலைத்தளங்களை முழுமையாக பயன்படுத்தினேன். பேசினேன். எழுதினேன்.
இனி நான் செய்வதற்கு எதுவுமில்லை. இதில் எனக்கு புதிதாக பல நண்பர்கள் கிடைத்தார்கள். பல புதிய நபர்களை சந்தித்தேன்.
இரு வாரங்களுக்கு முன்னால் ஒரு தேர்தல் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சி சார்பாக போட்டியிடும் ஒரு வேட்பாளர் என் அருகே அமர்ந்திருந்தார். வலதுசாரிகளை நான் எப்படி விமர்சிக்கிறேன் என்பது ஊருக்கே தெரியும். அதுவும் குறிப்பாக அர்ஜுன் சம்பத்தையெல்லாம் தாறுமாறாக விமர்சித்திருக்கிறேன்.
ஆனால் அந்த இந்து மக்கள் கட்சி வேட்பாளர், “சார் நீங்க சவுக்கு சங்கர்தானே. உங்க பேட்டியை எல்லாம் பாக்குறேன். கரெக்டா பேசறீங்க சார்” என்று சொன்னபோது எனக்கு ஒரு உண்மை புரிந்தது.
மக்கள் மக்களே. அதுவும் தமிழ் மக்கள் மாக்கள் அல்ல
இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் என் மீது கோபம் கொள்ளாமல் வாஞ்சையோடு பேசுகிறார் என்றால், எனக்கு வேறு என்ன வேண்டும் ?
என்னால் முடிந்ததை செய்து விட்டேன்.
நான் காலையில் வாக்களிக்க சென்றபோது, மக்கள் மகிழ்ச்சியோடு வாக்களித்ததை பார்க்கையில் பார்க்க எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
மீண்டும் சொல்கிறேன்.
தமிழினம் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தறிவு பெற்ற ஒரு இனம்.
அது தன்னை தகவமைத்துக் கொள்ளும். இப்பேராசை பிடித்த அரசியல்வாதிகளுக்கு அது தகுந்த பாடத்தை புகட்டி, தன்னை தற்காத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.
என் கடமை முடிந்ததாக உணர்கிறேன்.
எனக்கு ஒத்துழைப்பு அளித்து என்னோடு உழைத்த அத்துனை அதிகாரிகளுக்கும், நண்பர்களுக்கும் தமிழினம் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
குறள் 632:
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.
இப்படி ஒரு அரசு அமையும் என நம்புகிறேன்.
அன்புடன்
சவுக்கு சங்கர்.
மீண்டும் சந்திப்போம்.
அதுவரை
அண்ணா மாமல்லபுரம் பக்கம் கடம்பாடி கிராமம் முன்னாள் தலைவர் மற்றும் குமார் அண்ணா தயவுசெய்து உங்களை சந்திக்க வேண்டும் கைபேசி எண் 9500108687