கர்ணன் படத்தின் பின்புலம் 1995, 1996, 1997 என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கதை 1996ல் தொடங்கி 1999ல் உயர்நீதிமன்றத்தை அடைந்து 2007ல் விடிவைக் கண்டது.
கர்ணன் படத்தின் opening scene கிராமத்தில் நிற்காத பேருந்தை அடித்து உடைப்பதாக இருந்தது. பேருந்துகள் எங்கு நிற்க வேண்டும் என்பதை அதற்கு பர்மிட் வழங்கும்போதே முடிவு செய்வார்கள். அடித்து உதைத்து பேருந்துகளை நிறுத்த முடியாது. அவர்கள் மீது குண்டர் சட்டம் தான் பாயும். பொடியன்குளம் சம்பவம் நடந்த அதே நேரத்தில் சிவந்திப்பட்டியிலும் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது. அங்கு பேருந்துகள் நிறுத்ததாதற்குக் காரணம் பட்டியலின மக்களை பழிவாங்குதல் என்ற ஒரே காரணம்தான். இதற்கு துணைபோனது அங்கிருந்த மாவட்ட எஸ்.பியும்தான். அங்கிருந்த பட்டியலின மக்கள் பிரச்சினையை எப்படி எதிர்கொண்டு வெற்றிபெற்றார்கள் என்பதைப் பார்க்கலாமா?
சிவந்திப்பட்டிக்கு ஒரு டிக்கெட்
ரோசா பார்க் கறுப்பினத்தைச் சேர்ந்த உழைப்பாளி. அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் வசித்தவர். 60 வருடங்களுக்கு முன்னர் தாம் வசித்த மாண்ட்கமரி என்ற ஊரில் ஒரு நாள் காலை வேலைக்குப் போவதற்காக பேருந்தில் ஏறினார். காலியாக உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்து பயணச்சீட்டு வாங்கினார். அப்பேருந்தில் ஏறிய வெள்ளையர் ஒருவர் அவரை இருக்கையிலிருந்து எழுப்பினார். மறுப்பு தெரிவித்த ரோசா பார்க் பேருந்து ஊழியர்களிடம் நியாயம் பேசினார். பயணச்சீட்டு; வாங்கிய பிறகும் ஏன் தனக்கு இருக்கை கிடையாது? வெள்ளைப் பயணிகளுக்கு மட்டும்தான் முதலுரிமையா? என்று நியாயம்; கேட்டார். ஆனால் பேருந்து ஊழியர் சட்டம் என்றால் சட்டம்தான். வெள்ளைப் பயணிகளுக்கு மட்டும்தான் இருக்கை உரிமை என்று சொல்லிவிட்டார். ஆனால் ரோசா பார்க் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அமெரிக்க அரசியல் சட்டத்தில் எல்லோருக்கும் சம உரிமை இருக்கிறது. நிற அடிப்படையில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று வாதாடினார். அவருடன் வாக்குவாதததில் ஈடுபட பேருந்து ஊழியரும், வெள்ளைப் பயணியும் தயாரில்லை. காவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் ரோசா பார்க்கைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நிறவெறிக்கு அடிமையாகாத ரோசா பார்க் இப்பிரச்னையைக் கைவிடத் தயாராக இல்லை. மாண்ட்கமரி நகரம் முழுக்க கறுப்பின மக்களின் ஆதரவை நாடினார். கறுப்பின மக்கள் கொதித்தெழுந்தனர். அப்பட்டமான நிறவெறியைக் கடைபிடிக்கும் நிர்வாகத்தை எதிர்த்து இனி பேருந்துகளில் ஏறுவதில்லை என்று சபதமெடுத்தனர். நடைப்பயணமாகவே வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். பின்னாளில் கறுப்பின மக்களின் உரிமைக்குப் பாடுபட்ட மார்டின் லூதர் கிங் (அப்பொழுது அவர் ஒரு சுவிசேஷ ஊழியராக ஒரு தேவாலயத்தில் பணிபுரிந்தார்) இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். நாளுக்கு நாள் அவர்களது புறக்கணிப்பு வலுப்பெற்றது. ஓராண்டு பேருந்து புறக்கணிப்புக்குப் பிறகு பேருந்து நிர்வாகத்தின் வருவாய் குறைந்தது. அவர்களும் பணிந்து இறங்கி வந்தனர். பேருந்து பயணத்தில் நிறவெறியைக் கடைபிடிக்க மாட்டோம் என்று உறுதியளித்தனர். ரோசா பார்க் என்ற அந்த வீரப் பெண்மணி நடத்திய ‘மாண்ட்கமரி நடைப்பயணம்’ வரலாற்றில் பதிக்கப்பட்டது.
ரோசா பார்க்கின் கதை ஏன் இங்கு வந்தது? இங்குதான் நிறவெறி கிடையாதே என்று கேட்கலாம். ஆனால் இங்கு சாதிவெறி இருக்கிறதே! சமீபத்தில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சாதிவேற்றுமையும் நிறவெறிக்கு ஒத்த செயலே என்று சட்டம் இயற்ற முற்பட்டுள்ளனர்.
சிவந்திபட்டி திருநெல்வேலியிலிருந்து 13 கி.மீ தள்ளி உள்ள ஒரு கிராமம். தினசரி திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து சிவந்திபட்டிக்குச் செல்லும் பேருந்துகள் உண்டு. அங்கிருந்து தினசரி மக்கள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் விவசாயப் பொருட்களை பேருந்தில் கொண்டு சென்று திருநெல்வேலியில் விற்றுவிட்டு கிராமத்துக்குத் திரும்புவர். அதேபோல பாளையங்கோட்டையிலுள்ள கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் கிராமத்திலிருந்து மாணவர்கள் செல்வார்கள். சிவந்திபட்டி கிராமத்தில் நுழையும் பேருந்து முதலில் பஞ்சாயத்து போர்டு நிறுத்தத்தில்; நிற்கும். அடுத்த நிறுத்தம் அம்மன் கோவில், கடைசியாக அரிசி ஆலை நிறுத்தத்தில் நிற்கும். அங்கு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் நிரந்தரமாக பேருந்து நிறுத்தம் கொட்டகை கட்டப்பட்டது. கடைசி அரிசி ஆலை நிறுத்தத்தில் இறங்கித்தான் அங்குள்ள தலித் மக்கள் காலனிக்கும் பக்கத்திலுள்ள காமராஜ் நகருக்கும் செல்லவேண்டும்.
1996-ம் வருடம் சிவந்திபட்டி பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்டார். அதனையொட்டி ஊரில் ஆதிக்க சக்திகளைச் சேர்ந்த சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். ஊருக்குள் வரும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. பிறகு பேருந்து சேவை தொடர்ந்த போது, சிவந்திபட்டிக்கு வரும் பேருந்துகள் ஊரின் திருப்புமுனையான அரிசி ஆலை நிறுத்தத்துக்குச் செல்லாமல் ஊருக்குள்ளிருக்கும் காவல்நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டன. இந்தத் திடீர் மாற்றத்தால் தலித் மக்கள் தினசரி அரை கி.மீ முதல் 2 கி.மீ வரை ஊருக்குள் நடந்து வந்து பேருந்தில் செல்லும் நிலை ஏற்பட்டது. விவசாயிகள் தாங்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் சுமைகளை தலையில் சுமந்து நடந்து வந்து பேருந்தில் ஏறவேண்டிய நிலை ஏற்பட்டது. சாதி இந்துகள் தெருக்கள் வழியாக ஊருக்குள் வந்து சென்றதனால் அவர்களுக்குப் பல சிக்கல்களும் ஏற்பட்டன. பலமுறை அன்று இயங்கிய கட்டபொம்மன் போக்குவரத்து அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் மாற்றம் ஏற்படவில்லை. குறிப்பாக பேருந்து முனை மாற்றத்துக்கு காரணமும் கூறப்படவில்லை.
திருநெல்வேலியில் வழக்கறிஞராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்துவரும் ஆர்.கிருஷ்ணன் ஒரு பொதுநலன் கோரி தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நாங்கள் கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்துக்கும்(கேடிசி)இ காவல்துறையினருக்கும் நோட்டீஸ் அனுப்பினோம்.; எந்த விளக்கத்தையும் அளிக்க போக்குவரத்துக் கழகம் முன்வரவில்லை. வழக்கின் தீவிரத்தை உணர்ந்த நாங்கள் அது சம்பந்தமான கோப்புகளை பரிசீலித்த போது அதிலுள்ள சங்கதிகள் எம்மை திடுக்கிட வைத்தது. நெல்லை; மாவட்ட காவல் துறை ஆணையர், கேடிசி நிர்வாகத்துக்கு அனுப்பிய கடிதம் அக்கோப்பிலிருந்தது. அதன் சாராம்சம் இதுதான்.
அரிசி ஆலை திருப்பு முனையில் நிறுத்தினால் காலியான பேருந்துகளில் தலித் காலனி மக்களே ஏறி எல்லா இருக்கைகளிலும் அமர்ந்து விடுகின்றனர். அதனால் அங்கிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வரும்போது ‘ஊர்மக்கள்’ (ஆதிக்கசாதியினர்) உட்கார இருக்கைகள் இல்லாமல் போவதால் அவர்கள் நின்று கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் பேருந்தை ஊருக்குள்ளேயெ நிறுத்தும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்திய காவல் பணியைச் சேர்ந்த மாவட்ட அதிகாரியொருவர் மிக மோசமான சாதிப்பற்றுதலுடன் இது போல் நடந்து கொண்டதைக் காண நேரிட்டது.
இந்த நவீனத் தீண்டாமையை அனுமதிக்க மறுத்த நாங்கள், இரண்டு வாரங்களில் ஏற்கனவே இருந்த அரிசி ஆலை பஸ் நிறுத்தத்துக்குப் பேருந்துகள் திரும்பி வர உத்தரவிட்டோம். அவ்வுத்திரவின் ஒரு பகுதி :-
“உள்ளுர் மக்களுக்கு (அவர்களது கடமையை) கற்பிப்பது காவலர்களின் தலையாய கடமை. மக்கள் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடாமல் இருக்க விரிவான விளம்பரங்கள் அளிப்பதோடு கழகப் போக்குவரத்து பேருந்துகள் பழைய பாதையில் செல்வதற்கு தகுந்த பாதுகாப்பு கொடுப்பதற்கு இவ்வுத்திரவு நகல் கிடைத்த தேதியிலிருந்து இரு வார கால அவகாசம் அளிக்கப்படுகிறது.”
”சமூகத்தினருக்கு தங்களது போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை மறுக்கும் விதமாக எதிர் பிரமாண உறுதிமொழி மனு 10-வது பத்தியில் கூறப்பட்டுள்ள சங்கதிகள் அரசமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவில் உறுதியளிக்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரத்துக்கான உரிமைக்கு விரோதமானது”
(பார்க்க : ஆர்.கிருஷ்ணன் –எதிர்- தமிழ்நாடு அரசு மற்றும் இதரர்கள், நீதிப்பேராணை எண். 20298 / 1999, 13.3.2007 தேதியிட்டது)
குறிப்பு: மேற்கண்ட வழக்கில் மனுதாரர் தனது பிரமாண வாக்குமூலத்தில் 10வது பத்தியில் தலித்துகள் பேருந்து நிறுத்தத்தை மாற்றியதனால் 2 கி.மீட்டர் தூரம் தங்களது சுமையுடன் நடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
சந்துரூ நீ ஒரு அல்பம், மத்த சாதி அழுகிய அல்பம். இந்த பிரச்சனை இன்னும் ஒரு பஸ் விட்டால் சரி ஆகி விடும். அந்த உத்திரவு போடத நீ சமூக நீதி பேசு தூ. நான் ஒரு உண்மை சம்பவம் சொல்கிறேன். 30 வருடம் முன்னர் நடந்தது.தோகை மலை கிராமம் திருச்சி இருந்து 70 km. நீ சொல் ர ஒரு ஊறுகாய் மாமி அங்கே உள்ள PHS doctor வேலை போட்டார்கள். சமூக நீதி வேலைக்கு வந்த நாய்கள் எவனும் வேலைக்கு வந்ததே இல்லை. இந்த இளம் doctor வருவதை பார்த்து ஓடும் ஒரே பஸ் driver, condutor 1/2 மணி லேட் ஆனாலும் wait பண்ணி பஸ் எடுத்பார்கள். 2 மணி பஸ் மிஸ் பண்னால், 4 மணி பஸ் பிடித்து வீடு செல்ல 8 மணி ஆகி விடும். பல நாள் பஸ் நிரம்பி விடும். Condutor சொல்வார் அங்கே உட்காரதே doctor உட்காரும் இடம். ஒரு நாள் ஒரு முட்டாள் நானும் பணம் கொடுத்து தான் வரேன் நீ யார் ஒரு சீட் காலி வைக்க. அந்த சண்டையில் பஸ் ஓட வில்லை. உன்னை மாதிரி படித்த பொறுக்கிகள் துண்டி விடுவதால் மக்களுக்கு நல்லது கெட்டுது சொல்லாமல் கெட வைக்க கிர் கள். அதுக்கு ஆதிக்க சாதி என்ற சப்பை கட்டு. முதலில் நீ கத்து உங்க ஆட்கள் கத்து கொடு