அமெரிக்காவை சேர்ந்த ஒரு டிஜிட்டல் தடயவியல் ஆய்வு நிறுவனம், சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சனின் மொபைல் போன்கள் மற்றும், லேப்டாப்புகளில் 22 கோப்புகள் ஹேக் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளது. இந்த கோப்புகளின் அடிப்படையில்தான், 16 கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர், ஜாமீனே வழங்கப்படாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள்.
ஜனவரி 2018ல், மராட்டிய மாநிலம் பீமா-கோரேகான் வன்முறையை தொடர்ந்து, 22 சந்தேகத்துக்கு இடமான கோப்புகள் ஹேக்கிங் மூலமாக ரோனா வில்சனின் கணினியில் புகுத்தப்பட்டதை அமெரிக்க டிஜிட்டல் தடயவியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்தது.
15 நவம்பர் 2018க்கு பிறகு, தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ மற்றும், அதற்கு முன்னர் விசாரித்த பூனா காவல் துறை ஆகியவை, இந்த கோப்புகளை முக்கிய தடயங்களாக காண்பித்துள்ளன. இதன் அடிப்படையிலேயே, வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர், கடந்த 2 ஆண்டுகளாக ஜாமீன் வழங்கப்படாமல் சிறையில் உள்ளனர். இவர்களில் கவிஞர் வரவரராவ் மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டு வெளியே உள்ளார்.
இந்த போலியான கோப்புகள், ரோனா வில்சன் கணினியை பயன்படுத்திய ஒருவரோ, அல்லது அதை கையாண்ட ஒருவரோ உருவாக்கவில்லை. ஒரு மென்பொருளை உருவாக்கி, அதை ரோனா வில்சனின் கம்ப்யூட்டருக்குள் ஹேக்கர் ஒருவர் ஒரு மென்பொருளை பயன்படுத்தி அனுப்பியுள்ளார் என்பதே, அமெரிக்க டிஜிட்டல் தடயவியல் ஆராய்ச்சி நிறுவனமான ஆர்சீனல் கன்சல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. வில்சனின் வழக்கறிஞர்கள், நவம்பர் 2019ல் நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பின்னர், வில்சனின் கணினியின் மின் நகலை அமெரிக்காவின் ஆர்சீனல் கன்சல்டிங் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த புதிய புலனாய்வு கட்டுரை, பிப்ரவரி 2021ல் ஆர்சினல் கன்சல்டிங் நிறுவனம் வெளியிட்ட முதல் ஆதாரத்துக்கு பின்னர் வரும் தொடர் கட்டுரை. முதல் கட்டுரை, ரோனா வில்சனின் கணினியில், 10 கோப்புகள், குறிப்பாக, இவ்வழக்கில் தடயமாக என்.ஐ.ஏ நம்பும் 10 கோப்புகள் வெளியிலிருந்து நிறுவப்பட்டது என்பதும், அக்கணினி, தொடர்ந்து கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டது என்பதும் தெரிய வந்தது.
இரண்டாவது அறிக்கை ஆர்சீனல் கன்சல்டிங் நிறுவனத்தால் இது வரை வெளியிடப்படவில்லை. ஆனால், ஆர்ட்டிக்கிள்-14 அந்த அறிக்கையை பார்வையிட்டது. இந்த புதிய அறிக்கையில், திரு ரோனா வில்சன், அவர் கணினியில் இருந்த என்.ஐ.ஏ. மிகப் பெரிய ஆதாராமாக காட்டும் 24 கோப்புகளில் 22 கோப்புகள் முதல் கட்டுரையில் அடையாளம் காணப்பட்ட அதே ஹேக்கரால் உருவாக்கப்பட்டது.
24 கோப்புகளும், இந்திய மாவோயிஸ்ட் பார்ட்டியின் உறுப்பினர்களோடு, நிதி பரிமாற்றம், பெண் அமைப்புகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, மாவோயிஸ்ட் கட்சி சதை செய்யப்பட்ட அமைப்பு என்பதால், உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதில் உள்ள சிக்கல், காவல் துறையினர் / அரசு மாவோயிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கை மற்றும், சில மாவோயிஸ்ட் புகைப்படங்கள் ஆகியவை மட்டுமே என்.ஏ.அமைப்பினால் பெரிய ஆதாரங்களாக காட்டப்படுகின்றன.
என்.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் ஜெயா ராய் என்பவருக்கு, இது தொடர்பாக, குறிப்பாக ஆர்சீனல் கன்சல்டிங் நிறுவனம், என்.ஐ.ஏ போலியான ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு தொடுத்திருப்பதையும் குறிப்பிட்டு ஒரு நீண்ட மின்னஞ்சல் அனுப்பினோம். அவர் மின்னஞ்சலுக்கு பதிலலிக்கவில்லை. ஆனால், தொலைபேசியில் ஆர்ட்டிக்கிள்-14ஐ தொடர்பு கொண்ட அவர் “நாங்கள் தனியார் தடயவியல் ஆராய்ச்சி நிலையங்கள் தரும் அறிக்கைகளை பரிசீலிப்பதில்லை. மத்திய தடயவியல் ஆராய்ச்சி நிறுவனம், மண்டல தடயவியல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்கள் அளிக்கும் அறிக்கைகளை மட்டுமே நம்புவோம்” என்றார்.
சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 16 பேர் மீதான வழக்குகள் முடிய பல ஆண்டுகள் ஆகும் என்றாலும், அவர்களின் வழக்கறிஞர்களின் இப்போதைய ஒரே குறிக்கோள் அவர்களை ஜாமீனில் விடுவிப்பதே. உதாரணத்துக்கு ரோனா வில்சனின் வழக்கறிஞர்கள், இவ்வழக்கில் எந்த ஆதாரங்களை அடிப்படையிலேயே போலியானவை, போலியாக உருவாக்கப்பட்டவை என்பதை, ஆர்சீனல் நிறுவனம் வெளியிட உள்ள இரண்டாவது அறிக்கையின் அடிப்படையில் வாதிட உள்ளனர்.
16 குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான டிஜிட்டல் தடயங்கள்
16 பேர் மீதான குற்றம், 31 டிசம்பர் 2017 அன்று, எல்கார் பரிஷட் என்ற இடத்தில், 9000 பேர் வசித்து வருகிறான்றர்கள். இந்த இடம் பூனாவிலிருந்து 28 கிலோ மீட்டர் வடகிழக்கு பகுதியில் அமைந்தது. தலித்துகள் நிறைந்த பிரிட்டானிய ராணுவம், உயர்சாதியினர் மட்டுமே இருந்த பெஷாவா ராணுவத்தை வீழ்த்தியதன் 200வது ஆண்டு கொண்டாட்டம். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து வலதுசாரி இந்து உயர்சாதியினர் தலித்துகளின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கலவரத்தில் இறங்கினர்.
இவ்வழக்கை விசாரிக்கத் தொடங்கிய பூனா காவல் துறை, திடீரென்று அந்தர் பல்டி அடித்தது. இவ்வழக்கில் மாவோயிஸ்ட் கட்சியினரின் சதி இருக்கிறது என்றும், “நகர்ப்புர நகசல்கள்” இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று புதிய கதையை வெளியிட்டது. “நகர்ப்புர நக்சல்கள்” என்ற பதத்தின் பெயரால், மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் வலதுசாரியினரால் இந்த சமயத்தில்தான், “அர்பன் நக்சல்கள்” என்று அதிக அளவில் அழைக்கப்பட்டனர்.
காவல்துறை செயற்பாட்டாளர்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தி, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கைப்பற்றின. என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கையின்படி, ரோனா வில்சன் மற்றும், வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தியதற்கு காரணம், அவர்கள், பீகா கோரேகான் நிகழ்ச்சியை நடத்தியவர்களில் ஒருவரான சுதிர் டவாலே என்பரோடு தொடர்பில் இருந்தனர் என்பதுதான்.
ரோனா வில்சன், கவிஞர் வர வர ராவ் மற்றும், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு எதிராக என்.ஐ.ஏ சொல்லும் ஒரே ஆதாரம் இது மட்டுமே.
என்.ஐ.ஏ இவ்வழக்கின் புலனாய்வை மும்பை காவல்துறையிடமிருந்து கையகப்படுத்தியது. மராட்டிய மாநிலத்தில், பிஜேபியின் அரசு காலம் முடிந்து அடுத்த தேர்தலில் தேசிவாதகாங்கிரஸ்-காங்கிரஸ்-சிவசேனா அரசு பதவியேற்றதும் விஷயத்தின் சிக்கல் உணரப்பட்டது. என்.ஐ.ஏ ஒரு கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இக்குற்றப்பத்திரிக்கையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆங்கில மொழியியியல் பேராசிரியர் ஹன்யபு தராயில், பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி, கோவா மேலாண்மை நிறுவன பேராசிரியர் மற்றும் ஊடகவியலாளர் கவுதம் நவ்லாக்கா ஆகியோர், மாவோயிஸ்ட்டுகளோடு இணைந்து இந்திய அரசுக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்டனர் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் செய்தனர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், “நான் குற்றம் செய்ய்யவில்லை” என்பதை குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும்.
கணினி ஹேக்கரின் தகிடுத்தத்தம்
தற்போது வெளியாகியுள்ள புதிய அறிக்கை, கணினி மொழியில், “Process Tree” என்ற ஒரு கணினி அறிவியல் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. 10 கோப்புகளை, எப்படி மற்றொரு கணினிக்கு அனுப்பியுள்ளது என்பதற்கான தடயவியல் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
ஆர்சீனல் கன்சல்டிங் நிறுவனம், போலியான ஆவணங்களை தற்போது பீமா கோரேகான் வழக்கில் சிறையில் உள்ளவர்களின் கணினியில் வைக்கையில், சில கோப்புகளை பெயர் மாற்றம் (Rename) செய்துள்ளதும், அது பின்னர் திருத்தப்பட்டதற்குமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஆர்ட்டிக்கிள் 14டம் பேசிய, ஆர்சீனல் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸ்பென்சர் இது குறித்து “Mohila meeting jan.pdf” என்ற கோப்பை ரோனா வில்சனின் கணினியில் வைத்தபோது ஹேக்கர் செய்த தவறுதான் இரண்டாவது அறிக்கையில் முக்கிய கண்டுபிடிப்பாக உள்ளது. அறிக்கை ஒன்றில் ஹேக்கர் செய்த தவறுக்கான கூடுதல் ஆதாரங்கள் அறிக்கை இரண்டிலும் உண்டுதான் என்றாலும், “Mohila meeting jan.pdf”என்ற கோப்பு தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்கள் முக்கியமானவை.
என்.ஐ.ஏ குறிப்பிடும் மஹிலா மீட்டிங் என்ற கோப்பின்படி, 2 ஜனவரி 2018ல் மஹிலா (பெண்கள்) கூட்டத்தில் சுதா பரத்வாஜ், சூசன் ஆப்ரஹாம், ஷோமா சென் மற்றும், இதர செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளன. ஆர்சீனல் நிறுவனத்தின் தலைவர் ஸ்பென்சர், இந்த கோப்புக்கான Process Tree எப்படி ரோனா வில்சனின் கணினியில் வைக்கப்பட்டது என்பதை விளக்குகிறார். 22 கோப்புகள் NetWire என்ற கம்ப்யூட்டர் வைரஸ் மூலம் நிறுவப்பட்டுள்ளது என்றும், ஹேக்கர்கள் அடுத்தவர் கணினிக்குள் நிழைந்து கோப்புகளை நிறுவ இதை பயன்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
முதல் கண்டுபிடிப்பு, தொலைதூரத்தில் இருந்து ஒரு கோப்பின் பெயரை மாற்றி, புதிய கோப்பினை நுழைத்துள்ளது என்பதை குறிப்பிட்டார். கம்ப்யூட்டர் வைரஸ்களில் ஒரு வகையான ட்ரோஜான் ஹார்ஸ் என்ற மென்பொருள் பல்வேறு கோப்புகளை எப்படி ரோனா வில்சனின் கணினிக்குள் நுழைய உதவியது என்பதையும், இதை பயன்படுத்தி, என்.ஐ.ஏ எப்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது என்பதையும் மார்க் ஸ்பென்சர் விளக்குகிறார்.
ட்ரோஜான் ஹார்ஸ்.
ட்ரோஜான் ஹார்ஸ் என்பது தொலைதூரத்தில் இருந்து மின்னஞ்சல் அட்டாச்மெண்ட் மூலமாக உங்கள் கணினிக்குள்ளோ, செல்போனுக்குள்ளோ வைரஸை அனுப்புவது. NetWireஎன்ற மென்பொருள், பீமா கோரேகான் வன்முறை நடந்த 11 நாட்களுக்கு பிறகும், ரோனா வில்சனின் கணினிக்குள், 11 ஜனவரி 2018ல், மாலை 5:04க்கு தானாக உள்ளே நுழைந்தது என்பதை ஸ்பென்சர் விளக்கி கூறினார்.
டாஸ் மென்பொருள் மூலமாக ரோனா வில்சனின் கணினிக்குள் ஒரு வைரஸ் புகுத்தப்பட்டு, 5:10 முதல் 5:12 மணிக்குள்ளாக, மூன்று கோப்புகள் நிறுவப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, “mohila meeting jan.pdf”என்ற கோப்பு. கோப்புகளை ஸிப் செய்யவும், அன்ஸிப் செய்யவும் UnRARஎன்ற மென்பொருள், ஒரு கோப்பை Adobe.exe என்று பெயர் மாற்றம் செய்யவும் பயன்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இது போல ஒரு கோப்பை இன்னொருவர் கணினியில் வைரஸ் மூலம் அனுப்புகையில் செய்யக் கூடாத தவறை இந்த ஹேக்கர் செய்திருந்தார். ஒரு கோப்பை Rename செய்து அந்த தவறை திருத்தியிருந்தார் இதற்கான தடயம் அந்த கணினியில் பதிவாகியிருந்தது.
ஒரு ஹேக்கர் இது போல தவறை செய்வது மிக அரிது. அதனால் இந்த தவறு, எங்களின் புலனாய்வை மிகுந்த பரபரபானதாகவும், சவால் மிகுந்ததாகவும் ஆக்கியது என்றார் ஸ்பென்சர்.
NetWire என்ற அந்த ட்ரோஜான் ஹார்ஸ் மென்பொருள் ரோனா வில்சனின் கணினியில் தொடரந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பதற்கான ஆதாரத்தையும் ஸ்பென்சர் அளித்தார்.
நெல்சனின் கணினி, 14 ஜனவரி 2018 அன்று, நிறுத்தப்பட்டது (hibernation). இது, விண்டோஸ் மென்பொருளில் கடைசியாக பதிவாகியிருந்த தடயங்களில் இருந்து கிடைத்தது. அறிக்கை பகுதி ஒன்றில் குறிப்பிட்டிருந்த ஐபி முகவரியை இதிலும் காணலாம். ஆனால், மேலும் நாங்கள் பல்வேறு தடயங்களை கண்டுபிடித்துள்ளோம்” என்றார் ஸ்பென்சர்.
லேப்டாப் தவிர்த்து, ஹார்ட் டிஸ்க்குகள், பென் ட்ரைவுகள், ஆகியவற்றிலும் இருந்த கோப்புகள், ரோனா வில்சனை வசமாக சிக்க வைத்தது. ரோனா வில்சனின் கணினியோடு பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் என ஏராளமான தடய அறிவியல் பொருட்களை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
“நாங்கள் எங்களது முதல் அறிக்கையிலும், இரண்டாவது அறிக்கையிலும் சொல்லியுள்ளோம் என்பதற்காக ஒருவரும் எங்களது அறிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். எங்களது தடயவியல் சோதனை அறிக்கைகளை, உலகில் கணினி தடயவியல் தெரிந்த அனைவருமே உறுதி செய்வார்கள். இந்த கோப்புகளை, ரோனா வில்சனின் கணினியில் வைக்க முயன்ற ஹேக்கர் Tree Process முறையில் செய்த தவறு அவரை கையும் களவுமாக பிடிபட உதவியது” என்று சொல்லும் ஸ்பென்சர், நாங்கள் கண்டுபிடித்த இந்த ஆதாரங்கள், “காவல்துறை “ஆதாரங்கள்” என்று சொல்லும் கோப்புகள் எப்படி வெளியில் இருந்து மற்றொரு கணினிக்கு அனுப்பப்பட்டன” என்பதை தெள்ளத் தெளிவாக நிரூபிக்கின்றன” என்றார் மார்க் ஸ்பென்சர்.
மார்க் ஸ்பென்சர், 2013ம் ஆண்டு பாஸ்ட்டன் மராத்தான் பந்தய குண்டு வெடிப்பு சம்பவம், 2014 ம் ஆண்டில் ஒரு துருக்கி பத்திரிக்கையாளர் போலியாக ஒரு வழக்கில் சேர்க்கப்பட்ட சம்பவம் ஆகிய இரண்டிலும் பணியாற்றியவர். “ஒரு கணினி தொழில்நுட்பம் தெரிந்த ஒரு நபர், (பீமா கோரேகான்) இவ்வழக்கில் நாங்கள் கண்டுபிடித்தனவற்றை பார்த்து, “ஆஹா” என ஆச்சர்யப்படுவார்கள்” என்றார்.
டிஜிட்டல் தடயங்களுக்கு மேல் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன – என்.ஐ.ஏ
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களில் ஒருவரான ஆனந்த் டெல்டும்ப்டேவின் வழக்கறிஞர்கள், ஆர்சீனல் நிறுவனத்தின் முதல் அறிக்கையை நீதிமன்றத்தில், டெல்டும்ப்டே ஜாமீன் விவகாரத்தில், என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அப்போது, இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று என்.ஐ.ஏ தெரிவித்தது. ரோனா வில்சனின் கணினியிலிருந்து கைப்பற்ற கோப்புகளை மட்டும் ஆதாரமாக கொண்டு குற்றப்பத்திரிக்கைகளை நூற்றுக்கணக்கான பக்கங்களுக்கு பல குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ள என்.ஐ.ஏ அவர்களின் போலி வழக்கு அம்பலமானதற்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
10 பிப்ரவரி அன்று, மறைமுகமாக ஆர்சினல் நிறுவனத்தின் முதல் பாக அறிக்கையை புறந்தள்ளியது என்.ஐ.ஏ
“இந்திய நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடயவியல் நிறுவனங்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின்படிதான் என்.ஐ.ஏ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த ஆய்வு, பூனா மண்டல தடயவியல் ஆய்வகத்தால் செய்யப்பட்டது. அவர்கள் அறிக்கையின்படி எவ்விதமான வைரசோ / மால்வேரோ / ட்ரோஜான் ஹார்ஸோ அக்கணிகளில் இல்லை” என்றார் என்.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் ராய்.
அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அத்தனை அறிக்கைகளையும் நாங்கள் ஆய்வு செய்தோம். 13 அக்டோபர் 2018 அன்று, இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரி, “இவ்வழக்கில் சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் தடயங்களை இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சேதப்படுத்தி உள்ளார்களா” என்று கேட்ட கேள்விக்கு, “பதில் அளிக்கவில்லை” தடயவியல் ஆய்வகம். “சில தடயவியல் சோதனை கூடங்களில் இருந்து இன்னும் அறிக்கைகள் வரவேண்டி உள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்மிடம் கிடைத்த ஆதாரங்களை காண்பித்து கேட்டபோது, என்.ஐ.ஏ செய்தித் தொடர்பாளர் ராய், “என்.ஐ.ஏ வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்ட நிலையில், நான் கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது. நீதிமன்ற விவகாரங்களில் நான் கருத்து தெரிவிப்பது கிடையாது” என்றார். நாம் அரசு தடயவியல் சோதனை கூடங்களிடம் ஆர்சீனல் அறிக்கை குறித்து கருத்து கேட்டபோதும், டிஜிட்டல் ஆதாரங்கள் சேதப்படுத்தப்பட்டவையா என்ற கேள்விக்கு பதிலே சொல்லாதது குறித்தும் கேள்வியெழுப்பியபோது, அவர்கள் பதிலளிக்கவில்லை.
பூனா காவல் துறையும், பின்னர் என்.ஐ.ஏவும், நீதிமன்றங்களின் முன்னே பெரிதும் நம்பியிருந்த வாதம், அவர்களிடம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஏராளமான டிஜிட்டல் தடயங்கள் இருக்கின்றன என்பதே. மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பல வழக்கறிஞர்களும், இவை அத்தனையும் ஜோடிக்கப்பட்ட ஆதாரங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். ஒரு குறிப்பிட்ட தத்துவம் சார்ந்து அரசியல் முன்னெடுப்பவர்களை அரசு போலி ஆதாரங்களின் மூலம் குறிவைத்து தாக்குகிறது என்றனர்.
ரோனா வில்சனின் வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் மிகிர் தேசாய் பேசுகையில், “2014ம் ஆண்டுக்கு பின்னர்தான் இது போன்ற ஒரு முறை கையாளப்படுவதாக கருத வேண்டியதுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆண்டுக் கணக்கில் சிறையில் இருப்பதை உறுதி செய்வதற்காகவே” என்றார்.
நீதிமன்றத்தில், பூனா காவல் துறை மற்றும் என்.ஐ.ஏ சமர்ப்பித்த ஒரு ஆவணம், “இந்திய புரட்சிக்கான தந்திரோபாயங்கள்” (Strategy and Tactics of Indian Revolution) “இது ஒன்றும் ரகசியமான ஆவணம் அல்ல. இது கூகிளில் தேடினாலே கிடைக்கும்” என்றார் மிகிர் தேசாய். அவர் சொல்லியது போல கூகிளில் தேடியபோதே அது போன்ற ஒரு ஆவணம் கிடைத்தது.
என்.ஐ.ஏவின் இதர ஆவணங்கள் : எரிச்சலூட்டும் பாடல்கள். வரலாற்றை திரிக்கும் நூல்கள்.
16 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான முக்கிய ஆதாரமாக, டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும், நேரில் பார்த்த சாதனைகளை வைத்தும், எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில், ‘பிற்பட்ட மக்களிடம்’ ‘மாவோயிஸ்ட் சித்தாந்தங்களை பரப்ப முயன்றது” ஒரு குற்றம் என என்.ஐ.ஏ குற்றப் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
இந்த நடவடிக்கைகள், தேசத் துரோகம் என்றும், இந்தியாவை சீர்குலைக்க நடக்கும் சதி என்றும் என்.ஐ.ஏ கூறுகிறது.
“பாடல்கள் யாரை எரிச்சலூட்டுகின்றன” என்று கேட்கிறார் மூத்த வழக்கறிஞர் தேசாய். “சாதி எதிர்ப்பு மற்றும் புரட்சிகர ஆதரவு பாடல்கள் மராட்டிய மாநிலத்தின் கலாச்சாரத்தை சேர்ந்தவை. அன்னபாவு சாத்தே, சாஹீர் அமர் ஷேய்க், டி.என்.கவான்கர் மற்றும், நாட்டுப்புற பாடகர்கள் விலாச் கோக்ரே மற்றும், சம்பாஜி பகத் ஆகியோர் இம்மண்ணின் கலாச்சாரத்தின் ஒரு பகுதிகள். இவர்களின் புரட்சிகரமான கருத்துக்களாலும், கவிதைகளாலும், பாடல்களாலுமே, மராட்டிய மாநிலம் ஒரு கலாச்சார செழிப்பான மாநிலமாக
விளங்குகிறது” என்கிறார் தேசாய்.
எல்கார் பரிஷத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக, தேசத் துரோகம் என்று 16 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்று, எல்கர் பரிஷத்தின் கலாச்சார அமைப்பான கபீர் காலா மஞ்ச் என்ற ஒரு கலாச்சார அமைப்பு நடத்திய கலை நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் அரசு மீது வெறுப்புணர்வை தூண்டும் பாடல்கள் இசைக்கப்பட்டன” என்று என்.ஐ.ஏ கூறுகிறது.
அவ்வாறு பாடப்பட்டதாக கூறப்படும் ஒரு பாடல்.
“எங்கெங்கே ஒடுக்குமுறை நிலவுகிறதோஅங்கே கலகம் வெடிக்க வேண்டும்.
கலகமே வெடிக்காவிடில், விடியும் முன்உங்கள் ஊரை எரித்து விடுங்கள்”
ரோனா வில்சன் உட்பட 16 குற்றம் சாட்டப்பட்டவர்களும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகள், பார்ப்பனீய ஆதரவு சக்திகளாக இருப்பதால், தலித்துகள் இவ்விரு அமைப்புகளுக்கு எதிராக திரண்டு விட்டனர் என்றும், இந்த பார்ப்பன / ஆர்.எஸ்.எஸ் / பாஜக எதிர்ப்பை அடிப்படையாக வைத்து கலகம் விளைவிக்க 16 பேரும் முயன்றனர் என்பதும் குற்றச்சாட்டு. இதன் மூலமாக இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக இவர்கள் 16 பேரும் செயல்பட்டனர் என்பதே குற்றச்ச்சாட்டு.
அக்குற்றப்பத்திரிக்கையில் ஒரு பத்தி இவ்வாறு கூறுகிறது.
“பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புகள் பார்ப்பனீய ஆதரவு சக்திகளாக மாறி விட்டதால், பிற்படுத்தப்பட்ட சாதிகள் இவர்களுக்கு எதிராக திரும்பி விட்டதென, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நம்பினார்கள் என்று இவ்வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், நாட்டில் அமைதியின்மையை உருவாக்கி, அதையே மூலதனமாக கொண்டு, நாடு முழுவதும் கலவரத்தை உருவாக்க திட்டமிட்டனர்”.
எழுதியவர் : ஷ்ரீகிரீஷ் ஜலிஹால்
இவர் : சுதந்திர ஊடக அமைப்பான www.reporters-collective.in ஐ சேர்ந்தவர். அவரை ட்விட்டரில் இங்கே பின் தொடரலாம் @shreegireesh