ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியை முறைகேடாக, தமிழக அரசு சுய உதவிக்குழுக்களுக்கான கட்டிடத்திற்கு செலவழிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி, தமிழக அரசின் செயல்பாட்டிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கி வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய கடன் சுமார் ரூ55,000 கோடி. இதற்கான வட்டி மட்டும் சுமார்ரூ5734 கோடி ஆண்டுக்கு செலுத்துகிறது.
இந்நிலையில் ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சுனாமி திட்ட செயலாக்க அலகு 2005 பிப்ரவரி தொடங்கப்பட்டது.
சுனாமி திட்ட செயலாக்கத்திற்கு, ஆசிய வளர்ச்சி வங்கி வாழ்வு ஆதாரத்திட்டம் என்ற பெயரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகு,நெட்,டீசல் என்ஜீன் போன்றவை வாங்க நிதியுதவி செய்தது. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராஜீவ் காந்தி குடியிருப்பு திட்டம், உலக வங்கி வீடு கட்டும் திட்டம் ஆகிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளராக ஆர்.சி.பாண்டா இருந்த போது, வள்ளூவர்கோட்டத்திற்கு பின்னால், சுமார் ஓரு ஏக்கர் நிலம், ஊரக வளர்ச்சித்துறைக்கு கொடுக்கப்பட்டது. அந்த மத்திய அரசு சிறப்பு திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தது, ஆனால் அந்த சிறப்புத் திட்டத்தை 1996ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு செயல்படுத்தவில்லை. அதனால் மத்திய அரசு ஓதுக்கீடு செய்த நிதி திரும்ப போய்விட்டது.
அந்த ஓரு ஏக்கர் நிலத்தில், புதிய கட்டிடம் கட்டி சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான கண்காட்சி, விற்பனை நிலையம் தொடங்கலாம், என்று ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த அசோக் வரதன் ஷெட்டி முயற்சி செய்தார்.
சுனாமி திட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியின் வாழ்வு ஆதாரத்திட்டத்தில் செலவழிக்கப்படாமல் இருந்த ரூ8.19 கோடியை, சுய உதவிக்குழுக்களுக்கான கட்டிடம் கட்டலாம் என்று ஆசிய வளர்ச்சி வங்கியிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கி, வாழ்வு ஆதாரத்திட்டம், மீனவர்களுக்கான திட்டம், இதற்கு ஓதுக்கீடு செய்யப்பட்ட நிதியை வேறுத்திட்டத்திற்கு பயன்படுத்துவது, முறைகேடாக செலவு செய்வது, சரியல்ல, இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று கூறிவிட்டது.
சுனாமி திட்ட செயலாக்கத்தின் அலகு மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி, வாழ்வு ஆதாரத்திட்டம் பணிகள் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. செலவழிக்கப்படாமல் இருந்த நிதி ரூ8.19 கோடியை, ஆசிய வளர்ச்சி வங்கிக்கு, மீனவர்களின் நலனுக்கு செலவழிக்கப்பட்டதாக, கணக்கு காட்டி, அதற்கான கோப்புகளை தயார் செய்துவிட்டார்கள்.
அந்த நிதியுடன், தமிழக அரசின் சார்பில் ரூ7 கோடி ஓதுக்கீடு செய்து, ஆக மொத்தம் ரூ15.19 கோடியில், வள்ளூவர் கோட்டம் அருகே சுய உதவிக்குழுக்களுக்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு அன்னை தெரசா பெயரிடப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெறகிறது.
இத்திட்டத்திற்கு மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கும், சென்னை மாநகராட்சிக்கும் தொடர்பு இல்லை. ஊரக வளர்ச்சித்துறை கட்டி கொடுத்து, அந்த கட்டிடத்தை மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கு கொடுக்கிறது. ஆனால் மகளிர் மேம்பாட்டு கழகத்தின் இயக்குநர் டாக்டர் கோபால், முன்னின்று விழாவை நடத்துவது, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய அதிகாரிகளுக்கு, சுனாமி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கான் வாழ்வு ஆதாரத்திட்டத்திற்கு ஓதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக, புகார் வர அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள், இந்த தகவல் ஊரக வளர்ச்சித்துறையின் தற்போதை செயலாளர் அலாவுதீன், புதிய கட்டிடத்தின் பெயர் பலகை உள்ளிட்ட அனைத்து கோப்புகளிலும், ஆசிய வளர்ச்சி வங்கி என்ற பெயரை மாற்றிவிட்டார்கள்..
அரசு அதிகாரிகள், ஆசிய வளர்ச்சி வங்கி, நிதியை முறைகேடாக பயன்படுத்திவிட்டார்கள் என்பதை மறைக்க, ஊரக வளர்ச்சித்துறையை இருட்டிப்பு செய்துவிட்டார்கள் என்று அதிகாரிகள் புலம்புகிறார்கள்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய அதிகாரிகள், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை, மீனவர்களின் வாழ்வு ஆதாரத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ரூ8.19 கோடி, முறைகேடாக, வேறுத்திட்டத்திற்கு பயன்படுத்திவிட்டு, வங்கிக்கு உண்மைக்கு மாறான தகவல்களை தந்துள்ளதாக, ரிப்போர்ட் அனுப்பி உள்ளார்கள்..
இனி தமிழக அரசின் செயல்பாடுகளை ஆசிய வளர்ச்சி வங்கி நம்பாத நிலை ஏற்பட்டுள்ளது. சுய உதவிக்குழுக்கள் மூலம் சட்டமன்ற தேர்தலில் வாக்கு பெறுவதற்காக பல முறையற்ற செயல்களில் இறங்கி உள்ளது தமிழக அரசு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நன்றி நம்தினமதி நாளேடு