மாமா ஜி : ஜி என்ன உங்கள பார்த்தே ரொம்ப நாள் ஆகுது, எங்க போனேள் ?
ஆமா ஜி : இந்த திமுக ஜெயித்துல இருந்து மனசும் சரி இல்ல வயிறும் சரி இல்ல ஜி.
மாமா ஜி : மனசு ஓகே, வயித்துக்கு என்ன ஜி பிரச்சனை? கோமியம் எல்லாம் மூணு வேளையும் குடிக்கறேளா இல்லையா ?
ஆமா ஜி : நீங்க வேற ஜி, எப்போ அவதூறு வழக்கு போட்டு உள்ள தள்ளிடுவாங்கனு பயமா இருக்கு
மாமா ஜி : நீங்க அப்படி எல்லாம் ஒன்னும் பண்ற ஆள் இல்லையே, என்ன நடந்தது ஜி ?
ஆமா ஜி : இந்த மாரிதாஸ் வீடியோவ பார்த்துட்டு இருந்தேன், போன் கை தவறி விழுந்தது புடிக்க போனேன் ஜி. எப்படியோ வீடியோ ஷேர் ஆயிடுச்சு. 5 நிமிஷம் தான் ஜி இருக்கும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பரப்பிட்டானுக. அந்த கண்றாவியையெல்லாம் நான் பாப்பேனா ?
மாமா ஜி : அப்படினா கூட மாரிதாஸ தானே ஜி முதல்ல கைது பண்ணுவாங்க
ஆமா ஜி :அவன் லெக்கிங்ஸ் போட்டு பொம்பள வேசத்துல தப்பிச்சு போயிடுவான் ஜி, நான் இந்த வேஷ்டியை கட்டிட்டு படும் பாடு இருக்கே
மாமா ஜி : நம்ம அம்பி கிஷோர் எப்படி இருக்கா ? எதுவும் தெரியுமோ ?
ஆமா ஜி : அம்பி ஜெயில் மாத்தி ஜெயில் கம்பி தான் என்றான், யாருக்காவது அக்கறை இருக்கா? அவன் நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான், குண்டாஸ்ல வேற போட்டுட்டாங்க
மாமா ஜி : கேஸ் நிக்காது ஜி
ஆமா ஜி : என்ன சொல்றீங்க ஜி
மாமா ஜி : கம்பி சந்துல வந்துடுவான் அவன் மேல குண்டாஸ் எப்படி போட முடியும் ?
ஆமா ஜி : ஜி எஸ்.வி.சேகர் காமெடி எல்லாம் இங்க பண்ணாதீங்க.
மாமா ஜி : சரி கோவிச்சுக்காதீங்க ஜி, அவன் எல்லாம் குடிகார பய. வானதி அக்கா முதல் எல்.கணேசன் ஜி வரை எல்லாரையும் தப்பு தப்பா பேசிருக்கன். அதனால அவனை வச்சு மிதிங்கனு விட்டுடனும்.
ஆமா ஜி : இருந்தாலும் நம்மவாளோல்லையோ….
மாமா ஜி : மூடிண்டு இரும். கொஞ்சம் சத்தமா பேசுனாலே எப்.ஐ.ஆர் போட்றாளாம்.
ஆமா ஜி : அய்யய்யோ… சரி ஜி நம்ம தர்ம போராளி ராஜா ஜி மேலயே பிராதாம், பார்த்தீங்களா ?
மாமா ஜி : ஆமா ஜி 4, கோடிக்கு வீடு கட்டறாராம்
ஆமா ஜி : ஏன் ஜி போற வர்றவன் கிட்ட எல்லாம் வாங்காத பேச்சு எல்லாம் வாங்கி கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் நானு. எனக்கு ஒரு கக்கூஸ் காண்ட்ராக்ட் கேட்டா ரூல்ஸ் பேசறீங்க. 57 ஓட்டு வாங்குன ராஜா ஜிக்கு மட்டும் அள்ளி கொடுக்கறீங்க என்ன ஜி நியாயம் ?
மாமா ஜி : ஜி புரியாம பேசாதீங்க, அவருக்கு கொடுத்ததே ஜெயிக்கறதுக்கு இல்ல இதோட தேர்தல்ல நிக்கற எண்ணத்தை குழி தோண்டி புதைச்சிடுனு சொல்லிருக்கார். ராஜா ஜி, நான் தேசத்துக்காகன்னு ஆரம்பிச்சிருக்கார். அமித் ஜி, மூடிட்டு இருக்கியா வாய் மேலயே மிதிக்கவான்னதும், கெஞ்சி கதறி, ஒன் டைம் செட்டில்மென்ட் வாங்கிண்டு வந்துருக்கார். அதுல கட்டுறதுதான் இந்த வீடு.
ஆமா ஜி : யோகக்காரர் ஜி, சரி ஜி நம்ம கட்சிக்கு விசாகா கமிட்டி வருதாம் அப்படினா என்ன ஜி ?
மாமா ஜி : அது ஒரு பலான விஷயம் ஜி
ஆமா ஜி : தாடி வச்சிட்டு புரோக்கர் ஒருத்தன் CD கொண்டாந்த போதே நினச்சேன் இப்படி பலான விஷயமா தான் இருக்கும்னு
மாமா ஜி : தாடி வச்சிட்டு CD வித்தானா யாரு ஜி அவன்
ஆமா ஜி : பேரு கூட CD கவியாம், தேர்தலுக்கு முன்ன கூட அடிக்கடி வந்தான் ஜி, கேட்டா வேட்பாளர்களை பூஸ்டப் பண்ணணு சொன்னானுக
மாமா ஜி : யோவ் யோவ் அது CT ரவி, அவர் தான் நம்ம கட்சி தேசிய பொது செயலாளர்
ஆமா ஜி : சாரி ஜி நான் கூட அபின் அஞ்சலை மாதிரி எதோ அடைமொழின்னு நெனச்சுட்டேன். அது இல்லாம நம்பாளுங்க கர்நாடக சட்டசபையிலயே புளு பிலிம் பாத்தவங்க. பேரும் சிடியில தொடங்குதா … அதேதான்னு முடிவு பண்ணிட்டேன்.
மாமா ஜி : ஆளு தாடி வச்சு ஜிப்பா போட்டிருந்தா போதுமே உனக்கு அந்த எண்ணம் தான் வரும்
ஆமா ஜி : சரி அத விடுங்க, நம்ம ரஞ்சிதா ஜிய வளச்சு போட எதுவும் திட்டம் இருக்கா ?
மாமா ஜி : அவங்க தான் கைலாஷ்ல இருக்காங்களே அவங்களை எதுக்கு இப்போ வளைக்கனும் ? அதுவும் தேர்தல் கூட இல்ல
ஆமா ஜி : அப்பறம் எதுக்கு ஜி எங்க பார்த்தாலும் ரஞ்சிதா போட்டோ போட்டு ஜெய் ஹிந்த் யாத்திரைனு போஸ்டர் அடிச்சிருக்கீங்க ?
மாமா ஜி : அட பாவிகளா அப்படியா அடிச்சிருக்கானுக, இவனுகள வச்சிட்டு எங்க கட்சி நடத்தி நாம எப்போ தாமரையை மலர வச்சு
ஆமா ஜி : ஏன் ஜி சலிச்சுக்கறீங்க என்ன விஷயம்
மாமா ஜி : ஜி, நாம பிளான் பண்றது திமுக ஒன்றிய பிரிவினைவாத கோசத்துக்கு எதிரான ஜெய் ஹிந்த் யாத்திரை.
ஆமா ஜி : அதை தெளிவா சொல்ல கூடாதா ஜி ? நான் கூட ஒரு நிமிஷம் சந்தோச பட்டுட்டேன்.
மாமா ஜி :அது சரி புதுசா டிஜிபி வந்திருக்காராமே ஆள் எப்படி தெரியுமா ஜி ?
ஆமா ஜி : என்ன ஜி சைலேந்திர பாபுவை தெரியாதா? நல்லா ஒசரமா இந்த வயசுலயும் பிட்டா இருப்பாரே ஜி
மாமா ஜி : என்னய்யா பெரிய பிட், நம்ம கர்நாடக சிங்கம் அண்ணாமலை மாதிரி வருமா ? அவர் சர்வீஸ்ல இருந்திருந்தா இந்நேரம் அவரும் ஒரு டிஜிபி தான் யா
ஆமா ஜி : அவரே தமிழ்நாட்டுல ஜிபி.முத்து மாதிரி தான் இருக்காரு, டிஜிபியாம். போங்க ஜி
மாமா ஜி : ஜி அவர் செந்தில் பாலாஜியையே அடிச்சு பல்லு எல்லாம் பேத்திடுவேன்னு சொன்னார் ஜி
ஆமா ஜி : பள்ளப்பட்டி, பல்லுனு எதோ ஒரு ப்லொவ்ல சொல்லிட்டாரு ஜி, நீங்க வேணும்னா பாருங்க இன்னும் ஒரு தேர்தல் தாங்குவார், அதுக்கப்பறம் நான் மிகவும் சோர்வாக உணர்கிறேன்னு ஒதுங்கிடுவார்
மாமா ஜி : அவருக்கும் சோர்வா ?
ஆமா ஜி : நீங்க வேற யாரை சொல்றீங்க ?
மாமா ஜி : நம்ப போர்டு ஜி.
ஆமா ஜி : ஓ அவரா..
மாமா ஜி : அவரை விடுங்க மக்கள் மத்தியில் இப்போ நம்ம செல்வாக்கு எப்படி இருக்கு ?
ஆமா ஜி : படு கேவலமா இருக்கு ஜி
மாமா ஜி : என்னவாம் ?
ஆமா ஜி : சமையல் எரிவாயு, பெட்ரோல் விலை எல்லாம் ஏறிடுச்சு. ஏன் பொண்டாட்டி மூஞ்சியிலேயே என்னால முழிக்க முடியல ஜி. முன்னாடி எல்லாம் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா 150 Km போகும் ஜி இப்போ 80 Km தான் ஜி போக முடியுது
மாமா ஜி : நீங்க வண்டி வாங்கி எவ்வளவு வருஷம் ஆகுது ?
ஆமா ஜி : 10 வருசத்துக்கு மேல ஆகுது ஜி
மாமா ஜி : அப்போ காங்கிரஸ் ஆட்சியில வண்டி வாங்கிருக்கீங்க அப்படி தானே
ஆமா ஜி : ஆமா ஜி அதுக்கு என்ன ?
மாமா ஜி : நம்ம மது ஜி கிட்ட சொல்லி காங்கிரஸ் ஆட்சியில் வாங்கின வண்டி இப்போ மைலேஜ் தராம மக்கள் அவதிப்படறாங்கனு ஒரு வீடியோ போட சொல்லுங்க
ஆமா ஜி : நம்ம மூளை வலிமை மது மேமா ஜி ?
மாமா ஜி : அவங்க தான் ஜி
ஆமா ஜி : ஆமா இந்த லூசுப்பசங்க, வலிமை அப்டேட் வலிமை அப்டேட்டுன்னு கேட்டுட்டே திரியிறானுங்களே. மேம்தான் சொல்லிட்டாங்களே… !!!
மாமா ஜி : மேம் அப்டேட்டை சொல்லிடலாமா ?
ஆமா ஜி : சொல்லிறலாம் ஜி, அப்பறம் இந்த பிரெஞ்சு அரசு ரபேல் விமானம் வித்ததில் முறைகேடுனு கேஸ் போட்டிருக்காங்களாம் ஜி
மாமா ஜி : நானும் பார்த்தேன் ஜி, பிரெஞ்சு அரசுக்கு எதிரா ஏதாவது வித்தியாசமா போராட்டம் அறிவிக்கணும்.
ஆமா ஜி : நாம வேணா அவிங்க தூதரகம் முன்னாடி நின்னு பிரெஞ்சு கிஸ் அடிச்சு போராட்டம் பண்ணலாமா ஜி
மாமா ஜி : ஏற்கனவே நம்ம கட்சிய பாரதிய ஜல்ஸா கட்சினு சொல்லறானுக. #கஜகஜாபாஜகன்னு நேசனல் லெவல்ல ட்ரெண்ட் , பண்றானுங்க. இத மட்டும் செஞ்சோம் அவ்வளவு தான்
ஆமா ஜி : சரி ஜி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மறுபடியும் சந்திப்போம்
Create playlists for web stories and try to provide download option for read in offline
ஆமாஜி மாமாஜி எல்லாம் இருக்ககட்டும் அம்பி. இப்பத்தான் நம்பளவா தமிழ்நாட்டுல ஆட்சிக்கு வந்துட்டாளோல்லியோ…எப்ப கரண்ட் கட் பிரச்சினையை தீர்க்கப் போறா…அணில் பிரச்சினை வேற… நீட் தேர்வை எப்ப ரத்து பண்ணப் போறா…ஏழு பேரை எப்ப விடுதலை பண்ணப் போறா…இதையெல்லாம் பத்தி பேசினா புண்ணியமாப் போகும்…
அதிமுக ஆட்சியில பொத்தினாப்ல இருந்தேளே அப்படியே இருங்கோண்ணா !
கர்நாடக சிங்கமா அவன்.? லூசுப்பய
I did not expect such a funny post from you Savukku. Great Job👌👌😂😂