ஆமா ஜி : ஜி என்ன இப்படி பண்றீங்க ஜி ?
மாமா ஜி : என்ன வந்ததும் வராததுமா இவ்வளவு சூடா இருக்கேள் ?
ஆமா ஜி : பின்ன என்ன ஜி, நானும் நம்ம மகளிர் அணி மரகதமும் பேசிகிட்டு இருந்தோம், அவங்க உங்க வீட்டு பூஜை ரூம் பார்க்கணும்னு கேட்டாங்க. அதுக்கு உங்களுக்கு வீடியோ கால் பண்ணா, கட் பண்ணிட்டே இருக்கீங்க. ரொம்ப தான் பண்றீங்க ஜி
மாமா ஜி : மரகதம், பூஜை ரூம், வீடியோ கால். எங்கயோ இடிக்கிதே, யோவ் என் பதவியை காலி பண்ணலாம்னு பார்க்கறீங்களா ?
ஆமா ஜி : என்ன ஜி சொல்லறீங்க ? நான் ஏன் உங்க பதவியை காலி பண்ணப்போறேன் ?
மாமா ஜி : அப்போ விஷயம் உங்களுக்கு தெரியாது?
ஆமா ஜி : எந்த விஷயம் ஜி தெளிவா சொல்லுங்க, நான் தான் 2 வாரமா பாத யாத்திரை போய்ட்டேன், நேத்து வந்ததுக்கு அப்பறம் தான் ராகவன் ஜியை கட்சியில் விட்டு தூக்கினதே தெரியும். ஏன்னு கேட்டா எல்லாம் போனில் பேச முடியாது நேர்ல வா பேசலாம்ன்றாங்க என்ன விஷயம் ஜி ?
மாமா ஜி : அதை எப்படி ஜி சொல்றது ?
ஆமா ஜி : எதுவும் கை கலப்பா ?
மாமா ஜி : அது மாதிரி தான்..
ஆமா ஜி : உள்ளடி வேலை பார்த்தாரா?
மாமா ஜி : வேலை தான் பார்த்தார்..
ஆமா ஜி : என்ன ஜி இப்படி இழுக்கறீங்க, நம்ம கட்சிக்காரன் பண்ணாத வேலையா பண்ணிட்டார் ?
மாமா ஜி : காத குடுங்க ஜி
ஆமா ஜி : நெஜமாவே ஜி சொல்றீங்க ? அந்த வீடீயோவை காமிங்க
மாமா ஜி : நீங்களே பாருங்க
ஆமா ஜி : சவுண்ட் வைங்க ஜி
மாமா ஜி : ஜி சவுண்ட் ரொம்ப முக்கியமா
ஆமா ஜி : என்ன ஜி கிளாரிட்டியே இல்ல
மாமா ஜி : மூடிட்டு பாருங்க ஜி
ஆமா ஜி : என்ன ஜி பூஜை ரூம்ல வச்சு இப்படி குமுறிகிட்டு இருக்கார்
மாமா ஜி : இதுக்கு எப்படி முட்டு குடுக்கறதுனு தான் தெரியல ஜி
ஆமா ஜி : மார்பிங் பண்ணிட்டாங்கனு சொல்லுங்க ஜி
மாமா ஜி : போட்டோவா இருந்தா சொல்லலாம், வீடியோல கையும் களவுமால மாட்டிகிட்டாரே ஜி
ஆமா ஜி : சரி ஜி இந்த வீடியோவ யாரு ஜி வெளிய விட்டா ?
மாமா ஜி : வேற யாரு நம்ம மதன் தான்
ஆமா ஜி : யாரு நம்ம நட்டா ஜி முன்னாடி டெல்லில கட்சியில் சேர்ந்தாரே அந்த தம்பியா
மாமா ஜி : அவனே தான்
ஆமா ஜி : ஏன் ஜி, அவன் நம்ம அண்ணாமலை ஜிக்கு வேண்டப்பட்ட தம்பி ஆச்சே ஜி, அவர் கிட்ட சொல்லி அவனை ஆப் பன்னிருக்கலாமே ஜி
மாமா ஜி : அவர் வீடியோவும் வந்திருக்கு பாருங்க
ஆமா ஜி : எது அவருமா ஜி ?
மாமா ஜி : யோவ் இது வேற வீடியோ, பாருங்க
ஆமா ஜி : என்ன ஜி இது , இந்த சீட்ல இருந்து நீங்க சொல்லற புகாரை விட மோசமான புகார் எல்லாம் கேட்டிருக்கேன்னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்காரு
மாமா ஜி : நம்மல விட்டுட்டு இவனுக கூத்தடிச்சிருக்கானுக போல ஜி, மேலே கேளுங்க
ஆமா ஜி : எது, பெண் தலைவர்கள் வந்தா கதவை திறந்து வச்சிட்டு கூட யாரவது வச்சிட்டு தான் பேசுவாராமா ?
மாமா ஜி : இவர் யாரை அசிங்க படுத்தறாருனு தெரியல
ஆமா ஜி : சரி ஜி இன்னும் 16 வீடியோ இருக்குனு சொல்றானே யாருதா இருக்கும் ?
மாமா ஜி : யாருதா இருந்தா என்ன ஜி ?
ஆமா ஜி : அதுவும் சரி தான் நல்ல கிளாரிட்டியா HD பிரிண்ட் வந்தா சரி
மாமா ஜி : என்ன ஜி நீங்க நேரம் காலம் தெரியாம
ஆமா ஜி : சரி ஜி இவ்வளவு நேரம் அண்ணாமலை ஜி பேசினத ரெகார்ட் பண்ணிருக்கானே அது கூட தெரியாம இவரெல்லாம் என்ன ஜி போலீஸ்
மாமா ஜி : அத சொல்லுங்க இதுல கர்னாடக சிங்கமாமா. இதுவே நம்ம ராஜா ஜியா இருந்தா செவுட்டிலே நாலு போடு போட்டு
ஆமா ஜி : அந்த பையன் கிட்ட இருந்து கைப்பத்திருப்பாரா ஜி ?
மாமா ஜி :அத புடுங்கி நம்ம கமலாலயம் கில்மா வாட்சப் குரூப்ல ஷார் பன்னிருப்பார்
ஆமா ஜி : ஜி அப்படி ஒரு குரூப் இருக்கா ? என்னைய add பண்ணுங்க ஜி
மாமா ஜி : யோவ் அதெல்லாம் நெறய ரூல்ஸ் இருக்கு அப்படி எல்லாம் சேர்க்க முடியாது
ஆமா ஜி : அப்படி என்ன ஜி ரூல்ஸ் ?
மாமா ஜி : வாரத்துக்கு ஒரு வீடியோவாவது ஷேர் பண்ணனும்
ஆமா ஜி : அவ்வளவு விடியோவுக்கு நான் எங்க போக? நானே அது கிடைக்காம தான் சேர்த்து விட சொல்றேன்
மாமா ஜி : ஜி ஆம்பளை பொம்பளை வீடியோ இருக்கணும்னு அவசியம் இல்ல ஆம்பாளை ஆம்பளை வீடியோ கூட போடலாம்னு பை லாவுல இருக்கு
ஆமா ஜி : இதுக்கு பை லா கூடவா இருக்கு
மாமா ஜி : எதா இருந்தாலும் முறையா செய்யணும்னு தாடி ஜி சொல்லிருக்கார்
ஆமா ஜி : சரி ஜி அப்படினா கூட அவ்வளவு ஆம்பளை வீடியோ கிடைக்கறது கஷ்டமாச்சே
மாமா ஜி : அதுக்கும் ஒரு வழி இருக்கு
ஆமா ஜி : சொல்லுங்க கேட்போம்
மாமா ஜி : நான் இருக்கேன் நீங்க இருக்கீங்க
ஆமா ஜி : அதுக்கு ?
மாமா ஜி : கொஞ்சம் கோவொப்ரெட் பண்ணீங்கனா
ஆமா ஜி : என்ன ஜி ஒரு மார்க்கமா பேசறீங்க, எதுக்கும் கொஞ்சம் தள்ளிப்போங்க
மாமா ஜி : மூஞ்சிய மாஸ்க் பண்ணிரலாம் ஜி, யாருக்கும் தெரியாது
ஆமா ஜி : அப்போ இதுவே வேலையா தான் திரியறீங்களா ? அப்படி ஒரு குரூப்ல என்னைய சேர்க்கவே வேண்டாம்
மாமா ஜி : இஷ்டம் இல்லாட்டி விடுங்க ஜி அவன் அவன் இடம் கிடைக்காம திரியறான்
ஆமா ஜி : அப்படியா சொல்றீங்க ? எதுக்கும் யோசிச்சு சொல்றேன் வேற யாரையும் சேர்த்துடாதீங்க ஜி. ஜி இந்த விசயத்துல நம்மல அடிச்சிட்டு இருந்தானுக சரி எதுக்கு அதிபரை அடிக்கறானுக ?
மாமா ஜி : அது தான் ட்விஸ்ட், உலகத்துல யாரும் செய்யாததையா ராகவன் ஜி செஞ்சிட்டாருனு ஒரு பேட்டி கொடுத்தது தான் போதும், போட்டு பொள பொளன்னு அதிபரை பொளக்கறாங்க
ஆமா ஜி : அவர் எதுக்கு ஜி வான்டெட்டா வண்டியில் ஏறறார்?
மாமா ஜி : ஒருவேளை அதிபர் வீடியோ எதுவும் சுத்துதோ தெரியல ஜி
ஆமா ஜி : உண்மையா சுத்தாட்டியும், மார்பிங் பண்ணி அந்த ஆளே பெருமைக்கு சுத்த விடுவாரு ஜி
மாமாஜி : அவ்வளவு கேவலமானவரா ஜி அவரு ?
ஆமா ஜி : என்ன பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க. அண்ணி ஜி வீடியோ பாக்கலையா ? ஒரு நடிகைக்கு பழச்சாறு குடிக்கிறீங்களான்னு பின்னாடியே அதிபர் சுத்திருக்காரு. புதுசு புதுசா பல பேருங்களை அண்ணி சொல்லிருக்காரு.
மாமா ஜி : இதைத்தான் அதிபர் களமாடுறதுன்னு சொல்லிருக்காரா ?
ஆமா ஜி : உண்மைதான் ஜி. இது புரியாம, அவரு பின்னாடி சுத்தர அரை மெண்ட்டல் கேசுங்க ட்விட்டர்ல களமாடிட்டு இருக்காங்க.
மாமா ஜி : இந்த டிஎம்கே கவர்மெண்ட் இந்துக்கள் மனசை எப்படி புண்படுத்திருக்கு பாத்தீங்களா ?
ஆமா ஜி : விநாயகர் சிலை வைக்க தடையைத்தானே சொல்றீங்க.
மாமா ஜி : அதேதான் ஜி. சிலை வைக்க விட்டா, விநாயகர் பொம்மை வைக்கணும், காசு குடுன்னு நாலு வசுல்லை போடலாம். “கணபதி பாப்பா மோரியா, அண்டா பிரியாணி ஓடியான்னு” சரக்கை போட்டுட்டு டான்ஸ் ஆடலாம்னு பாத்தா அதுக்கு தடை விதிச்சு ரொம்ப மனசை புண்படுத்திட்டா ஜி.
ஆமா ஜி : ஒன்னும் கவலைபடாதீங்க ஜி. நம்ப வாத்து ஜி ஆட்சியை கலைச்சிருவேன்னு சொல்லிருக்காரு.
மாமா ஜி : அவரு கலைக்கிறேன்னு சொன்னது ஆட்சியை இல்ல. கட்சி இன்னைக்கு இருக்குற நிலைமையில, மெட்டர்னிட்டி ஹாஸ்ப்பிட்டல் போயிதான் கலைக்கணும். அம்புட்டு புகாரு. வெளிய தலை காட்ட முடியல ஜி.
ஆமா ஜி : வாத்து ஜி ஒரு விஷயத்தை கையில எடுத்தார்னா முடிக்கிற வரைக்கும் விட மாட்டாரு…
மாமா ஜி : என்ன ஜி சொல்றீங்க. ராகவன் ஜி மாதிரி அவருமா மாட்டியிருக்காரு ?
ஆமா ஜி : நீங்க வேற ஜி. அதை சொல்லல. அவரு தமிழ்நாட்டுலதான் வாத்து ஜி. கர்நாடகாவுல சிங்கம் ஜி.
மாமா ஜி : இப்போ இந்த டிஎம்கே கவர்மெண்ட்டை எதிர்த்து வலுவான போராட்டம் ஒன்னை பண்ணனும் ஜி.
ஆமா ஜி : முன்னாடி மாதிரி எடப்பாடி கவர்மெண்ட்டா இருந்தா நம்ப இஷ்டத்துக்கு ஆடலாம் ஜி. இப்போ, வெளுத்து விட்டுருவாங்க. நம்ப கட்சிக்காக ட்விட்டர்ல களமாடிட்டு இருந்த கிஷோர் ஜி யை பிதுக்கி உக்கார வச்ச மாதிரி நம்பளையும் பிதுக்கிடுவாங்க. அவசரப்பட்டு போயி மாட்டிக்காதீங்க.
மாமா ஜி : அப்போ அது வரைக்கும் எப்படித்தான் ஜி அரசியல் பண்றது ?
ஆமா ஜி : எங்கயாவது போயி மதக்கலவரத்தை தூண்டி விடலாம். வேற வழியே இல்ல. நாம என்னைக்கு ஒழுங்கா அரசியல் பண்ணிருக்கோம். கெளம்புங்க ஜி.
***
Hi sir,
Am continuously watching your interviews. Today I started reading your blog. A common people can understand what is happening from your interviews. Please continue this. Unknowingly, you are making youngsters to get into politics.
கேடி.ராகவன் கட்சி பதவியில் தானில்லை… கட்சியில் அப்படியேதான் இருக்காப்டி !