வனிதா என்னும் சிறுமியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மரண வாக்குமூல வீடியோவை, சிறுமியின் முகத்தைத் கூட மறைக்காமல் வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் புயலைக் கிளப்பியுள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை. அந்த வீடியோவின் இணைப்பைப் பகிர்வது கூட போக்சோ சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இணைப்பை நாங்கள் பகிரவில்லை.
அந்த வீடியோவில் சற்று மயக்க நிலையில் உள்ள 17 வயது சிறுமி ஒரு ஆணின் குரலுக்குத் தயங்கி தயங்கி பதில் சொல்வதைப் பார்க்க முடிகிறது. அந்த சிறுமி குழப்பமான நிலையில் இருப்பதையும் காண முடிகிறது. அந்த நிலையில் கூட அந்த ஆணின் குரலானது ‘ராகேல் மேரி’ என்னும் பெயரை மீண்டும் மீண்டும் அந்த சிறுமியின் வாயிலிருந்து பெறுவதில் குறியாக இருப்பதைக் காண முடிகிறது. கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதா? என்று சிறுமியிடம் குறிப்பாகக் கேட்கப்பட்டது. ‘இரண்டு வருடத்திற்கு முன்பாக’ என்று சிறுமி பதில் கூறுகிறார். ராகேல் மேரியா?வா என்று மீண்டும் அந்த ஆண் கேட்கிறார்.
‘கிறிஸ்தவ மிஷனரியின் அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டார். மதமாற்றம் – தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி. ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்!
மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்!’ – இவ்வாறு டிவிட்டரில் பதிவு செய்கிறார் அண்ணாமலை.
அண்ணாமலை பதிவு போட்ட சில நிமிடங்களில், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் பதிவு போடுகிறார். ‘கல்வியின் பெயரால் மதமாற்றம் செய்ய துடிக்கும் கிருஸ்துவ நிறுவனங்கள் தங்கள் கரங்களை ஆக்டொபஸ் போல விரித்து கொண்டே தொடர்ந்து செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அரியலூரை சேர்ந்த அனிதா என்ற இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி நீட்டுக்கு எதிராக போராட வைத்து வாழ்க்கையில் விரக்தியடைய செய்து தற்கொலைக்கு தூண்டிய கும்பல் இன்று இந்த பெண்ணின் மரணத்திற்கு வாய் பொத்தி மௌனம் காப்பது ஏன்?
விடுதியில் தங்கி படித்த மாணவியை சமையலறையில் பாத்திரம் கழுவ செய்ததோடு, கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியாக சொல்லப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அலட்சியமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. விஷம் உட்கொண்டதை மறைத்து மாணவியை வீட்டுக்கு அனுப்பியுள்ளது பள்ளி நிர்வாகம்.
ஒரு மாணவியின் மரணத்தில் கூட சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலா? மத சார்பற்ற அரசு என்றால் பெரும்பான்மை மதத்திற்கு எதிராகவும், சிறுபான்மை மதங்களுக்கு வெண்சாமரம் வீசுவதும் தான் என்பது திராவிட முன்னேற்ற கழக அரசின் எழுதப்படாத விதியா?’ – இவ்வாறு அறிக்கை வெளியிட்டார் நாராயணன்.
முதலில் உண்மை என்னவென்று பார்ப்போம். சிறுமி வனிதாவின் தாய் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் தற்கொலை செய்துகொள்கிறார். இறந்த குழந்தைக்கு இரண்டு தம்பிகள். தந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.
இறந்த குழந்தைக்கு கையில் விட்டிலிகொ என்று தோல் வெளுப்படையும் ஒரு ஒரு தோல் வியாதி இருக்கிறது. தந்தை புதிதாக திருமணம் செய்துகொண்ட பெண், அவர் குழந்தைக்கும், இதர குழந்தைகளுக்கும் அந்நோய் வந்துவிடப் போகிறதே என்ற காரணத்தால்தான் அரியலூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள்.
இறந்த வனிதா விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றாலும், அவருக்கு தனியாக தட்டு, பாய் கொடுக்கப்பட்டு, இதர குழந்தைகளோட பழக விடுவதில்லை என்பதால், அக்குழந்தை பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்துள்ளது. இதர வகுப்பு குழந்தைகளிடமோ, ஆசிரியர்களிடமோ இதை சொல்லவில்லை.
வனிதா ஒரு சிறந்த மாணவி. 10ம் வகுப்பில் 488/500 மதிப்பெண் பெற்றுள்ளார். கல்வியில் சிறப்பாக செயல்பட்டாலும், வீட்டில் சித்தி சரியாக நடத்தாத காரணத்தினால் வீட்டிற்குச் செல்லவே பயந்திருந்தார். அவருக்கு நெருக்கமான மற்றொரு மாணவி கூறியது ‘அனைவரும் விடுதியிலிருந்து வீட்டிற்கு சென்றாலும், வனிதா மட்டும் வீட்டிற்கு செல்லாமல் விடுதியிலேயே தங்குவார்’. கன்னியாஸ்திரிகள் ஆறுதல் கூறினாலும் தனது பயத்தை யாரிடமும் வெளிப்படுத்தாமல் இருந்துள்ளார்.
வனிதா படித்த பள்ளியை பற்றி பார்ப்போம்.
தூய இருதய மேல்நிலைப்பள்ளி, மைக்கேல்பட்டி, திருக்காட்டுப்பள்ளி. 19-ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் தமிழ்நாட்டுப் பெண்கள் கல்வி மறுக்கப்பட்டு இரண்டாம் தர குடிமக்கள் போல நடத்தப்பட்டார்கள். அந்தச் சூழலில் பெண்களின் கண்ணியம் காக்கவும், குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தவும் சில கிருஸ்தவ மிஷனரிகள் தீர்மானிக்கிறார்கள்.
பிப்ரவரி 1844 இல் பாண்டிச்சேரி ஆயர் கிளமண்ட் பொன்னன்ட் (Clement Bonnand) தலைமையில் நடந்த சபையில், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது எனவும், அது பிரான்சிஸ்கன் சகோதரிகளின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் எனவும் தீர்மானம் செய்யப்பட்டது. அதே மாதத்தில் முதல் பள்ளியானது தூய மேரியின் பெயரால் பாண்டிச்சேரியில் ஆரம்பிக்கப்பட்டது. மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியும் நூற்றாண்டு பழமையானது.
இப்பள்ளியானது தற்போது ஏழ்மையான பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்த 700 மாணவர்களுக்கு, எந்தப் பாகுபாடும் இன்றி சிறந்த கல்வியை வழங்குகின்றது. இங்கு பயிலும் மாணவிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்துக்கள்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பள்ளியும், விடுதியும் மூடப்பட்டது. வீட்டிற்குச் செல்வது அந்தச் சிறுமிக்கு ஒரு கொடுங்கனவாகவே இருந்துள்ளது. குழப்பமான மனநிலையில் இருந்த சிறுமி ஜனவரி 9ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு வீட்டிற்குச் சென்றிருக்கிறார். ஜனவரி 10ஆம் தேதி, விஷம் உட்கொண்டதை வெளியில் சொல்லாமல் வயிற்றுவலி என்று வீட்டில் கூறியுள்ளார். பெற்றோர் அவளை உள்ளூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அவளுக்கு சில வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டி-பயாடிக் கொடுக்கப்பட்டது. அவளுடைய வலி நீடித்தது. உள்ளூர் மருத்துவர் நோயை சரியாக அறிய முடியாததால், சிறுமியை தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஜனவரி 15, 2022 அன்று, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மற்றும் அவரது மருத்துவ வரலாற்றைப் பார்த்த மருத்துவர்கள் பல சோதனைகளை நடத்தினர். பரிசோதனையில் சிறுமி விஷம் அருந்தியிருப்பதும், கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. சிறுமியை அன்புடன் அணுகியபோது, அவர் விஷம் அருந்திய சம்பவத்தை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜனவரி 16 ஆம் தேதி, விடுதியின் வார்டன் ஜெனின் சகாய மேரியை போலீசார் கைது செய்தனர். அதே நாளில் சிறுமி தனது மரண வாக்குமூலத்தில் சகாய மேரியை குறிப்பிட்டிருந்தார். சகாய மேரி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். பொங்கல் விடுமுறையாக இருந்தாலும், காவல்துறை துரிதமாக செயல்பட்டதால், போலீஸ் விசாரணையில் தொய்வும் ஏற்படவில்லை.
சிறுமியின் இரண்டு வாக்குமூலங்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டன. ஒன்று காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது, இரண்டாவது நீதித்துறை மாஜிஸ்திரேட்டால் 16 ஜனவரி 2022 அன்று பதிவு செய்யப்பட்டது. மருத்துவர்கள் சிறப்பாக முயற்சிகள் செய்தாலும் சிறுமியின் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இந்த நேரத்தில், உள்ளூர் விஷுவ ஹிந்து பரிஷத்(VHP) குண்டர்கள் காட்சிக்குள் நுழைகிறார்கள், பண ஆசை காட்டி சிறுமியின் தந்தை மற்றும் சித்தியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். பல கிரிமினல் வழக்குகள் உள்ள பா.ஜ.க தலைவர் கருப்பு முருகானந்தம் அவர்களும் உள்ளே நுழைந்து, தன் பங்கிற்கு வாட்ஸ்அப் குரூப்களில் செய்திகளை பரப்பினார். பெண்ணின் சித்திக்கு அரியலூரில் நீட் காரணமாக இறந்த அனிதாவுக்கு கிடைத்தது போல நிவாரணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள்.
நூற்றாண்டு பழமையான இந்தப் பள்ளிக்கு எதிராக உள்ளூர் இந்து குழுக்கள் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தார்கள். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்கள்.
சிறுமியின் சொந்த ஊரான அரியலூரில் விஎச்பி போராட்டம் நடத்தி கைது ஆனார்கள், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பெண் பணியளர்கள் உதவியுடன், அந்த சிறுமியின் வகுப்பு தோழிகள் மற்றும் அறை தோழிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பெரும்பான்மையான இந்து மாணவர்களைக் கொண்ட ஒரு பள்ளியில், அவர்களில் யாரும் கட்டாய மதமாற்றம் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. சிறுமியின் மரணத்தில் பள்ளி நிர்வாகத்தினர் யாருக்கும் தொடர்பு இல்லை என போலீசார் முடிவுக்கு வருகிறார்கள்.
மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் பெயர் வெளியிடக்கூடாது என்கிற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார். “இதெல்லாம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கைவண்ணம். அண்ணாமலை சமீப காலமாக சமூக வலைதளங்களில் வரும் ட்ரோல்களைப் பற்றி கொந்தளிக்கிறார். தமிழக பிஜேபியில் அவர் அறிமுகம் செய்யப்பட்டது முதல், மாநிலத் தலைவராக உயர்த்தப்பட்டது வரை, அண்ணாமலை தொடர்ந்து நகைச்சுவைகள் மற்றும் மீம்ஸ்களில் இருந்து வருகிறார். ஒரு அறிவார்ந்த, தேசியவாத அரசியல்வாதியாக தன்னை உயர்த்திக் கொள்வதற்கான அவரது அனைத்து நடவடிக்கைகளும் ஸ்டாண்ட் அப் காமெடிகளாக முடிகிறது. அரசியலில் புதியவராக இருப்பதால், ட்ரோல்களை ஜீரணிக்க முடியாத அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டி என்னும் மோசடிப் பேர்வழியின் தலைமையில் தனது சொந்த தகவல் தொழில்நுட்ப பிரிவை உருவாக்கும் அளவிற்கு சென்றார். (ரெட்டி, மத்திய அரசின் MSME டைரக்டர் ஜெனரலாக தன்னைக் காட்டிக் கொண்டு பிடிபட்ட மோசடியாளராக அறியப்பட்டவர்).
கடந்த ஒரு வார காலமாக, தமிழக பா.ஜ.க தங்களை பல கேலி கிண்டல்களுக்கு தங்களை உள்ளாக்கிக்கொண்டது. இரு சிறுவர்கள் நடத்திய ஒரு நகைச்சுவை நாடக நிகழ்ச்சியைக் கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இந்த அற்பமான சிறு பிரச்சினையில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈடுபாடு கொண்டதைப் பார்த்து ஒட்டுமொத்த மாநிலமும் சிரித்தது. பஞ்சாபிகளால் பிரதமரைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்பட்ட நிலையில், மற்ற மாநிலத் தலைவர்களை தமிழகம் வரவழைத்து மாநிலம் முழுவதும் திடீர் போராட்டங்களை நடத்தி சில குழப்பங்களை உருவாக்க அண்ணாமலை செய்த முந்தைய முயற்சி தோல்வியடைந்தது. கோவிட் கட்டுப்பாடுகளை மீறியதாக அவர் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இறுதியாக டெலிப்ராம்ப்டர் (Teleprompter) பழுதாகி மோடி சமாளிக்க முடியாமல் திணறிய சம்பவம் நிகழ்ந்து கேலிக்குள்ளானது. மீம்ஸ், நகைச்சுவைகள் மற்றும் கார்ட்டூன்கள் ஆகியவற்றை அண்ணாமலையால் தாங்க முடியவில்லை. தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்தார் அண்ணாமலை. குருமூர்த்தியிடம் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் ஆலோசனைகளைப் பெற்றதைப் போல இவரும் ஆலோசனை பெறுகிறார்.
டெல்லியின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறிய கருத்துக்களும், மத்திய உளவுத்துறை அதிகாரியுடன் ஒத்துப் போகின்றன. அவர் இவ்வாறு கூறினார்.
“தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பாஜக தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. அவர்கள் எதைச் செய்தாலும், சொன்னாலும் அது தமிழகத்தில் தோல்வியடைந்து விடுகிறது.
தமிழகம் போன்ற முக்கியமான மாநிலத்தில் உள்ள விவகாரங்களை, முதிர்ச்சியற்ற முறையில் கையாள்வதால், அண்ணாமலை மீது டெல்லி பாஜக மேலிடம் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேசிய தலைமையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் அண்ணாமலை. ஆனால் அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்து, சமூக ஊடகங்களில் நகைச்சுவைக்கு ஆளாகிறார்.
மாநிலத்தில் கட்சித் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து கடந்த சில வாரங்களாக பாஜகவுக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அண்ணாமலை மனு அளித்ததில் இருந்து தொடங்கியது. பஞ்சாபில் நடந்த சிக்கலுக்கு, தமிழக ஆளுனரிடம் மனு கொடுத்தது நகைப்புக்குள்ளானது.
பல வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஒரு மோசமான ரவுடியை ஆதரிப்பதன் மூலம் கட்சிக்கு மோசமான பெயர் ஏற்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், பிரபல ரவுடி ஒருவரின் வீட்டுக்குச் சென்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மற்றொரு நிகழ்வில், மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியுடன் பாஜக நிர்வாகிகள் கையும் களவுமாக கர்நாடகாவில் பிடிபட்டனர். ஊழலுக்கு எதிராகப் போராடுவதாக சொல்லிக்கொள்ளும் பாஜக, ஊழல் குற்றவாளியின் கைதுக்கு எதிராக பேசுவது குறித்து மக்கள் கேள்விகளை எழுப்பினர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரதமரை விமர்சிக்க குழந்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, சிறுவர்களின் நையாண்டி நிகழ்ச்சிக்கு அண்ணாமலை செய்த மொக்கையான எதிர்வினை சமீபத்தில் சர்ச்சையானது. இது வீடியோ வைரலாவதை உறுதி செய்தது மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் பொங்கலுக்கு மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவே பாஜக மாறியது. இந்த பொங்கல் சீசனுக்கு சமூக வலைதளங்களில் மீம் கன்டென்ட் ஆனார் அண்ணாமலை.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டு ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணங்களும் பாஜகவின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இதை எவ்வளவு இறங்கி வந்து அண்ணாமலை விளக்கம் கொடுக்க முயற்சி செய்தாலும், மக்களை சமாதானப்படுத்த இயலவில்லை.
தமிழக அரசின் மீது தமிழக ஆளுநர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் சாட்டையை சுழற்றுவார் என்றும், ரகசிய அறிக்கை அனுப்பியிருப்பதாக வலதுசாரி நாளிதழான தினமலரில் வெளியான செய்தியையும் மறந்துவிடக் கூடாது.
இந்தப் பின்னணியில், இந்த தஞ்சாவூர் மாணவி தற்கொலை சம்பவத்தை பிஜேபி கையில் எடுத்துக்கொண்டு, தங்களுக்கு ஏற்றவாறு புனைந்து கொண்டு மதவாதப் பிரச்சினைகளை உருவாக்கப் பார்க்கிறார்கள். குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு முதல்வர் சவால் விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க வலதுசாரி குழுக்களின் தெளிவான சதிதானே தவிர இது வேறில்லை.
அண்ணாமலை தற்போது விரக்தியில் இருக்கிறார். அவர் தீவிரமான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தக்கூடிய தலைவராகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்புகிறார். அவர் தனது நிலையைப் பற்றி கவலைப்படத் தொடங்கியுள்ளார். அவர் கடுமையாக ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்.
அதனால்தான் ஒட்டுமொத்த வலதுசாரி குழுக்களின் உதவியோடு தஞ்சாவூர் தற்கொலை வழக்கைப் பயன்படுத்தி திமுக அரசைக் குறிவைத்து, அதற்கு மதவாதச் சாயம் பூச பாஜக விரும்புகிறது. மாநிலம் முழுவதும் குடியரசு தின ஊர்தியை அனுப்ப திமுக அரசு செய்த நடவடிக்கை அண்ணாமலையை மேலும் தூண்டியது. டெல்லி தலைமையிடம் தன்னை நிரூபிப்பதில் அவர் ஆசைப்படுகிறார்” என்று அந்தப் பத்திரிகையாளர் கூறினார்.
இந்தச் சிக்கலானத் தாக்குதலை மு.க.ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் மொழிபெயர்ப்பு: வேடிக்கை பார்ப்பவன் @GuruTamil
Sir I am Impressed your words
https://youtu.be/y37rKDKmY-I
Listen to Annamalai sir’s words at 4:50 min in video.
4:40 min
தமிழ் நாட்டு மக்கள் பீ.ஜே.பீ…..க்கு செருப்படி கொடுக்க வேண்டும்
I have a small doubt, What is “kataya matha matram” ?. Religious is full of beliefs. How one can force the beliefs
Savukku… savukku.. anitha’ku vendi poraduna athu niyam.. lavanya ku poraduna athu aniyam.. yena pesura ne.. ?
Sir, நீங்கள் வெளிப்படையாக பேசுவது எனக்கு ரெம்ப பிடிக்கும், ஆனால் இந்த நாட்டில் நாம் நியாயத்தை வெளிப்படையாக பேசுகிறவனைத் தான் ஏதோ குற்றம் செய்கிறது போல் பல பேர்கள் எதிரியாக பார்க்கிறார்கள், ஆனால் தவறு செய்கிறவன் எவ்வளவு தைரியமாக இருக்கிறான்
ஆனால் எல்லா விதத்திலும் நியாயமாக நடக்க வேண்டும் என்கிறவனுக்குத் தான் இந்த சமூகம் பயத்தைக் காட்டுகிறது, சமூகத்தில் தவறு செய்கிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறதே காரணம் !
One kind request. Please redact the girl’s name in Narayan Thirupathi’s statement.
சவுக்கு இதழின் நீண்ட நாளைய வாசகன் நான். ஆனால், சமீப காலங்களாக மிக ஒரு தலைப்பட்சமாகவாவே உங்கள் பதிவுகள் வருவது நல்ல பத்திரிக்கைகான குறியீடு அல்ல. அதுவும், பா.ஜ.க. வினைப் பற்றி மட்டுமே அவதூறாக எழுதுவதும் ஏற்புடையதல்ல. இந்தக் கட்டுரையில் கூட VHP பற்றி எழுதும் குண்டர்கள் என குறிப்பிட்டுள்ளீர்கள். சாதாரணமாக அந்த அமைப்பினைக் குறிபிட்டு எழுதியிருந்தால் உங்களை நடுநிலையாளராக ஏற்றுக் கொள்ளலாம். அது போலவே, கருப்பு முருகானந்தம் பற்றிச் சொல்லும்போது பல கிரிமினல் வழக்குகள் கொண்ட எனவும் சொல்கிறீர்கள். Teleprompter failure பற்றிக் குறிப்பிடுவதிலும் பிரதமரை குறைக் காட்டி சாடுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியும், உலக அளவில் நடக்கும் எந்த ஒரு மாநாடுகளிலும் தலைவர்களின் உரை முன்னறே தயார் செய்யப்பட்டு நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் தரப்பட வேண்டும். அவர்கள் உரையாற்றும்போதே அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்கள் அனைவருக்கும் அவர்கள் விரும்பும் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதற்காக முன்னரே உரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குத் தரப்பட வேண்டும். முன்பெல்லாம் அந்த உரைகள் எழுத்து வடிவில் தரப்பட்டு அதைப் பார்த்து வாசிப்பது தான் நடைமுறை. இப்போது digital முறையில் teleprompter முறையில் நடைபெறுகிறது. இதெல்லாம் தாங்கள் அறியாமல் இருக்க மாட்டீர்கள். ஆனால், உங்கள் நோக்கம் பாரதிய ஜனதா மற்றும் அதன் தலைவர்களை இழிவுபடுத்த முற்படுவது மட்டுமே என நினைக்கத் தோன்றுகிறது.
நீங்கள் தி.மு.க. விற்கு ஆதரவாகவும், அவர்களை குஷிப் படுத்துவதற்காகவும் மட்டுமே உங்களின் சவுக்குத் தளம் மாறிவிட்டது என உணரும்போது இத்தனை ஆண்டுகள் சவால்கள் பலவற்றை சந்த்தித்து எதிர் நீச்சல் போட்டு வந்த உங்களின் தீரம் விலை போய்விட்டது உறுதியாகத் தெரிகிறது.
மிகவும் வருத்தமே.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. சவுக்கு சோரம் போய் ரொம்ப நாளாகி விட்டது.!
ஐயா, வணக்கம்
நாங்கள் பறையர் இனத்தைச்சார்ந்த பொது மக்கள், நாங்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கீழஊரணி தெற்கு பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்க காலனி அமைப்பதற்காக 1965 ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டியின் ஏற்பாட்டில், நடிகர் திலகம் #சிவாஜிகணேசன் அவர்கள் தேன்கூடு என்கிற ஒரு நாடகம் நடித்து, அதில் கிடைத்த தொகையைக்கொண்டு சிவாஜி கணேசன் காலனியை அமைப்பதற்காக, சினிமா படத்தயாரிப்பாளர் ஏ.வி.எம். பழனிய்யப்பச்செட்டியார் மூலம் எங்களுக்கு காரைக்குடி செஞ்சை பகுதியில் வார்டு 17, பிளாக் 11, சர்வே எண்கள்: 450, 451, 452 ஆகியவை அடங்கிய இரண்டரை ஏக்கர் மனையிடத்தை 10.5.1965 அன்று கிரையம் செய்து கொடுத்தார்கள். 11.05.1965 அன்று முதல்வர் கே.காமராஜர் அவர்களால் சிவாஜி கணேசன் காலனிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அந்த இடத்திற்கு எங்கள் பெயரில் பட்டாவும் உள்ளது. அந்த இடத்தை நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை மண்டல ஒருங்கிணைப்பாளர் லெ .மாறன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து தன் பெயரில் மோசடியாக பட்டாவை மாற்றி வருகிறார். இது சம்மந்தமாக SC /ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க 2 முறை காரைக்குடி டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.
தற்போது மேற்படி நபருக்கு நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கி இருக்கிறார்கள்… இது சம்மந்தமாக தங்களிடம் பேச வேண்டும்