சுயசரிதை என்பது, ஏறக்குறைய நமது வாழ்நாளின் அந்திம காலத்தில் எழுதப்படுவதுதான். அதில் பொய் எழுதுவதற்கு எழுதாமலேயே இருக்கலாம்.
எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு கூடுதல் டிஜிபி பணி ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலம் eventful என்பது எனக்கு நன்றாக தெரியும். அவர் ஓய்வு பெற்ற பிறகு சந்தித்தபோது, நீங்கள் ஏன் சுயசரிதை எழுதக் கூடாது, நான் உதவி செய்கிறேன் என்று சொன்னேன். அவர் “சங்கர், நான் உண்மையை எழுதினால் பலர் காயப்படுவார்கள். நான் உண்மையை மறைத்தோ, பொய்யையோ எழுத விரும்பவில்லை. சில ரகசியங்கள் என்னோடே போகட்டுமே” என்றார்.
அந்த வகையில் சுயசரிதை என்பது ஒரு உயில்தான்.
ஆங்கிலத்தில் பல்வேறு சுயசரிதைகளும், சரிதைகளும் வந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்த சுயசரிதை, காலம் சென்ற பத்திரிக்கையாளர் வினோத் மேத்தாவின் A Lucknow Boy மற்றும், Editor Unplugged (Media, Magnates, Netas & Me). இந்த இரு புத்தகங்களில் இருந்து நான் கற்றவை பல. எனது எழுத்துக்களையும், என் கருத்துக்களையும், பெருமளவில் இப்புத்தகங்கள் செழுமைப்படுத்தியுள்ளன.
ஒரு வகையில் எல்லா புத்தகங்களும் நம்மை செழுமைப்படுத்தத்தானே !!! பிடித்தவை நெருக்கமாகின்றன. நெருக்கமில்லாதவை கரைந்து போகின்றன.
சமீபத்தில் தமிழில் வெளியாகி, அந்நூலின் எழுத்தாளராலேயே கையொப்பமிட்டு பரிசளிக்கப்பட்ட புத்தகம் என்றால், “நானும் நீதிபதி ஆனேன்”. எழுதியவர் நீதிபதி சந்துரு.
நீதிபதி சந்துரு எனக்கு, அவரோடு சட்டக்கல்லூரியில் பயின்று இன்று வரை நெருக்கமான நண்பராக உள்ள வழக்கறிஞர் ராஜாராம். அவர் சந்துருவை சந்தித்து விட்டு வந்து, “அவன் பாட்டுக்கு லுங்கி கட்டிட்டு, ஸ்டாபுங்க கூட அரட்டை அடிச்சிக்கிட்டே ஆர்டர் டிக்டேட் பண்ணிட்டு இருக்கான்” என்பார் ஒரு முறை.
மற்றொரு முறை, “ஒரு ஜட்ஜ் மாதிரியே இல்ல. ஜீன்ஸும், டீ ஷர்ட்டும் போட்டுக்கிட்டு, என் கூட தேனிக்கு வந்தான்” என்பார். அப்போது, நீதிபதி சந்துருவை பற்றி ஒரு குழப்பமான பிம்பம் தான் இருந்தது.
நான் ஒரு 6 ஆண்டுகள் ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் வேலை பார்த்தேன். சந்துரு வழக்கறிஞர்கள் இடையே unpopular. ஏனென்றால், வழக்கறிஞர்களுக்கு, நீதிபதிகளுக்கு இடையே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கும்.
“டிஸ்மிஸ் பண்ணிடாதீங்க. நோட்டீஸ் ஆர்டர் பண்ணீங்கன்னா பீஸ் வாங்கிடுவேன்” என்பதை வழக்கறிஞர் கண்ணாலேயே சொல்லி விடுவார். நீதிபதி புரிந்து கொண்டு, “நோட்டீஸ். 4 வீக்ஸ்” என்பார். கட்சிக்காரர் அந்த காட்சியை பார்த்து விட்டு, இந்த நீதிபதிகள் ஏதோ சட்டப்படிதான் தீர்ப்பளிக்கப் போகிறார்கள் என்ற தவறான நம்பிக்கையோடு செல்வார்கள். வக்கீல், “நோட்டீஸ் ஆர்டர் பண்ணிருக்காரு. நல்ல ஜட்ஜ். எப்படியும் நமக்கு பேவரா ஆர்டர் வாங்கிடலாம்” என்று நிறுத்தியதும், கட்சிக்காரர், “சார் இதுல ஒரு 20 ஆயிரம் இருக்கு” என்று முடிக்கும் முன்னரே வக்கீல் “அடுத்த வாய்தாவுல பாத்துக்கலாம்” என்பார்.
அந்த அந்த ஒரு அடுத்த வாய்தா, அடுத்தடுத்த வாய்தாக்களாக மாறி, குறைந்தது, 4 முதல் 12 ஆண்டுகள் வரை ஆகும். அது வரை, வக்கீல் அவரது அலுவலகத்தில் 1.5 டன் ஏசியை 2.5 டன் ஏசியாக மாற்றுவார். புதிய கம்ப்யூட்டர் வாங்குவார். புது புது ஜூனியர்களாக சேர்த்து சம்பளம் அளிப்பார்.
பத்தாம் ஆண்டின் இறுதியில் கட்சிக்காரர் இறப்பார், அல்லது வக்கீல் இறப்பார். வழக்கும் இறக்கும்.
நான் அப்போது வழக்கறிஞர் அலுவலகத்தில் இருப்பதால், வழக்கறிஞரோடு நீதிமன்றம் செல்வேன். சந்துருவின் கோர்ட்டுக்கும் சென்றிருக்கிறேன்.
10.30க்கு கோர்ட் என்றால், சந்துரு 10.20க்கு வந்து விடுவார். 10.40க்கு 30 வழக்குகள் தள்ளுபடி. நிமிர்ந்தே பார்க்க மாட்டார். யாரு வக்கீலு, எந்த ஜாதி, எம்பிஏ மெம்பரா, சீனியரா, அரசுக்கு நெருக்கமானவரா, தலைமை நீதிபதிக்கு நெருக்கமானவரா, மத்திய உளவுத் துறையிலிருந்து சொல்லிய வழக்கறிஞரா, சொந்த சாதி வழக்கறிஞரா என எதையும் பார்க்க மாட்டார்.
வழக்கில் மெரிட் இருக்கிறதா. இந்த மனுவில் சொல்லாதது எதையும் புதிதாக எதிர்காலத்தில் சொல்லப்போவது இல்லை. உச்சநீதிமன்ற முன்னுதாரண தீர்ப்பின்படி, இந்த வழக்கை ஏற்க இயலாது. எதற்கு நிலுவையில் வைக்க வேண்டும் ?
அவ்வளவுதான். அப்போது வழக்கறிஞர் அலுவலகத்தில் பணியாற்றியதால், நான் வழக்கறிஞர்களின் சிரமங்களை அறிந்தவன். ஒரு நோட்டீஸ் போட்டாத்தான் என்ன ? என்றே எண்ணுவேன்.
இன்று சந்துருவிடம் பேசியபோது, இதையே சொன்னேன். அவர், “சார் நான் மக்களுக்காக ஜட்ஜா, வக்கீல் பொழைக்கிறதுக்காக ஜட்ஜா” என்றார். பொட்டில் அடித்தார்ப்போல இருந்தது. இது குறித்து அவர் நூலிலும் விளக்கியிருக்கிறார்.
தனது நீதிபதி பதவிக்காலத்தில், 97 ஆயிரம் வழக்குகளை பைசல் செய்திருக்கிறார். உளச்சுத்தியோடு சொல்கிறேன். அவ்வழக்குகளை பைசல் செய்த சந்துருவின் உள்ளத்தில், “நான் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறேன். அதற்கேற்றார்போல உழைக்க வேண்டும் என்றும், நிலுவையை குறைக்க வேண்டும் என்றும், என் உடல் பொருள் ஆவி அனைத்தும் மக்களுக்கே” என்ற நோக்கம் மட்டுமே இருந்ததாக நான் புரிந்து கொள்கிறேன்.
சந்துருவின் வாழ்க்கை ஒரு கரடுமுரடான முட்புதர்கள் நிறைந்த பயணம். அதில் சிறப்பு என்னவென்றால், இந்த பாதை அவர் மிகவும் விரும்பி தேர்ந்தெடுத்தது. அந்த நூல் நெடுகிலும், ஒரு இடத்தில் கூட, இந்த பாதையை தேர்ந்தெடுத்ததற்கான வருத்தத்தையோ, கழிவிரக்கத்தையோ, புலம்பலையோ நான் பார்க்கவில்லை.
மாறாக, நூல் நெடுகிலும் பாரதி மற்றும் ஜெயகாந்தன் கலந்த ஒரு அறச்சீற்றத்தைத்தான் கண்டேன். அதை நான் ரசிக்கிறேன். எனக்க்கும் அது போன்ற ஒரு அறச்சீற்றம் உண்டுதானே !!!
சந்துருவின் முன்னுரையில், இந்நூல் உருவானதன் காரணங்களை குறிப்பிட்டுருக்கிறார். ஒரு நாள், நீதிபதி சந்துரு அன்புமணி ராமதாஸின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். ஒரு சாதியவாதியின் கூட்டத்தில் எப்படி சந்துரு கலந்து கொள்ளலாம் ? ஒரு கம்யூனிஸ்ட் இதை செய்யலாமா ? சந்துருவா ? என்று தொடங்கி, ‘மனுசனா நீ’ என்பது வரை விமர்சனங்கள் நீண்டன.
வினோத் மேத்தா, வரலாறு என்னை எப்படி உணர வேண்டும் என்று விரும்பினேன் என்று இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“நான் யாரையும் பின்பற்றக் கூடாது. என்னை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும். கோபப்படாதீர்கள். என்னை என்றால் நான் யார் ? நான் இல்லாதபோது யாராவது கேட்டால், “டீசண்டான ஆளுப்பா” என்று சொல்வதையே என் வாழ்நாளின் பெரும் சாதனையாக கருதுகிறேன். நான் வரலாற்றின் பக்கங்களில் இடம் பெறுவேனா… அல்லது அதன் அடிக்குறிப்பில் மறைந்து போவேனோ என்று எனக்கு தெரியாது. நான் இறந்த பிறகு, எனது நண்பர்களும் உறவினர்களும், “அவன் டீசண்டானவன் பா” என்று சொல்வதையே என் வாழ்நாளின் சாதனையாக நினைக்கிறேன். எனக்கு 2011 வரை இருக்கிறது என்று நினைக்கிறேன். அது வரை “டீசண்டான ஆளாக” இருக்க விரும்புகிறேன்” என்றார்.
சந்துரு வேறு கோணம். “நான் இறந்த பிறகு என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் நினைக்க ஒருவருக்கு உரிமை இருக்கிறதுதானே” எனும் கேட்டகிரி. நான் அதற்கு அடுத்தபடி.
“நானே இருக்க மாட்டேன். எவன் என்ன நினைச்சா என்ன ?” இது என் கோணம்.
அப்படி ஒரு விமர்சன கடிதம் வந்த பிறகுதான் ‘நாம் இந்த வாழ்வில் என்னதான் செய்திருக்கிறோம் என்று எழுதலாம்’ என இந்நூலை தொடங்கினேன் என்கிறார் சந்துரு.
இன்று என்னோடு பேசியபோது, “அன்புமணி எனது நண்பர். அவர் அழைத்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக, நான் இத்தனை ஆண்டுகாலமாக செய்த பொதுவாழ்வு ஒரு நிகழ்வில் மறைந்து போய் விடுமோ” என்று ஆதங்கப்பட்டார்.
நான் சந்துருவின் காரணங்களை ஏற்கவில்லை. புரிந்து கொள்கிறேன்.
நீதிபதி சந்துரு அவர்கள் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். ஏன் இத்தனை விமர்சனக்கணைகள் ? ஏன் இவ்வளவு கோபம் ?
ஒரே காரணம். ‘அது சந்துரு என்பதால்தான்’. சந்துருவா ? என்ற வார்த்தையில் ஆயிரம் பொருள் உள்ளது. அந்த அளவுக்கு உங்கள் மீது எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது எங்கள் குற்றமா ? உங்கள் குற்றம் அல்லவா நீதிபதி அவர்களே ?
அந்த விமர்சனங்களை நான் அப்படித்தான் புரிந்து கொள்கிறேன்.
இரு முக்கியமான விஷயங்களை இந்நூல் குறித்து குறிப்பிட விரும்புகிறேன்.
கருணாநிதி இறந்த பிறகு, அவர் இல்லாமை எனக்கு ஏக்கத்தை ஏற்படுத்துவது உண்மை. அதனால், அவர் இழைத்த பல பெரிய தவறுகளை என் மனது தானாக சமாதானப்படுத்திக் கொள்கிறது.
ஆனால், நீதிபதி சந்துரு அவர்கள், கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்களில் ஒருவரான உதயகுமாரின் மர்ம மரணம், மாணவர்களின் விடுதிகளில் புகுந்து காவல் துறை நடத்திய தடியடி, உதயக்குமாரின் பெற்றொர், திமுகவினரின் காரில் வந்து, இறந்தது எங்கள் மகன் அல்ல என்று சாட்சியம் அளித்தது, அம்மாணவர் போராட்டத்தை கருணாநிதி திசை திருப்பியது, விசாரணை ஆணையம் அமைத்து உண்மையை குழிதோண்டி புதைத்ததை விவரித்ததை படிக்கையில், மனம் பதைபதைத்தது.
சட்டப்பேரவையில், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் கேள்விக்கு, “இறந்து போனவரின் பெற்றோரே இது என் மகனல்ல என்று கூறி விட்ட பிறகு அரசு என்ன செய்ய முடியும்”
“பட்டமளிப்பு விழா கூட்டத்திரளில் நக்சலைட்டுகள் ஊடுருவி மறைந்து, என்னை கொல்வதற்கான சதி காவல் துறையால் முறியடிக்கப்பட்டது” என்று கூசாமல் பேசினார்.
பின்னாளில் கருணாநிதி இன்னும் கடினமான, இரக்கமில்லா அரசியல்வாதியாக மாறிப்போனார். (அரசியல் அவரை மாற்றியது என்று வேண்டுமானால் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்).
இரண்டாவது, நெருக்கடி நிலை காலத்தில் கைதிகள் மீது இழைக்கப்பட்ட பெரும் கொடுமை, அதை தொடர்ந்து அமைக்கப்பட்ட பதவியில் இருந்த உயர்நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில் கமிஷன்.
உதயக்குமார் விசாரணை ஆணையமான ராமசாமி ஆணையம் ஒரு ஆணையம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கும், நிர்வாக அனுபவம் இல்லாத கருணாநிதி ஒரு கொலையை எப்படி மூடி மறைத்தார் என்பதையும் புரிந்து கொள்ள உதவும். இஸ்மாயில் ஆணையம், ஒரு ஆணையம் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும், அதன் பரிந்துரைகளை ஒரு அரசு எப்படி குப்பைக்கு அனுப்பும் என்பதையும் உணர்த்தியது.
இரு ஆணையங்களால் விளைந்த ஒரே பயன், அதில் ஒரு நீதிபதி, சந்துருவை வழக்கறிஞராக படிக்க அறிவுறுத்தியதுதான். இரு ஆணையங்களிலும் சந்துரு மார்க்சிஸ்ட் கட்சியின், மாணவர் சங்க பிரதிநிதியாக கலந்து கொண்டு, கல்லூரியில் சேராமலேயே ஒரு ஆணையத்திலும், வழக்கறிஞராக ஒரு ஆணையத்திலும் பயின்றிருக்கிறார்.
புனித பசுக்கள் என்று சில சப்ஜெக்டுகள் இருக்கின்றன. ஒருவரும் பேச மாட்டார்கள். சந்துருவின் பிடிவாதமும், சில புனித பசுக்களின் பிம்பங்கள் உடைந்தால் தான் என்ன என்ற ஆதங்கமும், அவர் நீதிபதியானது எப்படி, நீதிபதி தேர்வு முறை எத்தகைய ஒரு அயோக்கியத்தனமான தேர்வு முறை என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார். மீண்டும் சொல்கிறேன். அயோக்கியத்தனமான தேர்வு முறை.
2001ம் ஆண்டே அவர் நீதிபதி ஆகியிருக்க வேண்டியது. அப்படி ஆகியிருந்தால், உச்சநீதிமன்றம் ஒரு புரட்சியாளரை சந்தித்திருக்கும்.
2006ம் ஆண்டுதான் நீதிபதியாகிறார். ஒரு முறை, நான் வழக்கறிஞர் அலுவலகத்தில் பணியிலிருந்த சமயம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், செய்தித்தாளில் விளம்பரம் தராமல், ஆளுக்கொரு அரசு ஊழியரை ப்யூனாக நியமித்துள்ளார்கள் என்று தகவல் வந்தது.
நான் 4 நீதிபதிகள் பெயரை சொல்லி, இவர்கள் கேண்டிடேட் போட்டிருக்க மாட்டார்கள் என்றேன். வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், “சந்துருவை தவிர எல்லோரும் போட்டுருப்பாங்க பாருங்க” என்றார். சான்ஸே இல்ல சார் என்று, ஒரு நண்பர் எடுத்து தந்த பட்டியலை வாங்கிப் பார்த்தால், சந்துரு மட்டும்தான் கேண்டிடேட் போடவில்லை. எனது கணிப்பு பொய்யானதில் எனக்கு மிகுந்த வருத்தம். பிறகு அந்த நியமனங்களை வழக்கு போட்டு கெடுத்து விட்டோம்.
ஒரு கம்யூனிஸ்ட் நீதிபதியாகலாமா ? இதுதான் சந்துருவின் மீது எழுந்த பெரும் விமர்சனம். ஜெய்பீம் படத்துக்கு பிறகு பலர் தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதாக சொன்ன அவர், சார் நான் உழைத்த இத்தனை உழைப்பை தூக்கி எறிந்தவர்கள், ஒரு படத்துக்காக பாராட்டுறது எனக்கு அவமானம் என்றார். அதுவும் சரிதானே…
ஆனால் உலகம் அப்படிப்பட்டதுதானே…. ஒரு நாள் உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்து கொண்டாடும். கேட்டாலும் இறக்கி விடாது. ஒரு நாள், “ச்சீ இவனா ?” என்று ஏசும். இவை இரண்டையுமே ஒன்றாக பாவிக்கும் பக்குவத்தை நோக்கி நகர்வதுதானே உன்னதம் ? அந்த உன்னதத்தை நோக்கி நான் நகர்ந்து கொண்டிருக்கிறேன்.
தோழர் சந்துருவும் நகர்வார் என்று நம்புகிறேன்.
சந்துருவின் இத்தனை அர்ப்பணிப்புக்கும், பண்புக்கும் துளியும் நன்றி செலுத்தாது, தமிழக மார்க்சிஸ்ட் கட்சி இவரை நடத்திய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இவரை கடுமையாக விமர்சனம் செய்ததைக் கூட ஒரு செம்மறியாட்டு நடத்தை என்று பொறுத்துக் கொள்வேன். ஆனால், சிபிஎம் நடத்திய ஜெய்பீம் திரைப்பட பாராட்டு விழாவுக்கு சந்துருவை அழைக்காததை நான் ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன். இது புழுவைப் போன்ற அற்பத்தனம். அதிலும் இவர்களின் தில்லுமுல்லு மன்னிக்க முடியாதது.
பலர் சந்துருவை அழைத்து ஏன் வரவில்லை என்றபோது அவர், “அவர்கள் என்னை அழைக்கவில்லை” என்றார். ஆனால் கட்சியோ, “சந்துரு ஊர்ல இல்லையாம்” என்ற கதையை கட்டவிழ்த்து விட்டது. இன்னும் கடுமையாக விமர்சிப்பேன். அவர்களின் சித்தாந்தத்தின் மீது உள்ள மரியாதையினால் நிறுத்திக் கொள்கிறேன்.
சந்துரு என்னிடம், “லைட் பாய்ல இருந்து காஸ்ட்யூமர் வரைக்கும் கூப்புட்டுருக்காங்க சங்கர்” என்று வருத்தப்பட்டார்.
சந்துரு, நீதிபதியாக ஆற்றிய சாதனைகளை தெரிந்து கொள்கையில், அவரின் முடிவு மிக மிகச் சரி என்பதில் முழுமையாக உடன்படுகிறேன். ஒரே ஒரு வழக்கை மட்டும் உதாரணமாக கூற விரும்புகிறேன்.
ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த பெண், சத்துணவு பணியாளராக நியமிக்க எதிர்ப்பு எழுந்தபோது சந்துரு அளித்த தீர்ப்பினால், தமிழகம் முழுக்க 25 ஆயிரம் நியமனங்கள் நடந்தன. இதை ஒரு யுகபுரட்சியாகவே பார்க்கிறேன்.
சந்துருவின் புத்தத்தை படித்ததில் தெரிந்த மற்றொரு விஷயம், பிஜேபி இன்று தமிழகத்தில் வளரவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்ட நீதிமன்றத்தையும் துணைக்கு அழைத்துள்ளனர். இது 20 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது. சந்துரு போன்றோர் இவர்களின் சதித்திட்டத்தை புரிந்து கொண்டனர்.
ஆனால் சாமிநாதன்கள் இருப்பதே இவர்கள் பக்கம்தானே !!!
Overall ஒரு bird’s eye viewவில், தோழர் சந்துருவின் வாழ்க்கையை நடத்தியது, நடத்திக் கொண்டிருப்பது, நடத்தப் போவது மார்க்சியமும் மக்கள் நேசமும்.
சமூகத்தின் மீதும், சக மனிதர்கள் மீதும் அன்பு கொண்டோர் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்
நானும் நீதிபதி ஆனேன்
அருஞ்சொல் பதிப்பகத்தின் முதல் நூல்
சட்டப்புத்தகங்கள் விற்கும் சீத்தாராமன் அண்ட் கோவில் புத்தகம் கிடைக்கும்.
அடுத்த வாரம் தொடங்க இருக்கும் சென்னை புத்தக கண்காட்சியிலும் கிடைக்கும்.
அட்டகாசம் தோழர்
Very nice article. Enjoyed it. I am not sure this book is available in the US. will check.
Looking forward to reading it.
Thanks Savukku for your continued service!
Regards, Subramaniam
நீதிபதி சந்துரு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருக்கும் போது நீதிமன்றத்தின் மீது ஒரு இடைக்கால நம்பிக்கை வந்தது எனக்கு. பின் நீதிபதி கிருபாகரன் இருந்த போதும் ஏதோ சி. பி. எம் ன்னு ஒரு தி. மு. க. சங்கத்தைத் பற்றி எழுதியிருக்கீங்க. உங்களைப் போன்ற சமுக அக்கறை யாளர்கள் சமுதாயத்தில் உள்ளதை எழுதுங்கள். சி. பி. எம் போன்ற இறந்த வற்றை எழுதாதீர்கள்.
Hai sir i am a college student i want to talk with you ,u inspired me
I want to meet you sir
I am college student sir. I want to meet you sir and.i like your talks…
Credible comment. I would like to read the book. Tamil Nadu in need of judges like Justice Chandru . keep rocking sir.
அருமையான பதிவு. நிச்சயம் அந்த புத்தகம் வாங்கி படிப்பேன்
“இவர் ஒரு நேர்மையான, நீதிபதி, என்பதை, கேள்விப்பட்டேன், உங்கள், பதிவால், தெரிந்துக்கொண்டேன், தோழரே!!? நன்றி
//
சந்துருவின் புத்தத்தை படித்ததில் தெரிந்த மற்றொரு விஷயம், பிஜேபி இன்று தமிழகத்தில் வளரவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்ட நீதிமன்றத்தையும் துணைக்கு அழைத்துள்ளனர். இது 20 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது. சந்துரு போன்றோர் இவர்களின் சதித்திட்டத்தை புரிந்து கொண்டனர்.
ஆனால் சாமிநாதன்கள் இருப்பதே இவர்கள் பக்கம்தானே !!!
//
போகிற போக்கில் எவ்வளவு அழகாக புழுதி வாரி வீசுகிறீர்கள்! நீதிபதியை எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி எழுதினால் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடக்கூடாது?
ஜட்ஜ் சாமிநாதனே ஒரு காவி சாக்கடை, அந்த ஆள் மேல் புழுதி வாரி வீசுராங்களாம்! வாய்யா Anonymous பேர்வழி
//ஆனால், நீதிபதி சந்துரு அவர்கள், கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்களில் ஒருவரான உதயகுமாரின் மர்ம மரணம், மாணவர்களின் விடுதிகளில் புகுந்து காவல் துறை நடத்திய தடியடி, உதயக்குமாரின் பெற்றொர், திமுகவினரின் காரில் வந்து, இறந்தது எங்கள் மகன் அல்ல என்று சாட்சியம் அளித்தது, அம்மாணவர் போராட்டத்தை கருணாநிதி திசை திருப்பியது, விசாரணை ஆணையம் அமைத்து உண்மையை குழிதோண்டி புதைத்ததை விவரித்ததை படிக்கையில், மனம் பதைபதைத்தது.
சட்டப்பேரவையில், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் கேள்விக்கு, “இறந்து போனவரின் பெற்றோரே இது என் மகனல்ல என்று கூறி விட்ட பிறகு அரசு என்ன செய்ய முடியும்”
“பட்டமளிப்பு விழா கூட்டத்திரளில் நக்சலைட்டுகள் ஊடுருவி மறைந்து, என்னை கொல்வதற்கான சதி காவல் துறையால் முறியடிக்கப்பட்டது” என்று கூசாமல் பேசினார்.//
இன்றைய தலைமுறை, 40-50 வயதுள்ளவர்களுக்கு நிறைய பேருக்கு இந்த சம்பவம் தெரியாது.. இன்றைய திமுக ஜால்ரா ஊடங்கங்கள் எதுவும் சொல்லவும் சொல்லாது.. விரிவாக நீங்கள் ஒரு மீள் பதிவு போட வேண்டும்.. ஒரு வேளை இக்காலம் போல சமூக வலை தளங்கள் இருந்திருந்தால் எழுச்சி ஏற்பட்டு நிலை வேறாய் இருந்திருக்கும்.!!
Can you please talk about dotbusters issues faced to who people who are protesting against hijab.
Only if they know history they will leave these stupidity thinking they are majority and comfortable
Hi sir iam an college student i would like to meet you atleast a phone call
my e mail subramaniranesh@gmail.com
Ho sir iam an college student i would like to meet you atleast a phone call
my e mail subramaniranesh@gmail.com
He is a true legend Sir…Hats Off!
அருமையான பதிவு தோழர்