பிஜேபியின் பிரசாரத்துக்கும் அதை பரவலாக்குவதற்கும் பல மறைமுக விளம்பரதாரர்களுக்கு ரகசியமாக நிதியுதவி செய்ய அனுமதிக்கிறது ஃபேஸ்புக்.
பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரங்களுக்கும் , இந்தியாவின் ஆளும் கட்சியை முன்னிலைப்படுத்தவும் மறைமுக மற்றும் மாற்று விளம்பரதாரர்கள் நிதியுதவி செய்வதை ஃபேஸ்புக் ரகசியமாக ஊக்குவிக்கிறது. இதனைக் கடந்த 22 மாதங்களாக நடைபெற்ற 10 தேர்தல்களின் போதும் இடம்பெற்ற விளம்பரங்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.
இந்த விளம்பரதாரர்கள் தங்களின் அடையாளங்களை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிஜேபியினுடனான தங்களின் நெருக்கத்தையும் அவர்கள் வெளிக்காட்டுவதில்லை. இவர்கள் ஃபேஸ்புக்கிற்கு பல இலட்சம் ரூபாய் அளவில் விளம்பரங்களைத் தருகின்றனர். இவை யாவும் இந்தியாவின் ஆளுங்கட்சியையும் அதன் தலைவர்களையும் விளம்பரப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்கள் அதிக பார்வையாளர்களைப் பெற்றிருக்கின்றன. அதாவது பிஜேபியின் அதிகாரப்பூர்வ விளம்பரங்களைப் பார்ப்பவர்களின் அதே எண்ணிக்கையை இந்த மறைமுக விளம்பரங்களும் பெற்றிருக்கின்றன. இந்த மறைமுக விளம்பரங்கள் யாவும் ஆளுங்கட்சியோடு எந்தவித அதிகாரப்பூர்வமான தொடர்பும் இல்லாதது போல தோற்றமளிக்கிறது.
இதில் இடம் பெறும் ஆளுங்கட்சி சார்பான கருத்துகளுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு என்பது போன்றதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
தி ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ் என்பது இந்தியாவைச் சேர்ந்த இலாப நோக்கமற்ற ஊடக அமைப்பு. இந்த அமைப்பு பிப்ரவரி 2019 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் அரசியல் விளம்பரங்களுக்கு ஐந்து இலட்சத்திற்கும் மேலாக தொகை செலுத்திய விளம்பரங்களின் விவரங்களைத் தொகுத்திருந்தது.
இந்த விவரங்களை விளம்பர நூலகமான ஏபிஐ (Application Programming Interface (API)) மூலம் பெற்றிருந்தது. இது மெட்டாவின் (Meta)வின் ‘வெளிப்படைத்தன்மை’ கொண்ட ஒரு பயன்பாட்டுத் தளம். இதன் மூலமாக இந்தத் தளத்தில் வெளியிடப்படுகிற அரசியல் விளம்பரங்கள் குறித்த புள்ளிவிவரங்களை நாம் பெற முடியும். பாராளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல், இந்தக் காலகட்டத்தில் டெல்லி, ஓடிசா, பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலத் தேர்தல் பிரச்சார விளம்பரங்களின் விவரங்களையும் பெற முடிந்தது.
பிஜேபி மற்றும் அதன் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக 26,291 விளம்பரங்களை வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் இதற்காக 104 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என்றும் டிஆர்சி கண்டு கொண்டது. இந்த விளம்பரங்களை 1.36 பில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் கண்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் மறைமுக விளம்பரதாரர்கள் 34,884 விளம்பரங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் 58.3 மில்லியன் தொகையினை கட்டணமாக ஃபேஸ்புக்கிற்கு செலுத்தியிருக்கிறார்கள். இவை யாவும் பிஜேபியின் பெருமையைப் பேசுவதற்கும் எதிர்க்கட்சிகளின் பெருமையைக் குலைக்கும் விதமாகவும் வெளியிடப்பட்ட விளம்பரங்கள். இவர்கள் யாரும் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை என்பதோடு கட்சியுடனான தங்களின் தொடர்பையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த விளம்பரங்கள் 1.31 பில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது.
இதோடு ஒப்பிடும்போது பிஜேபியின் பிரதான எதிர்கட்சியான காங்கிரசுக்கு ஆதரவான மறைமுக விளம்பரதாரர்களின் பங்களிப்பு சொற்பமானதாகவே இருக்கிறது. காங்கிரசும் அதன் வேட்பாளர்களும் அதிகாரப்பூர்வமாக விளம்பரங்களுக்கு செலவு செய்த தொகை 64.4 மில்லியன். இதன் மூலம் 30,374 விளம்பரங்கள் வெளிவந்திருக்கின்றன. 1.1 பில்லியன் பார்வையாளர்களை இந்த விளம்பரங்கள் பெற்றிருக்கின்றன. இரண்டு மறைமுக விளம்பரதாரர்கள் மட்டும் 2.3 மில்லியன் தொகையினை செலவு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் 3,130 விளம்பரங்கள் வெளிவந்துள்ளன. காங்கிரசுக்கு ஆதரவான இந்த விளம்பரங்களும் காங்கிரசுடனான தங்களின் தொடர்பை வெளிப்படுத்தவில்லை. இந்த விளம்பரங்களை 73.8 மில்லியன் பார்வையாளர்கள் கண்டிருக்கின்றனர். மற்றுமொரு விளம்பர பக்கம் 4.95 செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1364 விளம்பரங்கள் மோடிக்கு எதிரானதாக வெளிவந்துள்ளன. இவை யாவும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மேற்குவங்காள தேர்தலின் போது வெளிவந்தவை. இதற்கு 62.4 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்திருந்தனர்.
காங்கிரசுக்கு மறைமுக விளம்பரதாரர்கள் இத்தனை குறைந்ததற்கான காரணங்களுள் ஒன்று உண்டு. 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சிகளின் விளம்பரங்களுக்கு பெரிய கட்டுப்பாட்டினை விதித்து நிறுத்தி வைத்திருந்தது ஃபேஸ்புக். அந்த சமயத்தில் ஃபேஸ்புக் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஃபேஸ்புக் அந்த நேரத்தில் 687 பக்கங்களை நீக்கியிருந்ததாகவும், அந்தப் பக்கங்கள் யாவும் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப துறையோடு தொடர்பு கொண்டிருந்த பக்கங்கள் என்றும் சொல்லியிருந்தது. ஆனால் அவர்களின் அடையாளங்களை வெளியிட மறுத்துவிட்டது ஃபேஸ்புக். அதே நேரத்தில் பிஜேபியை விளம்பரப்படுத்தும் பக்கங்களில் ஒன்றையும் பதினான்கு கணக்குகளையும் மட்டும் நீக்கியிருந்தது. அந்தப் பக்கங்களுக்கும் கட்சிக்கும் உண்டான தொடர்பை குறித்து வெளியிடாததுடன், அந்த விவரங்களை ஃபேஸ்புக் நீக்கவும் செய்திருந்தது.
டிஆர்சியின் (The Reporters Collective) நீண்ட கால ஆய்வு ஒன்றை சுட்டிக் காட்டுகிறது. பேஸ்புக் காங்கிரசின் விளம்பரங்களை நீக்குவதற்கு முன்பு இந்த விளம்பரங்கள் பேஸ்புக் பயனாளர்களை அதிகளவில் ஈர்க்கத் தொடங்கியிருந்தது. அதே சமயம் இந்தியாவின் ஆளுங்கட்சியான பிஜேபிக்கு ஆதரவாக பல மறைமுக விளம்பரதாரர்கள் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டபோதும் ஃபேஸ்புக் அதனை அத்தனை தீவிரமாகக் கட்டுப்படுத்தவில்லை.
இவையெல்லாம் இதற்கு முன்பும் கூட செய்தியாக்கி தந்திருந்தபோதும் இந்த மறைமுக விளம்பரங்கள் ஏற்படுத்தியத் தாக்கமும், அதன் ஒட்டுமொத்த செயல்பாடும் இதற்கு முன்பு மதிப்பிட்டு சொல்லப்படவில்லை.
இந்திய சட்டத்தின்படி செய்தித்தாள்களிலும் மின் ஊடகங்களிலும் மறைமுக அரசியல் விளம்பரங்கள் தடை செய்யப்பட்ட ஒன்று. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தங்களுடைய விளம்பர வாசகங்களுக்கும் கருத்துகளுக்கும் முழு பொறுப்பினை ஏற்க வேண்டும் என்கிறது இந்தியச் சட்டம். ஏனெனில் வெளிப்படையான விளம்பரங்களைத் தருவதன் மூலமாக தேர்தல் பிரச்சாரத்தில் செலவழிக்கப்பட்ட தொகைக்கான கணக்குகளை வரையறை செய்ய இந்த வெளிப்படைத்தன்மை அவசியமாகிறது.
இந்தத் தொடரின் பாகம் 1ல் நாம் கூறியிருந்தது போல, இந்திய தேர்தல் ஆணையம் இந்த விதிமுறைகளை சமூக வலைதளங்களுக்கு விரிவுபடுத்தவில்லை. தேர்தல் காலத்தில் சமூகவலைதளங்கள் மீதான கடும் விதிமுறைகளை தளர்த்துமாறு இந்திய இணையம் மற்றும் மொபைல் அமைப்பிடம் (IAMAI) பேஸ்புக் வலியுறுத்தியது என்பதை பேஸ்புக் முறைகேடுகள் குறித்து பல ரகசிய ஆதாரங்களை வெளிப்படுத்திய ஃபிரான்செஸ் ஹாகேன் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனால் பேஸ்புக்கினால் தடையில்லாமல் பிஜேபிக்கு ஆதாரவான மறைமுக விளம்பரங்களை வெளியிட முடிந்தது.
பிஜேபியின் மறைமுக சூழலமைப்பு
அமெரிக்காவில் தேர்தல் நேரத்தில் பேஸ்புக்கின் தலையீடு இருந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு பேஸ்புக் ஒரு கொள்கை வரைவினைக் கொண்டு வந்தது. அதன்படி அதன் தளங்களில் அரசியல் விளம்பரங்கள் வெளியிடுவோரின் விவரங்கள், முகவரிகள் வெளிப்படையாக இருக்கும் என்றது பேஸ்புக். தங்களுக்கு கட்டணம் செலுத்தும் விளம்பரதாரர்கள் அனைவரையும் அவர்களது முகவரியை அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. வெளிப்படைத்தன்மையை மேலும் காட்டிக்கொள்ள, இந்த அரசியல் விளம்பரங்களுக்காக பெறப்பட்ட கட்டணத்தையும் வெளிப்படுத்தியது. இவை எல்லாம் அரசியல் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடும் விளம்பரதாரர்களைத் தடுக்கவில்லை. அரசியல் கட்சிகளுடனான தங்களது நெருக்கத்தை மறைத்துக் கொண்டு அவர்கள் விளம்பரங்களை வெளியிட்டார்கள்.
பெரும்பாலான விளம்பரதாரர்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்கள் செயல்படவில்லை. அப்படியே செயல்பட்டாலும் கூட அதில் அந்த நிறுவனங்களைப் பற்றிய விவரங்களோ, அதன் உரிமையாளர் என்பதோ இடம்பெறாத ஒற்றைப் பக்கங்களைக் கொண்ட இணையதளங்களாக இருந்தன.
இந்த 23 விளம்பரதார்களில் பிஜேபியுடனான நேரடி தொடர்பை வெளிப்படுத்திய ஆறு விளம்பரதாரர்களை டிஆர்சி கண்டுகொண்டது. myfirstvoteformodi.com, Nation with Namo, NationWithNamo.com, Bharat Ke Man kiBaat (நமோ என்பது நரேந்திர மோடியைக் குறிக்கிறது) என இந்த விளம்பரதாரர்கள் பிஜேபியுடனான நேரடி தொடர்பை தங்களது பேஸ்புக் பக்கங்களிலோ, இணையதளங்களிளோ வெளிப்படுத்தவில்லை என்றாலும் பேஸ்புக் விளம்பரதாரர் தளத்தில் தங்களது முகவரியாக டெல்லியில் உள்ள பிஜேபி தலைமையத்தின் முகவரியைத் தந்துள்ளனர். இந்த நான்கு விளம்பரதாரர்களும் இணைந்து 32.4 மில்லியன் தொகையை 12,328க்கும் அதிகமான விளம்பரங்களுக்கு செலவழித்துள்ளனர்.
ப்ளுகிராஃப்ட் டிஜிட்டல் எனும் நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் தலைமை நிர்வாகி பிஜேபிக்கு ஆதரவான விளம்பரங்களுக்கு 1.33 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது. இதற்கு முன்பும் பிஜேபிக்காக இதன் நிர்வாகிகள் பணிசெய்துள்ளனர். ஸ்ரீனிவாசன் ஸ்ரீகுட்டன் என்னும் விளம்பரதாரர் 1.39 மில்லியன் ரூபாயை பிஜேபிக்கு ஆதாரவாக விளம்பரம் செய்ய செலவு செய்துள்ளார். இதோடு வலதுசாரி சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் அபினவ் கரேயும் விளம்பரதாரராக இருந்துள்ளார். இவர் ஏசியாநெட் செய்திகளின் முன்னாள் சிஈஓ. இந்த ஏசியாநெட் செய்தி நிறுவனத்தின் தாய் நிறுவனத்தை நிறுவியவர் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினரான ராஜீவ் சந்திரசேகர்.
பிஜேபிக்கு ஆதரவான விளம்பர நூலகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற 17 விளம்பரதாரர்களின் இணையதளங்களும் செயல்பாட்டில் இல்லை. செய்திகளை வெளியிடும் தளம் என்கிற பெயரில் உள்ள தளங்களும் கூட அதன் உரிமையாளர் பெயரைக் குறிப்பிடவில்லை.
இந்தத் தொடரின் முதல் பாகத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களின் விளம்பரங்கள் எவ்வாறு தவறான, சரிபார்க்கப்படாத தகவல்களை செய்திக் கட்டுரை போல வெளியிட்டு பிஜேபியையும் பிரதமர் நரேந்திர மோடியையும் விளம்பரப்படுத்தியது என்பதைப் பார்த்தோம். இந்த விளம்பரங்கள் எதிர்கட்சிகளைத் தேர்தல் சமயங்களில் தாழ்வாக விமர்சித்தன. இதற்காக இந்த நிறுவனம் 5.57 மில்லியன் பணத்தை அதன் விளம்பரங்களுக்கு செலவு செய்தது.
நாங்கள் மற்றுமொரு இணையதளத்தைக் கண்டுபிடித்தோம். ‘The-Pulse,’ என்பது அதன் பெயர். இது தன்னை ‘ஊடக/செய்தி நிறுவனம்’ என்று குறிப்பிட்டிருக்கிறது. இது 905,000 ரூபாயை பேஸ்புக் விளம்பரங்களுக்கு செலுத்தியுள்ளது. இவை அனைத்துமே பிஜேபியையும், மோடியையும் ஆதரித்த விளம்பரங்கள். இதோடு பிஜேபிக்கு ஓட்டுப் போடுமாறு அறைகூவல் விடுத்துள்ளது. இந்த ‘The-Pulse,’ என்கிற நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதையும் இந்த விளம்பரத்துக்கான நிதி எவ்விடமிருந்து பெறப்பட்டது என்பது குறித்த தகவல்களையும் அந்த நிறுவனமோ, பேஸ்புக்கோ வெளியிடவில்லை.
DistoyFarakShivshahiParat (மராத்தி மொழிபெயர்ப்பு “வித்தியாசம் தெரிகிறது, சிவாஜியின் ஆட்சி மலர்கிறது) என்கிற பேஸ்புக் பக்கம் 1,748 விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இவை யாவும் 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத் தேர்தலின் போது பிஜேபிக்கு ஆதரவாக வெளிவந்த விளம்பரங்கள். இதன் விளம்பரதாரர் இந்த விளம்பரங்களுக்காக 2.24 மில்லியன் தொகையை செலவு செய்துள்ளார். விளம்பரதாரர் பெயர் என்பது DFSP2019 என்று குறிப்பிடப்பட்டுள்ளது (இது அந்த நிறுவனப்பெயரின் சுருக்கமான வடிவம் எனத் தெரிகிறது). ஆனால் இந்த பேஸ்புக் பக்கம் குறித்து எந்த நிறுவனத்துடன் அல்லது நபருடன் தொடர்புடையது என்கிற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. shivshahiparat.com என்று இந்த பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதளம் செயல்பாட்டில் இல்லை.
பிஜேபிக்கு ஆதரவான மற்ற விளம்பரதரார்களின் பேஸ்புக் பக்கங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கின்றன, ஆனால் அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் இணையதளங்கள் பயன்பாட்டில் இல்லை அல்லது செயல்படாமல் இருக்கின்றன. GharGharRaghubar.com ஜார்கண்ட் தேர்தலின் போது 9,54,000 ரூபாயினை செலவு செய்துள்ளது) mainhoondilli.com மற்றும் Paltuaadmiparty.com (இவை டெல்லி தேர்தலின்போது 7,59,000 ரூபாய் மற்றும் 1.05 மில்லியன் ரூபாயினை செலவு செய்திருக்கின்றன). phirekbaarimaandarsarkar.com (ஹரியானா தேர்தலின் போது 2.8 மில்லியன் செலவு செய்துள்ளது) aghadibighadi.com (மகராஷ்ட்ரா தேர்தலின் போது 1.5 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளது). இந்த இணைய பக்கங்களை சோதனை செய்தபோது அவை முன்பொரு காலத்தில் இயங்கியிருக்கிறது என்றும் கட்சியினுடனான தொடர்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் தெரிந்தது.
இவை தவிர சில பிஜேபி ஆதரவு விளம்பரதாரர்களை நாங்கள் கண்டுகொண்டோம். modipara.com (717000) 2020 Modi Sang Nitish (705000) nirmamata.com (1.8 மில்லியன்) thefrustratedbengali.com (1.15 மில்லியன்)Rashtriya Jungle Dal (1.07மில்லியன்) BhakBudbak (6,85,000) போன்றவையும் கூட அவர்களுக்கு யார் நிதியுதவி செய்கிறார்கள் என்பதையும் நிறுவனங்கள் குறித்த தகவல்களையும் வெளியிடவில்லை.
விளம்பரதாரர்கள் தங்களின் உண்மையான விவரங்களையும், தொடர்புகளையும் வெளியிடவில்லை என்றால், அதன் விளம்பரப் பக்கங்களையும், அதன் பதிவுகளையும் நீக்கிவிடும் என பேஸ்புக் அறிவித்திருந்தது. இப்படி சொல்லியும் கூட வெகு சில விளம்பரப் பக்கங்களையே பேஸ்புக் முடக்கியது. அதிலும் பத்து நாட்களாக அந்த விளம்பரப் பக்கங்கள் செயல்பட்ட பிறகே முடக்கியது. இந்த பத்து நாட்களுக்குள் My First Vote for Modi, Bharat Ke Man kiBaat, DistoyFarakShivshahiParat and RashtriyaJungle Dal போன்ற பக்கங்களின் விளம்பரங்கள் 161.9 மில்லியன் , 145.7 மில்லியன், 63.2 மில்லியன் மற்றும் 15.3 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருந்தது.
காங்கிரசை விளம்பரப்படுத்திய இரண்டு விளம்பரதாரர்களான கரன் குப்தா 1.48 மிலியன் பணத்தை செலவு செய்து 1,798 விளம்பரங்களை வெளியிட்டிருந்தார். நிஷாந்த் எம். சோலங்கி 8,00,000 ரூபாயை 1332 விளம்பரங்களுக்காக செலவு செய்திருந்தார்.
மற்றுமொரு பக்கமான Khotikarok Modi 4.9 மில்லியன் பணத்தை 1364 விளம்பரங்களுக்காக செலவு செய்திருந்தது. இவை யாவும் மேற்கு வங்காள தேர்தலின் போது மோடிக்கு எதிரான விளம்பரங்களாக இருந்தன. இதனை 62 மில்லியன் பேர் பார்த்திருந்தனர். tndeservesbetter.in பக்கம் 2.9 மில்லியன் பணத்தை செலவு செய்து 839 விளம்பரங்களை வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரங்கள் யாவும் தமிழ்நாட்டில் பிஜேபியுடன் கூட்டணி வைத்திருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான விளம்பரங்களாக இருந்தன. இதனை 53.5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருந்தனர்.
இந்த விளம்பரதாரர்கள் எல்லாம் ஐந்து இலட்சத்துக்கும் மேலாக செலவு செய்தவர்கள். குறைவான செலவில் விளம்பரம் அளித்த மறைமுக விளம்பரதாரர்களும் இருக்கிறார்கள். விளம்பரதாரர்களின் துல்லியமான அடையாளம் தேவையெனில் பேஸ்புக் மற்றும் தேர்தல் ஆணையம் விளம்பரங்களையும் அதன் அடையாளங்களையும் முழுமையாக பரிசோதித்தால் மட்டுமே கிடைக்கப்பெறும்.
நாங்கள் எப்படி புள்ளிவிவரங்களை சேகரித்து மதிப்பிட்டோம்
பேஸ்புக் API எனப்படுகிற Ad Library Application Programming Interface என்கிற ஆப்பினை தங்களது அரசியல் விளம்பரதாரர்களுக்கான புள்ளிவிவரத்தைப் பெற்றுகொள்வதற்காக விளம்பரதாரர்கள், ஆய்வாளர்கள், சந்தை வல்லுனர்கள் போன்றவர்களுக்கு வழங்குகிறது. தி ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ் இதனைப் பயன்படுத்திக் கொண்டது.
நவம்பர் 18, 2020ல் இருந்து வெளியிடப்பட்ட அத்தனை அரசியல் விளம்பரங்களையும் டிஆர்சி முதலில் தரவிறக்கியது. அப்போது தொடங்கி பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட மொத்த விளம்பரங்களின் எண்ணிக்கை 536,070.
மொத்தம் 8359 விளம்பரதார்கள் (தனிநபர் மற்றும் அமைப்புகள்) 613.73 மில்லியன் ரூபாயினை 454297 அரசியல் விளம்பரங்களுக்கு செலவழித்திருக்கிறார்கள். மற்ற விளம்பரங்கள் எங்கிருந்து நிதி கிடைத்தது என்பதை வெளியிடாமல் விளம்பரங்களை வெளியிட்டுள்ளன. இது போன்ற விளம்பரங்களை இறுதியில் நீக்கிவிடுவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
நம்முடைய ஆய்வில், நாம் ஐந்து இலட்சத்துக்கும் மேல் செலவு செய்தவர்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். மொத்தம் 145 விளம்பரதாரர்கள் ஐந்து இலட்சத்துக்கும் மேல் செலவு செய்தவர்களாக இருந்தார்கள். அரசியல் விளம்பரங்களுக்காக செலவு செய்யப்பட்ட மொத்த தொகையில் மூன்றில் இரண்டு பங்கு தொகை இவர்களால் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் இருந்து கட்சி மற்றும் வேட்பாளர்களோடு தொடர்பு கொண்டவர்களைத் தனியாகத் தொடர்பு இல்லாதவர்களையும் தனியாக பிரித்தோம். கட்சியுடன் தொடர்பற்றவர்களில் ஏதேனும் ஒருவகையில் அவர்களின் முகவரி அல்லது கட்சி அலுவலகம் மற்றும் நபர்களுடன் தொடர்பு கொண்டதைப் பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டிருந்தால் அதையும் பிரித்துக் கொண்டோம்.
இப்படி பிரித்து நெறிமுறைபடுத்தப்பட்ட ஆய்வின் மூலம் நமக்குத் தெரிய வந்தது என்னவெனில் பிஜேபி மட்டுமே பேஸ்புக்கில் அரசியல் விளம்பரங்களை வெளியிடும் பெரிய கட்சி இல்லை என்பதும் மற்ற கட்சியினர் உண்டு என்பதும் தெரிய வந்தது. ஆனால் நாட்டின் இரண்டாவது கட்சியான காங்கிரசை வெகு தூரம் பின்தள்ளிவிட்டு முதலிடத்தில் விளம்பரங்களுக்கு அதிக செலவு செய்திருக்கிறது பிஜேபி.
பிஜேபி நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளியிட்ட விளம்பரங்களினால் மட்டும் பேஸ்புக் இலாபம் ஈட்டுவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. பேஸ்புக்கின் செயல்பாட்டு அமைப்புமே கூட பிஜேபியின் அரசியல் எதிரிகளை கட்டுப்படுத்தும் விதத்தில் தான் அமைந்திருந்தது என்பதையும், பேஸ்புக் பிஜேபிக்கு சாதகமாக எப்படி செயல்பட்டது என்பதையும் அறிந்து கொண்டோம். அது குறித்து இந்தத் தொடரின் பாகம் 3ல் விளக்குகிறோம்.
குமார் சம்பவ், நயன்தாரா ரங்கநாதன், மற்றும் ஸ்ரீகிரிஷ் ஜஹிலால்
கட்டுரையின் ஆங்கில மூலம்
https://www.aljazeera.com/economy/2022/3/15/inside-facebook-and-bjps-world-of-ghost-advertisers
தி ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ் (www.reporters-collective.in) உறுப்பினர்கள் குமார் சம்பவ , நயன்தாரா ரங்கநாதன் அம்ற்றும் ஸ்ரீகிரிஷ் ஜஹிலால். இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் அல்ஜெசிரா (www.aljazeera.comதளத்தில் வெளிவந்துள்ள து. அதன் மொழிபெயர்ப்பே இது.
தலைவரே வணக்கம்.நான் ஒரு பள்ளிகூட ஆசிரியர்.பல வருடங்களாக தங்கள் தரவுகளையும்,அதை வெளிப்படுத்தும் தங்கள் அச்சமற்ற தைரியத்தையும் கண்டு வியந்துள்ளேன்.வாழ்க,வளர்க,தொடர்க.
பல பூதாகர ஊழல்களையும்,அராஜகங்களையும்,அநியாயங்களையும் வெளிக்கொண்டு வரும் நீங்கள் ,எதிர்கால இந்தியாவை நிர்மாணிக்கும் பள்ளிகளில் ஒளிந்து ஒய்யாரமாக நடைபோடும் ஊழல்களைப் பற்ற வெளிக்கொண்டு வருவீர்களா?hints மட்டும் என்னால் தர முடியும் உங்கள் படைகளைக் கொண்டு மற்றவற்றைக் கிழித்துத் தொங்க விட வேண்டுகிறேன்.
வணக்கம்.
Bro contact me in this number 0501806725 wats app need to speak to you,
Need to share one hot comdey newz with you.
I have been watching your video for longtime and I am thinking for a long about “the matrix” thing you talked in an interview yesterday. We are already trapped in social structure like that. But we are very deep inside the rabbit hole where there is no return. I like to talk to you and i will attach my email with this comment. If you are willing to talk mail me.