2009ம் ஆண்டு வெளியாகிய படம்தான் “வெண்ணிலா கபடிக் குழு”. இந்த படத்தில்தான் நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் சூரி ஆகியோர் அறிமுகமானார்கள். நடிகர் சூரியை விஷ்ணு விஷாலின் பால்ய கால தோழன் எனலாம். இருவரின் வளர்ச்சியும் திரையுலகில் ஒன்றாகத்தான் அமைந்தது.
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் சந்திர குடவாலா ஒரு ஐபிஎஸ் அதிகாரி. 1987ம் வருடம் ஐபிஎஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் டிஜிபி பதவி உயர்வு பெற்று, தீயணைப்புத் துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றார்.
இவர் தொண்ணூறுகளில் வேலூரில் எஸ்பியாக இருந்தபோதே இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் நிலுவையில் இருந்தது. இவருக்கும் இவர் குடும்பத்தினருக்கும் தனியாத சினிமா பைத்தியம். இவர் சொந்த தம்பி அந்த காலத்திலேயே, குடாவ்லா உதவியோடு இந்தி சீரியலில் நடித்தார் என்று அந்த விசாரணையில் ஒரு குற்றச்சாட்டு இருந்தது.
சூரி வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்துக்கு பிறகு கிடுகிடுவென வேகமாக வளர்ந்தார். வளர்ந்து வரும் நிலையில்தான், சென்னையில் ஒரு வீட்டு மனை வாங்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரி ரமேஷ் சந்திர குடவாலா தன் மகன் விஷ்ணு விஷாலை ஹீரோவாக போட்டு “வீர தீர சூரன்” என்று ஒரு படம் எடுக்கலாம் என முடிவு செய்கிறார். 15 நாள் கால்ஷீட் கேட்கப்படுகிறது.
அப்போதுதான் அன்புவேல் ராஜன் என்பவரை குடவாலா, சூரிக்கு அறிமுகப்படுத்துகிறார். பெயருக்குத்தான் அன்புவேல் ராஜன் தயாரிப்பாளர் என்றும், முழுக்க முழுக்க தனது படம் தான் என்றும் குடவாலா கூறுகிறார். சூரி தான் வீட்டு மனை வாங்கும் விஷயத்தை குடவாலாவிடம் சொன்னதும், எதற்காக ஒரு க்ரவுண்டு வாங்குகிறாய், சென்னைக்கு சிறிது அருகே ஏக்கர் கணக்கில் வாங்கினால் பின்னாளில் நல்ல விலைக்கு விற்கலாம் என்று குடவாலாவே ஆலோசனை சொல்கிறார்.
ஆசை யாரை விட்டது. சூரியும் சிக்குகிறார். குடவாலாவே அவரது நண்பர் அன்புவேல் ராஜனை மிகப் பெரிய தொழிலதிபராக அறிமுகப்படுத்துகிறார். மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா என உலகின் பல இடங்களில் தொழில் முதலீடுகள் செய்திருப்பதாகவும், மாதத்தில் பாதி நேரம் உலக நாடுகளில் தொழில் விஷயமாக சுற்றிக் கொண்டிருப்பதாகவும் குடவாலா கூறுகிறார்.
சிறுசேரியில் 1.83 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அந்த இடத்துக்கு தான் நில உரிமையாளரிடம் இருந்து ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும், ஐந்து கோடியே 76 லட்சத்துக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. சூரியும் அந்த நிலத்தை சென்று பார்க்கிறார். சிறுசேரியில், எல் அண்ட் டி ஐ.டி பார்க் பின்புறம். சூரி நிலத்தை பார்க்க செல்லும்போது, எல் அண்ட் டி பார்க் வழியாக சூரியின் நிலத்தை பார்வையிட அழைத்து செல்கின்றனர். சூரியும் இதுதான் பாதை என்று நினைத்துக் கொள்கிறார்.
அப்போது உள்ளாட்சி அமைப்புகள் தயார் செய்தது போலவே, ஒரு வரைபடத்தையும் தயார் செய்து காட்டுகிறார் அன்புவேல் ராஜன். இந்த வரைபடத்தின் நகல் ஒன்று வேண்டும் என்று கேட்டால் இது மிகவும் ரகசியம், வெளியில் எடுக்க முடியாது என்று கதை சொல்கிறார் அன்புவேல் ராஜன்.
சூரி கொஞ்ச கொஞ்சமாக பேசியபடி தொகையை கொடுத்து வருகிறார். ஆனால் முழுமையான தொகையை கொடுக்க முடியவில்லை. சரி பாதி தொகை நிலுவையில் இருக்கிறது. இந்த நேரத்தில் அன்புவேல் ராஜா சூரியை முழு தொகையையும் கொடுத்து பத்திர பதிவை முடித்துக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கிறார். சூரியிடமோ பணமில்லை. சூரிக்கு “வீர தீர சூரன்” படத்தில் நடித்ததற்கு கொடுக்க வேண்டிய ஊதியமான ரூபாய் 40 லட்சத்தை குடவாலாவே சூரி சார்பாக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜாவிடம் கொடுக்கிறார். ஆனால் முழு பணத்தையும் சூரியால் கொடுக்க முடியவில்லை.
மீண்டும் பஞ்சாயத்து குடவாலாவிடம் செல்கிறது. குடவாலா, உடனடியாக எங்காவது கடன் வாங்கி நில பதிவை முடித்து விடுமாறு சூரியிடம் அறிவுறுத்துகிறார். சூரி வெளியே, சினிமா பைனான்சியர்களிடம் வட்டிக்கு கடன் வாங்குகிறார். வெளியே வட்டிக்கு கடன் வாங்கினால், நிலத்தை பதிவு செய்து முடித்ததும் வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என குடவாலா, அன்புவேல் ராஜா ஆகிய இருவரும் வலியுறுத்துகின்றனர். அப்படியே நடக்கிறது.
27 நவம்பர் 2015ல் திருப்போரூர் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு நடக்கிறது. நிலத்தின் அசல் உரிமையாளர் சூரியிடம் பேசுவதற்கு முயற்சி செய்கிறார். அப்போது திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜா, தலையிட்டு, சினிமாக்காரர்கள் என்பதால், சூரியை ஏமாற்ற முயல்கின்றனர் என சொல்லுகிறார்.
பத்திரப் பதிவு முடிந்து விடுகிறது. சூரி சினிமா ஷூட்டிங்கில் பிசியாகி விடுகிறார். வாங்கிய பணத்துக்கு வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறார் சூரி. திரைப்பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா தலைமறைவாகி விடுகிறார். அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
நாமே வங்கியை அணுகி கடன் பெறலாம் என்று சூரியே முயற்சி எடுக்கிறார். நிலத்தின் பத்திரத்தை வங்கியில் கொடுத்து கடன் பெற முயற்சிக்கும்போதுதான், சூரி தான் வாங்கிய இடத்துக்கு பாதையே இல்லை. அது விவசாய நிலமாகத்தான் இன்னமும் இருக்கிறது என்ற விபரமே தெரிய வருகிறது. பாதை இல்லாத இடத்துக்கு கடன் கொடுக்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்து விடுகின்றனர்.
இந்த கட்டத்தில்தான் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற விபரமே சூரிக்கு தெரிய வருகிறது. இனி காத்திருந்தால் தொடர்ந்து ஏமாற்றப்படுவோம் என்பதும், அந்த இடத்துக்கு பாதை வருவதற்கான வாய்ப்பே இல்லை என்பதும் சூரிக்கு தெரிய வருகிறது.
இந்த கட்டத்தில்தான் சூரி, காவல் நிலையம் சென்று புகார் அளிக்கலாம் என்று முடிவெடுக்கிறார். சூரி காவல் நிலையம் சென்று புகார் அளிக்க உள்ளார் என்று தெரிந்ததும், குடவாலா எச்சரிக்கையாகிறார். குடவாலா 30 ஜூன் 2019 அன்றுதான் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதற்குள் விவகாரம் பெரிதாகி விடுகிறது.
22 ஜூன் 2018 அன்று சூரியையும், அன்புவேல் ராஜாவையும் தன் அலுவலகத்துக்கு அழைக்கிறார் குடவாலா. நேரடியாக குடவாலாவை பார்த்தே சூரி, “10 வருசமா பழகுறேன்ல. என்னை எதுக்கு இப்படி பாதை இல்லாத இடத்தை வித்து ஏமாத்துனீங்க” என்று கேட்கிறார். குடவாலா, பழைய கதையை பேசாதீங்க என்று கூறி, ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்து போட சொல்கிறார். அதன் படி, அன்புவேல் ராஜாவே சூரியிடம் அவர் வாங்கிய விலைக்கே நிலத்தை வாங்கிக் கொள்வது. முன்பணமாக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதென்றும் ஒப்பந்தமாகிறது. சூரிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது. குடவாலா முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
ஒரு கோடியை கொடுத்து விட்டு, சொன்னபடி நிலத்தை மீத பணத்தை பெற்றுக் கொண்டு அன்புவேல் ராஜன் பதிவு செய்யவில்லை. இதற்குள் 30 ஜூன் 2019ல் குடவாலாவும் ஓய்வு பெறுகிறார். பேசியபடி நிலம் பதிவு செய்யப்படவில்லை என்பதால் சூரி, மீண்டும் குடவாலாவை சென்று பார்க்கிறார். ஓய்வு பெற்ற பிறகுதான் குடவாலாவின் அசல் முகம் என்ன என்பதே சூரிக்கு தெரிய வருகிறது.
“நீ பணம் குடுத்த. அவன் வாங்கிட்டு எழுதி குடுத்தான். இதுல நான் எங்க வந்தேன். கெட் அவுட்” என்கிறார். இனி நமது பணத்துக்கு உத்தரவதம் இல்லை என்று உணர்ந்த பிறகுதான் சூரி,
ஒரு வழியாக 8 அக்டோபர் 2020 அன்று சென்னை அடையாறு காவல் நிலையத்தில் அன்புவேல் ராஜா மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. முதல் தகவல் அறிக்கையில் எந்த இடத்திலும், ரமேஷ் ஒரு முன்னாள் டிஜிபி என்பது குறிப்பிடப்படவேயில்லை.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும், குடவாலாவை கைது செய்வதற்கோ, அன்புவேல் ராஜனை கைது செய்வதற்கோ காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 20 லட்ச ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தி அன்புவேல் ராஜன் முன் ஜாமீன் பெற்றுக் கொண்டார். ஆனால் குடவாலாவோ, முன் ஜாமீன் மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டார். ஆனால் காவல் துறை இவரை கைது செய்ய இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 4 பிப்ரவரி 2022 அன்று வழக்கு விசாரணையை, மத்திய குற்றப் பிரிவுக்கோ, சிபி சிஐடிக்கோ மாற்ற வேண்டும் என்று சூரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றம் அத்தீர்ப்பில் “29 ஜூலை 2021 அன்று குடாவ்லாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குமூலம் 9 நவம்பர் 2020அன்று குடாவ்லா அவர் முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் குற்றவாளி, 11 ஜுலை 2021 அன்று 14 ஜூலை 2021 அன்று அவர் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 4̀1Aந்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. மேலும் முதல் குற்றவாளி ஜாமீன் விதிகளை மீறியுள்ளார். மேலும், அசல் நில உரிமையாளர்களோடு, முதல் குற்றவாளி அன்புவேல் ராஜன் பதிவு செய்ததாக சொன்ன ஒப்பந்தத்தை பறிமுதல் செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை.
16 அக்டோபர் 2020 நாளிட்ட கூடுதல் ஆணையரின் உத்தரவின் பேரில்தான் வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்படாமல் இருந்தது இரண்டாம் குற்றவாளியான (குடாவ்லா) குடாவ்லாவை காப்பாற்ற.
இணை ஆணையரோ, துணை ஆணையரோ, வழக்கு நாட்குறிப்பை பார்த்து எந்த உத்தரவுகளையும் பிறப்பித்ததாக தெரியவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும், குடாவ்லாவுக்கு இந்த வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லை என வழக்கை உருவாக்க தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதல் குற்றவாளி, சூரியை மட்டும் ஏமாற்றவில்லை. அந்த பகுதியில் உள்ள மற்ற சிலரையும் ஏமாற்றி உள்ளார். அன்புவேல் ராஜா மற்றும் குடாவ்லா நெருங்கி பழகியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வருகிறது.
இவ்வழக்கில் இது வரை நடந்த விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பது தெரிய வருகிறது.
மத்திய குற்றப் பிரிவில் துணை ஆணையர் அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். கூடுதல் ஆணையர் இவ்வழக்கின் விசாரணையை நேரடி மேற்பார்வை செய்ய வேண்டும்.
இது வரை அடையாறு காவல் நிலையம் நடத்திய விசாரணையை மத்திய குற்றப் பிரிவு மீண்டும் விசாரணை நடத்தி சரி பார்க்க வேண்டும். முந்தைய விசாரணை சரியாக நடைபெறாவிட்டால், புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இத்தீர்ப்பு அளித்த நாள் 4 பிப்ரவரி 2022.
இதற்கு பிறகு 2 முறை சென்னை மத்திய குற்றப் பிரிவு சூரியை அழைத்து விசாரித்துள்ளது. ஒரு முறை காலை 11.30க்கு விசாரணைக்கு சென்ற சூரி இரவு 10.30 மணிக்குத்தான் விசாரணை முடிந்து அனுப்பப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றப் பிரிவின் துணை ஆணையர் மீனா அவர்கள் தான் இவ்வழக்கை விசாரணை செய்கிறார். ஆனால் அவர் சூரியை விசாரணை நடத்த காட்டும் முனைப்பை, குடவாலாவிடம் விசாரணை நடத்துவதில் காட்டவில்லை என்று சூரி தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தால், “யாரையும் காப்பாற்ற வேண்டிய அழுத்தங்கள் எதுவும் இல்லை நீதிமன்ற உத்தரவுகளின்படி விசாரணை நடைபெற்று வருகிறது. பாரபட்சமின்றி விசாரணை நடந்து வருகின்றது” என்று தெரிவித்தனர்.
அடையாறில், ஐபிஎஸ் அதிகாரி விக்ரமன், உதவி ஆணையர்கள் கவுதமன், நெல்சன், ஆய்வாளர்கள் மனோகரன், திரிபுர சுந்தரி ராஜேஸ்வரி ஆகியோர் இவ்வழக்கை விசாரித்துள்ளனர். ஆனால் இரு இன்ச் அளவு கூட முன்னேற்றம் ஏற்படவில்லை.
நடிகர் சூரி சமூகத்தில் செல்வாக்கு பெற்றவர். அறிமுகம் இல்லாதவர் கிடையாது. ஆனால் அவரையே 6 கோடி ரூபாய் ஏமாற்றியதோடு அல்லாமல், அப்படி ஏமாற்றிய காவல் துறை அதிகாரி கிட்டத்தட்ட 7 வருடங்களாக எந்த விசாரணையையும் சந்திக்காமல் இருக்கிறார் என்றால் ஐபிஎஸ் அதிகாரிகளின் செல்வாக்கை புரிந்து கொள்ளுங்கள்.
ஓய்வு பெற்ற டிஜிபி குடாவ்லாவிடம் இது பற்றி கருத்து கேட்டபோது, “எனக்கும் இந்த நில விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் 33 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருந்தவன். நான் யாரையும் ஏமாற்றாவில்லை. விசாரணை முடிவில் உண்மை தெரிய வரும்” என்றார்.
சூரி தரப்பில் இது குறித்து பேச மறுத்து விட்டனர். “புதிய போலீஸ் டீம் வழக்கை விசாரிக்கிறது. விசாரணை முடியட்டும்” என்று கூறினர்.
குடவாலா, இந்த விவகாரத்தில் மட்டுமல்ல. அவர் பணியில் இருந்த நாட்கள் முழுக்கவே மாமூல் வாழ்க்கை வாழ்ந்தவர்தான். தமிழக முதல்வர் முக. ஸ்டாலின், தூர்தர்ஷனில் வெளியான “குறிஞ்சி மலர்” தொடரில் நடிக்க நான் தான் உதவி செய்தேன். அதனால் காவல் துறை என்னை எதுவும் செய்யாது என்று துணிச்சலோடுதான் தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
விசாரணை நியாயமாக நடக்கிறதா ? சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுகிறார்களா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Hi
Sir,
Indha website la ungalukku thevaiyaana income varusha Sir..
Most of people’s ku indha doubt irukku..
If you don’t mind please clarify
There is no ads in this website, my understanding is it’s a non profit website
U r doing great work sir. Keep doing. All the very best sir…
Excellent Saukkunaa summavaa Thalaiva Vera ragam.
How to contact you.?
Na ungaloda ela interview parthu iruken…but today’s interview with mani really disturbed me….very gud…neenga andha video va elarukum reach panunga…!!! Nandri
Congrats sir, you speak people’s mind vioce!!!!
Sir
Annenn sankar avargalluku en manathill palla andukalaga thndriyaa kelvigall palavatrai ungallin pechiil parkerann ungalin panni seraaka kadavulai Parkernn mellum nan ungalaludan pugaipadam eduthu kollai again padukirann
Very good sir
சில அரசியல் பிரமுகர்களின் ஊழல் ஆதாரங்களை உங்களிடம் கொடுக்க வேண்டும்… தொடர்புகொள்ளவும் சவுக்கு குழு … நன்றி
2500 ஏக்கரை ஒருத்தன் பவர் குடுத்து ரெண்டு கிராமத்தை வித்துட்டான், உங்களுக்கு சூரி பிரச்சனை பெருசா தெரியுது.
VANAKKAM SIR UNGAL PATHIVU MIGAVUM ARUMAI.INDRU DHAN UNGAL BLOGIRKU MUDHAN MUDHALA VARUKIREN.
During 1992-93 time frame Mr Gangai Amaran toured USA with his music troupe. In many cities where Brahmins were running Tamil Sangams, he was treated like Dalith. In one place he was staying in temple outhouse. I was in one of the Tamil Sangam officer bearer. We put him in our President’s house and treated him equally. It is amazing to see Mr Gangai Amaran still want to get approval from Brahamins.
You are doing wonderful job in exposing two faced politicians.
Annan Vanakam,
How are you? Please check your inbox as same kind of scam going for NRI,
Please check your inbox.
தன் தந்தை மேல் இவளோ தப்பு உள்ளது தெரிந்தே விஷ்ணு விஷால் தனது FIR பட pramotion interview ல அவ்ளோ நல்லவன் மாதிரி என்ன பேச்சு பேசினான்….
Sir
Annenn sankar avargalluku en manathill palla andukalaga thndriyaa kelvigall palavatrai ungallin pechiil parkerann ungalin panni seraaka kadavulai Parkernn mellum nan ungalaludan pugaipadam eduthu kollai again padukirann
தந்தை செய்த பாவம் தான் விஷ்ணு விஷால் சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கை இரண்டிலும் தடுமாறி வளர்ச்சி இல்லாமல் அவதிப்படுகிறார்.
சவுக்கு சங்கர் உங்கள் பேட்டி ஒன்றில், சிதம்பரம் தீட்சிதர்களையும், பிராமணர்களையும் திட்டியதைப் பார்க்க நேர்ந்தது. நான் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன் தான். போலீஸில் பணியாற்றியதால் ஷத்திரியனாக ஆனவன்.என்மகன் பட்டயக் கணக்காளராக ஆனதால் வைசியனாக மாறியவன். என் சொந்தக்காரர்கள் விவசாயம் செய்து சூத்திரர்களாக இருக்கிறார்கள்.ஹிந்து மதத்தில் , தொழிலால் தான் பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற பாகுபாடே தவிர, பிறப்பால் அல்ல. சங்கருக்கு இதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹிந்து மதத்தில் நாம் வணங்கும் எந்த தெய்வமும் பிராமணர் இல்லை!
புராணங்களின்படி, எல்லா தெய்கங்களும், பிற்படுத்தப்பட்ட சாதி, தலித், ஆதிவாசிகள் போன்றோரே!
இறைவந்தத்துவத்தை பிராமணர்கள் ஏற்படுத்தவில்லை!
பிராமணர்கள் அரசர்களாக இருந்ததே இல்லை;
பிராமணர்கள், ஆசிரியர்களாகவும், புரோகிதர்களாகவும், சான்றோர்களாகவும், ஆலோசகர்களாகவும் தான் இருந்துள்ளார்கள்;
பிக்ஷை வாங்கித் தான் அன்றாட வாழ்க்கையை நடத்தி இருக்கிறார்கள்; பிராமணர் அல்லாதவர்களிடம் தான் பிக்ஷை வாங்கி இருக்கிறார்கள்;
எந்த வித சம்பளமும் பெறாமல், குருக்கள்களாகவும், புரோஹிதர்களாகவும், ஆசிரியர் களாக வும், பிராமணர்கள் ஸேவை செய்துள்ளனர்;
வேதங்களை இயற்றியவர்கள் பெரும்பாலானோர் பிராமணர் அல்லாதவர்களே;
மனுஸ்மிரிதி என்னும் சட்டத்தை இயற்றிய மனு பிராமணர் அல்லர்;
இராமாயணக் காவியத்தை இயற்றிய வால்மீகி ஒரு வேட குலத்தவர்;
நான்கு வேதங்களையும் தொகுத்த வியாசரின் தாயார் மீனவப் பெண்மணி;
அகஸ்தியர், கிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீராமர், வசிஷ்டர், விசுவாமித்திரர், புத்தர், மஹாவீரர், துளஸிதாஸ்,வள்ளுவர், கபீர், விவேகானந்தர், காந்தி, நாராயண குரு, திருநாவுக்கரசர், இராமலிங்க அடிகள், மாதா அமிர்தானந்தமயி, சாய்பாபா போன்ற் மஹான்கள் பிராமணர் அல்லர்.
திராவிடர் என்று சொல்லிக் கொள்ளும் சில அமைப்புகளை சார்ந்தோர், தங்கள் சொந்தப் பிழைப்புக்காக, சேவைமனப்பான்மை கொண்ட பிராமண இனத்தையே , சரித்திரமே தெரியாமல், வாய்க்கு வந்தபடி பேசுவது என்பது சரி அல்ல! பித்தலாட்டம்!
இதை சவுக்கு சங்கர் உணராமல் பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது.
ஜெய் ஹிந்த்!
இங்கே கருத்து வேதத்தை பற்றியது அல்ல, மக்கள் பின்பற்றும் முறையை பற்றியது.
Sir
Annenn sankar avargalluku en manathill palla andukalaga thndriyaa kelvigall palavatrai ungallin pechiil parkerann ungalin panni seraaka kadavulai Parkernn mellum nan ungalaludan pugaipadam eduthu kollai again padukirann
ஒருவர் ஒரே நாளில் மூன்று விதமான வெவ்வேறு வேலைகளை செய்கிறார் என்றால் அவர் ப்ராமனரா அல்லது வைசியரா அல்லது சூத்திரரா….இதை எப்படி தொழிலை வைத்து வர்ணங்களை வரையறுப்பீர்கள். மேலும் வெளிநாடுகளில் அனைவரும் எல்லா வகையான வேலைகளையும் செய்கிறார்கள் அங்கு எந்த ஒரு வர்ணம் போன்ற சொல்லாடல்களும் இல்லையே அது ஏன் இங்கு மட்டும் நிலவுகிறது.
மூர்த்தி, பிராமணப்புத்தி என்பதை தெளிவாக இங்கு பதிவு செய்திருக்கின்றீர்கள். மதம் சார்ந்த வாழ்வியல் என்பது வேறு. ஜாதி சார்ந்த வாழ்வியல் முறையை அதாவது தனக்கென தனி மொழி, உடை, நூல், நாமம், பேச்சு, உணவு என்று இன்னும் ஜாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்போர் உங்களாவை தவிர வேறு யார் இங்கே உள்ளனர்? கோவில் கருவறைக்குள் செல்லக்கூடாது என்று தடுப்பவர் யார்? ஆகமம், நியமம் என்று பேசுவது யார்? இறைவனுக்கு தெரியாத மொழியா தமிழ்? ஏன் தமிழக கோவில்களில் சமஸ்கிருத மொழியில் மட்டும் இறைவனை போற்ற வேண்டும்?
இந்த உலகில் ஜாதியை உயர்வாகச் சொல்லி இன்றைக்கும் தீண்டாமையை வளர்ப்பது யார்? சேவை மனப்பான்மை கொண்டவர்கள் பிராமணர்களா? மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். காசு இருக்கும் இடம் எதுவோ அங்கே இருப்பர் உங்களவா? காசு வரும் இடங்கள் எது? ஹோட்டல், கோவில் இரண்டு தொழில் செய்பவர்கள் நீங்கள். உணவில் கூட பிராமண சமையல் என்று வகை பிரித்து வைத்துக் கொண்டு சேவை மனப்பான்மை கொண்ட பிராமணர்கள் என்று எழுதுகின்றீர்கள்.
அதென்ன சத்திரியன், பிராமணன், வைசியன், சூத்திரன் என்ற பாகுபாடு? செய்யும் தொழிலில் பட்டம் வேறு கொடுக்க நீங்கள் யார்? உங்கள் உயிரும் உடம்பும் இயற்கைக்கு சொந்தம். அதைக் கூட பாதுகாத்திட முடியாது. ஆனால் பிறருக்கு வகைப்பாடு செய்யும் உங்களைப் போன்றோர் உள்ளத்தில் ஜாதிய வன்மம் மட்டுமே.
நீங்கள் யாரென்று சொல்ல – ஷீரடி சாய்பாபாவை உதாரணம் காட்டலாம். நீங்களும் உங்களாவுக்கும் தான் முஸ்லீம்கள் பிடிக்காதே. பின்னே ஏன் வாய்க்கு வாய் ‘அல்லா மாலிக்’ என்று சொன்ன சாய்பாபாவை வழிபடுகின்றீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். காசு, பணம், துட்டு. அவர் கேட்டாரா தனக்கு கோவில் வேண்டுமென்று. ஒரு முஸ்லீமுக்கு கோவில் கட்டி பூஜை செய்யும் வழக்கத்தை உண்டாக்கி விட்டு, இப்போது முஸ்லீம் மசூதிகளை இடிக்க துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள் யாரென்று ஊருக்கே தெரியும். கணிணி வந்த பிறகு புரளிகளையும், புரட்டுகளையும் கிளப்புவது. ஈனப் புத்தி கொண்ட உங்களால் கீழ்சாதி என்றுச் சொல்லக்கூடிய ஆட்களை வைத்து கலவரத்தை உண்டாக்குவது. வாயில் வடை சுடுவது? இப்படி கடவுள் பெயரால் காசு பன்னுவது? கருவறைக்குள்ளேயே உறவு கொள்வது. மடத்தின் தலைவரே கொலை செய்வது. இப்படியெல்லாம் மனிதன் செய்யக்கூடாத திருட்டுத்தனத்தைச் செய்து கொண்டு நாங்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்கள் என்று வாய் கூசாமல் எழுதுகின்றீர்களே வெட்கமாயில்லை.
தமிழக கலைகளில் முக்கியமான சதிராட்டத்தை ஆபாசம் என்றுச் சொல்லி, ருக்மணி தேவி அருண்டேல் என்பவர் அதற்கொரு பிட்டைப் போட்டு பரத நாட்டியம் என்று மாற்றி தங்கள் இனத்துக்கான நாட்டியம் என்று மாற்றிக் கொண்டு அக்கிரமம் செய்து வருவது கீழ்சாதியினர் இல்லை. சேவை மனப்பான்மை கொண்ட உங்களவா?
இப்படி எதுவெல்லாம் காசும், பணமும், துட்டும் தருமோ அதையெல்லாம் நாஙக்ள் தான் உருவாக்கினோம் என்று எழுதி புரட்டுகளைச் செய்து கொண்டிருப்பது யார்?
கடவுள்கள் எல்லாம் வேறு இனத்தவர் என்றீர்கள். ஆம் உங்கள் இனத்தில் எவரும் கடவுளாக கூட வரமுடியாது. கடவுளை வைத்து காசு மட்டுமே செய்வீர்கள்.
உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாவிடில் அது உங்கள் பிரச்சினை. நீங்கள் திருந்துங்கள். எங்களைத் திருத்த வேண்டிய அவசியமில்லை. அது எங்களுக்குத் தேவையுமில்லை
அருமை
All high level fucking idiots..nothing to say..
I am regularly watching your videos in YouTube, I have not seen a video, that you are discussing about the caste discrimination on ilayaraja by e.v.k.s, so I came here to see any article regarding that, not found, if you have anything about that issue please share. By seeing my mail ID don’t think I am a sangi, I have almost same opinion as you have in most of the issues.
Very detailed reporting. Kudos!
காவல்துறை யாக செயல் படுவது இல்லை
நேர்மையற்ற மனிதர்கள் நிறைந்த உலகத்தில் எப்படி வாழ்வது?
பிற மொழியாளர்கள் எப்போதும் தமிழர்களை ஏமாற்ற தான் செய்வார்கள்….
இதனைப் புரிந்து கொண்டு தமிழர்கள் தமிழர்களாக ஒன்று சேர வேண்டும் தமிழர் நிலத்தில் தமிழரே ஆள வேண்டும்…
Hmmmm soori must wait for justice.
please hide personal details like PAN, address from the document published
Yes sir