தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் 105 கட்சிகள். தேர்தல் பத்திரங்கள் பெற்றதோ 17 கட்சிகள்.
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் பெற்ற கட்சிகள் என 105 கட்சிகளின் பெயரை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது. இதனை சீலிடப்பட்ட உறையில் சமர்பித்திருந்தது தேர்தல் ஆணையம். இதனால் தேர்தல் பத்திரங்கள் பெற்ற கட்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததான தோற்றம் ஏற்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் , இந்தியாவில் 19 கட்சிகள் மட்டுமே பத்திரங்கள் மூலமாக நிதி பெற்றிருந்தது, இதில் 17 கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
தமிழில் : தேர்தல்பத்திரங்கள் மூலமாக ரகசியமான முறையில் நிறுவனங்கள் தனிநபர்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க முடியும். இந்தியாவின் அரசியல் கட்சிகள் மொத்தம் 2800. ஆனால் இந்தியாவில் 19 கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி பெற்றிருக்கின்றன. இந்தியாவில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி மட்டும் இவற்றில் 68 சதவீத நிதியை பெற்றுள்ளது. அதாவது மூன்று வருடங்களில் இந்தக் கட்சி பெற்ற தொகை 6,201 கோடி.
The Reporters Collective தொடர்ந்து நேர்காணல்கள் மற்றும் தணிக்கைத் துறை வருடாந்திர அறிக்கைகள் மூலமும் இதனை வெளிக்கொணர்கிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலமாக “நிதி அளிப்பவர்கள் தங்கள் விருப்பத்தின்படி எந்த அரசியல் கட்சிக்கும் நிதி அளிக்கலாம்” என்பது சிறந்ததொரு வழியாக இருக்கும் என பாஜக தெரிவித்திருந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலமாக 105 கட்சிகள் நிதி பெற்றுக்கொண்டதாகவும் தங்களின் வார்த்தைகளுக்கு வலு சேர்த்திருந்தது பாஜக.
இப்படி கார்பரேட் நிறுவனங்களும், தனிநபர்களும் தங்கள் அடையாளத்தை வெளியிடாமல் தேர்தல் பத்திரங்கள் வழியாக எந்தவொரு நிபந்தனையுமின்றி அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது குறித்து 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யபப்ட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக 2019 ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையத்திடம் எந்தக் கட்சியெல்லாம் தேர்தல் ஆணையத்தின் மூலம் நிதி பெற்றது என்பது குறித்தும், எவ்வளவு நிதி பெற்றது என்பதையும் தங்களுக்கு அளிக்க வேண்டுமன கேட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த தகவல்களை சீலிடப்பட்ட உரையில் மட்டுமே தர வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது. இந்த வழக்கத்தினை முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொண்டு வந்திருந்தார். இதனால் நீதிபதிகளைத் தவிர வேறு எவருக்கும் இந்த விவரங்கள் தெரிய வாய்ப்பு இல்லை.
நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு விடை அளிக்கும்படி தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த 2800 அரசியல் கட்சிகளில் 105 கட்சிகள் மட்டுமே இதற்கு பதில் அளித்திருந்தன. தேர்தல் பத்திரங்களை இந்தக் கட்சிகள் பெற்றனவா இல்லையா என்பது பற்றிய கேள்வி இல்லாமலேயே எல்லாக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமான பதில்களைக் கேட்டது குறித்து கட்சிகள் கேள்விகள் எழுப்பின.
2020 பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் தனது பதிலாக உச்ச நீதிமன்றத்தில் ‘சீலிடப்பட்ட உரையை’ சமர்பித்தது. இந்தப் பட்டியலில் 7 தேசியக் கட்சிகள், தேசிய கட்சிகளின் மாநில பிரிவு கட்சிகள் 3, மாநிலக் கட்சிகள் 20, பதிவு செய்யப்பட்ட அடையாளமற்ற கட்சிகள் 70 – இந்தக் கட்சிகளுக்கு என தனியான தேர்தல் சின்னங்கள் இல்லை எனினும் தேர்தலில் போட்டியிடமுடியும். இதோடு அடையாளம் கண்டுகொள்ளபப்ட்பாத 5 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மனுதரார்கள் தொடர்ந்து இரண்டு வருடங்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திய பிறகே உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை விசாரிக்கத் தொடங்கியது. நீதிமன்றம் இன்னும் சீலிடப்பட்ட உரையினை திறக்கவில்லை.
தேர்தல் பத்திரம் மூலமாக நிதி பெற்ற கட்சிகள் வெறும் 17 மட்டுமே
தி ரிபோர்டர்ஸ் கலெக்டிவ் சீலிடப்பட்ட உரைகளில் இருக்கும் தகவல்களை வெளிக்கொணர்கிறது. இதற்காக எழுபது அங்கீகாரமற்ற கட்சிகளில் 54 கட்சிகளின் தலைமையை சந்தித்தது. இவை தேர்தல் ஆணையம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் கூறியிருந்த கட்சிகள். இந்தக் கட்சிகள் ஆணையத்துக்கு அளித்த கடிதங்களை ஆய்வு செய்தது. இதோடு அரசியல் கட்சிகள் சமர்ப்பித்திருந்த வருடாந்திர ஆய்வு அறிக்கைத் தகவல்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியது.
இவை எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கையில் தேர்தல் ஆணையம் பட்டியலிட்ட 105 அரசியல் கட்சிகளில் 17 அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரம் மூலமாக நிதி பெற்றுள்ளன என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த 17 கட்சிகளில் பாஜகவிற்கு அதிகமான பங்கு நிதி கிடைத்திருக்கிறது – 67.9 % அதாவது 2017 – 18 மற்றும் 2019- 20 நிதி வருடங்களில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் 4,215.89 கோடியை பாஜக பெற்றிருக்கிறது.
இதில் பாஜகவிற்கு அடுத்ததாகவும், அதே நேரத்தில் பாஜகவை விட வெகு தொலைவில் இருக்கும் கட்சியாகவும் இருப்பது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி 11.3 சதவீதம் பெற்றிருக்கிறது. அது பெற்ற தொகையாக 706.12 கோடி.
இவ்விரு கட்சிகளை விட குறைந்த நிதி பெற்ற அடுத்த கட்சி பிஜு ஜனதா தளம். இக்கட்சி 264 கோடி நிதி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. அதாவது 4.2 சதவீதம். மீதமுள்ள 16.6 சதவீதமான 1,016 கோடி நிதியை இதர தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெற்றிருக்கின்றன.
பாஜக, காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் என இந்த மூன்று கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலமாக 83.4சதவீத அரசியல் நிதியினை பெற்றிருக்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளும் பத்திரங்கள் மூலமாக நிதி பெற்றிருப்பினும் இவர்கள் விபரங்களை சமர்ப்பிக்காததால், தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி இவர்களை பட்டியலிடவில்லை.
இந்திய அரசால் நிர்வகிக்கப்படுகிற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்களை தொகையாக மாற்றும் அதிகாரம் உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாக கேட்கப்பட்ட தகவலுக்கு தேர்தல் பத்திரங்களை பெறவும் அதை நிதியாக மாற்றவும் வல்ல 23 அரசியல் கட்சிகளின் பெயர்களையும் வெளியிட மறுத்துவிட்டது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.
தேர்தல் பத்திர விவகாரம் உச்சநீதிமன்றத்தில் ஏன் நிலுவையில் உள்ளது ?
2017 ஆம் அன்பது அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஒரு அறிவிப்பினை வெளியிடுகிறார். அதன்படி நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள், ட்ரஸ்ட்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றும், அவை 1000, 10,000, 1,00,000, மற்றும் 10,00,000 மற்றும் ஒரு கோடி மதிப்புகள் கொண்ட பத்திரங்களாக இருக்கும் எனவும் அவற்றை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் கணக்கில் வைப்பு நிதியாக சேர்க்கலாம் என்றும் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதும் விமர்சகர்கள் சிலவற்றை சுட்டிக் காட்டினார்கள். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்படும் நிதியால் எந்த பணக்கார நபர்களிடம் இருந்து பணம் அரசியல் கட்சிகளுக்கு செல்கிறது என்பது மறைக்கப்படும் என்பதை குறிப்பிட்டு கூறியிருந்தார்கள். எந்தக் அரசியல் கட்சி அதிக நிதி பெறுகிறதோ, அவற்றால் மிகப்பெரும் அளவில் தேர்தல் செலவீன்ங்களை எதிர்கொள்ள முடியும் என்றும், தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு செலவு செய்ய முடியும் என்றும் இதனால் அதிக நிதி பெற்ற கட்சி மற்ற கட்சிகளை விட களத்தில் தங்களை முன்னிறுத்திக் கொள்ள முடியும் என்றும் சொல்லியிருந்தார்கள். அவர்களின் தேர்தல் பிரசார இயந்திரம் தடையில்லாமல் வேகமாக இயங்குவதற்கும் வழிவகை செய்யும் என்றிருந்தனர். இதனை நாம் தேர்தல் காலகட்டத்தில் பாஜகவிடம் பார்க்க முடிந்தது.
4, செப்டம்பர் 2017 அன்று ஜனநாயக மறுமலர்ச்சிக்கான அமைப்பு என்கிற (Association of Democratic Reforms – ADR) லாப நோக்கற்ற அமைப்பு ஒன்று உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி சட்டத்தில் உள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முக்கியாமான விதிமுறைகளை, மறுபரிசீலனை செய்யும்படி அந்த மனுவில் கோரியிருந்தது. ஏப்ரல் 2019 அன்று வெளியிடப்பட்ட இடைக்கால உத்தரவில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற நிதியினை வெளியிடுமாறு கட்சிகளிடம் உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது.
தேர்தல் ஆணையமும் கூட தேர்தல் பத்திரத் திட்டத்தை திரும்பப் பெறுமாறு கோரியிருந்தது. மார்ச் 2019 ல் இந்த மனுவுக்கு அது பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த வாக்குமூலத்தில் தேர்தல் பத்திரம் தொடர்பான தனது கருத்தை இவ்வாறு அது பதிவு செய்திருந்தது.
“தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் உள்ள வெளிப்படைத்தன்மைக்கு தேர்தல் பத்திரங்கள் எதிரானது, பிற்போக்குத்தனமானது” என்று தேர்தல் ஆணையம் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தது. இந்த சட்டங்கள் மறைமுக தொழில் நிறுவனங்களின் கறுப்புப் பணத்தை அரசியல் கட்சியின் நிதியாக மாற்றும் அபாயம் கொண்டது என்றும் “வெளிநாட்டு நிதி தடையில்லாமல் அரசியல் கட்சிகளுக்கு கிடைப்பதன் மூலம் இந்திய அரசியலில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும்” தெரிவித்திருந்தது.
தேர்தல் ஆணையத்தின் கவலை குறித்து கவலை கொள்ளாத பாஜக, இந்த தேர்தல் பத்திரத் திட்டத்தை பாஜக, “மாபெரும் மாற்றம்” என்றும் “நேர்மையான பணத்தினை கொண்டு வருவதின் மூலம் அரசியல் அமைப்பு தூய்மையடையக்கூடிய புதுமையான வழி” என்றும் சொன்னது.
2017 மே மாதம் நிதி அமைச்சர் இதற்கான எதிர்வினைகளைக் கோரியபோது பாஜக இத்திட்டத்தை ஆதரித்து, இத்திட்டத்துக்கு தனது ஒப்புதலை மிக உற்சாகமாக அளித்தது. அதே நேரத்தில் மற்றக் கட்சிகள் தங்களது சந்தேகங்களை வெளிப்படுத்தின.
ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டீவ் வெளியிட்ட புலனாய்வு கட்டுரைகளில், ரிசர்வ் வங்கி இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததும், பாராளுமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் கருத்து குறித்து பொய்யான தகவலை வெளியிட்டதும், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, இத்தகைய தேர்தல் பத்திரங்களை காசாக்கும் வழியை பாஜக உருவாக்கியிருந்ததும், எஸ்.பி.ஐ எப்படி காலாவதியான தேர்தல் பத்திரங்களை வாங்க அனுமதித்தது என்றும் கட்டுரைகள் வெளியிட்டிருந்தோம்.
தேர்தல் பத்திரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் எஸ்.பி.ஐ. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தேர்தல் பத்திரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று கருத்து கேட்டதையும் அம்பலப்படுத்தியிருந்தோம். எஸ்.பி.ஐ, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பதில்களில் பொய் கூறியிருந்தது. எஸ்.பி.ஐ பொய் கூறி மாட்டிக் கொண்டது. எஸ்.பி.ஐ, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தேர்தல் பத்திர விற்பனை மற்றும் அப்பத்திரங்களை பணமாக்கியது குறித்த விபரங்கள் இல்லை என்று தெரிவித்திருந்தது. இது ஒரு அப்பட்டமான பொய் என்பதையும், எஸ்.பி.ஐ நிதி அமைச்சகத்துக்கு தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை தொடர்ந்து அளித்து வருகிறது என்பதையும் அம்பலமாக்கியிருந்தோம்.
எஸ்.பி.ஐ வங்கி, சமீபத்தில், ஓய்வு பெற்ற கமோடோர் லோகேஷ் பத்ரா பத்திரங்கள் தொடர்பாக விபரங்களை பெற்றார். அதில், தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் 105 கட்சிகளின் விபரங்களை அளித்திருந்தது. அவற்றில் வெறும் 23 கட்சிகள் மட்டுமே, தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற தகுதியானவை என்பது தெரிய வந்தது.
அதே நேரத்தில் எஸ்.பி.ஐ வங்கி, பத்திரங்கள் பெற தகுதியான 23 கட்சிகளின் விபரங்களை வெளியிட, ஆர்.டி.ஐ சட்டத்தில் ‘தனி நபர் தகவல்கள்’ என்ற பிரிவை காட்டி மறுத்தது. ஆனால், எஸ்.பி.ஐ கூறும் இந்த சட்டம் தனி நபர்களுக்கு. பொது நலன் தொடர்பாக எனும்போது, அரசியல் கட்சிகளின் விபரங்களை வெளியிட வேண்டும்.
எங்கள் கட்சி வங்கிக் கணக்கில் 700 ரூபாய் மட்டுமே உள்ளது
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த, லேபர் சமாஜ் கட்சி அங்கீகரிக்கப்படாத ஆனால் பதிவு செய்யப்பட்ட 70 கட்சிகளில் ஒன்று. தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த பட்டியலில் இக்கட்சியும் ஒன்று. ஏடிஆர் ஆய்வின்படி லேபர் சமாஜ் கட்சி மீதமுள்ள 60 கட்சிகளோடு சேர்த்து, தேர்தல் பத்திரங்கள் பெற தகுதியற்றவை.
ஏன் இச்செய்தி வியப்படைய வைக்கிறதென்றால், தேர்தல் ஆணையம் 105 கட்சிகளின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்தது. ஆக, 105 கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி பெற்றிருக்கின்றன என்றுதானே கருத வேண்டும் ? பல லெட்டர்பேட் கட்சிகள் எவ்வித அரசியல் நடவடிக்கைகளையும் செய்யாமல், ஒரு சிறிய அறையை வைத்துக் கொண்டு, இந்த தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெரிய தொகைகளை சம்பாதிக்கின்றன என்று செய்திகள் வெளியாகியிருந்தன. இப்படி பட்டியலிடப்பட்ட கட்சிகளில் சில “நீங்களும்-நானும் கட்சி” (Aap Aur Hum Party), “மிகப்பெரிய கட்சி” (Sabse Badi Party) போன்ற கட்சிகள். இது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இவ்வாறு, தேர்தல் பத்திரங்கள் பெற்ற கட்சிகள் என்று புரிந்துகொள்ளும் வகையில் தேர்தல் ஆணையத்தால் பட்டிலிடப்பட105 அரசியல் கட்சிகளிடம் ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டீவ் உரையாட முயற்சி செய்தது. இவர்களில் 54 பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் நிர்வாகிகள் பேசினர். இதர கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.
“தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன என்றே தெரியாது” என்கிறார் லேபர் சமாஜ் கட்சியின் நிறுவனர் வழக்கறிஞர் பாபுராம். எங்கள் கட்சியின் பாஸ்புக்கை காட்டுகிறேன். வெறும் 700 ரூபாய்தான் எங்கள் கட்சியின் வங்கிக் கணக்கில் இருக்கிறது” என்றார் பாபுராம்.
குஜராத்தில் செயல்பட்டு வரும் ஒரு கட்சியின் பெயர், “திரும்பப் பெறும் உரிமை” கட்சி (Right to Recall Party). இக்கட்சியின் நிறுவனர் பெயர் தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் ராகுல் மேத்தா. அவரை ரிப்போர்டர்ஸ் கலெக்டீவ் தொடர்பு கொண்டபோது, “எங்களுக்கு தேர்தல் ஆணையத்திலிருந்து கடிதம் வந்தபோது, எங்கள் கட்சிக்கு வங்கிக் கணக்கு கூட இல்லை. எங்களை NIL ரிப்போர்ட் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இப்படி பதில் அனுப்புவது கட்டாயம் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவத்தனர்” என்கிறார் ராகுல் மேத்தா.
30 மே 2019 அன்று, தேர்தல் ஆணையத்துக்கு “திரும்பப் பெறும் உரிமை” கட்சி பதில் அனுப்பியது. இக்கட்சியை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த பட்டியலில் சேர்த்தது.
ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டீவின் நிருபர்கள், டெல்லியை சேர்ந்த, “ப்ரஜா காங்கிரஸ் கட்சி”, காஸியாபாத்தை சேர்ந்த “ஹிந்துஸ்தான் ஆக்சன் பார்டி”, “லேபர் சமாஜ் கட்சி”, ராஷ்ட்ரிய அமைதி கட்சி” போன்ற கட்சிகளிடமும் இதே பதில்தான். இவற்றில் ஹிந்துஸ்தான் ஆக்சன் பார்டிக்கு, எஸ்.பி.ஐயில் வங்கிக் கணக்கு கூட இல்லை.
மேலும் ஒரு 50 கட்சிகளிடம் பேசியபோது, இதே பதில்தான் கிடைத்தது.
“எங்களைப் போன்ற கட்சிகளுக்கு யார் சார் டொனேசன் குடுப்பா” என்று கேட்கிறார், பீகாரில் “பீகார் பிற்படுத்தப்பட்டோர் கட்சி”யின் நிறுவனர் பினோத் குமார் சின்ஹா.
கட்டுரையை எழுதியவர்கள் : ஶ்ரீகிரிஷ் ஜலிஹால் மற்றும் பூனம் அகர்வால்
மொழிபெயர்ப்பு : சவுக்கு சங்கர்
ட்விட்டரில் பின் தொடர : @savukku
வெளியீடு : ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டீவ் என்ற ஒரு சுதந்திரமான ஊடக அமைப்பு.
Worst election of the world
Thanks for information
In any democratic country, if any particular political party* is continously getting the declarations of the elections’ results status of “the WINs” by the Elections’ Authorities of ‘that country’ 👉 only in the machines based elections, 👉 that too only in the very important elections, 👉 that are only through some silent + tactful hi-fi technologies based “suitable desired settings” in those elections’ machines , done through its* friends of 👉some of the Corporate companies’ Technical Teams ,👉 that are before some days of the important elections and also before some hours of the counting in those machines 👉and thereby, that political party* is continously ruling that country continously , 👉and therefore, that particular political* understood the automatic sure of the “sure Wins” in the upcoming future all important elections,👉 that are also to be conducted only through those machines (and NOT AT ALL by the ballot paper voting system), 👉THEN, 👉anyone can easily understand that “that political party*” of that country 👉 is & can 👉 willfully, intentionally, deliberately 👉do many & more “worst things” 👉for the fulfillment of its* cruel agenda, plans, schemes, etc., 👉that are to give continous benefits 👉only to its* friends of 👉some of the Corporate companies owners in that country, 👉but/and not tactfully giving the required benefits/welfare to the common peoples of ‘that country’
in view of the Below ,
Ballot Paper Voting System based elections to be conducted with tight security surveillance measures in each polling booth 👉 is the Best for our India’s good future, plus to protect the India’s real democracy, at least hereafter :-
https://youtu.be/1PhQDaVayp8
Hi
Thank you for time to translate and educate the citizens…
சிறந்த மொழிபெயர்ப்பு. Good essay. Useful study material. Congratulations for expanding your horizon . வாழ்க வளர்க!