23 மே 2022 அன்று, சென்னை அண்ணாநகர் VR மாலில் நடந்த சட்டவிரோத ரேவ் பார்ட்டியில், 22 வயது இளைஞர் மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை அளித்தது. வழக்கமாக சென்னைக்கு வெளியே, கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கும் ரேவ் பார்ட்டிகள் சென்னை நகருக்குள் நடக்கிறது என்பதே பெரும் வியப்பை அளித்தது.
“The Great Indian Gathering” என்று பெயரிடப்பட்ட இந்த ரேவ் பார்ட்டி VR மாலின் மொட்டை மாடியில் நடைபெற்றது. இந்த பார்டியில் 22 வயதான இளைஞர் அளவுக்கு அதிகமாக மது உட்கொண்டதால் உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ரேவ் பார்ட்டி குறித்து மொபைல் ஆப் மற்றும் இன்டர்நெட் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது. ஒருவருக்கு ரூ.1500 என கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 900 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அப்படியென்றால் மொத்த வருமானம் எவ்வளவு என்பதை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இதுபோன்ற பல பார்ட்டிகள் இந்த மாலில் வழக்கமாக நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஆர் மாலில் இரண்டு பார்கள் உள்ளன. ஒன்று “தி மங்கி பார்” என்றும் மற்றொன்று “தி மெட்ராஸ் ஹவுஸ்” என்றும் அழைக்கப்படுகிறது.
‘தி மங்கி பார்’ இளைஞர்களிடையே, பிரபலமானதாக இருந்துள்ளது. வார இறுதியில் கூட்டம் அள்ளும். நட்சத்திர ஹோட்டல்களிலோ, பார் நடத்த, தமிழக அரசின் கலால் துறைதான் அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் நடத்தப்படும் பார்கள் அனைத்துமே சட்டவிரோதமான பார்கள்தான்.
விஆர் மாலில் செயல்பட்டு வந்த மங்கிபார் மற்றும் மெட்றாஸ் ஹவுஸ் ஆகியவைதான், ரேவ் பார்ட்டிக்கு மதுபானங்கள் வழங்கின. இந்த இரண்டு பார்களில், மெட்ராஸ் ஹவுஸ் பாரிடம் லைசென்ஸ் உள்ளது. (FL3/9/2020/2021) மங்கி பாருக்கு லைசென்ஸ் இல்லை. மெட்றாஸ் ஹவுஸ் பெற்றுள்ள உரிமத்தில் இருந்துதான் தி மங்கி பாருக்கு மதுபானம் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இது சட்டவிரோதம்.
இந்த இரண்டு பார்களும் “The Great Indian Gathering” என்ற ரேவ் பார்ட்டிக்கு மதுவை சப்ளை செய்தன. காவல் துறையின் செயல்பாடுகள் தெரிந்தவர்களுக்கு, காவல் துறையின் இரு பிரிவுகளுக்குள்ளேயே போட்டி இருக்கும் என்பது தெரியும். செப்டம்பர் இரட்டை கோபுர தாக்குதலுக்கு, CIA மற்றும் FBI ஆகிய இரண்டு அமெரிக்க புலனாய்வு மற்றும் உளவு நிறுவனங்களிடையே நடந்த போட்டிதான் காரணமாக இருந்தது. இரு நிறுவனங்களும் தீவிரவாதிகள் பற்றி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பரிமாறிக் கொள்ளாமல் போனதாலேயே, இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, தகவல்கள் அனைத்தையும் மையப்படுத்தி அலசும் கேந்திரங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவிலும் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது.
தமிழக காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்க பிரிவின் பணியானது, சட்டவிரோத மது விற்பனை, கலபட மது விற்பனை போன்றவற்றை கண்டறிந்து, தடுப்பது, வழக்குகள் பதிவு செய்வது உள்ளிட்டவை. ஆனால் மதுக்கூடங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், வருவாய்த்துறையோடு சேர்ந்த கலால் துறையிடம் உள்ளது.
கலால் துறை எப்போதுமே பணத்தை அள்ளி கொட்டும் ஒரு துறை. அதுவும் 2003ம் ஆண்டில் சில்லரை மது விற்பனையை அரசு எடுத்துக் கொண்டது முதலே, இது ஒரு வளம் கொழிக்கும் துறை. கடந்த ஆட்சி காலத்தில் தங்கமணி மது மற்றும் மின்சாரத் துறையை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த ஆட்சியில், செந்தில் பாலாஜி இவ்விரு துறைகளையும் பார்த்து வருகிறார்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறைதான் வழக்கு பதிவு, சோதனைகள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறது.
மே 22, 2022 அன்று, VR மாலின் மொட்டை மாடியில் அனுமதி இல்லாமல் ஒரு ரேவ் பார்ட்டி நடக்கிறது என்ற தகவல் அண்ணா நகர் மதுவிலக்கு அமல் பிரிவுக்கு வருகிறது. செய்தி அறிந்த காவல் துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவரும் விசாரிக்கப்பட்டனர்m. விசாரித்ததில் அதில் கலந்துகொண்டதில் 97 பேர் 21 வயதுக்கு குறைவானவர்கள் என்பதும் தெரிய வந்தது. 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது வழங்குவது சட்ட விரோதம்.
சோதனை நடந்து கொண்டிருந்தபோதே, ப்ரவீன் என்ற 22 வயது இளைஞர் மயக்கமடைந்தார். அவர் உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தி மங்கி பாரில் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக வைத்திருந்த 844 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பார்களில் பணியாற்றிய நிவாஸ் போஜராஜ், பாரதி, எட்வின் தேவபுத்திரன் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
உடனடியாக கலால் துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு மதுக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் Cr. No. 315 of 2022 dated 22.05.2022 என்ற எண்ணில் வழக்கு பதியப்பட்டது
இந்த சீல் கூட காய்ந்திருக்காத நிலையில், 09.06.2022 அன்று திரு. ஜெயகாந்தன் IAS, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் அவர்களால் மெட்ராஸ் ஹவுஸ் பாருக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.
மெட்ராஸ் ஹவுஸ் பார் VR மால் நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. அவர்களே இந்த பார் திறப்பதால் பயனடைபவர்கள்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி தந்த அழுத்தத்தின் காரணமாகவே, ஆயத்தீர்வை ஆணையர் ஜெயகாந்தன் இம்முடிவை எடுத்திருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. அதிமுகவிலிருந்தும், அமுமுகவிலிருந்தும், கட்சி தாவி வந்த செந்தில் பாலாஜியைத்தான் முக. ஸ்டாலின் ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக வைத்திருக்கிறார்.
ஸ்டாலின் குடும்பத்தில் செந்தில் பாலாஜிக்கு ஏன் இவ்வளவு அதிகாரம் என்பது திமுகவில் உள்ள பல சீனியர்களுக்கு இன்னும் புதிராக உள்ளது.
செந்தில் பாலாஜிக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு ?
செந்தில் பாலாஜி பற்றி நன்கு அறிந்தவர் ஒருவர் கூறினார். “செந்தில் பாலாஜியின் செல்வாக்கில் சிக்காதவர்களே இருக்க முடியாது.
உதாரணமாக நீங்கள் 800 சதுர அடி அலுவலகத்தை வாடகைக்கு தேடுகிறீர்கள். செந்தில் பாலாஜிக்கு உங்களால் காரியம் ஆக வேண்டியிருக்கிறது. நீங்கள் அலுவலகம் வாடகைக்கு தேடும் விபரம் தெரிய வந்தால், நுங்கம்பாக்கத்தில் 5 கோடி மதிப்பிலான ஒரு அலுவலகத்தை உங்கள் பெயரில் பதிவு செய்து, கையில் சாவியை கொடுப்பார். என்ன நடக்கிறது என்பதே புரியாமல் நீங்கள் திக்குமுக்காடி விடுவீர்கள்.
இப்படித்தான் ஸ்டாலின் குடும்பத்தையும் செந்தில் பாலாஜி மடக்கினார்.” என்றார்.
இந்த விவாகரத்தில் VR நிர்வாகத்தின் துணிச்சல் அதிர்ச்சியளிக்கிறது. சீல் வைக்கப்பட்ட தங்கள் பாரை திறக்க வேண்டும் என்று கலால் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் ஒரு இளைஞன் உயிரிழந்தது குறித்து எந்த வருத்தமும் பட்டதாக தெரியவில்லை.
இளைஞரின் மரணத்தை ஒதுக்கித் தள்ளியது மட்டுமல்லாமல், துணிச்சலுடன் 5 புதிய பார்களுக்கு உரிமம் கோரியது நிர்வாகம்.
அந்த கடிதத்தில், “நாங்கள் உரிய FL3 உரிமத்துடன் மதுக்கூடம் நடத்தி வருகிறோம். “The Great Indian Gathering” என்ற நிகழ்வு எங்களால் நடத்தப்படவில்லை. Madras Branding Company, of Culinary Concierge Private Limited என்ற நிறுவனம் நடத்தியது. ரேவ் பார்ட்டிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என தெரிவிக்கப்பட்டது. அத்தோடு அவர்கள் நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை.
அதே கடிதத்தில் மேலும் எங்களுக்கு கீழ்கண்ட 6 பார்கள் நடத்த உரிமை வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Pallava Court
Alt Bar
Haters Club
Sky Deck
Monkey Bar
Fatty Bao
வி.ஆர் மாலின் இந்த கடிதத்தின் மீது கலால் ஆணையர் ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்தார். விஆர் மால் அளித்த விளக்கங்களை ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல், “புதிய FL3 உரிமங்களுக்குத் தேவையான கட்டணத்தைச் செலுத்திய பிறகு, பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் நீங்கள் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்டுரைக்காக ஜெயகாந்தன் ஐஏஎஸ் அவர்களை தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. மதுவிலக்கு அமல் பிரிவு ஐஜி துரைக்குமார் ஐபிஎஸ் அவர்களை தொடர்பு கொண்டபோது, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இன்னும் புலனாய்வு முடியவில்லை என்றார். சீல் வைக்கப்பட்ட பார் திறக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டபோது, அது குறித்து எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்றார்.
இந்த சம்பவம் 22 மே 2022 அன்று நடந்தது. ஆனால் 8 ஜூன் 2022 அன்று பார் மீண்டும் திறக்கப்பட லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. வி.ஆர் மாலுக்கு நேரில் சென்று பார்த்தபோது, மங்கி பார் அல்லது தி மெட்ராஸ் ஹவுஸ் இதுவரை திறக்கப்படவில்லை. இருப்பினும், “விரைவில் திறக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாது என தமிழக முதல்வரின் குடும்பத்தினருக்கு நெருக்கமான எங்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உதயநிதி ஸ்டாலினின் பெயரை தவறாக பயன்படுத்திய செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஜெயகாந்தன் ஐஏஎஸ்-ஐ மிரட்டியுள்ளார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி சட்டவிரோதமாக இந்த பாரை திறக்க வைத்தது குறித்து யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இருந்தார். இறந்துபோன ப்ரவீனின் கல்லறையில் ஈரம் கூட காய்ந்திருக்காது. அதற்குள் ஒரு பெரும் தொகையை வாங்கிக் கொண்டே செந்தில் பாலாஜி இந்த பாரை திறக்க உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி யார் என்பது தெரியாமல், ஸ்டாலின் குடும்பம் விளையாட்டுத்தனமாக இருக்கிறது. ஒரு நாள் இல்லை ஒரு நாள் நாம் பாம்புக்கு பால் வார்த்திருக்கிறோம் என்பதை ஸ்டாலின் குடும்பத்தினர் உணர்வார்கள்.
Shavukku sir my role model for you
வழக்கம் போல் அவர்களுக்கு தெரியாமல் இவர் எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார். அப்பாவிகள் ஆன தலைவர் குடும்பம் இவரது செயலால் பிறகு பாதிக்க படும். பெயரை அவர்களுக்கு தெரியாமல் இவர் மிஸ் யூ ஸ் செய்து விட்டார்.
புளிச்ச பல்லவி…
என்னய்யா பிழைப்பு இது!!!
திமுக வை அழிக்க வெளியில் இருந்து யாரும் தேவையில்லை அவர்களே போதும்.கடந்த அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மிகப்பெரிய ஊழல்வாதி என்று கரூரில் பொங்கிய ஸ்டாலின் பின்னர் அவரையே கட்சியில் சேர்த்து அமைச்சர் பதவி கொடுத்து அதிகார மையமாக வைத்து உள்ளார்.
Is there an opportunity to learn journalism through you? Daily redpix interviews are eye openers
Spr
Savuku sankar sir please i want to talk with u sir for the compassionate ground doubt in police department
Dear Shankar Brther,
Recently I Watched Irfan’s Views. He Exploring about “Thaiman” From Isha yoga. Per Kg 1000Rs Only…I Thought Thats Y He Make Campaign “SaveSoil”. Please Talk About this.
https://www.ishalife.com/in/thaai-mann — Yes. check this link as well .
Congratulations sir…
அன்பு அண்ணா… இருகரம் கூப்பி என் வணக்கத்தை தெரிவிக்கிறேன்.. நீங்கள் பல துறைகளை (குறிப்பாக காவல் துறையை) பிழிந்து எடுக்கிறீர்கள்…. ஒரு நல்ல பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும்… ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்கள் வாயிலாக அறிகிறேன்…. பல துறைகளில் உள்ள குறைகளை பேசும் நீங்கள் ஏன் வனத்துறையை பற்றி பேசாமல் இருக்கிறீர்கள்… தயவுசெய்து பேசுமாறு கேட்டு கொள்கிறேன் (நான் தற்போது… தமிழகத்தில் வெளிவரும் தினசரி நாளிதழ் ஒன்றில் நிருபராக பணிபுரிகிறேன்… அந்நாழிதளின் பெயரை வெளியில் சொல்ல முடியாத நிலை அண்ணா… தவறாக நினைக்க வேண்டாம்)
Hi
தினமலர்
இளைஞர்களுக்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.
அரசும், அரசியல்வாதிகளும் திருந்தவேமாட்டார்கள் . வாழ்த்துக்கள் சங்கர் .
சார் வணக்கம் உங்க நம்பர் பிலீஸ் அர்ஜென்ட் விசயம்
Good one savukku na!
அரசியல் இல் ஒன்றும் புதிது இல்லை . என்றாவது ஒரு நாள் ஸ்டாலின் குடும்பம் விழும். Wa
# Tamilnadu Jamesbond 007 😃
அரசியலில் எதுவும் நடக்கும் ேேேேேேபால
தங்களின் துணிவுமிக்க புலானாய்வு கட்டுரைக்கு வாழ்த்துக்கள்!
Good One!
AAAW!!!!!