பாராளுமன்றத்தில் 1980ஆம் ஆண்டு ஜூன் மாதம் பல்ராம் ஜாகர் சஞ்சய் காந்தியின் மறைவை அறிவித்தபோது ஒட்டுமொத்தமாய் எல்லோரும் உறைந்து போனார்கள். உடனடியாக என்ன எதிர்வினை செய்ய வேண்டும் என யாருக்கும் தெரியவில்லை. சஞ்சய் காந்தி இந்திராகாந்தியின் செல்லப்பிள்ளையாக இருந்தார். தனக்கு அடுத்ததாக சஞ்சய் தான் எல்லாம் என்கிற பிம்பத்தை இந்திரா கட்டத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றிருந்தார். அம்மா பிள்ளையாக சஞ்சய் வெளியில் தெரிந்தாலும் இவர் அளவுக்கு தேசிய அரசியலில் இன்று வரை மர்மமாக இருக்கும் ஆளுமை வேறு ஒருவரும் இல்லை.
சிறு வயதில் இருந்தே யாரிடமும் அதிகம் பேசாமல் தனக்குள்ளாக ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சஞ்ஜய் குறித்து இந்திராவுக்கு வருத்தம் இருந்தது. ராஜீவ் எப்படியும் பிழைத்துக்கொள்வார் என்றும் சஞ்சயைக் கை தூக்கி விடவேண்டும் என்றும் இந்திரா நினைத்திருக்கலாம். அது சற்று அளவுக்கு மீறியும் போயிருக்கிறது.
சஞ்சய் காந்தி சீமான் வீட்டு கன்றுக்குட்டியாக வாழ விரும்பினார். உயர்தர ஸ்போர்ட்ஸ் கார்கள் ஓட்டுவது, மிக ஆபத்தான உயரத்தில் விமானத்தில் பறப்பது என அவர் எது பற்றியும் கவலை கொண்டதில்லை. அவரின் அரசியல் பிரவேசம் தேர்தல் பிரசாரத்தில் இருந்து தொடங்கியது. தொடக்கத்தில் சஞ்சய் காந்தி இந்திராவுக்காக பிரச்சாரம் செய்தார்.
அப்போது சஞ்சய் காந்தி இந்திராவின் மகன் என்பதைக் கடந்து பெரிய ஈர்ப்பினை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. அவர் “மாபெரும்” தலைவர் ஆகாத காலம். அவர் கூட்டங்களுக்கு 200 பேர் வந்தாலே பெரிது.
இந்திரா காந்தி அவசர நிலை சட்டத்தைக் கொண்டு வந்தபோது காங்கிரசின் பேச்சாளராக இருந்த சஞ்சய் காந்தி இந்திராவின் ஆலோசகராக மாறுகிறார். பொது மக்களுக்கு காங்கிரஸ் மீது பயமும் அவநம்பிக்கையும் ஏற்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், காங்கிரசுக்குள்சஞ்சய் காந்தி மீது அச்சமும், எதிர்காலத்தைக் குறித்த பயமும் ஏற்பட்டிருந்தது. எதையும் அதிரடியாக செய்யக்கூடியவராக இருந்த சஞ்சயின் திட்டங்கள் யாவும் நாட்டினரை எரிச்சலூட்டியது
இதே நேரத்தில் தான் இந்திரா ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டும். அடிமைகளாக்கவேண்டும் என்று நினைத்தார். அவருக்கு எதிராக சதி நடக்கிறது என்று உண்மையாகவேநம்பினார்.
ஒரே தொலைக்காட்சி நிலையமான தூர்தர்ஷனும், ஆல் இந்தியா ரேடியோவும் அரசுகட்டுப்பாட்டில் இருந்தன. அவை மட்டும் அல்ல.
பின்னாளில் பிரதமரான இந்தர் குமார் குஜ்ரால், தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகஇருந்தார். அவரிடம் ஊடகங்களுக்கு கடிவாளம் போட உத்தரவிடப்பட்டது.
அவர் மறுத்தார். சஞ்சயின் தலையீடு வந்தபோது, “நான் உங்கள் அம்மாவின் அமைச்சரவையில்தான் அமைச்சரே தவிர, உங்களுக்கு அல்ல”என்று சொன்னார். உடனடியாக அவர் பதவி இறக்கப்பட்டு வி.சி சுக்லா பொறுப்பேற்றார். விசி. சுக்லா என்கிற வித்யா சரண்சுக்லா அரசிடம் இருக்கும் அதிகாரங்களையும், காற்றிலிருந்து மந்திரம் போல பல புதியஅதிகாரங்களையும் எடுத்துக் கொண்டார்.
போர்க் காலத்தில் அமல்படுத்த வேண்டிய சட்டங்களை, நடைமுறைக்கு கொண்டு வந்து, ஊடகங்களை கைக்குள் கொண்டு வந்தார் இந்திரா. இந்த நேரம் சஞ்சய்யின் பிம்பம் தொடர்ந்து ஊடகங்களால் நிறுவபப்ட்டு, நெருக்கடி நிலையின்போதும் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. உண்மைகளை எழுதும் பத்திரிக்கைகள், “அமெரிக்க கைக்கூலிகள்” “மேற்குலக நாடுகளின் அடிமைகள்” என்று அழைக்கப்பட்டார்கள்.
இந்த ஊடகங்களுக்கு நல்ல செய்தி கண்ணுக்கு தெரிவதில்லை. பாசிட்டிவிட்டி இல்லாமல், எப்போது பார்த்தாலும் வறுமை, கொடுமை என்று எழுதுகிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டார்கள்.
இந்திரா காந்தி என்ன செய்யவேண்டும் என்பதை கோடிட்டு காட்டினார். “நல்ல செய்திகளை பரப்புங்கள்” என்றார். அனைத்து ஊடகங்களுக்கும் கட்டளைகள் அனுப்பப்பட்டன. “நல்ல செய்திகளை” மட்டுமே போட வேண்டும்.
இரண்டாவது கட்டளை சிறப்பானது. வானொலி, தொலைக்காட்சி இரண்டிலும், நிகழ்ச்சியின் தொடக்கத்தில், இந்திராவின் 20 அம்ச திட்டங்கள் பற்றியும், இறுதியில் சஞ்சய் காந்தியின் 5 அம்ச திட்டங்கள் பற்றியும் செய்திக்கோவை இணைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையமும் வானொலி நிலையமும், மாதந்தோறும், “எவ்வளவு நல்ல செய்தியை” பரப்பினார்கள் என்று அறிக்கை அனுப்பவேண்டும்.
சஞ்சய் காந்தி ஒரு முறை ஆந்திராவுக்கு விசிட் செய்தார். அரசு அதிகாரிகள் குவிந்தனர். ஊடங்கள் குவிக்கப்பட்டன. 12 மணி நேரம் இருந்தார்.
அனைத்து மொழிகளிலும், டாக்குமென்டரிகள் வெளியிடப்பட்டன. ஒளிபரப்பப்பட்டன.
இது மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை. மாபெரும் தலைவரானார் சஞ்சய்காந்தி. இந்தியாவின் கனவினைக் காண்பவர் என்கிற பிம்பம் உருவாக்கப்பட்டது
அவர் மரணிக்காமல் அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அடுத்த பிரதமராக அவர்நிச்சயம் வந்திருப்பார் என்றே சொல்லலாம். இது அனைத்துமே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிம்பங்கள்.
சஞ்சய்யின் வரலாறினைத் தெரிந்து கொள்வது இன்றைய இந்தியாவுக்கு பொருந்தும். இந்த ஊடகத்தின் மூலம் எவருடைய பிம்பத்தையும் மாபெரும் தலைவராக சித்தரிக்க முடியும்.
சாதாரண ஆர்எஸ்எஸ் பிராசகராக இருந்த நரேந்திர தாஸ் மோடி இன்று பிரதமராக இருப்பதன் பின்புலமாக இருப்பது அவர் கட்டமைத்து க்கொண்ட பிம்பத்தினால் தான். இதை அவர் விட்டுத்தரவே மாட்டார். குஜராத் மாடல் என்று ஒன்று இருப்பதை அவர் பரப்பினார், இந்துக்களின்காவலன் என்றார். தேசியம் தனது கண்கள் என்றார். தான் ஒரு விராட புருஷன் என்றார். எல்லாமே அவர் திட்டமிட்டுக் கட்டிக் கொண்ட பிம்பம். இந்திரா போன்ற வலுவான பின்னணி அவருக்கு இல்லை. ஆனால் ஒரு இயக்கம் இருந்தது. அந்த இயக்கத்துக்கு அவரும் , அவருக்குஅந்த இயக்கமும் தேவைப்பட்டார்கள்.
சஞ்சய் காந்தி எமர்ஜென்சி காலத்தில் பிரதமர் அலுவலகத்தைத் தன் வீட்டுக்கே மாற்றும் அளவுக்கு நடந்து கொண்டார். யாரும் தங்களுக்கு எதிரி இல்லை என்கிற போக்கு அவரிடமிருந்தது. கட்டாய குடும்பக் கட்டுப்பாடு போன்ற அதிரடி திட்டங்கள் மக்களிடையே வெறுப்பினை ஏற்படுத்தியிருந்தன. இதோடு மக்களுக்கான கார் என்று மாருதியை இந்தியஅரசு அறிமுகம் செய்து அந்த கார் நிறுவனத்திற்கு சஞ்சய் காந்தியை தலைவர் பொறுப்பில் இந்திரா நியமித்தார். மிகச் சிறிய வயதில் எந்த முன்அனுபவமும் இல்லாத சஞ்சய் காந்தி அரசினுடைய மாருதி கார் நிறுவனத்தை தலைமை தாங்கியது பத்திரிகையாளர்களையும் காங்கிரசுக்குள் இருக்கும் தலைவர்களையும் பொதுமக்களையும் எரிச்சலாக்கியது. சஞ்சய் கார்களின் மீது ஆர்வம் கொண்டவர் என்பதும் மூன்று வருட காலம் ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனியில் இடைநிலை பயிற்சியாளராக இருந்தார் என்பதும் இந்திராவால் தகுதியாக சொல்லப்பட்டது. இதற்கு இந்திரா அரசின் ஆதரவு பத்திரிகைகள் ‘ஆமாம் சாமி’ போட்டன. இந்திய மத்திய தர வர்க்கத்தின் கனவினை சஞ்சய் செயல்படுத்துவார் என்றன. கடைசியில்அவர் பொறுப்பேற்றிருந்த காலத்தில் கார்கள் உற்பத்தி சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.
இதை அப்படியே நாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பொறுத்த முடியும். மோடி பிரதமராக ஆவதற்கு முன்பு தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதிகளை இலவச நோட்டிஸ் போல அள்ளிவீசினார். அதில் ஒன்று தான் கருப்பு பணத்தை மீட்பதாக சொன்னது. அவர் அள்ளி வீசிய வாக்குறுதியில் சொக்கிப் போய் மக்கள் வாக்களித்தனர். அவருக்கு ஆதரவான ஊடகங்களும்..”. இதோ வந்துவிட்டார். ஏதோ செய்யப்போகிறார்” என்று தூபம் போட்டன. மோடி வந்தே விட்டார். பிறகு பணமதிப்பிழப்பை கொண்டு வந்தார். இந்தியாவே அலைபாய்ந்தது. திருமணம் வைத்திருந்தவர்கள், வெளியூர் சென்றிருந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள், அன்றாடக்கூலிகள், வங்கி கணக்கு இல்லாதவர்கள்
பாராளுமன்றத்தில் 1980ஆம் ஆண்டு ஜூன் மாதம் பல்ராம் ஜாகர் சஞ்சய் காந்தியின் மறைவை அறிவித்தபோது ஒட்டுமொத்தமாய் எல்லோரும் உறைந்து போனார்கள். உடனடியாக என்னஎதிர்வினை செய்ய வேண்டும் என யாருக்கும் தெரியவில்லை. சஞ்சய் காந்தி இந்திராகாந்தியின் செல்லப்பிள்ளையாக இருந்தார். தனக்கு அடுத்ததாக சஞ்சய் தான் எல்லாம் என்கிறபிம்பத்தை இந்திரா கட்டத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றிருந்தார். அம்மா பிள்ளையாக சஞ்சய் வெளியில் தெரிந்தாலும் இவர் அளவுக்கு தேசிய அரசியலில் இன்று வரை மர்மமாகஇருக்கும் ஆளுமை வேறு ஒருவரும் இல்லை.
சிறு வயதில் இருந்தே யாரிடமும் அதிகம் பேசாமல் தனக்குள்ளாக ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சஞ்ஜய் குறித்து இந்திராவுக்கு வருத்தம் இருந்தது. ராஜீவ் எப்படியும் பிழைத்துக்கொள்வார் என்றும் சஞ்சயைக் கை தூக்கி விடவேண்டும் என்றும் இந்திரா நினைத்திருக்கலாம். அது சற்று அளவுக்கு மீறியும் போயிருக்கிறது.
சஞ்சய் காந்தி சீமான் வீட்டு கன்றுக்குட்டியாக வாழ விரும்பினார். உயர்தர ஸ்போர்ட்ஸ் கார்கள்ஓட்டுவது, மிக ஆபத்தான உயரத்தில் விமானத்தில் பறப்பது என அவர் எது பற்றியும் கவலைகொண்டதில்லை. அவரின் அரசியல் பிரவேசம் தேர்தல் பிரசாரத்தில் இருந்து தொடங்கியது. தொடக்கத்தில் சஞ்சய் காந்தி இந்திராவுக்காக பிரச்சாரம் செய்தார்.
அப்போது சஞ்சய் காந்தி இந்திராவின் மகன் என்பதைக் கடந்து பெரிய ஈர்ப்பினை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. அவர் “மாபெரும்” தலைவர் ஆகாத காலம். அவர் கூட்டங்களுக்கு 200 பேர் வந்தாலே பெரிது.
இந்திரா காந்தி அவசர நிலை சட்டத்தைக் கொண்டு வந்தபோது காங்கிரசின் பேச்சாளராக இருந்த சஞ்சய் காந்தி இந்திராவின் ஆலோசகராக மாறுகிறார். பொது மக்களுக்கு காங்கிரஸ்மீது பயமும் அவநம்பிக்கையும் ஏற்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், காங்கிரசுக்குள்சஞ்சய் காந்தி மீது அச்சமும், எதிர்காலத்தைக் குறித்த பயமும் ஏற்பட்டிருந்தது. எதையும் அதிரடியாக செய்யக்கூடியவராக இருந்த சஞ்சயின் திட்டங்கள் யாவும் நாட்டினைஎரிச்ச்சலடுத்தியது
இதே நேரத்தில் தான் இந்திரா ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டும். அடிமைகளாக்க வேண்டும் என்று நினைத்தார். அவருக்கு எதிராக சதி நடக்கிறது என்று உண்மையாகவே நம்பினார்.
ஒரே தொலைக்காட்சி நிலையமான தூர்தர்ஷனும், ஆல் இந்தியா ரேடியோவும் அரசுகட்டுப்பாட்டில் இருந்தன. அவை மட்டும் அல்ல.
பின்னாளில் பிரதமரான இந்தர் குமார் குஜ்ரால், தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகஇருந்தார். அவரிடம் ஊடகங்களுக்கு கடிவாளம் போட உத்தரவிடப்பட்டது.
அவர் மறுத்தார். சஞ்சயின் தலையீடு வந்தபோது, “நான் உங்கள் அம்மாவின் அமைச்சரவையில்தான் அமைச்சரே தவிர, உங்களுக்கு அல்ல”என்று சொன்னார். உடனடியாக அவர் பதவிஇறக்கப்பட்டு வி.சி சுக்லா பொறுப்பேற்றார். விசி. சுக்லா என்கிற வித்யா சரண்சுக்லா அரசிடம் இருக்கும் அதிகாரங்களையும், காற்றிலிருந்து மந்திரம் போல பல புதியஅதிகாரங்களையும் எடுத்துக் கொண்டார்.
போர்க்காலத்தில் அமல்படுத்த வேண்டிய சட்டங்களை, நடைமுறைக்கு கொண்டு வந்து, ஊடகங்களை கைக்குள் கொண்டு வந்தார் இந்திரா. இந்த நேரம் சஞ்சய்யின் பிம்பம்தொடர்ந்து ஊடகங்களால் நிறுவபப்ட்டு, நெருக்கடி நிலையின்போதும் ஒரு பிம்பம்கட்டமைக்கப்பட்டது. உண்மைகளை எழுதும் பத்திரிக்கைகள், “அமெரிக்க கைக்கூலிகள்” “மேற்குலக நாடுகளின் அடிமைகள்” என்று அழைக்கப்பட்டார்கள்.
இந்த ஊடகங்களுக்கு நல்ல செய்தி கண்ணுக்கு தெரிவதில்லை. பாசிட்டிவிட்டி இல்லாமல், எப்போது பார்த்தாலும் வறுமை, கொடுமை என்று எழுதுகிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டார்கள்.
இந்திரா காந்தி என்ன செய்யவேண்டும் என்பதை கோடிட்டு காட்டினார். “நல்ல செய்திகளை பரப்புங்கள்” என்றார். அனைத்து ஊடகங்களுக்கும் கட்டளைகள் அனுப்பப்பட்டன. “நல்ல செய்திகளை” மட்டுமே போட வேண்டும்.
இரண்டாவது கட்டளை சிறப்பானது. வானொலி, தொலைக்காட்சி இரண்டிலும், நிகழ்ச்சியின் தொடக்கத்தில், இந்திராவின் 20 அம்ச திட்டங்கள் பற்றியும், இறுதியில் சஞ்சய் காந்தியின் 5 அம்ச திட்டங்கள் பற்றியும் செய்திக்கோவை இணைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையமும் வானொலி நிலையமும், மாதந்தோறும், “எவ்வளவு நல்ல செய்தியை” பரப்பினார்கள் என்று அறிக்கை அனுப்பவேண்டும்.
சஞ்சய் காந்தி ஒரு முறை ஆந்திராவுக்கு விசிட் செய்தார். அரசு அதிகாரிகள் குவிந்தனர். ஊடங்கள் குவிக்கப்பட்டன. 12 மணி நேரம் இருந்தார்.
அனைத்து மொழிகளிலும், டாக்குமென்டரிகள் வெளியிடப்பட்டன. ஒளிபரப்பப்பட்டன.
இது மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை. மாபெரும் தலைவரானார் சஞ்சய்காந்தி. இந்தியாவின் கனவினைக் காண்பவர் என்கிற பிம்பம் உருவாக்கப்பட்டது. அவர் மரணிக்காமல் அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அடுத்த பிரதமராக அவர் நிச்சயம் வந்திருப்பார் என்றே சொல்லலாம். இது அனைத்துமே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிம்பங்கள்.
சஞ்சய்யின் வரலாறினைத் தெரிந்து கொள்வது இன்றைய இந்தியாவுக்கு பொருந்தும். இந்தஊடகத்தின் மூலம் எவருடைய பிம்பத்தையும் மாபெரும் தலைவராக சித்தரிக்க முடியும்.
சாதாரண ஆர்எஸ்எஸ் பிராசகராக இருந்த நரேந்திர தாஸ் மோடி இன்று பிரதமராக இருப்பதன் பின்புலமாக இருப்பது அவர் கட்டமைத்துக்கொண்ட பிம்பத்தினால் தான். இதை அவர் விட்டுத்தரவே மாட்டார். குஜராத் மாடல் என்று ஒன்று இருப்பதை அவர் பரப்பினார், இந்துக்களின் காவலன் என்றார். தேசியம் தனது கண்கள் என்றார். தான் ஒரு விராட புருஷன் என்றார். எல்லாமே அவர் திட்டமிட்டுக் கட்டிக் கொண்ட பிம்பம். இந்திரா போன்ற வலுவான பின்னணி அவருக்கு இல்லை. ஆனால் ஒரு இயக்கம் இருந்தது. அந்த இயக்கத்துக்கு அவரும் , அவருக்குஅந்த இயக்கமும் தேவைப்பட்டார்கள்.
சஞ்சய் காந்தி எமர்ஜென்சி காலத்தில் பிரதமர் அலுவலகத்தைத் தன்வீட்டுக்கே மாற்றும்அளவுக்கு நடந்து கொண்டார். யாரும் தங்களுக்கு எதிரி இல்லை என்கிற போக்கு அவரிடமிருந்தது. கட்டாய குடும்பக் கட்டுப்பாடு போன்ற அதிரடி திட்டங்கள் மக்களிடையேவெறுப்பினை ஏற்படுத்தியிருந்தன. இதோடு மக்களுக்கான கார் என்று மாருதியை இந்திய அரசு அறிமுகம் செய்து அந்த கார் நிறுவனத்திற்கு சஞ்சய் காந்தியை தலைவர் பொறுப்பில்இந்திரா நியமித்தார். மிகச் சிறிய வயதில் எந்த முனனுபவமும் இல்லாத சஞ்சய் காந்தி அரசினுடைய மாருதி கார் நிறுவனத்தை தலைமை தாங்கியது பத்திரிகையாளர்களையும் காங்கிரசுக்குள் இருக்கும் தலைவர்களையும் பொதுமக்களையும் எரிச்சலாக்கியது. சஞ்சய்கார்களின் மீது ஆர்வம் கொண்டவர் என்பதும் மூன்று வருட காலம் ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனியில் இடைநிலை பயிற்சியாளராக இருந்தார் என்பதும் இந்திராவால் தகுதியாகசொல்லப்பட்டது. இதற்கு இந்திரா அரசின் ஆதரவு பத்திரிகைகள் ‘ஆமாம் சாமி’ போட்டன. இந்திய மத்திய தர வர்க்கத்தின் கனவினை சஞ்சய் செயல்படுத்துவார் என்றன. கடைசியில்அவர் பொறுப்பேற்றிருந்த காலத்தில் கார்கள் உற்பத்தி சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை.
இதை அப்படியே நாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பொறுத்த முடியும். மோடி பிரதமராகஆவதற்கு முன்பு தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதிகளை இலவச நோட்டிஸ் போல அள்ளிவீசினார். அதில் ஒன்று தான் கருப்பு பணத்தை மீட்பதாக சொன்னது. அவர் அள்ளி வீசியவாக்குறுதியில் சொக்கிப் போய் மக்கள் வாக்களித்தனர். அவருக்கு ஆதரவான ஊடகங்களும்..”. இதோ வந்துவிட்டார்..ஏதோ செய்யப்போகிறார்” என்று தூபம் போட்டன. மோடிவந்தேவிட்டார். பிறகு பணமதிப்பிழப்பை கொண்டு வந்தார். இந்தியாவே அலைபாய்ந்தது. திருமணம் வைத்திருந்தவர்கள், வெளியூர் சென்றிருந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள், அன்றாடக்கூலிகள், வங்கி கணக்கு இல்லாதவர்கள் என எல்லோரும் தெருவில் வந்து நின்றார்கள். ஒரே நாளில் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு வங்கிகளின் முன்பு நின்றார்கள். நீண்ட வரிசை காரணமாக சில இடங்களில் மரணமும் நிகழ்ந்தது. இதைப் பற்றி கவலைப்படாத மோடி தொடர்ந்து ஊடகங்கள் மூலமாக கருப்பு பணமீட்பு நடவடிக்கை என்றும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். ஊடகமும் அதைத் திரும்பத் திரும்ப சொன்னது. ஒருவகையில் ஊடகங்களின் திட்டம் பலனும் அளித்தது. ‘நம்ம நல்லதுக்குத் தானே’ என்று நம்ப வைத்தது. ஆனால் இது அவசரக்குடுக்கைத்தனம் என்றது ஆர்பிஐ. அதற்கு பதில் சொன்னால் தானேபிரதமர் இப்படி சொல்லியிருக்கிறார் என்று செய்திவரும். அதனால் செய்தியைத் தவிர்க்க எப்போதும் போல மௌனம் சாதித்தார் மோடி.
ஊடகங்களைத் தேவைக்கு பயன்படுத்துவதில் சஞ்சயும், மோடியும் திறமைமிக்கவர்களாகஇருந்தார்கள். மக்களின் முன்பாக எப்படி தெரிய வேண்டுமோ அப்படி தங்களை வடிவமைத்துக்கொண்டார்கள். இன்றும் சஞ்சயின் புகைபாடங்களை எடுத்துப் பார்த்தால் தெரியும். அவர்குடும்பத்துக்கு நெருக்கமானவராக, தீவிர பேச்சாளராக, நவீன தொழில்நுட்பத்தில் அக்கறைகொண்டவராக, அம்மாவின் பிள்ளையாகவே புகைப்படங்களில் தோன்றுவார்.
மோடி பற்றி சொல்லவேண்டியதில்லை. தன் அம்மாவை அவர் சந்திக்கக் சென்றாலும் கூட, அவர் காரில் இருந்து இறங்கும்போது கேமேராமேன் உடன் இருக்க வேண்டும். அவரின்ஒவ்வொரு செயலும் கேமராவில் பதிவாகிறதா என்பதை அவரே முன்னின்று பார்த்துக்கொள்கிறார்.
கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு என்பது சஞ்சயின் அரசியல் வாழ்க்கையில் மாற்ற முடியாதகருப்பு மை. எதையும் செய்யலாம் என்று அவர் மக்களின் உணர்வோடு விளையாடினார். இந்தியா போன்ற நாட்டில் இப்படியான அதிரடி திட்டங்கள் தான் செல்லுபடியாகும் என்று அவர் நினைத்ததே காரணம்.
இப்போது இங்கு வாருங்கள். கோவிட் பெருந்தொற்று காலத்தில் நான்கே மணிநேரத்தில் ஊரடங்கு போடப்பட்டபோது மோடி ஆதரவாளர்கள் சொன்னது, “இந்தியா போன்ற நாட்டில் இப்படியான அதிரடி தான் செல்லுபடியாகும்” என்றார்கள். ஆனால் இலட்சக்கணக்கான மக்கள்அடுத்த வேளை உணவுக்கு என்ன செயவார்கள் என்கிற திட்டம் அரசிடம் இல்லை. மோடியே எதிர்பார்ககாத ஒன்று, மைல்கணக்கில் புலம்பெயர் தொழிலாளிகள் நடந்தே சென்றது. இந்தியா போன்ற நாட்டில் அதிரடி திட்டம் வேலைக்கு ஆகாது என்பதை மோடி ஒரு நாளும் புரிந்து கொண்டதில்லை. சஞ்சய்யின் மனநிலை போல, நம்மைக் கேட்க யாரும் இல்லை என்கிற மனோநிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் இவை.
ஒரு தலைவனின் தேவையும், பொறுப்பும் நெருக்கடி காலத்தில் எப்படி , யாருக்காக யோசிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது. இதில் சஞ்சய் தலைவராகாமல் தோற்றார். மோடி ஒரு நாட்டின் தலைவரான பின்பு தோற்று நிற்கிறார்.
மோடியையும் சஞ்சய் காந்தியையும் ஒப்பிடுவதற்கான காரணம் உண்டு. இந்தியா போன்றவேறுபட்ட நிலங்களைக் கொண்ட ஒரு நாட்டினை ஆள அவசர க்குடுக்கைகளும், வெற்று பிம்பத்தினால் வாழ்பவர்களாலும் முடியாது. சஞ்சய் காந்தி குறித்து வெளிவந்த புத்தகங்கள் , கட்டுரைகள் குறைவு. வினோத் மேத்தா போன்றவர்கள் எழுதிய புத்தகங்களை வாசிக்கையில் புரிந்தது, சஞ்சய் ஒருவேளை பிரதமராக இருந்திருந்தால், இந்தியாவைக் குறித்து அவர் கண்ட கனவினை நிறைவேற்ற இந்தியாவின் ஆன்மாவை பலி கொண்டிருக்கலாம்.
சஞ்சய் இடத்தை மோடி எடுத்துக் கொண்டிருக்கிறார். மதவாதம் எனும் பெயரில் மோடி அதனைசெய்து கொண்டிருக்கிறார்.
ஒரு தலைவன் என்பவன் தன்னை தலைவனாக எல்லோரும் நினைக்க வேண்டும் எனஅரும்பாடுபடக்கூடாது. தலைவனாகவே இருக்க வேண்டும்.
குறிப்பு : 25 ஜூன் அன்று நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது.
Anna how to become like u
வெளி மாநில மக்கள் நாம் தமிழ்நாட்டிற்கு வந்து நம் வேலையை பறித்து கொண்டுள்ளார்கள். இன்று கோபி செட்டி பாலயத்தில் உள்ளூர் நம் தமிழ் மக்களுக்கு வேலை தர கூடாது என்று போராட்டம் செய்துள்ளார்கள். இவர்கள் நம் மாநிலத்தில் வருவதை குறைப்பது எப்படி
Sir,
I’m also working in state government department.. lot of thing happens in my department.. if I ask means they create group and corner me.. if u give me a chance means I will explain to u in person or some other tool. Kindly expose the scam to public
Hello sir please write on judicical extremism
How to chat with you in private mail service sir.
same paragraph again repeat aguthu sir, pls correct it
வேள்வி மாதிரி ஒரு தொடர்கதை எழுதுங்கள் சார், அதிலுள்ள ரொமன்ஸ் சீனின் ரசிகன் சார் நான் ….
வேள்வி மாதிரி ஒரு தொடர்கதை எழுதுங்கள் சார், அதிலுள்ள ரொமன்ஸ் சீனின் ரசிகன் சார் நான் ….
Sounds Like BBC report
by comparing thest two – shows your maturity of thought and your understanding the ideologies. anyhow, lot of jalra people will be around! and it will get prompted, as the same sanjay ideology to yourself. bimbam kattamaithu kollunga sir!
Can you correct the indentation, coudnt read from mobile. All the words are combined to one. Few paragy repeated again.
மோடியின் முடிவு எப்படி இருக்கப்போகிறது என்பதை ஒரு முன்னோட்டமாக உங்கள் கட்டுரை காட்டுகிறது. இனிமேலாவது, தன்னைப் பற்றிய உண்மை நிலை உணர்ந்து நாட்டிற்கு ஏதாகிலும் நன்மையை எதாவது ஒரு துறையிலாவது உருப்படியாக செய்ய மோடி முயற்சிக்க வேண்டும். சங்கிகள் வழக்கம் போல இரை தருபவர் பின் குரைக்கப் போய் விடுவர்.
அருமை சார்.
👏👏👏 அருமையான ஒப்பீடு. Never ever thought of such an angle, this shows your in-depth understanding of India’s political roots. Brilliant!!
Can’t wait for next Sunday 🙂
பாராளுமன்றத்தில் 1980ஆம் ஆண்டு ஜூன் மாதம் பல்ராம் ஜாகர் ……முதல் …..மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள், அன்றாடக்கூலிகள், வங்கி கணக்கு இல்லாதவர்கள் ….வரை ….இரு முறை repeat ஆகிவிட்டது ,சரி செய்யுங்கள் .
Less time more commitments. Please ignore small mistakes.
ஒரு தலைவனின் தேவையும்பொறுப்பும் நெருக்கடி காலத்தில் எப்படியாருக்காக யோசிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது. அருமை. பாராட்டுக்குரியது.
Shri Modi = Shri SanjaiGandhi. Reasons and validations are acceptable and your intuition for possibility of Emergency 2.0.
நாடு தாங்குமா?
Note : Please do review before publishing. Yes you are very busy and have less time. Since you are widely accepted and respected journalist(திட்டினாலும் பரவாயில்லை)
Fantastic comparision, He always wants to bring emergency just to satisfy his arrogance.
Year podaliaye
Wow. Just came to check out for kasadara 2.