மைலார்ட், யுவர் ஹானர் என்றெல்லாம் பல்வேறு மரியாதைகளை வழங்கி நீதிபதிகளை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கிறோம் அல்லவா ? அதற்கு அவர்களில் பெரும்பாலானோர் தகுதியானவர்களே அல்ல. மிக மிக அற்ப மனிதர்கள். தங்கள் சுயநலனுக்காக, பதவி உயர்வுக்காக, ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் பதவிகளுக்காக எத்தகைய இழிவான காரியத்தையும் செய்யத் தயங்காதவர்கள் என்பது மிக மிக அதிர்ச்சி அளித்தது எனக்கு.
2009ல் இருந்து, 2016 வரை நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் அலுவலகங்களிலும்தான் எனக்குப் பணி.
மற்றவர்களைப் போலவே நானும், சினிமாவில்தான் நீதிமன்றத்தை பார்த்திருக்கிறேன். 18.09.2008 அன்று சிறையிலிருந்து வெளியே வந்தேன். வேலை இல்லை. என் வழக்கறிஞர் புகழேந்தியை பார்க்க அவர் அலுவலகம் சென்றேன்.
10 மணிக்கு நீதிமன்றம் கிளம்பினார். நான் அலுவலகத்திலேயே இருந்தேன். கோர்ட்டுக்கு வர்றீங்களா என்று கேட்டார். பயமா இருக்கு தோழர் என்றேன். சும்மா வாய்யா என்று அழைத்துச் சென்றார். போனை சைலெண்ட்ல போட்டுரு என்றார்.
முதல் நாள் நான் நீதிமன்றத்துக்கு சென்றபோது, நளினியின் முன்விடுதலை வழக்கு நடந்து கொண்டிருந்தது. எள்முனையளவும் இடமில்லாத கூட்டம்.
அதன் பின், புகழேந்தியோடும், பின்னர் ராதாகிருஷ்ணன் வழக்கறிஞரோடும் தினந்தோறும் நீதிமன்றம் செல்வேன். உயர்நீதிமன்ற பத்திரிக்கையாளர்கள் அறிமுகமானார்கள். பல வழக்கறிஞர்கள் அறிமுகமானார்கள். சட்டம் கற்றுக் கொண்டேன்.
அப்போதுதான், நீதிபதிகளின் ஆபாசமான மறுபக்கம் தெரிய வந்தது. பெரிய அறிமுகமோ புரிதலோ இல்லாவிட்டாலும், சினிமாவிலெல்லாம் பார்த்து பார்த்து, நீதிபதிகளை பற்றிய ஒரு பிம்பம் என் மனதில் இருந்தது. அது உடைந்து சுக்கல் சுக்கலாக ஆனது.
இந்த நீதிபதிகள் மிக மிக ஆபாசமானவர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். நடைபாதையில் பழம் விற்பனை செய்பவனிடம் இருக்கும் நேர்மை கூட இவர்களிடம் இலை என்பதை புரிந்து கொண்டேன்.
நாம் இப்போது 2022ல் இருக்கிறோம். இந்தியா 2014 முதல் சந்தித்து வந்த நெருக்கடி முற்றி வெடிக்கும் நிலையை அடைந்து விட்டது. இதை ஒரு புரட்சியாக மாற்ற ஒரு அரசியல் தலைமை இல்லாததே இந்தியாவின் துரதிருஷ்டம். அந்த நெருக்கடி முற்றுவதற்கான முக்கிய காரணம் நீதித்துறையின் காவி மயமே.
இந்திய தலைமை நீதிபதியாக இருந்த ஒரு ஆபாசமான நீதிபதி ஒருவரைப் பற்றி பார்ப்போம்.
ஏப்ரல் 1973ல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி சிக்ரிக்கு பிறகு, நீதிபதி ஷீலத் தலைமை நீதிபதியாகியிருக்க வேண்டும். அவருக்கு அடுத்து, ஷீத்தல் ஜூலை 1973 வரை இரண்டு மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக இருந்திருப்பார். அவருக்கு பின்னர் ஹெக்டேவும், அவரையடுத்து க்ரோவரும் தலைமை நீதிபதியாக இருந்திருப்பர்.
இந்திராவுக்கு ஷீதல், சிக்ரி, க்ரோவர் ஆகியோரை தலைமை நீதிபதியாக்கக் கூடாது என்று தீர்மானம். மூவரையும் ஓவர்டேக் செய்து, ஏ.என்.ரேவை தலைமை நீதிபதியாக நியமனம் செய்தார்.
இவர்கள் மூவரையும் இந்திரா விரும்பாததற்கு காரணம், மோடியின் முன்னோடியான இந்திரா காந்தி விரும்பாத வகையில் கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு வழங்கியதே. அரசியல் அமைப்பின் அடிப்படை அம்சங்களை மாற்ற முடியுமா முடியாதா என்பதை விவாதித்த தீர்ப்பு 7ல் 6 என்ற பெரும்பான்மை அடிப்படையில், அரசியல் அமைப்பின் அடிப்படை அம்சத்தை எந்த காலத்திலும் மாற்றவே முடியாது என்று முடிவெடுத்த அமர்வில், முடியும் என்று தீர்ப்பு எழுதிய ஒரே ஒரு நீதிபதி ஏ.என்.ரே மட்டுமே. Gadbois எழுதிய புத்தகத்தில், ரே, “நான் தலைமை நீதிபதி பதவி வேண்டாம் என்று கூறியிருந்தால், வேறு ஒருவர் வந்திருப்பார். 24 ஏப்ரல் அன்று எனக்கு 2 மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டு முடிவெடுக்குமாறு கூறப்பட்டேன். நான் என்ன செய்வது. நான் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.
அவருக்கு பணியில் இளையவரான மேத்யூஸ் என்கிற நீதிபதியிடம், நீங்கள் தலைமை நீதிபதியாகிறீர்களா என்று கேட்டதற்கு மேத்யூஸ், மூத்தவர்களை supercede செய்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று மறுத்தார். அது போல ஏ.என்.ரே செய்யவில்லை. அதனால்தான் அவர் இந்திய நீதித்துறை வரலாற்றின் கருப்பு பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
இது போல, பல சீனியர்களை supercede செய்தவர்கள்தான் தமிழகத்திலிருந்து உச்சநீதிமன்றம் சென்ற எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர். இன்றும் இவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தை இவர்களின் புழக்கடை போல கருதி வருகிறார்கள். அதாவது சென்னை உயர்நீதிமன்றத்துக்கு என்ன ப்ராண்ட் பினாயில் வாங்க வேண்டும் என்பதைக் கூட, கவுல், ராமசுப்ரமணியம் மற்றும் சுந்தரேஷ் ஆகியோர்தான் இன்றும் தீர்மானித்து வருகிறார்கள். எளிமையாக சொல்வதென்றால், சென்னை உயர்நீதிமன்றத்தை, இவர்கள், தங்கள் பரம்பரை சொத்து என்றே கருதுகிறார்கள். It isn’t na ?
ரே தலைமை நீதிபதியாக்கப்பட்டதே, கேசவானந்த பாரதி வழக்கை மறுபரிசீலனை செய்து, தீர்ப்பை மாற்ற வேண்டும் என்பதுதான். இதற்காக, ரே, ஒரு சிறப்பு அமர்வை உருவாக்கி விசாரணையை தொடங்கினார். இந்த அமர்வு ஒரு சில நாட்களுக்கு பிறகு காணாமல் போனது.
இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த RS பதக் என்பவரிடம், ரே, கேசவானந்த பாரதி தீர்ப்பை திருத்த முடியுமா என்று கேட்டதற்கு முடியாது என மறுத்தார். இதன் காரணமாக இவருக்கு பதிலாக பி.என். சிங்கால் உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.
தீபக் மிஷ்ரா, கோகோய் மற்றும் ரமணாவை போலவே ரே, அவர் தலைமை நீதிபதியாக இருந்தவரை, இந்திராகாந்திக்கு கார் ஓட்டுனராக இருந்தால் எப்படி விசுவாசமாக இருப்பாரோ அப்படித்தான் நடந்து கொண்டார். தீர்ப்புகள் எழுதினார்.
இந்த சாரதியை இந்திரா காந்தி குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். இந்திராவோ பயன்படுத்திக் கொண்டு தூக்கி எரிந்தார். இதுதான் ரமணாவுக்கும் நடக்கப் போகிறது.
அன்று உச்சநீதிமன்றத்தில், ஒரு ரே இருந்தார். மற்றவர்கள் நீதிபதிகளாக இருந்தார்கள். இன்றோ ரேக்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
பல உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள், மோடி மற்றும் அமித்ஷாவால் பழிவாங்கப்படுகையில், உடனிருக்கும் நீதிபதிகள் ஒரு கல் போல சமைந்திருக்கிறார்களே தவிர, ஒருவர் கூட உயிர்பெறவில்லை.
அன்றாவது ஒன்றிரண்டு நல்ல நீதிபதிகளை பெற்றோம். இன்று, ஒன்றே ஒன்று கூட தேருவதில்லை.
உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள் என்று பலருக்கு தெரியாது. உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி பதவிகளுக்கு, மூன்றில் ஒரு பங்கு, மாவட்ட நீதிபதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். மூன்றில் இரண்டு பங்கு வழக்கறிஞர்களில் இருந்து. பதவி உயர்வில் வருபவர்களின் கதை ஒரு பெரும் சோகக் கதை. அதை மற்றொரு நாள் பேசுவோம்.
நேரடியாக வழக்கறிஞர்களில் இருந்து நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவதில்தான் அத்தனை முறைகேடுகள். அட்டூழியங்கள். அலங்கோலங்கள்.
சாதாரணமாக, ஒரு வழக்கறிஞர் நீதிபதியாக, 45 வயது நிரம்பியிருக்க வேண்டும். நல்ல வழக்குரைஞர் என பெயர் பெற்றிருக்க வேண்டும். சட்டம் மேலும் தெளிவடையும் வகையில் நல்ல தீர்ப்புகளை பெற்றிருக்க வேண்டும். அவை சட்ட சஞ்சிகைகளில் வெளியாகியிருக்க வேண்டும். 5 வருடத்துக்கு ஆண்டு வருமானம் 12 லட்சத்துக்கு குறைவின்றி வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும்.
நல்ல வழக்கறிஞரா இல்லையா என்பதை, மூத்த வழக்கறிஞர்களையும் சக நீதிபதிகளிடமும் இது விசாரித்தறியப்படும்.
இது தவிர சமூக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற விதி சொல்லப்படாமலேயே கடைபிடிக்கப்படுகிறது.
சமூகத்தில் ஒவ்வொரு சாதியின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இதை வகுத்து பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
கடைசியாக ஆதாரபூர்வமான சாதி எண்ணிக்கை 1985ம் ஆண்டு அம்பாசங்கர் அறிக்கையில் உள்ளது. அதையே எடுத்துக் கொள்வோம். அதற்குள் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
1) வன்னியர் 13 மாவட்டம் 14 சதவிகிதம்
2) எஸ்சி / எஸ் டி 23 மாவட்டம் 19 சதவிகிதம்
3) கொங்கு வேளாளர் 3 மாவட்டம் 4.5 சதவிகிதம்
4) நாடார் 5 மாவட்டம் 4.5 சதவிகிதம்
5) முக்குலத்தோர் 6.75 சதவிகிதம்
6) யாதவர்கள் 3 சதவிகிதம்
7) விஸ்வகர்மா 2.7 சதவிகிதம்
8) கவர நாயுடு 2.5 சதவிகிதம்
9) கைகொலர் 2 சதவிகிதம்
10) பிராமின் 2 சதவிகிதம்
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இப்படித்தானே இருக்க வேண்டும் ? சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை – 75. பதவி உயர்வு 25 காலியிடம் 6
இப்போது இருப்பவர்கள் 67. இப்போது இருக்கும் நீதிபதிகளில் பிள்ளைமார் – 5, நாடார் – 5, முதலியார் – 5, செட்டியார் – 3, கவுண்டர் 7, எஸ்சி/எஸ்டி – 6.
பார்ப்பன நீதிபதிகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா ? 12.
இது நியாயமா ? தலித்துகளின் மக்கள் தொகை சதவிகிதம் என்ன ? அவர்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை என்ன ? இதுதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவமா ?
எப்படி பார்ப்பனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ?
சுதந்திரம் அடைந்த காலத்திலும், அதற்கு முன்னரும் பார்த்தீர்கள் என்றால், அரசுப் பணி, மருத்துவம், பொறியாளர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகிய பதவிகளில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தினர். சமூக அடுக்கில் மேல் தட்டில் இருப்பதால், அவர்களால் கல்வி தொடர்பான அனைத்திலும் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.
நீதிக்கட்சியின் வளர்ச்சி, திராவிட இயக்கத்தின் வீச்சு, பிற்படுத்தப்பட்டோரின் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் ஆகியவை, பல துறைகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழித்தது. ஆனால் இன்றும் பார்ப்பனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறைகள் என்றால் அது கோவில் மற்றும் நீதிமன்றம்.
இவர்களின் ஆதிக்கம் இத்துறைகளில் குறைந்துவிடாமல் இருப்பதற்கு பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்றம் ஒரு காலத்தில் வழக்கறிஞர்களின் போராட்ட களம். எந்த சமூக பிரச்சினையாக இருந்தாலும் அதை முதலில் கையில் எடுத்து போராட்டத்தில் இறங்குவது வழக்கறிஞர் சமூகமே. பல விஷயங்களில் பல வெற்றிகளை ஈட்டியுள்ளனர்.
பார்ப்பன வழக்கறிஞர்களாக தேர்ந்தெடுத்து நீதிபதியாக்கும் போக்குக்கு, வழக்கறிஞர் சங்கங்கள் முடிவு கட்ட உறுதி பூண்டதன் விளைவு, உச்சநீதிமன்றத்துக்கு போகும் நீதிபதி பரிந்துரை பட்டியலில், பார்ப்பன வழக்கறிஞர்களின் பெயர் அதிகமாக இருந்தால் உடனடியாக போராட்டத்தில் குதிப்பர். இது போல சில பரிந்துரை பட்டியல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
2011ம் ஆண்டில், திரு பி.என்.பிரகாஷ் மற்றும் வைத்தியநாதனின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டபோது பெரும் போராட்டம் வெடித்தது. நீதிபதிகளுக்கு இதை எப்படி கட்டுப்படுத்துவது என்றே தெரியவில்லை.
2014 ஜூலை 26ல் சஞ்சய் கிஷண் கவுல் என்ற காஷ்மீர் பார்ப்பனர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அது வரை வழக்கறிஞர்களை அடக்க காத்திருந்த பார்ப்பன நீதிபதிகள் அவரிடம் வழக்கறிஞர்களை பற்றி புகார் தெரிவிக்க, அதை அடக்க கொண்டு வரப்பட்டதுதான், மத்திய தொழிற்படை பாதுகாப்பு. அது வரை மாநில போலீஸார் பாதுகாப்பில் இருந்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் போராட்டம் நிறுத்தப்பட்டது. மீறி போராடும்
வழக்கறிஞர்கள் அடக்கப்பட்டனர். மீண்டும் பார்ப்பன வழக்கறிஞர்கள் எளிதாக நீதிபதியாவது தொடர்ந்தது. இதன் காரணமாகத்தான் 2 சதவிகிதம் இருப்பவர்களுக்கு 12 நீதிபதிகள்.
ஒவ்வொரு பட்டியலிலும் பார்ப்பன சமூகத்தை சேர்ந்த ஒருவர் இருப்பதை உறுதி செய்வார்கள். 8 காலியிடம் என்றால் அதை 4ஆக பிரித்து, இரு பட்டியல்களில் இரு பார்ப்பனர்களை சேர்ப்பார்கள்.
2008 முதல் 2021 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளின் பட்டியலை பார்ப்போம்.
2008 Batch | |||
R. SUBBIAH | Retired | ||
M. SATHYANARAYANAN | Retired | ||
K KANNAN | பிராமணர் | Retired | |
2009 Batch | |||
N KIRUBAKARAN | Retired | ||
M.M. SUNDRESH | Supreme Court | ||
T.S. SIVAGNANAM | Calcutta HC | ||
M. DURAISWAMY | 21/09/2022 | ||
T. RAJA | 24/05/2023 | ||
RS RAMANATHAN | பிராமணர் | Retired | |
2013 Batch | |||
|
P N PRAKASH | 11/01/2023 | |
SMT. PUSHPA SATHYANARAYANA | Retired | ||
K KALYANASUNDARAM | Retired | ||
|
S. VAIDYANATHAN | பிராமணர்-2 | 16/08/2024 |
R. MAHADEVAN | 09/06/2025 | ||
MISS V.M. VELUMANI | 05/04/2024 | ||
2016 Batch-1 | |||
V. BHARATHIDASAN | Retired | ||
D. KRISHNAKUMAR | 21/05/2025 | ||
S.S. SUNDAR | 02/05/2025 | ||
2016 Batch-2 | |||
V. PARTHIBAN | Retired | ||
|
R. SUBRAMANIAN | பிராமணர்-3 | 24/07/2025 |
M. GOVINDARAJ | Retired | ||
M. SUNDAR | 18/07/2028 | ||
R. SURESH KUMAR | 28/05/2026 | ||
SMT. J. NISHA BANU | 17/09/2028 | ||
M.S. RAMESH | 27/12/2025 | ||
S.M. SUBRAMANIAM | 30/05/2027 | ||
|
DR. (SMT.) ANITA SUMANTH | பிராமணர்- 4 | 14/04/2032 |
2016 Batch-3 | |||
T. RAVINDRAN | Retired | ||
P. VELMURUGAN | 08/06/2027 | ||
DR. G. JAYACHANDRAN | 31/03/2027 | ||
|
C.V. KARTHIKEYAN | பிராமணர்- 5 | 13/12/2026 |
2016 Batch-4 | |||
R.M.T. TEEKAA RAMAN | 08/06/2025 | ||
N. SATHISH KUMAR | 05/05/2029 | ||
|
N. SESHASAYEE | பிராமணர்- 6 | 07/01/2025 |
2017 Batch-1 | |||
SMT. V. BHAVANI SUBBAROYAN | 16/05/2025 | ||
A.D. JAGADISH CHANDIRA | 14/02/2028 | ||
|
G.R. SWAMINATHAN | பிராமணர்- 7 | 31/05/2030 |
ABDUL QUDDHOSE | 07/09/2031 | ||
M. DHANDAPANI | 14/04/2030 | ||
P D AUDIKESAVALU | 29/12/2032 | ||
2017 – Batch-2 | |||
SMT. R. THARANI | 09/06/2023 | ||
P. RAJAMANICKAM | Retired | ||
SMT. T. KRISHNAVALLI | Retired | ||
R. PONGIAPPAN | Retired | ||
|
SMT. R. HEMALATHA | பிராமணர்- 8 | 30/04/2025 |
2018 Batch | |||
KUMARI P.T. ASHA | 21/08/2028 | ||
M. NIRMAL KUMAR | 22/11/2027 | ||
|
N. ANAND VENKATESH | பிராமணர்- 9 | 03/07/2031 |
G.K. ILANTHIRAYAN | 08/07/2032 | ||
KRISHNAN RAMASMY | 02/06/2030 | ||
C. SARAVANAN | 30/11/2033 | ||
B. PUGALENDHI | 24/05/2029 | ||
SENTHILKUMAR -RAMAMOORTHY | 01/10/2028 | ||
2020 Batch | |||
G. CHANDRASEKARAN | 30/05/2024 | ||
V. SIVAGNANAM | 31/05/2025 | ||
G. ILANGOVAN | 04/06/2025 | ||
S. ANANTHI | 30/07/2022 | ||
S. KANNAMMAL | 19/07/2022 | ||
S. SATHI KUMAR | 17/07/2025 | ||
K. MURALI SHANKAR | 30/05/2030 | ||
R.N. MANJULA | 17/02/2026 | ||
T.V. THAMILSELVI | 18/06/2030 |
Additional Judges:
A.A. NAKKIRAN | 03/12/2022 | ||
2021 Batch | |||
10. | SMT. SUNDARAM SRIMATHI | பிராமணர்- 10 | 11/10/2023 |
D. BHARATHA CHAKRAVARTHY | 11/10/2023 | ||
R. VIJAYAKUMAR | 11/10/2023 | ||
MOHAMMED SHAFFIQ | 11/10/2023 | ||
J. SATHYA NARAYANA PRASAD | 28/10/2023 | ||
2022 Batch | |||
11. | MS. NIDUMOLU MALA | பிராமணர்- 11 | 27/03/2024 |
S. SOUNTHAR | 27/03/2024 | ||
SUNDER MOHAN | 05/06/2022 | ||
KABALI KUMARESH BABU | 05/06/2022 |
TRANSFERRED TO OTHER HIGH COURT
S. MANI KUMAR | 23/04/2023 | ||
M.V. MURALIDARAN | 15/04/2024 | ||
12 | SUBRAMONIUM PRASAD | மலையாளி பிராமணர்-12 | 21/06/2029 |
இப்போது, 8 வழக்கறிஞர்களின் பெயர் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த பெயர்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் 3 நீதிபதிகள் அனுப்புவார்கள். முதல் மூன்று நீதிபதிகளும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை அழைத்து பேசுவார்கள். அவர் நீதிபதியாக தகுதியுள்ளவரா என்பதை உறுதி செய்துகொள்வார்கள். இது வரை அப்படித்தான் நடந்து வந்தது.
ஆனால் இம்முறை 8 பேரின் பெயர்களும் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மாவீரர்கள், மூச்சு பேச்சின்றி அந்த பெயர்களுக்கு சம்மதம் தெரிவித்து கையொப்பம் இட்டார்கள். ஏன் தெரியுமா ? அப்படி ஒத்துழைத்தால்தானே ஓய்வு பெற்ற பிறகு புதிய பதவி கிடைக்கும் ? Its quite simple.
முதல் பெயர்
செந்தில் இவர் திமுக. ஜெகதரட்சகனின் வழக்கறிஞர். 2006 திமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞராக இருந்து, புகார் காரணமாக பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டனர். சாதி – தலித். பார்கவுன்சில் துணை தலைவர் பிரபாகரனின் கேண்டிடேட். இவர் நீதிபதியானதும், இவர் முன்னிலையில் பிரபாகரன் அடிக்கடி ஆஜராவதை பார்க்கப் போகிறோம்.
இரண்டாவது பெயர்
சீனிவாசன். தெலுங்கு நாயுடு. காங்கிரஸ் கட்சிக் காரர். வழக்குகளே இல்லை முன்னாள் மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரனின் நெருங்கிய உறவினர். இவர் பெயரில் ஒரு reported judgment கோட இல்லை. தற்போது Madras Bar Association செயலாளர். இவர் ரமணாவின் கேண்டிடேட். சாதியும், வேறு சில காரணங்களும் உள்ளன. (வாதாடும் திறமை. தவறாக நினைத்து contemptக்கு ஆளாக வேண்டாம்).
மூன்றாவது பெயர்
அருள் முருகன். கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சி. சொல்லிக் கொள்ளும்படி வழக்குகள் இல்லை. இவர் கவுண்டர் சங்க தலைவர் சதாசிவத்தின் கேண்டிடேட். துரைசாமி சதாசிவம் சொல்லியதன் பேரில் இவரை பரிந்துரைத்துள்ளார்.
நான்காவது பெயர்
விக்டோரியா கவுரி. பிஜேபி கேண்டிடேட். மதுரையில் மத்திய அரசு வழக்கறிஞர். இந்து நாடார். தீவிர சங்கி.
ஐந்தாவது பெயர்
நீலகண்டன். உடையார். திமுக நிர்வாகி. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர். திமுக கேண்டிடேட்
ஆறாவது பெயர்
லக்ஷ்மி நாராயணன். ஐயங்கார். நல்ல வழக்கறிஞர். திறமையானவர். சங்கி அல்ல. ஆனால் இவரை ஸ்பான்சர் செய்யும் நபர் யாரென்றால் ஜுடிசியல் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஒரு பிரபலமான நீதித்துறை ப்ரோக்கர். அமித் ஷாவை போலி என்கவுண்டர் வழக்கில் விடுவிக்க, சதாசிவம் உச்சநீதிமன்றத்தில் செட்டிங் செய்து கொடுத்ததாக ஒரு பேச்சு உலவுகிறது. ஆனால் இதில் துளியும் உண்மையல்ல. சதாசிவம் ஒரு அப்பழுக்கற்ற ஆன்மா. நேர்மையின் சிகரம். அது முதல் ஜுடிசியல் கிருஷ்ணமூர்த்தி அகில இந்தியாவுக்கும் ஒரு நம்பிக்கையான நம்பர் ஒன் புரோக்கராக உருவானதாகவும் ஒரு தகவல். விசாரித்து பார்த்ததில் இதிலும் உண்மையில்லை. அவர் வாழும் காந்தி.
ஏழாவது பெயர்
PB பாலாஜி. ஐயங்கார். வழக்கே கிடையாது. Rent control வழக்குகள் மட்டும் சில உள்ளன. இவர் காஷ்மீர் பார்ப்பனர் சஞ்சய் கிஷண் கவுலின் கேண்டிடேட். உயர்நீதிமன்றத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு பட்டியலிலும் கவுலின் கேண்டிடேட் இருப்பார். மீறும் நீதிபதி கடும் விளைவுகளை சந்திக்க நேரும். கடந்த வாரம் கவுல் சென்னை வந்து 3 நாட்கள் தங்கியிருந்து, 8 பேர் கொண்ட பட்டியலை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பிய பிறகுதான் கிளம்பினார்.
எட்டாவது பெயர்
கே.கே. ராமகிருஷ்ணன். பிள்ளைமார். சொல்லிக்கொள்ளும்படி ஒரு வழக்கும் இல்லை. இவர் எம்.எம்.சுந்தரேஷின் கேண்டிடேட்.
இந்த பட்டியலில் உள்ளவர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, 99 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. அந்த ஒரு சதவிகிதம், சவுக்கு கட்டுரையை மனசாட்சி உள்ள ஒருவர் படித்து, இந்த பட்டியலை ரத்து செய்ய மாட்டாரா என்ற ஆதங்கம்தான். வேறு என்ன ?
இதையெல்லாம் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறதல்லவா. நானும் நம்பல.
இந்த வீடியோவை பாருங்கள். இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஒவ்வொருவரையும் எப்படி நீதிபதியாக்கினார் என்று கூறுகிறார்கள்.
4:05ல் நீதிபதி கிருபாகரன். நாங்க லா காலேஜ்ல க்ளாஸ்மேட். ஒரு நாள் வீட்டுல தூங்கிட்டு இருந்தேன். மச்சான் உன் பயோ டேட்டாவை நான் சொல்ற ஆள் கிட்ட போயி குடுன்னு சொன்னான். That is how I became Judge என்று சொல்கிறார்.
13:45ல் எம்.எம்.சுந்தரேஷ், “என் தந்தை பாரதிதாசனைத்தான் நீதிபதியாக வேண்டும் என்று சொன்னார். நான் நல்ல நீதிபதியாக இருக்க மாட்டேன் என்று அவர் கருதினார்” என்று சுந்தரேஷ் சொல்கிறார்.
இரண்டு பேருமே நீதிபதியாகி விட்டார்கள் பாருங்கள்.
22:40 நேர்மையின் மரு உருவம் வைத்தியநாதன் பேசுகிறார். “என்னிடம் நீதிபதிகள் சுந்தரேஷும், கிருபாகரனும் சொன்னார்கள். “ஒவ்வொரு குடும்பத்திலும் பிரச்சினை இருக்கும். பேசாம ஜட்ஜ் ஆயிடேன்” ஆகி விட்டார்.
ஜட்ஜ் ஆவதற்கு காரணத்தை பார்த்தீர்களா ?
31:40 புஷ்பா சத்தியநாராயணா “என்னை முதன் முதலில் அடையாளம் கண்டவர் இப்ராஹிம் கலிபுல்லா. அதன் பிறகு என்னை நீதிபதியாக உழைத்தவர்கள் சுந்தரேஷும், கிருபாகரனும்”
எப்படி இவர்கள் நீதிபதியாகியிருக்கிறார்கள் பார்த்தீர்களா ? இவர்களைத்தான் நாம் மைலார்ட் என்று அழைத்து, உயர்ந்த மரியாதைக்கு உரியவர்களாக்கியிருக்கிறோம்.
இதைத்தான் நம்மை பேச விடாமல் மிரட்டுகிறார்கள். இதுதான் வெளியே வரக்கூடாது என பதைக்கிறார்கள். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை தூக்கி அச்சுறுத்துகிறார்கள். சிரச்சேதம் செய்வோம், வாழவிடாமல் செய்வோம் என சட்டப்புத்தகத்தை காட்டி பயமுறுத்துகிறார்கள்.
இந்திய சுதந்திரப் போரில் பெரும் பங்கு வகித்தவர்கள் வழக்கறிஞர்கள். காந்தி வழக்க்றிஞர். நேரு வழக்கறிஞர். பலர் வழக்கறிஞர்கள்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக டில்லிக்கு சென்றிருக்கும் பட்டியலை ஆவின் கேட்டருகே போட்டு கொளுத்த வேண்டாமா ? போராட்டம் வெடிக்க வேண்டாமா ? தமிழர்கள் நீதிபதிகள் ஆக வேண்டாமா ? நீதிமன்றம் பார்ப்பனர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ன ? இதுதானா தமிழன் வீரம் ? இதுதானா வழக்கறிஞர்களின் வீரம் ? இதைத்தானா பெரியார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார் ?
வாருங்கள் தோழர்களே ! நீதித்துறையின் கருப்பு பக்கங்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.