நடிகர் திலகம் சிவாஜி நடித்த ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சியில் இந்த வரிகள் வரும். பிரிந்த இதயங்கள் கூடிய போது…. பேச முடியவில்லையே……. என்று.
அந்தப் பாடல் வரிகள் தான் கடந்த வாரம் நினைவுக்கு வந்தன. கடந்த வாரம் அந்தப் பாடல் வரிகள் நினைவுக்கு வருவதற்கான காரணம் ? முதன் முதலாக சவுக்கும் ஜாபர் சேட்டும் நேருக்கு நேராக சந்தித்தால்….. !!!!!
ஆகா… வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமல்லவா அது ?
சுட்டேன். குண்டுகள் தீரும் வரை சுட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்தார், ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயர். 18ம் நூற்றாண்டில் ப்ரான்சு நாட்டின் மஹாராணி மேரி அன்டோனியட், மக்கள் உண்பதற்கு ரொட்டி இல்லாமல் கஷ்டப் படுகிறார்கள் என்ற போது, ரொட்டி இல்லையென்றால் அவர்களை கேக் சாப்பிடச் சொல்ல வேண்டியதுதானே என்றார்.
“ஒன்று நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள், அல்லது எதிரிகளோடு இருக்கிறீர்கள்” என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.
இவர்கள் இப்படிப்பட்ட தத்துவத்தை உதிர்ப்பதற்குக் காரணம், என்னை யாரும் வீழ்த்த முடியாது. எனக்கு மிஞ்சிய அதிகாரம் படைத்தவர் ஒருவருமே கிடையாது என்ற மமதைதான். அந்த மமதை மட்டுமே ஜாபரை வீழ்த்தியது.
ஜாபர் சேட்டோடு சவுக்குக்கு தனிப்பட்ட கோபம் உள்ளது. அவருக்காகத்தான் இந்த தளமே தொடங்கப் பட்டது என்று பல வாசகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதில் பாதி உண்மை இருக்கிறது. இந்த தளம் உண்மையில் ஜாபர் சேட்டுக்காக தொடங்கப் பட்டதல்ல. ஆனால், அவரால் பிரபலமாக்கப் பட்டது என்பதுதான் உண்மை. சரி அவரோடு தனிப்பட்ட கோபம் சவுக்குக்கு உள்ளதா என்றால் உள்ளது.
சவுக்கு கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தோழர்.புகழேந்தி மீது தொடுத்த மான நஷ்ட வழக்குக்காக ஆஜரான போதுதான் சவுக்கு ஜாபரை முதன் முதலாகப் பார்த்தது. முதன் முதலாக நேரில் பார்த்த ஒரு நபரோடு 3 ஆண்டுகளாக எப்படி தனிப்பட்ட மோதல் இருந்திருக்க முடியும் ?
ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருக்கிறார். அந்த அதிகாரி ஜாபருக்கு எதிராக செயல்படுகிறார். ஜாபருக்கு எதிராக என்றால் ஜாபர் சொத்தை பறித்துக் கொள்கிறார் என்று அர்த்தமல்ல. சட்டத்தில் இடமில்லாத ஒரு காரியத்தை ஜாபர் செய்யச் சொல்கிறார். அந்த ஐஏஎஸ் அதிகாரி, என்னால் முடியாது என்று சொன்னது மட்டுமல்ல, இது தவறு என்பதையும் ஜாபரிடம் சுட்டிக் காட்டுகிறார். இது மட்டும் தான் ஜாபருக்கும் அந்த ஐஏஎஸ் அதிகாரிக்கும் இடையே உள்ள முரண்பாடு. இதற்காக, ஜாபர் அந்த ஐஏஎஸ் அதிகாரியின் மின்னஞ்சலை ஹேக் செய்து, அந்த ஐஏஎஸ் அதிகாரிக்கும், மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியின் மனைவிக்கும் கள்ளத் தொடர்பு உள்ளது என்று ஆதாரங்களை தயாரித்தால் அதை மன்னிக்க முடியுமா ? உங்கள் எதிரியோடு நேரடியாக மோத வேண்டாமா ?
ஒரு அதிகாரி, உங்களோடு நேரடியாக மோதினால், அவரை நேரடியாக சந்திப்பது தானே வீரம் ? அதை விடுத்து அவர் ஈமெயிலை ஹேக் செய்து, அவர் குடும்பத்தை சிதைக்க முற்படுவதை யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா ?
உங்களுக்கு ஒருவர் மீது இருக்கும் பகை, கால ஓட்டத்தில் வலுவிழக்க வேண்டும். அதுதான் மனித இயல்பு. அதுதான் மனிதத் தன்மை.
(சாரி பாஸ். இந்தக் கட்டுரைக்கும் துக்கையாண்டிக்கும் சம்பந்தம் இல்ல. ஆனா, துக்கையாண்டிக்கு 3 மாசமா போஸ்டிங் குடுக்கல. அவரு வேல வெட்டி இல்லாம வீட்டுல எப்போ பாத்தாலும் நக்கீரன் காமராஜ் கூட பேசிக்கிட்டே பொழுதப் போக்கறாருன்றத
எப்படி முதலமைச்சருக்கு சொல்றது ?)
ஒரு செய்தித்தாளில், தாமரைக்கனியும், அவர் மகனும் திமுக, அதிமுக என்ற பிரிவினையால் பிரிந்து இருந்தவர்கள், தாமரைக்கனி இறந்த பிறகு, அந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததாக செய்தி வெளியாகியிருந்தது. இது போலத்தானே அத்தனை விஷயங்களும் ? ஒரு முறை உங்களை கோபத்தில் அடித்தவரை மன்னிக்கலாம். அது போல கோபத்தில் அடித்தவரை மன்னித்தால் தான் என்ன ? உங்களை கோபத்திலோ, அல்லது வேறு யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டோ உங்களுக்கு ஒருவர் தீங்கு செய்திருந்தால், அதை மன்னிக்கலாம் தான்.
ஆனால் ஜாபரை மன்னிக்க முடியுமா ? முடியாது. பகைவருக்கு அருளும் நன்நெஞ்சு சவுக்குக்கு உள்ளதுதான். ஆனால் ஜாபர் சேட்டுக்கு இது பொருந்தாது.
ஏன் பொருந்தாது ….. …. ?