போலி என்கவுண்டர் உங்களுக்குத் தெரியும்.
அது யார் பாம்பாட்டிச் சித்தர் ? வேறு யார் … இந்தப் படங்களைப் பாருங்கள் தெரியும்.
என்கவுண்டரைப் பற்றி எழுதிய பதிவுக்குத் தான் எத்தனைக் கண்டனங்கள் …. எத்தனை அவதூறு வார்த்தைகள்….
உணர்ச்சி வசப்படாமல் நம்மால் நிதானமாக சிந்திக்கவே முடியாதா… அந்தப் பதிவில் என்ன, கொலை செய்யப் பட்ட மோகன் ராஜ் மஹாத்மா காந்தி என்றா எழுதப் பட்டிருந்தது ? காவல்துறையினர் இது போல, படுகொலையை செய்திருக்கக் கூடாது என்றுதானே எழுதப் பட்டிருந்தது.. அதற்குத் தான் எத்தனை கண்டனங்கள்……
ஒரு நண்பர் சவுக்கை “நீ ஒரு சுயநலவாதி” என்றார். மற்றொருவர் “போடா டுபுக்கு” என்கிறார். இன்னும் ஒருவர் “காட்டிக் கொடுத்தவன், கூட்டிக்கொடுத்தவன்” என்கிறார். எதற்காக இந்த அவதூறு ? சவுக்கு அப்படி என்ன தவறாக எழுதி விட்டது. உங்கள் கருத்திலிருந்து நான் முரண்படுகிறேன், நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று எழுதினால் போதாதா ?
இனி நான் சவுக்கு பக்கமே வர மாட்டேன்,
சவுக்குக்கு இன்றோடு குட்பை…
சிறுபிள்ளைத் தனமாக இல்லை ?
எதையெடுத்தாலும் இப்படி உணர்ச்சி வசப் படுவதுதான் நம்மை வீணாக்கி, சிந்தனையை மழுங்கடித்து வைத்திருக்கிறது. இப்படிப் பட்ட உணர்ச்சி வசப்படும் ஜெர்மன் மக்கள்தான், யூதர்கள் படுகொலை செய்யப் பட்டபோது மகிழ்ந்தார்கள்.
கும்பகோணத்தில் 50 குழந்தைகள் எரிந்து போனார்களே….. அந்தப் பள்ளிக் கூடத்திற்கு அனுமதி அளித்து, ஆண்டுதோறும் ஆய்வு செய்கிறோம் என்று மாமூல் வாங்கிச் சென்றனரே கல்வித் துறை அதிகாரிகள் …. அவர்கள் என்ன என்கவுண்டர் செய்யப் பட்டனரா ?
1984ல் டர்பன் அணிந்த அனைவரையும், குழந்தைகள் உட்பட எரியும் நெருப்பில் வீசப் பட்டனரே… அதற்கு யார் என்கவுண்டர் செய்யப் பட்டார்கள்…..
2002ல் குஜராத்தில், நிறை மாதக் கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசுவை எடுத்து சுவற்றில் அறைந்து கொன்றார்களே… யார் என்கவுண்டர் செய்யப் பட்டார்கள்….
கணவனை பார்க்க வைத்துக் கொண்டே, பத்மினி என்ற பெண்ணை அத்தனை பேரும் வன்புணர்ச்சி செய்தனரே.. காக்கி உடை அணிந்த கயவாளிகள்… அவர்கள் என்கவுண்டர் செய்யப் பட்டனரா ?
ஆம். இந்நாட்டில் நீதி தாமதாகத்தான் கிடைக்கிறது. அதற்கு என்ன செய்வது…. அதற்கு என்கவுண்டர் பரிகாரமா ?
ஒரு வேளை இந்த மோகன்ராஜ் போலிக் குற்றவாளியாக இருந்தால் ?
ஒரு கும்பகோணம் தீவிபத்து நடந்தால் உடனே போஸ்டர் அடித்து ஒட்டுவது. சுனாமி வந்தால் உடனே போஸ்டர் அடித்து ஒட்டுவது. இப்போது ப்ளெக்ஸ் போர்டு வேறு….
சவுக்கும் மனிதன் தானே… அந்தக் குழந்தைக்கு நடத்த அந்தக் கொடூரத்தை மன்னிக்க முடியுமா என்ன ? சவுக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டாம் என்று சொன்னதா ? ஒரு ஜனநாயக நாட்டில், நீதிமன்றங்கள் என்று ஒன்று வைத்திருக்கிறோமே… அதன் மீது நமக்கே நம்பிக்கை இல்லையென்றால்….. …. என்கவுண்டர் செய்து விட்டு, பெருமையாக பேட்டி கொடுக்கிறாரே.. சைலேந்திர பாபு… பல கல்லூரி மாணவிகளை கேட்டுப் பாருங்கள்.. என்கவுண்டரில் கொல்லப் பட வேண்டியவர் சைலேந்திர பாபு என்று சொல்லுவார்கள்.
நாகரீகம் கருதியே சைலேந்திர பாபு பற்றிய விஷயங்களை எழுதவில்லை. ஆனால், சைலேந்திர பாபுவுக்கு நாகரீகம் இருக்கிறதா ? துளிக் கூட இல்லை என்பது, நேற்று கோவையில் நடந்த விஷயத்தில் தெரிகிறது.
கோவையில், இந்த போலி என்கவுண்டரை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப் பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் புகழேந்தி. இந்தப் புகழேந்தியையும், இந்த என்கவுண்டரை எதிர்த்து கோவையில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்களையும், நக்சலைட்டுகளின் கைக்கூலி என்று சித்தரித்து, துண்டறிக்கைகளும், சுவரொட்டிகளும், கோவை மாநகர் முழுக்க, பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என்ற பெயரில் விநியோகிக்கப் பட்டு வருகிறது. அந்த சுவரொட்டியில் உள்ள ஆபாசமான வார்த்தை, நக்சலைட்டுகளிடம் காசு வாங்கிக் கொண்டு, மனித உரிமை பேசுகிறார்கள் என்பது.
இப்போது சவுக்கு உறுதியாக உங்களிடம் தெரிவிக்கிறது. தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாகவும், சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் சார்பாகவும், தாக்கல் செய்யப் படும் அனைத்து வழக்குகளுக்கான செலவும் நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்திலேயே தாக்கல் செய்யப் படுகின்றன. ஒவ்வொரு பைசாவும், எங்கள் உழைப்பில் வந்தது. பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப் படும் மனுவின் நகல் கூட, எங்கள் செலவு தான். யாரிடமும் காசு வாங்கி பிழைப்பு நடத்தும் அவச் சூழலுக்கு நாங்கள் வரவில்லை. என்றுமே வர மாட்டோம். ஆனால் இந்த போஸ்டர்களுக்கும், துண்டறிக்கைகளுக்கும் ஆன செலவை நீங்கள் மார்வாடிகளிடமிருந்து வாங்கவில்லை என்று மனந்திறந்து சொல்லுங்கள்…. சைலேந்திரபாபுவும், அவரின் அல்லக் கை உளவுத் துறையும், இன்று கோவையை ஆட்டிப் படைக்கும் மார்வாடிகளிடமிருந்து, எவ்வளவு வாங்கித் தின்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாங்கள் உங்களைப் போல இழி பிறவி கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இது போல, துண்டறிக்கைகளும், சுவரொட்டிகளும் எங்களை முடக்கிப் போட்டு விடும் என்று நினைப்பீர்களே ஆனால்…. சைலு கண்ணா…. ரொம்ப தப்பு பண்றம்மா….. சைலு கண்ணா… உன் வீரப் பிரதாபத்தை கோடம்பாக்கம் மற்றும் சாலிகிராமத்தில் வைத்துக் கொள். எங்களை மிரட்டலாம் என்று நினைக்காதே…. உன்னைப் போல, புகழூர் காகித ஆலையில் மூன்றரை ஆண்டுகள் இருந்து விட்டு, நல்ல போஸ்டிங் வேண்டுமென்று, அழகிரி காலிலும், ஸ்டாலின் காலிலும் விழுந்து நக்குபவர்கள் நாங்கள் அல்ல. அதிமுக ஆட்சியில் சென்னை மாநகர இணை ஆணையராக நான்கு ஆண்டுகள் கொழித்து விட்டு, பாதி நேரத்தை ராஜரத்தினம் ஸ்டேடியம் எதிரில் உள்ள குரு லாட்ஜில் கழித்து விட்டு, திமுக ஆட்சியிலும் சுயமரியாதையை இழந்து, நல்ல பதவிக்காக மானத்தை விற்பவர்கள் நாங்கள் அல்ல சைலு கண்ணா.
இன்று கோவையில் இறந்த இந்த இரண்டு குழந்தைகளுக்காக என்ற போர்வையில் நடத்தப் பட்ட இந்த என்கவுண்டரை நியாயப் படுத்தி பொது மக்கள் பேசுவதற்காக காரணம் ஊடகங்களே… சிகப்பாக அழகாக தொலைக்காட்சி விளம்பரத்தில் வருவது போன்ற ஒரு குழந்தை கொல்லப் பட்டால் ஊடகங்கள் அலறுகின்றன…. கொதிக்கின்றன. இந்த கொதிப்பு பொதுமக்களையும் பற்றிக் கொண்டு விடுகிறது. இந்த என்கவுண்டருக்கு எதிராக பேசுபவன் சமூக விரோதி என்று பேசுகிறார்கள். கோவையில் மார்வாடியின் குழந்தையாக இல்லாமல், சென்னை சேரியில் ஒரு குழந்தைக்கு இது போல நடந்திருந்தால், இந்த ஊடகங்களும், பொதுமக்களும் இப்படி நடந்திருப்பார்களா என்பதை சற்றே உங்கள் மனசாட்சியைத் தொட்டு யோசித்துப் பாருங்கள்.
சவுக்கை திட்டும் வாசகர்களுக்கும், என்கவுண்டருக்கு ஆதரவு தரும் ஊடகங்களுக்கும் ஒரு விஷயத்தை சவுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறது.
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் விஷ்ணம்பேட்டை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் நவம்பர் 6 அன்று இரவு கீர்த்திகா என்ற ஒரு 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்புணர்ச்சி செய்யப் பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப் படுகிறாள். அவள் முகத்தை சுவற்றில் தேய்த்து முகம் முழுவதும் காயம். இதில் சம்பந்தப் பட்டவன் என்று சுந்தரம் என்ற 23 வயது இளைஞன் சுந்தரம் என்பவனை கைது செய்து, 8 நவம்பர் முதல் திருக்காட்டுப்பள்ளி காவல்நிலையத்தில் சட்டவிரோத காவலில் வைத்து உறி உறியென உறித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த இளைஞன் இந்தக் குற்றத்தை புரிந்திருக்கலாம், புரியாமலும் இருக்கலாம். இப்போது இந்த சுந்தரத்தை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றால் எவ்வளவு வசதி பாருங்கள். யாருக்கும் தெரியப் போவதில்லை. உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்க மெனக்கிட வேண்டியதில்லை. தஞ்சை மாவட்ட மக்கள் ப்ளெக்ஸ் போர்டு வைத்து கொண்டாடுவார்கள். இதைக் கண்டித்து யாராவது போராட்டம் நடத்தினால் அவர்களை நக்சலைட்டுகள் என்று சொல்லுவார்கள்.
கோவை கொலையைப் போல, இந்த தலித் சிறுமியின் பாலியல் வன்புணர்ச்சி மற்றும் மரணம் பொதுமக்களை பெரிதும் தாக்காது போனது, இந்த ஊடகங்களின் அயோக்கியத்தனம் தானே… ? இறந்து போன இந்த தஞ்சை சிறுமி சிகப்பாக ஒரு மார்வாடியின் மகளாக இருந்திருந்தால், இந்த ஊடகங்கள் துடித்திருக்குமா துடித்திருக்காதா….. ?
இப்போது திருக்காட்டுப் பள்ளி காவல்நிலையத்தில் உள்ள சுந்தரத்திற்கான மனித உரிமையையும் பேச வேண்டும் என்பதே சவுக்கின் நிலைபாடு. அந்த இறந்து போன தலித் சிறுமியின் மீதும், அந்த பெற்றோர் மீதும் சவுக்குக்கு, ஆழ்ந்த அன்பு உண்டு என்றாலும், அந்த சுந்தரத்தின் மனித உரிமையும் பாதுகாக்கப் பட வேண்டும் என்றே சவுக்கு கருதுகிறது. கோவையில் மோகனகிருஷ்ணனின் கொலையை நீங்கள் ஆதரித்தீர்கள் என்றால், திருக்காட்டுப்பள்ளியில் சுந்தரம் இறந்து போவான். இது போல பல போலி மோதல் படுகொலைகள் தொடரும்.
நாளை சவுக்கு மதுரவாயல் ஆய்வாளரின் துப்பாக்கியை பறித்து தாக்க முயற்சி செய்த போது தற்காப்புக்காக சுட்டதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனது என்று செய்தி வரும். அதற்கு பிறகு நீங்கள் என்ன செய்ய முடியும்…. கண்ணீர் அஞ்சலி என்று இரண்டு கண் படங்களை கருப்பு நிறத்தில் போட்டு, சவுக்கு நண்பர்கள் என்று போஸ்டர் அடிப்பீர்கள். புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடுவார். வேறு என்ன நடக்கும் ?
ஆகையால்தான் தோழர்களே…. இந்த போலி மோதல் படுகொலைகளை மட்டும் தயவு செய்து ஆதரிக்காதீர்கள். நமது சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான உலகை விட்டுச் செல்லும் கடமை நமக்கு உண்டு. காக்கிச் சட்டை போட்ட பொறுக்கிகளின் ராஜ்ஜியத்தை உங்கள் குழந்தைகளுக்கு பரிசாக கொடுக்காதீர்கள்.
இந்த என்கவுண்டர் விவகாரத்தில் தெளிவான, நிதானமான, அறிவுபூர்வமான நிலைப்பாட்டை எடுத்த,
மற்றும்
ஆகியோருக்கு, சவுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்தக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
காவல் துறை என்றால் அரசின் அடியாட்கள் அரசுக்கு எதிராக சமூக நலன், பாமர மக்கள் நலன் என குரல் கொடுத்து போராடினால் காவல்துறை மூலம் சுட்டு கொல்ல முடியும் என்பதை உணர்த்தவே இந்த கொலைகள்.