மாடலிங் மாணிக்கமாக ஜொலிக்க வேண்டும்… சினிமாவில் வெல்வெட் கொடி கட்டிப் பறக்க வேண்டும். இந்த இரண்டு ஆசைகளைத் தவிர வேறெந்தப் பாவமும் செய்யாதவள் நான்! ஆனால், முதல் அடி எடுத்து வைக்கிறபோதே, தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தை போல், ஆரம்பத்திலேயே என் கனவுகளை வழுக்கி, வீழ்த்திப் போட்டது வாழ்க்கை!
மனசு முழுக்க சினிமா கனவுகளை மட்டுமே நிரப்பி வைத்திருந்த நான், இப்போது காயங்களுக்குள் வீழ்ந்து கிடக்கிறேன். அவமானம், சிறைவாசம், கோர்ட், அலைக்கழிப்பு என இந்த 26 வயது சங்குக்கு உள்ளே காயங்களின் கங்கையே அடைக்கப்பட்டிருக்கிறது. இனி வலிக்க ஒன்றுமில்லை… ‘வீராசாமி’படத்தில் வில்லியாக நடித்தேன்… அடுத்த சில நாட்களிலேயே தமிழகம் மட்டுமல்லாமல் அக்கம் பக்க மாநிலங்களிலும் என்னை நிஜ வில்லியாகச் சித்திரித்துப் பரவிய செய்தி கள் கொஞ்ச நஞ்சமல்ல… பிரதீப் கொனேரு என்கிற தொழிலதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டி, அவரோடு உடலுறவு கொண்டு, அதை வீடியோ பதிவாக்கி நான் மிரட்டியதாக போலீஸ் என் மீது வழக்குப் போட்டது. அப்பப்பா… சினிமாவில் கூட செய்ய முடியாத திரைக்கதை பின்னப்பட்டது. ஒரு நடிகையாக நாடறியப்பட வேண்டுமென ஆசைப்பட்ட நான், ‘மிரட்டல் விபசாரி’என அத்தனை மீடியாக்களாலும் வெளிச்சம் போடப்பட்டேன். முழுவதுமாக இரண்டு வருடங்கள்… அந்த வழக்கு விசாரணை என்னை அணு அணுவாகக் கொன்று தீர்த்தது. சிறைக்குள்ளும் வீட்டுக்குள்ளும் அடைந்து கிடந்து அழுது அழுது ‘என் கண்ணிலே இனி ரத்த மில்லை… கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை’என்ற ஈரமான ரோஜா ஆகிவிட்டேன். ஆரம்பத்தில் என்னைக் கடித்து மென்று துப்பிய பத்திரிகைகள், கோர்ட்டில் எனக்கு சாதகமாக முடிவு சொல்லப்பட்டதும் என்னி டத்தில் வந்து நின்றன. நான் சிறைவாசம் அனுபவித்த போதும் என்னைத் தேடி வந்து, ‘நடந்த உண்மைகளைச் சொல்லுங்க மேடம்’என சில பத்திரிகைக்காரர்கள் வேண்டினார்கள். எனக்கு மீடியாக் கள் மீது கோபமில்லை. ஆனாலும், ‘இவளை நார் நாராகக் கிழிப்பதற்கு முன்னால், ஒரு நிமிஷம் யோசித்திருக்கலாம். இவளுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும்… இவளுக்கென்று ஒரு கனவு இருக்கும்… இவளுக்கென்று ஒரு குடும்பம் இருக்கும்…’என்று ஒரு நிமிடம் யோசித்திருந்தாலும், என் மீது இவ்வளவு குப்பைகள் கொட்டப்பட்டிருக்காது. அந்த வருத்தத்தில்தான் இரண்டு வருடங்கள் நான் வாயே திறக்காமல் மௌனி யாக இருந்தேன்! சின்னஞ்சிறிய புழு கூட தன் மீது இலை விழுந்தாலும் எதிர்ப்புத் தெரிவிக்கும். என் மீது இடியே இறங்கியது… ஆனாலும், நானோ எந்த எதிர்ப்பும் காட்டாமல் பூமியைப் போல அத்தனை அவமானங்களையும் பொறுத்துக் கொண்டிருந்தேன். கோர்ட்டில் விசாரணை நடந்த நேரத்தில், நான் வாய் திறப்பது சட்ட ரீதியாகவும் தவறு. ஆனால், அதையே என்னுடைய பலவீனமாக நினைத்து, என்னை கொடூர வில்லியாகச் சித்திரிக்கிற வேலைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. முதல் தடவை அடி வாங்கும் போதுதானே வலிக்கும்… உடம்பு முழுக்க ரத்தச் சகதியாக ஆகிவிட்டபின், மேற்கொண்டு எந்த வலி என்னை என்ன செய்ய முடியும்? இப்படித்தான் இந்த இரண்டு வருடங்களும் என் இருண்ட வருடங்களாக வாழ்க்கைக் கோப்பையில் வழிந்தோடியது! பீரங்கிகளுக்கு ஒரு காலம் வந்தால், பூக்களுக்கு ஒரு காலம் வராமலா போய்விடும்? என் மீது பழி பரப்பியவர்களே… இப்போது ஓடி வந்து நாக்கு நடுங்க, உண்மையை ஒப்புக்கொண்டனர். ‘என்னோட புகாரை நான் வாபஸ் வாங்கிக்கிறேன். இந்த விவகாரத்தை இதோட விட்டுடலாம்’என எதிர்தரப்பு நீதிமன்றத்தில் மன்றாட, இரண்டு வருட இருட்டுக்குப் பிறகு, என் வாழ்க்கை என்னும் வானில் விடியல் கசிந்திருக்கிறது! ‘உங்களை இத்தனை அவமா னங்களுக்கு ஆளாக்கிய பிரதீப் கொனேருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்குப் போடலாம் மேடம்… அவருக்கு சரியான பாடத்தை நாம கொடுத்தே ஆகணும்’என்று என் வழக்கறிஞர்கள் அக்கறையோடு அழுத்தம் கொடுக் கிறார்கள். அதுபற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதேசமயம், ஒருத்தரை பழி வாங்குறதுக்காகச் செலவிடும் நேரத்தை, பயனுள்ள விஷயத்துக்காகவும் ஒதுக்கலாமே என்று, மனசுக்குள் ஒரு சின்ன ரீங்காரம்… சினிமாவில் மின்னவும், மாடலிங்கில் ஜொலிக்கவும் இன்றைக்கு சென்னையை நோக்கி எத்தனையோ இளம்பெண்கள் புறப்பட்டு வருகிறார்கள். என்னைப் போல் அவர்களின் கனவுகளும் தகர்ந்து விடக் கூடாது. இளமையும் அழகும் திறமையும் இருந்தால் ஜொலித்து விடலாம் என நம்பிக்கையோடு வாய்ப்புத் தேடும் அந்த தேவதைகள், வதை முகாம்களில் சிக்கி வல்லூறுகளின் வயதுப் பசிக்கு தீனியாகிவிடக் கூடாது. ஏனென்றால், மாடலிங் உலகத்தில் வாய்ப்புத் தேடுவது… சிங்கத்தின் பற்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், அதன் வாய்க்குள் நுழைவதற்கு சமமான வித்தை. கொஞ்சம் சறுக்கினாலும் இந்தப் பாவி பத்மாவுக்கு ஏற்பட்ட கதியாகி, மொத்தக் கனவுகளும் கசங்கிப் போய் விடும். அதனால்தான் நாலு பேருக்குப் பாடமாக என் பாரங்களை இறக்கி வைக்கத் துணிந்திருக்கிறேன். உங்களிடத்தில் நான் எதையும் மறைக்கப் போவதில்லை… என்னிடம் மறைப்பதற்கு இனி எதுவும் இல்லை. இவள் வாழ்க்கையில் இத்தனை போராட்டங்களா என நீங்கள் ஆதங்கப்பட்டாலும் சரி… இல்லை… ‘தலைக்கு மேலே போன பிறகு யாரும் தத்துவம் பேசத்தானே செய்வார்கள்’என்று நினைத்துக்கொண்டாலும் சரி… சூடிக் கொள்ளப்பட வேண்டிய மலர் ஒன்று, எப்படியெல்லாம் சூறையாடப்பட்டது என்பதை சொல்லிவிடுவது என் துடிப்பு!
கும்பகோணத்தில் ஆசாரமான பிராமண குடும்பத்தில் பிறந்து, நல்ல பிள்ளையாக வளர்க்கப்பட்டவள்தான் நான்… இருந்தும், ஏன் என் பயணம் எதிர்பாராத திசை களில் அமைந்தது? என்னைச் சுற்றி ஏன் இப்படித் தீப்பிடித்தது? முதல் காரணம், என மனதில் சனியாக நுழைந்த காதலாக இருக்குமோ..? |
|||
|
ஆங்கில இலக்கியம் பி.ஏ., எம்.பி.ஏ., இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி என அடுத்தடுத்து மூளைக்கு முனைப்புக் காட்டி படித்து முடித்தேன். அதன்பின்? எல்லா இளைய இதயங்களையும் துளைக்கும் கேள்வி என்னையும் துளைத்தது. ஆளுக்கு ஒரு வழி சொன்னார்கள். ”ஹேண்ட் பேக்குடன் காரிலிருந்து இறங்கி,காலை 10 முதல் மாலை 5 வரை ‘அலுவலக தேவதை’யாகஅவதாரம் எடுத்துடு பத்மா…” என்றனர் சிலர்! வெளிநாட்டுக்குப் பறக்க வழி கூறினர் சிலர். ”கோடை லீவுக்கு கும்பகோணத்தைஎட்டிப் பார்த்து, மலரும் நினைவுகளில்மூழ்கும் சுகமே தனிதான்!” என அதற்கு விளக்கமும் கொடுத்தனர். அதையும் விட்டால்… ‘அரசுத் துறையில் முக்கிய அதிகாரி யாகப் பணியாற்றும் உன் தந்தைக்குப் பெருமை சேர்ப்பது போல், நல்ல அந்தஸ்தான இடத்தில் மாப்பிள்ளை தேடிக்கொள்!’ என்ற அறிவுரையும் காதோரம் வந்து விழுந்தது. அப்போதுதான் எனக்கு அறிமுகமானான், அந்த புது நண்பன். அடுத்தடுத்த சில சந்திப்புகளிலேயே நட்பைக் காதலாக மாற்றி, என் மனதுக்குள் ஊடுருவ விட்டான். இப்போது இருக்கிற தெளிவோ… தைரியமோ எனக்கு அப்போது கிடையாது! அவனுடைய மென் மையான பேச்சும், வாஞ்சையான பாசமும் என்னை ஒரேயடியாக அவனுக்குள் வீழ்த்திப் போட்டது. ஆனாலும், அதற்காக அவனிடத்தில் என்னையே முழுமையாக ஒப்படைக்கிற அளவுக்கு நான் உடனே துணியவில்லை. சின்னச் சின்ன முத்தங்கள்… அன்புப் பரிசுகள்… மெல்லிய ஸ்பரிஷங்கள்… என நாகரிகமாகத்தான் நகர்ந்தது எங்கள் காதல். கைக்குள்ளேயே பொத்திக் காத்துக் கொள்ளக்கூடிய வருங்கால வாழ்க்கைக் கனவு, என் அத்தனை திசைகளிலும் வசந்தத்தின் வைபோகமாக விரிந்தது! ஆனால், அதெல்லாம் எத்தனை நாளைக்கு என்கி றீர்கள்? வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டது போல என் கனவுகள் சுக்குநூறாயின. பிய்த்து எறியப்பட்ட குருவிக் கூடு போல, என் மொத்தக் கனவுகளும் நார்நாராயின. என்னைப் பாசத்தால் குளிப்பாட்டிப் பழகிய அந்தக் காதலன், ஏற்கெனவே ஒருத்தியை மணந்தவன். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறது. கள்ளமில்லாமல் பழகிய என் கண்களுக்கு இந்த மோசடி புரியவில்லை. மோசடியான ஒரு ஆணால் எப்படி எல்லாம் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, பெண்ணை ஏமாற்ற முடியும் என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது. ஏமாற்றத்தில் துடித்துப் போன நான், மொத்தமாக முடங்கியும் போனேன். ஆனால் என் தந்தை தலைகோதி எனக்கு தைரியமூட்டினார். ‘நீ நல்லா படிக்கிறவ… ஐ.ஏ.எஸ். படி’ எனச் சொல்லி தட்டிக் கொடுத்தார். வடக்கத்திய மாநிலங்களில் இருக்கும் அப்பாவின் ஐ.ஏ.எஸ். நண்பர்களும் எனக்கு அட்வைஸ் பண்ண, நான் கொஞ்சமாக மீண்டு வந்தேன். ஐ.ஏ.எஸ். பிலிமினரி எக்ஸாம் எழுதி பாஸ் செய்தேன். ஆனாலும், அடுத்த தேர்வு எனக்கு பாதகமாகி விட்டது. மறுபடியும் மனதை சோகம் சூழ்ந்து விடக் கூடாது என்பதற்காக தற்காலிகமாக பீ.பி.ஓ. துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். எங்கள் குடும்பத்தில் வசதிக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை. அடையாறு, வேளச்சேரி ஏரியாக்களில் எங்களுக்கு சொந்தமான பெரிய பங்களாக்களே இருக்கின்றன. இருந்தாலும், பி.பி.ஓ வேலையில் நான் வாங்கிய பதினெட்டாயிரம் சம்பளம் என்னை மனதளவில் மலர வைத்தது. அங்கே வேலை பார்த்த போது எனக்கு சில மாடலிங் வாய்ப்புகளும் வந்தது. ஒரு ஹாபியாக நினைத்துதான் மாடலிங் செய்தேன். நான் நடித்த விளம்பரங்களைப் பார்த்துவிட்டு, சிலர் சினிமாவில் நடிக்கக் கேட்டார்கள். ஆனாலும், சினிமா பக்கம் போக எனக்கு நிறைய தயக்கம்! ‘ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும்’ என்பது சினிமா உலகுக் காகவே எழுதப்பட்ட நியதி போலும்! வசதியான குடும்பத்தில் வாழ்ந் ததால், எதையும் இழந்து, சினிமாவில் பிரகாசிக்க நான் விரும்பவில்லை. ஆனாலும், ‘வீராசாமி’ படத் துக்காக விஜய டி.ராஜேந்தர் எனக்கு போன் செய்து ‘படையப்பா பட நீலாம்பரி போல், என் படத்தில் ராணியாக நடிக்க முடியுமா?’ எனக் கேட்டார். அவருடைய கைராசி சினிமாவில் நுழையத் துடிப் பவர்களுக்கு பெரிய வரம்! அதனால் என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதில் என் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், ‘மகளோட மனசு சந்தோஷமா இருந்தா சரி!’ என நினைத்து அமைதியானார்கள். ‘வீராசாமி’யில் நடித்துக் கொண்டிருந்தபோதே ‘பத்துக்குப் பத்து’, ‘உனது விழியினிலே’ உள்ளிட்ட பல படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. சினி மாவில் ஜெயித்து விடலாம் என்கிற நம்பிக்கை என் மனதில் மலையாக உருவாகிக் கொண்டிருந்த நேரம் அது… ஆனால் எனக்குத்தான், ஒரு படி ஏறினால் நூறு படிகள் சறுக்கி விழுகிற பரமபத விதியாயிற்றே… ‘வீராசாமி’ படத்தின் இறுதிக்கட்ட ஷ¨ட்டிங்கில் நான் பிஸியாக இருந்தபோது, மறுபடியும் பழைய நண்பன் என்னிடத்தில் வெள்ளைக் கொடி காட்டி பழக வந்தான். அவனுடைய துரோகத்தை அவனே ஏற்றுக் கொண்டவனாய் நைச்சியமாகப் பேசினான். நட்பு ரீதியாக மன்னிக்கச் சொல்லி கெஞ்சினான். ஆனால், அவனுடைய வார்த்தைகளை நம்ப நான் தயாரில்லை. ‘நீ என்னை ஏமாற்றியது போதும்… இனி உன்னை மட்டுமல்ல, வேறு எந்த ஆண் மகனையும் நம்புகிற நிலையில் நான் இல்லை. தயவுபண்ணி நீ உன் குடும்பத்தோடு நல்லா இரு. என்னைய விட்ரு!’ என பட்டென்று சொல்லி விட்டேன். ஆனாலும், தன்னுடைய வசதி வாய்ப்புகளையும் சொத்து மதிப்புகளையும் பட்டியல் போட்டு ஒப்பித்த அவன், ‘உன்னையப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. தயவுபண்ணி என்னோட சின்ஸியரான லவ்வைப் புரிஞ்சுக்க’ எனக் கெஞ்சினான். அடுத்தடுத்து அவன் சொன்ன வார்த்தைகள் ஒரு விஷயத்தை மட்டும் எனக்கு தெளிவாகப் புரிய வைத்தது. அதாவது சொத்துசுகங்கள் மிதமிஞ்சி இருக்கும் அவன், வாழ்நாள் முழுக்க என்னை ‘வைத்து’க் கொள்ள விரும்பி இருக்கிறான். அதற்காகத்தான் இத்தனை நாடகங்களையும் அரங்கேற்றி இருக்கிறான். சினிமா நடிகை என்றாலே, பணத்துக்கும் பகட்டுக்கும் மயங்கி விடுவார்கள் என்பது பணக்காரர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. அதற்கு நானும் விதி விலக்கல்ல என்பதுதானே அவனுடைய எண்ணமாக இருந்திருக்க முடியும்? ‘உனக்குத் தேவை பணம்தானே… அதனை நான் தருகிறேன். நீ படத்தில் நடிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் எனக்குத் துணையாக இரு. அது போதும்’ என அவன் சொன்னபோது, நான் அடைந்த அவமானத்துக்கு அளவே இல்லை. இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாமல் சூடு, சொரணை, மானம், வெட்கம் என அனைத்தையும் ஒருசேர உலுக்கும் விதத்தில் ஆயிரம் கேள்விகளைக் கேட்டேன். கண்களில் ரத்தம் கொப்பளிக்காத குறையாக நடுங்கிப் போய் நின்றான் அவன். ஆனால், அதற்காக என்னை அவன் இப்படிப் பழி வாங்குவான் என எந்த சொப்பனமும் வந்து என்னை எச்சரிக்கவில்லை..!
|
ஹோட்டல் ஒயின்… ஓர் இரவு! |
அந்தக் காதலன் அடிபட்டபாம்பாக மாறியதை நான் அறிந் திருக்கவில்லை. பெங்களூரு, டெல்லி என நான் போகிற இடங்களுக்கு எல்லாம் அவன் என்னைத் துரத்தி வந்தபோதும், அவனுடைய கெஞ்சலுக்காக நான் கிஞ்சித்தும் மசியவில்லை. ‘வீராசாமி’ படத்தின் இறுதிக்கட்டக் காட்சிகளில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரம்… போரூரில் உள்ள சிம்பு சினிகார்டனில் ஷ¨ட்டிங். எப்படியோ அங்கும் வந்து விட்டான் அவன். மடிப்பிச்சை கேட்பதுபோல் மன்றாடினான். ஆனாலும், நான் அசைந்து கொடுக்காமல் அவனை திட்டித் தீர்த்தேன். ஒரு பெண்ணின் வாய், கடல் அலை மாதிரி கூச்சல் போட்டாலும், அவளுடைய மனசு ஆழ்கடல் மாதிரி புரியாத புதிராகவே இருக்கும். அலைகளைத் தாண்டி வெற்றிகரமாக உள்ளே போகிறவன், அந்த மனசுக்குள் பிரளயத்தையே ஏற்படுத்தி விட முடியும். அந்தப் பாவியும் இப்படியரு கணக்கைப் புரிந்துகொண்டுதான் இடைவிடாமல் என்னைத் துரத்தினான் போல!
‘நீ என்னை லவ்கூட பண்ண வேணாம் பத்மா…ஆனா, என்னைய மொத்தமா மறந்திடாத… அணு அணுவா என்னைக் கொன்னுடாத…’ என மனம் கலங்கும்படியா அவன் சொன்ன வார்த்தைகள், என் கொந்தளிப்பைத் தோற்கடித்து விட்டன. இருந் தாலும், ‘நட்பு மட்டும்தான் உன் மனதில் இருக்க வேண்டும்!’ என்கிற எச்சரிக்கையுடனேயே அவனை மன்னித்தேன். அதன் பிறகு எங்கள் நட்பும் சந்திப்பும் தொடர்ந் தது! அவனுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நுங்கம்பாக்கம் ஹோட்டலில் லெதர் பார் புக் பண்ணி இருந்தான். ‘நிறைய உறவுகளை அழைத்திருக்கிறேன்… நீயும் வா’ என்றான், வாஞ்சையோடு. நான் என் மாடலிங் நண்பனான சஞ்சயுடன் ஹோட்டலுக்குப் போனேன். இன்றைய ஃபேஷன் உலகம் எப்படி இருக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும்… பிறந்தநாள் பார்ட்டி என்றால் பெண்கள்கூட மது, டான்ஸ் என கொண் டாட்டம் போடுவது இப்போது சகஜமாகி விட்டது. இது போன்ற முக்கியமான(?) பார்ட்டிகளில் கலந்து கொண்டு ‘குடிக்க மாட்டேன்’ என பிகு காட்டினால், மொத்தக் கூட்டமும் நம்மை வேடிக்கைப் பொருளைப் போல் பார்க்கும். அறுந்துபோய் அப்போதுதான் இணைந்திருந்த நட்பு செயின் மது, டான்ஸை மறுப்பதால் மீண்டும் அறுந்துவிடக் கூடாதே… அதற் காக அவனுடைய வற்புறுத்தலின் பேரில் நான் ஒயின் குடித்தேன். எட்டரை மணிக்கு தொடங்கிய பார்ட்டி, என்னை பதினோரு மணி வரை இழுத்துக்கொண்டு போய் விட்டது. நேரம் என்னையும் அறியாமலேயே கடந்து கொண்டிருந்தது. நான் மெள்ளக் கிறங்க ஆரம் பித்தேன். என் சிறுமூளைக்குள் மது ஒயிலாட்டம் போட ஆரம்பித்திருந்த நேரம்… பார்ட்டியிலிருந்து கிளம்பி, நண்பனுக்கு விடை கொடுக்க வந்தேன். ‘இந்த நேரத்துல எங்கே போய் சாப்பிடுவே? வெளியே டின்னர் கிடைக்காது… அதனால இங்கேயே டின்னர் ஆர்டர் பண்ணிடுறேன்… நீ சாப்பிட்டுட்டு போ பத்மா!’ என மறுபடியும் வாஞ்சை காட்டினான் நண்பன். நானும் சஞ்சயும் நண்பனின் அறைக்குப் போனோம். மணி 11.45 இருக்கும். என் கைக்கடிகார முள்கள் கூட அயர்ந்து தூங்க லாமா என யோசித்துக் கொண்டிருந்தன! ‘பத்மா உன்னோட அஞ்சு நிமிஷம் தனியாபேசணும்… உன் ஃபிரெண்ட் சஞ்சய்யை வெளியே அனுப்ப முடியுமா?’ அவன் அதிரடியாகச் சொன்னதும், எனக்கு என்னமோ மாதிரி ஆகிவிட்டது. மனதுக்குள் சட்டெனச் சுதாரிப்பு எழுந்தாலும், அவனை சந்தேகப்படுவது, பிறந்த நாளில் அவனை அசிங்கப்படுத்துவது போலாகி விடுமே என நினைத்து, சஞ்சையை வெளியே இருக்கச் சொன்னேன். அதேபோல் அவனுடன் நின்ற இன்னொரு நண்பனையும் அவன் வெளியே அனுப் பினான். ஸ்பிளிட் ஏ.சி-யின் ஜில்லிப்பு காது மடல்களில் குளிர் வாசித்துக் கொண்டிருந்தது. சாத்திய அறைக்குள் அவனும் நானும்… என்னை அமரச் சொல்லிவிட்டு, அவனுடைய லேப்டாப் பொத்தான்களைத் திறந்தான். வண்ணக் கலவையாக அடுத்தடுத்த க்ளிக்குகளில் லேப்டாப் விரிய, என் தலையில் இடி விழுந்தது சத்தமே இல்லாமல்! ஆமாம்… நான் அவனை காதலித்த காலத்தில் அவனையே முழுக்க முழுக்க நம்பி, புது ஸ்பரிசத்தில் அவனோடு நான் பூரித்திருந்த காட்சிகள் ஒவ்வொன்றாக அணிவகுத்தன. முத்தம், கட்டியணைப்பு என அவனை மடியில் வைத்து நான் திருவிழா கொண்டாடிய காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் அவை. நீச்சல் உடையில் நான் நிற்கிற படங்கள்கூட போட்டோ ஷாப்பில் பல விதமாக ஒர்க் செய்யப்பட்டிருந்தன.என் வாழ்க்கையை முழுக்க மாற்றப் போகிற ஒருநாள் இரவாக அது மாறிக்கொண்டிருந்தது. கழுகின் வாய்க்குள் தலை சிக்கிய தவளையாகத் துடித்துப் போனேன். அவனுக்கு போதை தலைக்கேறியிருந்தது. எனக்கு அந்த போதையிலும் கோபம்… ”இதையெல்லாம் வச்சு என்ன பண்ணப் போற?” ”இதை வச்சுத்தான் இனிமேல் உன்னை இயக்கப் போறேன். சினிமா, மாடலிங்னு சுத்திக்கிட்டு என்னைய தவிக்க விட்டியே… இந்தப் படங்களை நான் வெளியிட்டா… ஒத்த நிமிஷத்தில உன்னோட மானம் மரியாதையை கப்பல்ல ஏத்திடுவேன். அப்புறம் உன்னைய யார் கட்டிக்குவா? உன்னுடைய எதிர்காலம் என்னாகும்? யோசித்துப் பார்…” – கொக் கரித்துச் சிரித்தான். ”ரெண்டு வருஷமா நீ என்னை அலட்சியப்படுத்தி அழ வச்சே… இனி எனக்கு மட்டுமில்ல… நான் யார் யாரைக் காட்டுறேனோ… அவனுங்களை எல்லாம் நீ அனுசரிக்கணும். நாங்க கூப்பிடுற இடத்துக்கு எல்லாம் கால்கேர்ள் மாதிரி வரணும். இல்லைன்னு வச்சுக்க, இதெல்லாம் அம்பலத்துக்கு வந்து றெக்கை கட்டிப் பறக்கும். எப்படி சௌகரியம்?” இப்போது ஏ.சி-க்குள்ளிருந்து எரிமலை வழிந்தது. என் தவிப்பைக் கைகொட்டிப் பார்த்துக் கொண்டி ருந்தான். அறைக்கு வெளியே நின்ற அவனுடைய நண்பன் ஒருவனை உள்ளே அழைத்தான். ‘பொண்ணு, இனி நம்ம எல்லாருக்குமே சொந்தம்…’ எனச் சொல்லி என் மீது கை வைத்தான். அழுது பலனில்லை… அவன் ஒவ்வொரு உடைகளாக என்னை உரித்துப் போட, மறுக்க முடியவில்லை. என் கண்ணீருக்கும் கதறலுக்கும் துளியும் சலனம் காட்டாமல் அவர்கள்..! சட்டத்தின்முன் எனக்குப் பாதுகாப்பு கேட்டு இதைத் தான் சொன்னேன்… இதோடு இன்னும்கூட… |
|||
|
‘ஆடை கொடு…!’ |
என் எதிர்காலத்தின் மீதான பதற்றமும் துடிதுடிப் புமே என்னை அத்தனைசித்ரவதைகளுக்கும் அடிபணிய வைத்தது. கத்தியின் கூர்மை கண்ணுக்குத் தெரிந்தும் கழுத்தை வாகாக்கி கொடுக்கிற பலி ஆட்டைப் போல் நான் இசைந்து கிடந்தேன். போதைத் திமிரில் கத்திக் கூச்சலிட்டபடியே அந்த மிருகம் என்னை மென்று துப்பியது. ‘தொலைந்து போ!’ என்பது போல் வெறித்துக் கிடந்தேன். அப்போது தான் என் சித்ரவதைகளுக்கெல்லாம் சிகரமாய் இன்னொரு கொடூரத்தையும் அந்தப் பாவிகள் அரங் கேற்றத் தொடங்கினார்கள். நண்பனாய் நம்பிய நாய் என்னை கிழித்துப் போட, அருகே நின்ற ஓநாய் அனைத்தையும் செல்போன் மூலம் புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்தது. வெந்நீரில் புரண்டு, தீயில் உருண்ட கதியாய் தத்தளித்துப் போனேன். ”என்ன கருமத்தை வேணும்னாலும் பண்ணித் தொலைங்க… ஆனா தயவுபண்ணி புகைப்படம் பிடிக்காதீங்க… ப்ளீஸ்…” என எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை. அவனுடைய வக்கிரத்தை இவனும், இவனுடைய வக்கிரத்தை அவனும் அவ்வப்போது ‘க்ளிக்’ செய்தார்கள். அறைக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் வெளியே எனக்காக கவலையுடன் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான் மாடல் சஞ்சய். நடக்கிற கொடுமை புரியாமல், அவன் என்னை எவ்வளவு கேவலமாகவும் அன்றைய இரவில் நினைத்திருக்கக் கூடும். அத்தனை வலிகளும் ஒருசேர என்னை உலுக்க… என் சண்டாள விதியை நினைத்து கதறிக் கதறி களைத்துக் கிடந்தேன். ”இனி என்னடி பண்ணுவே… ஒட்டுவேலை பண்ணிய படங்களைப் பார்த்தே மிரண்டு நின்னியே… இப்ப நிஜ போட்டோவையே எடுத்தாச்சு. இனி சினிமா பக்கம் நீ எட்டிப் பார்க்கவேமுடியாது. மரியாதையா எனக்கு துணையா வந்துடு. இல்லைன்னா தற்கொலை பண்ணி செத்துப் போயிடு…” -கொக்கரித்தான் அவன். விழ வேண்டிய இடிகள் எல்லாம் ஒன்று கூடிப் பேசி வைத்துக்கொண்டு, மொத்தமாக என் மேல் விழுந்து விட்டது. இனி எந்த இடியும் என்னை அலற வைக்கப் போவதில்லை. என்ன நடந்தாலும் சரி என நினைத்து படுக்கையை விட்டு எழுந்தேன். எலும்பை யும் நரம்பையும் முறுக்கிப் போட்டது போல் உடம்பெல்லாம் வலி… ”என்னோட டிரெஸ்ஸைக் கொடுங்க… நான் போறேன்!” என்றேன். என் டிரெஸ்ஸை மடித்துத் தலைக்கு வைத்துக்கொண்டு, நிர்வாணமாய் என்னை நிற்கவைத்து கெக்கலி கொட்டிச் சிரித்தார்கள். பெட்டில் கிடந்த ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு ”நான் என்ன பாவம்டா பண்ணினேன்… ஏண்டா என்னைய இப்படி அணுஅணுவா கொல்றீங்க…” என கதறி அழத் தொடங்கினேன். வெளியே காத்திருந்த என் நண்பன் சஞ்சயை செல்போனிலேயே அழைத்தேன். உள்ளே வந்த சஞ்சய் நடந்த கொடுமைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டான். ”உங்களைப் பத்தி போலீஸ்கிட்ட சொல்ல எனக்கு ஒரு நிமிஷம்கூட ஆகாது. அவளை மிரட்டிக் கற்பழிச்சு அதை புகைப்படமா எடுத்து வச்சிருக்கீங்க… ஆனா உங்களோட சேர்ந்து இவளோட பேரும் சந்திக்கு வந்துடும். மாடலிங், சினிமான்னு ஆயிரம் கனவோட இருக்கிற இவளுக்காக, உங்களை சும்மா விடுறேன். மரியாதையா அவளோட டிரெஸ்ஸைக் கொடுங்க…” -அறையே அதிரும்படி சத்தம் போட்டான் சஞ்சய். ஆனால், அவர்களின் காதில் சஞ்சயின் பேச்சு ஏற வில்லை. மறுபடியும் சஞ்சய் அந்த இரண்டு பேரையும் மறித்து, வாக்குவாதம் செய்ய, ”நீ யார்றா அவளுக்கு?” எனக் கேட்டு சட்டையை உலுக்கியது அந்த மிருகம். ”நான் அவளை கட்டிக்கப் போறவன்…”- அழுத்தமாகச் சொன்னான் சஞ்சய். கசக்கி வீசப்பட்ட குப்பையாய் நின்று கொண்டிருந்த என்னை, அத்தகைய சூழலிலும் ஏற்றுக்கொள்ள கரம் நீட்டிய அவன், ஆயிரம் கடவுள் களுக்கு நிகராகத் தெரிந்தான். ஆனால், அன்பின் வாசனையே அறிந்திராத அந்த மிருகம், சஞ்சயை பிடித்துத் தள்ளிவிட்டு என்னை நோக்கி எக்கி வந்தது. மொத்த பலத்தையும் சேர்த்து என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது அந்த மிருகம். எனக்கு உலகமே இருட்டிக்கொண்டு வந்தது. அவன் கொலை செய்யவும் தயாராகி விட்டது போல் என் உள்ளுணர்வு அலறியது. அரற்றிப் பேசியும் அடித்தும் அவன் என்னைப் புரட்டி எடுக்க, அந்தக் கொடூரங்களை எல்லாம் அப்படியே தன் செல் போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான் சஞ்சய். அடித்துவிட்டு நிமிர்ந்தவனுக்கு அதன் பிறகுதான் அந்தப் பதிவு தெரிய வந்தது. ”இந்த ஒரு ஆதாரம் போதும்டா… நீ அவளை அடிச்சு துன்புறுத்துற கொடுமையை போலீஸ்கிட்ட சொல்றதுக்கு… மவனே வசமா மாட்டிக்கிட்டே.. இப்பவே உன்னைய உள்ளே தள்ளுறேன்டா!” என சஞ்சய் மிரட்ட, மிரண்டு பின்வாங்கிய அந்த மிருகம் பயத்தோடு கெஞ்சத் தொடங்கியது. ஆனால், அதையெல்லாம் சட்டை செய்து கொள்ளாமல், ”போலீஸ்கிட்ட மட்டுமில்லை… நடிகர் சங்கம் வரைக்கும் இந்த விஷயத்தைக் கொண்டு போய் உன்னைய சந்திக்கு கொண்டு வந்து நிறுத்துவேன்டா…” எனச் சொல்லி உடைகளை எடுத்து என்னிடம் கொடுத்தான் சஞ்சய். கடகடவென அணிந்துகொண்டு சஞ்சய்யோடு வெளியே ஓடி வந்தேன். இதற்கிடையில் என் தந்தை என் மொபைலுக்கு பல தடவை போன் பண்ணிப் பார்த்திருக்கிறார். பெற்ற வயிறு… ஆனால், அப்பாவிடம் பேசுகிற நிலையில் நான் இல்லை. கைகால்களின் தடதடப்புகூட அடங்கவில்லை. சஞ்சையுடன் காரில் கிளம்பினேன். உடம்பின் நடுக்கம் உஷ்ணமாக மாறத் தொடங்கியது… அடுத்த சில நிமிடங்களிலேயே கடுமையான காய்ச்சல்! என் வீட்டுக்குப் போக பயமாக இருந்தது. என்னை அந்தக் கோலத்தில் பார்த்தால், அப்பாவும் அம்மாவும் அடுத்த நொடியே நொறுங்கிப் போய் விடுவார்கள். கண்டிப்பு என்கிற வார்த்தைகூட மகளின் மனதை காயப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக என் சிறகுகளுக்கு சிறை வைக்காமல் வளர்த்தவர்கள் அவர் கள். மகள் சமர்த்தாக வளர்வாள் என மனமார நம்பியவர்கள். அந்த நம்பிக்கையை நாசமாக்க எனக்கு விருப்பமில்லை… ”சஞ்சய்… காரை வேறு பக்கம் திருப்பு!” என்றேன். புரியாத குழப்பத்தோடு காரை திருப்பினான் சஞ்சய்… |
||
|
படுக்கை… பாவம்… பரிகாரம்… |
இரண்டு நாட்களாக அந்த காமுகர்களைப் போலவே காய்ச்சலும் என்னைப் படுத்தி எடுத்தது. உடம்பு அனலாகக் கொதிக்க, கை கால்களை ஒடித்துப் போட்டது போல் கடுமையான வலி… மனதில் அதைவிட அதிகமாய்! இதற்கிடையில் சஞ்சய் செல்போனில் எடுத்த வீடியோவை வைத்து, நான் நடிகர் சங்கத்தில் புகார் செய்யப்போவதாக நினைத்து, செல்போனில் என்னைத் துரத்தி துரத்திக் கெஞ்சிக் கொண்டிருந்தது அந்த மிருகம். ”நான் எவ்வளவு பெரிய பிசினஸ்மேன்னு உனக்கு தெரியும். தயவு பண்ணி போலீஸ் புகார்னு எங்கேயும் போயிடாத. அன்னிக்கு அளவுக்கதிகமான போதையில என் புத்திபிசகிப் போயிடிச்சு. என்னைய படம் பிடிச் சதை நீ கொடுத்திடு… உன்னைய படம் பிடிச்சதை நான் கொடுத்திடுறேன். ரெண்டு பேரும் சுமுகமாப் பிரிஞ்சுடுவோம்!” -மறுபடியும் அவன் முகத்தை ஏறிடுகிற சக்தி எனக்கு இல்லை என்றாலும், என் எதிர்காலமும் அவன் செல் போனில்தானே சீல் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அவனுடைய பேச்சுக்கு தலையாட்ட வேண்டிய இக்கட்டு. ”மனசாட்சியே இல்லாம என்னைய எல்லாவிதத்திலும் நோகடிச்சிட்டே… தயவு பண்ணி இனியாவது என்னைய நிம்மதியா இருக்க விடு. என்னையப் படமெடுத்து பதிவு பண்ணி இருக்கிற மெமரி கார்டைக் கொடுத்திடு. நான் உன்னையப் பத்தி எங்கேயும் புகார் பண்ண மாட்டேன்!” எனப் பேசி இறுதியாய் அவனை சந்திக்கத் துணிந்தேன். ஒரு ஹோட்டலுக்கு வரச் சொன்னான். ஏற்கெனவே ஹோட்டலுக்குப் போய் நான் பட்டபாடு போதாதா? அதனால் மக்கள் நடமாட்டம் உள்ள நகைக்கடைக்கு அருகில் அவனை வரச் சொன்னேன். அவன் சகவாசத்தையே அடியோடு தலைமுழுக, ஆணி செருப்பில் கால் வைத்த கணக்காக பெருவலியோடு காத்திருந்தேன். சொன்ன நேரத் துக்கு வராமல் ‘இதோ அதோ’ என அவன் போக்குக் காட்ட, மறுபடியும் ஏதோ சதி செய் கிறானோ என்கிற உதறல் உள்ளுணர்வை நடுங்க வைத்தது. ஒவ்வொரு நொடியும் அடி வயிற்றைப் பிடித்திழுக்க, இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஆடி அசைந்து வந்தான். ‘சனி விட்டால் சரி’ என நினைத்து உடனே நான் அவனுடைய மிரட்டலைப் பதிவு செய்து வைத்திருந்த மெமரி கார்டை அவனிடம் கொடுத்தேன். அவனும் என்னை பதிவாக்கிய மெமரி கார்டை கொடுத்தான். ‘யப்பாடா…’ என என் நிம்மதிப் பெருமூச்சு முழுதாக முடிவதற்குள், வாய் கொள்ளா சிரிப் புடன் ‘எஞ்ஜாய் பத்மா’ என்றான். உள்ளுணர்வின் அச்சம் உண்மையாகி விட்டதோ என அலறித் திரும் பினேன். பின்னாலிருந்து யாரோ என் தோள் மேல் கை போட்டார்கள்… திரும்பிப் பார்த்தால் போலீஸ்! ”நீங்க வீடியோ படம் எடுத்து இவரை மிரட்டுறதா புகார் பண்ணி இருக்கார். நடங்க ஸ்டேஷனுக்கு…” என்றார்கள். நான் என்ன சொன்னாலும் நம்பும் நிலையில் போலீஸ் இல்லை. கதறிய வார்த்தைகள் காக்கி மனதை கொஞ்சம்கூட சலனப்படுத்தவில்லை. எங்கெங்கோ சுற்றிச் சுற்றி செயின்ட் தாமஸ் மவுன்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிப் போனார்கள். ‘ஒரே ஒரு போன் பண்றதுக்காகவாவது கருணை காட்டுங்க’ எனக் காலில் விழாத குறையாகக் கெஞ்சினேன். மனதின் அடியாழத்தில் தப்பித் தவறி கொஞ்சம் மனசாட்சி மிச்சமிருந்திருக்கும் போல… கஷ்டப்பட்டு தலையாட்டினார்கள். என்னோடு சேர்த்து சஞ்சயை போலீஸ் வளைத்ததெல்லாம் தனிக் கதை. என்னிட மிருந்து எடுக்கப்பட்ட மெமரி கார்டை போட்டுப் பார்த்தாலே எனக்கு நடந்த அத்தனை கொடுமைகளும் ஆதாரத்தோடு தெரிந்துவிடும்… இல்லை, தொண்டைத் தண்ணி வற்ற கண்ணீரும் கதறலுமாக நான் ஓலமிடும் வார்த்தைகளை ஒரு நிமிடம் காது கொடுத்துக் கேட்டாலாவது புரியும்… ஆனால், இதில் எதையுமே செய்யாமல் என் மீதான விசாரணை நீண்டு கொண்டிருந்தது. அடுத்த நாள் அரங்கேற்றப்பட்ட அத்தனை நிகழ்வுகளும் நீங்கள் அறிந்ததுதான்… பிரதீப் கொனேரு என்கிற தொழிலதிபரை துப்பாக்கியால் மிரட்டி, அவரோடு உடலுறவு கொண்டு, அதை படமெடுத்து பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய நடிகை பத்மா புழல் சிறையில் அடைக்கப் பட்டார்… பத்மாவின் படுக்கை லீலைகள்… பத்மா வலையில் விழுந்த தொழிலதிபர்கள்… பத்மாவின் அரசியல் தொடர்புகள்.. – என திரும்பிய பக்கமெல்லாம் என் மானம் மரியாதையும் தோலுரித்துத் தொங்கவிடப்பட்டது. நான் ஜாமீனில் வெளியே வந்தபோது ஏதோ படுபயங்கர வில்லியை பார்ப்பது போல மிரட்சியும் கேவலமுமாகப் பார்த்தது உலகம். சினிமாவில் எனக்கிருந்த நண்பர்கள் சிதறி ஓடினார்கள். என்னோடு பேசுவதை பெரும் பாவமாக நினைத்தார்கள். ஒன்றிரண்டு பேர் மட்டும் ஆறுதலாகப் பேசினார்கள். உலகம் எத்தகைய சூட்சும முடிச்சுகளோடு சுற்றிக் கொண்டி ருக்கிறது… நேற்று இளித்தவர்கள் இன்று பழிக்கிறார்கள்… நேற்று வாழ்த்தியவர்கள் இன்று வீழ்த்துகிறார்கள். சிறைவாசம், விசாரணை, கோர்ட் அலைக்கழிப்பு என மொத்தமாக இரண்டு வருடங்கள் என் வாழ்க்கை இருட்டுக்குள் தவித்துக் கிடந்தது. அழுகையையும் அவமானங் களையும் துடைத்துப் போட்டுவிட்டு, எனக்கான நியாயத்துக்காகப் போராடினேன். ‘துப்பாக்கி காட்டி மிரட்டி, ஒருவனோடு உடலுறவு கொள்ள முடியுமா? பயந்த நிலையில் அவனுக்கு காம இச்சை வருமா’ – வாசிக்கவே நா கூச வைக்கும் கேள்விதான் இது… ஆனாலும் என் மீது கொட்டப்பட்ட குற்றச்சாட்டுக் குப்பைகளை இந்தக் கேள்விதான் சுத்தப் படுத்தியது… என் மீது ஏவப்பட்ட பாவங் களுக்கு பரிகாரம் வார்த்தது. என் விதி வழியே நிகழ்ந்த அத்தனை அபாக்கியங்களையும் உங்களின் முன் னால் கொட்டிக் குமுறி விட்டேன்… நீதி கொடுத்த நிமிர்வும், உங்களிடத்தில் உண்மைகளைக் கொட்டிவிட்ட நிறைவும் என் நெஞ்சத்தை லேசாக் கியுள்ளது. இப்போது எல்லாக் கறைகளையும் கழுவிப் போட்டு, புது மனுஷியாக நான்! எதிர்காலம் எனக்கு என்ன வைத்திருக்கிறது..? புதிராக இருந்தாலும் நம்பிக்கையோடு நகர்கிறேன்!
|
||||||
|