முதல் காட்சி : ஜெயலலிதா தனது அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்துகிறார்.
(கூட்டம் தொடங்குகிறது. முதலமைச்சர் வருவதற்கு முன்பாகவே, சீப் செக்ரட்டரி தேபேந்திரநாத் சாரங்கி, உளவுத் துறை தலைவர் ராமானுஜம், அரசு தலைமை வழக்கறிஞர் நவனீதகிருஷ்ணன் முதலமைச்சரின் செயலாளர் ஷீலா ப்ரியா, உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஷ்ரா, கமிஷனர் திரிபாதி மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஆகியோர் உள்ளனர்.)
முதல்வர் உள்ளே நுழைகிறார். அனைவரும் எழுந்து நிற்கின்றனர்.
ஜெயலலிதா : எவ்ரிபடி சிட்டவுன். சொல்லுங்க மிஸ்டர் ராமானுஜம். லைப்ரரியை சைல்ட் ஹாஸ்பிடலா மாத்துனதுக்கு என்ன ரியக்ஷன்.
ராமானுஜம் : மேடம். பப்ளிக் ஒன்னும் வருத்தப் படல. பட், பொலிடிக்கல் ரியாக்ஷன் நெறய்ய இருக்கு. இன்டெர்நெட்டுல ப்ளாக்கர்ஸ் நெறய்ய தப்பா எழுதிருக்காங்க. அப்போது நவநீதகிருஷ்ணன் இடைமறித்து…
நவனீதகிருஷ்ணன்: நோ மேடம். நெறய்ய பேர் எனக்கு போன் பண்ணி, என் குழந்தைய எந்த ப்ளோர்ல அட்மிட் பண்ணணும்னு கேட்டுருக்காங்க. இன் பேக்ட், எனக்கு ஈவ்னிங்லேர்ந்து நெறய்ய சைல்ட் ஷ்பெஷலிஸ்ட் கிட்டேர்ந்து போன். எனக்கு அந்த ஹாஸ்பிட்டல்ல வேலை வாங்கிக் குடுங்கன்னு. உண்மையச் சொல்லனும்னா, அடுத்த வாரம் கல்யாணம் பண்ணப்போற ஒரு கப்புள் எங்களுக்கு குழந்தை பொறந்ததும் அந்த ஹாஸ்பிட்டல்லதான் அட்மிட் பண்ணனும்னு சொல்றாங்க…
ஜெயலலிதா : குட்.. வெரி குட். இதுக்காகத்தான் இந்த ஸ்கீமை நான் அனவுன்ஸ் பண்ணேன். வாட் ஷீலா வாட் டூ யூ சே.
ஷீலா ப்ரியா : மேடம். ஆல் புக்ஸ் ஆர் வேஸ்ட் ஆப் மணி. இப்போ டாக்டர்ஸ் போஸ்டிங் போட்ற பைல்ஸ் என்கிட்ட வர்றதில்ல. நீங்க ஆர்டர் போட்டு டாக்டர்ஸ் போஸ்டிங் பைல் என்கிட்ட வர்ற மாதிரி பண்ணிங்கன்னா….
ஜெயலலிதா : தட் வில் பி டிசைடட் லேட்டர். ராம் மோகன் ராவ்… வாட் ஈஸ் யுவர் ஒபினியன்.
ராம் மோகன் ராவ் : மேடம். யுவர் ஒபினியன் ஈஸ் மை ஒபினியன். (மனதுக்குள். நம்பள மாதிரி யாருமே பதில் சொல்லிருக்க முடியாது.)
ஜெயலலிதா : ஓகே. ராமானுஜம்.. இந்த முடிவ நம்ப மாத்தணுமா ? லைப்ரரிய க்ளோஸ் பண்ணணுமா ?
ராமானுஜம் : க்ளோஸ் பண்ணிடலாம் மேடம்.
ஜெயலலிதா : லைப்ரரிய ஓபன் பண்ணணும்னு நோட் போட்டுருக்கீங்க ?
ராமானுஜம் : ஓபன் பண்ணிடலாம் மேடம்.
ஜெயலலிதா : வாட் நான்சென்ஸ் ?
ராமானுஜம் : மேடம் மார்னிங் ஓபன் பண்ணிட்டு, ஈவ்னிங் க்ளோஸ் பண்ணிடலாம்.
ஜெயலலிதா : பன்னீர்செல்வம், நீங்க என்ன சொல்றீங்க….
(உடனே எழுந்து படீரென்று காலில் விழுகிறார்.) நோ… நோ… கெட் அப். பன்னீர்.. எமோஷன் ஆகாதீங்க… என்ன பண்ணலாம்னு சொல்லுங்க…
பன்னீர்செல்வம் : அம்மா… இந்த லைப்ரரி மட்டுமில்லாம, தமிழ்நாட்டுல இருக்கற எல்லா லைப்ரரியையும் க்ளோஸ் பண்ணிடலாம்மா..
ஜெயலலிதா : க்ளோஸ் பண்ணிட்டு… ?
பன்னீர் செல்வம்: எல்லா லைப்ரரிலயும் டீக்கடை ஓபன் பண்ணலாம்மா. சாதாரண டீக்கடை வச்சிருந்த என்னை முதலமைச்சர் பதவியில உக்கார வைச்சதே அந்த டீக்கடைதான். அதனால….
ஜெயலலிதா : குட் ஐடியா.. பட் பேட் ஐடியா…. செங்கோட்டையன்… நீங்க என்ன சொல்றீங்க…
செங்கோட்டையன் அம்மா….. எல்லா புத்தகத்தையும் எடுத்து ஊறவைச்சு பேப்பர் கூழா செஞ்சு, அந்த கூழை வச்சு குழந்தைகளுக்கு பொம்மை செஞ்சு அந்த ஹாஸ்பிட்டலுக்கு வர்ற குழந்தைகளுக்கு வெளையாட குடுக்கலாம்மா………
ஜெயலலிதா : வெரி குட்…. ஐ லைக் இட்….. சீப் செக்ரட்டரி… நீங்க என்ன சொல்றீங்க…..
சீப் செக்ரட்டரி : மேடம். வி வில் க்ளோஸ் ஆல் லைப்ரரிஸ் மேடம். வாட் மேடம் சேஸ் ஈஸ் ரைட் மேடம்…
ஜெயலலிதா : நவனீதகிருஷ்ணன்…. நீங்க என்ன சொல்றீங்க….
நவனீதகிருஷ்ணன் மேடம்.. அந்த லைப்ரரி மொத்தத்தையும் அட்வகேட் ஜெனரல் க்வார்டர்ஸ் ஆக்கிடலாம்மா..
ஜெயலலிதா : வாட் நான்சென்ஸ்….. (அப்போது சசிகலாக உள்ளே நுழைகிறார்) சசி.. நீ என்ன சொல்ற ?
சசிகலா : அக்கா.. அந்த கட்டிடத்த பெங்களுர் கோர்ட் ஆக்கிடலாம்கா.. அப்பப்போ பெங்களுர் போறது கஷ்டமா இருக்கு.
ஜெயலலிதா : ஓ.கே…. நெக்ஸ்ட். சீப் செக்ரட்டரி… நிதி நெலமை எப்படி இருக்கு ?
சாரங்கி : மேடம்.. ஒரு லட்சம் கோடி கடன் மேடம்…
ஜெயலலிதா : வாட் ஒரு லட்சம் கோடி கடனா… மை காட்… எப்படி இவ்வளவு கடன் வந்துச்சு ?
பன்னீர்செல்வம் : அம்மா மைனாரிட்டி திமுக அரசோட தலைவர் வாங்கி வச்சுட்டு போயிட்டாரும்மா… என்ன பண்றதுன்னே தெரியலம்மா….
ஜெயலலிதா : திஸ் ஈஸ் வெரி பேட்…. எப்படி சரி பண்றது ?
ஷீலா ப்ரியா : மேடம்.. பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட், ட்ரெயின் டிக்கெட், பார்க்கிங் டிக்கெட், எலெக்ட்ரிசிட்டி சார்ஜஸ், டெலிபோன் சார்ஜஸ், எல்லாத்தையும் 3 டைம்ஸ் ஏத்திடலாம். நெறய்ய ரெவின்யூ வரும்.
ராமானுஜம் : மேடம்.. மக்கள் கஷ்டப்படுவாங்க…..
பன்னீர்செல்வம் : அம்மா போன ஆட்சியில மக்கள் கஷ்டப்பட்டாங்கதான். ஐஞ்சு வருஷமா கஷ்டப் பட்டவங்களுக்கு இந்நேரம் பழகியிருக்காது ?
ஜெயலலிதா : யெஸ். இந்நேரம் பழகியிருக்கனும். இல்லேன்னா பழக்குவோம். வாட் டூ யு சே சாரங்கி.
சாரங்கி : யெஸ் மேடம். ஜனங்கள எப்படி ட்ரெயின் பண்றதுன்னு நானும் சில ஐஏஎஸ் ஆபீசர்சும் வேர்ல்ட் டூர் போயி பாத்துட்டு எப்பிடி ட்ரெயின் பண்றதுன்னு கத்துகிட்டு வர்றோம்.
ஷீலா ப்ரியா : யெஸ் தட்ஸ் ய குட் ஐடியா. சிஎம் செக்ரட்ரி கூட போகலாம்.
ஜெயலலிதா : அத அப்புறம் பாத்துக்கலாம். மொதல்ல ஷீலா சொன்ன எல்லா ஐட்டம் விலையையும் ஏத்துங்க. இம்மிடியெட்டா.
சாரங்கி : மேடம். டெலிபோன் ட்ரெயின் டிக்கெட்டல்லாம் நம்ப ஏத்த முடியாது. அது சென்ட்ரல் கவர்ன்மென்ட்.
ஜெயலலிதா : ஓ.கே… மீதி ஐட்டமெல்லாம் உடனே ஏத்துங்க. மிஸ்டர்.திரிபாதி நில அபகரிப்பு வழக்கெல்லாம் எப்படி இருக்கு ?
திரிபாதி : மேடம் ப்யூடிபுல்லா போயிட்டு இருக்கு மேடம். இன்னைக்கு கூட ஃபார்மர் டெபுடி சிஎம் ஸ்டாலின் மேல கம்ப்ளெயின்ட் வந்துருக்கு மேடம்.
ஜெயலலிதா : ஏன் இன்னும் ரிஜிஸ்டர் பண்ணல ?
திரிபாதி : மேடம் கம்ப்ளெயின்ட் குடுத்த அதே ஆள், ஸ்டாலின் வைஃப் துர்கா, ஸ்டாலின் சிஸ்டர் செல்வி, ஸ்டாலின் வீட்டு வேலைக்காரர், அவங்க பக்கத்து வீட்டு நாய் மேல கூட கம்ப்ளெயின்ட் குடுக்கறதா சொன்னார். அதான் சேத்து ரிஜிஸ்டர் பண்ணலாம்னு வெயிட் பண்ணிகிட்டு இருக்கோம் மேடம்.
ஜெயலலிதா : வேற ஏதாவது கம்ப்ளெயின்ட் இருக்கா ?
திரிபாதி : மேடம், திஹார் ஜெயில்ல இருந்தப்போ கனிமொழி கூட டெல்லியில நில அபகரிப்பு செஞ்சதா டெல்லியிலேர்ந்து என் பேட்ச் மேட் சொன்னார் மேடம். அத பாலோ பண்ணிக்கிட்டு இருக்கோம்.
ஜெயலலிதா : குட். வெரி குட். உங்களுக்கு பதிலா ஜார்ஜ போடலாம்னு நெனைச்சேன். பட் யு ஆர் குட்..
திரிபாதி : தேங்க்யூ மேடம். வேற யார் மேல கேஸ் போடனும்னு சொல்லுங்க.. உடனே போடறேன் மேடம்.
சசிகலா : அக்கா. பெங்களுர் ஜட்ஜ் மேல கேஸ் போட சொல்லுங்கக்கா… அந்த ஆள் நம்பள ரொம்ப தொந்தரவு பண்றார்.
ஜெயலலிதா : வாட் டிஜிபி.. எப்போ போடப் போறீங்க.
ராமானுஜம் : நோ மேடம். நமக்கு அங்க ஜுரிஸ்டிக்ஷன் இல்ல.
ஜெயலலிதா : வாட் ஈஸ் திஸ்.. இதுக்காகத் தான் நான் நேஷனல் பாலிடிக்ஸ் போலாம்னு இருக்கேன். வெரி இர்ரிடேட்டிங்.
பன்னீர்செல்வம் : அம்மா டெல்லி போனீங்கன்னா, ராகுல் காந்தி மேல கூட கேஸ் போடலாம்மா… இத்தாலியிலேர்ந்து வந்து டெல்லியில நில அபகரிப்பு பண்ணாங்கன்னு சோனியா மேல கூட கேஸ் போடலாம்மா .. …. …
ஜெயலலிதா : யா யா.. வெரி நைஸ்.
(கூட்டம் முடிவடைகிறது)
அறியாலயம்
(
ஸ்டாலின், அன்பழகன், கருணாநிதி, வடிவேலு, துரைமுருகன், குஷ்பூ ஆகியோர் இருக்கின்றனர்)
ஸ்டாலின் : அப்பா.. கட்சிக் காரங்க மேலேல்லாம் ஏகப்பட்ட கேஸ் போட்ருக்காங்க.. ஏதாவது பண்ணனும்.
கருணாநிதி : ப்ளைட் எத்தனை மணிக்கு வருது ?
ஸ்டாலின் : (மனதுக்குள் நான் என்ன கேக்கறேன். இந்த ஆள் என்ன சொல்றார்) அருகில் இருந்த வடிவேலுவிடம். ஏன்யா… நான் சரியா பேசறேனா ?
வடிவேலு : அண்ணே.. பின்னுறீங்கன்ணே..
ஸ்டாலின் : அப்பா. ஏதாவது போராட்டம் அறிவிக்கனும்.
கருணாநிதி : ஏர்போர்ட்டுக்கு நானும் போகவா ?
ஸ்டாலின் : வடிவேலுவிடம்… ஏன்யா நான் சரியாத்தானே பேசறேன்..
வடிவேலு : அண்னே அருமையா பேசறீங்கன்ணே..
ஸ்டாலின் : அப்பா என் மேல கூட நில அபகரிப்பு வழக்கு போடப் போறாங்களாம்பா..
கருணாநிதி : ஜெட் ஏர்வேஸா…. கிங்பிஷரா ?
ஸ்டாலின் : எனக்கு வேணும்யா.. வேணும்…
குஷ்பூ : தலைவரே…. தளபதி என்னம்மோ சொல்றாரே..
கருணாநிதி : என்னம்மா… என்ன சொன்ன… ?
குஷ்பூ : தளபதி.. ஏதோ சொல்ல வர்றாரு..
கருணாநிதி : என்னப்பா சொல்லு..
ஸ்டாலின் : 60 வருஷமா உங்களுக்கு புள்ளையா இருந்ததுக்கு சொவத்துல போயி முட்டிக்கலாம்.
கருணாநிதி : முட்டுறதுன்னா ஏர்போர்ட்ல போயி முட்டிட்டு அப்படியே தங்கச்சிய கூட்டிட்டு வா.
குஷ்பூ : தலைவரே… தளபதி போராட்டம் பன்னணும்கிறார்.
கருணாநிதி : பண்ணச் சொல்லு.. என் மக 6 மாசமா ஜெயில்ல வாடிக் கிடந்தப்போ ஏன் யாருமே போராட்டம் பண்ணல ?
ஸ்டாலின் : அப்பா… இப்போ நானும் ஜெயிலுக்கு போகப் போறேன்…
துரைமுருகன் : தலைவரே… மின் கட்டண உயரவ எதுத்து போராட்டம் பண்ணலாம் தலைவரே.
கருணாநிதி : பொதுச் செயலாளர் ரொம்ப நாளா அந்தப் பதவியில இருக்கறாரே.. அந்தப் பதவிய கொடுத்துடலாமா ?
அன்பழகன் : என்கிட்ட இருக்கறது அது ஒன்னுதான். அதயும் புடுங்கிடுங்க.
ஸ்டாலின் : குஷ்பூவைப் பார்த்து. நீங்களே சொல்லுங்க… என் மேல கேஸ் போட்ருக்காங்க.. என்ன பண்றது..
குஷ்பு : நீங்க பதிலுக்கு ஜெயலலிதா மேல லேண்ட் க்ராபிங் கம்ப்ளெயின்ட் குடுங்க.. சிம்பிள்.
ஸ்டாலின் : அருமையான ஐடியா.. இதுக்குத்தான் தலைவர் உங்கள பக்கத்துல வச்சுருக்காரு.
குஷ்பூ : ஒரு வேளை உங்கள அரெஸ்ட் பண்ணிட்டா கவலைப் படாதீங்க. நீங்க ஜெயில்லேர்ந்து வர்ற வரைக்கும் நான் பொருளாரா இருக்கேன்.
கருணாநிதி : அதுக்கு எதுக்கும்மா ஸ்டாலின் ஜெயிலுக்கு போற வரைக்கும் வெயிட் பண்ற… நாளைக்கே பொதுக்குழுவை கூட்டிடலாமா …. ? என்னய்யா துரை முருகன்.
துரைமுருகன் : அருமையான யோசனை தலைவரே… கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுன மாதிரி இருக்கும்.
(ஸ்டாலின் முறைக்கிறார்.)
ஸ்டாலின் : நீங்க யாருமே வேணாம். நானே போயி ஜெயலலிதா மேல கம்ப்ளெயின்ட் குடுக்க போறேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்கன்னு கேக்கப் போறேன். எல்லாரும் கனிமொழி பின்னாலயே போங்க.
துரைமுருகன் : தலைவரே.. தளபதி போறார் தலைவரே… அவரை தடுங்க.
கருணாநிதி : யோவ் விடுய்யா… இவன யாருய்யா அரெஸ்ட் பண்ணப் போறது.. இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்னு எனக்கே தெரியுதே.. போலீசுக்கு தெரியாதா ?
அன்பழகன் : ஏங்க… அம்மையார் ஆட்சியில விலைவாசி உயர்வால மக்கள் ரொம்ப கஷ்டப் பட்றாங்க. நாம ஏதாவது பண்ணனும். பாரம்பரியம் மிக்க திராவிட இயக்க கட்சியா இருந்துக்கிட்டு இந்த நேரத்துல மவுனமா இருந்தா நல்லா இருக்காது. ஏதாவது போராட்டம் அறிவிங்க.
கருணாநிதி : ப்ளைட் எத்தனை மணிக்கு ?