தீயணைப்புத் துறைத் தலைவர் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். இது என்ன அணைப்புத் துறை தலைவர், புதிதாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ?
விளக்கிச் சொல்கிறேன். பொறுங்கள். கடந்த ஞாயிறு இந்தியாவே எப்படி பரபரப்பாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். Will he… ? Or Wont he ? இதுதான் டெல்லி வட்டாரங்களில் பரபரப்பாக இருந்த பேச்சு. இந்தப் பேச்சு ஆ.ராசா தொடர்பாகத் தான்.
ராஜினாமா செய்வாரா … மாட்டாரா ? இந்த பரபரப்பில் தான் இருந்தது. திமுகவில் திரைமறைவு பேரங்கள் மிக மிக வேகமாக நடைபெற்று வந்தன. எப்படியாவது ராசாவை காப்பாற்ற வேண்டுமென்று பகீரத பிரயத்தனங்கள் செய்யப் பட்டு வந்தன.
இந்த பிரயத்தனங்கள் நடுவே, ஒரு நபர், ஆ.ராசாவிடம், உங்கள் பதவியை நான் காப்பாற்றுகிறேன் என்று நம்பிக்கை கொடுக்கிறார். ஆ.ராசாவும், சரி உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் என்று கூறுகிறார். அந்த நபர் வேறு யாருமல்ல. சவுக்கு வாசகர்கள் நன்கு அறிந்த ஜாபர் சேட்தான் அது.
காலையில் முதல் ப்ளைட்டை பிடித்து, ராசாவிடம் சொல்லி விட்டு, அலுவலகத்தில் லீவ் என்று சொல்லி விட்டு, கருணாநிதியிடம் கூட தகவல் தெரிவிக்காமல், டெல்லி புறப்பட்டார் சேட்.
ஒன்னும் பயந்துடாதீங்க. ஒட்டுக் கேட்டு, ஒட்டுக் கேட்டு, காதும் மூக்கும் வீங்கிடுச்சு
டெல்லியில் டி.3 டெர்மினலில் அணங்கை அணைத்துக் கொண்டே, விமான நிலையத்தில் இருந்து வெளியே வருகிறார். வெளியே அவரது நண்பரின் பென்ஸ் கார் காத்துக் கொண்டு இருக்கிறது.
காத்திருந்த காரில் அணங்கோடு ஏறி, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சென்று தங்குகிறார். அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அணங்கோடு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி விவாதித்து விட்டு, படுத்து உறங்கி விட்டார்.
மதியம் 3.30 மணிக்கு, தமிழ்நாட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு. எங்கே இருக்கிறீர்கள்… உங்களை முதல்வர் அழைக்கிறார் என்று. ஆ.ராசா தொடர்பாக சில தலைவர்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன் என்று பதில் அளித்து விட்டு, அவசர அவசரமாக சென்னைக்கு கிளம்பி வந்து சேர்ந்தார்.
இப்போது தலைப்புக்கு வருவோம். ஆ.ராசா விவகாரத்தில் டெல்லியே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது, தீயை அணைக்கிறேன் பேர்விழி என்று டெல்லிக்கு கிளம்பிச் சென்று, தீயை அணைக்காமல் அணங்கை அணைத்து வந்ததால், இன்று முதல், ஜாபர் சேட், அணைப்புத் துறை தலைவர் என்றே அழைக்கப் படுவார்.
இதில் நாம் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சோனியா நினைத்தால் கூட ராசாவின் பதவியை காப்பாற்றியிருக்க முடியாது. அந்த அளவுக்கு ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும், ராசாவை உரித்து தொங்க விட்டுக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில் ராசாவின் பதவியை காப்பாற்றுகிறேன் என்று தைரியமாக ஒரு நபர் புளுகுகிறார் என்றால் எப்படிப் பட்ட நபராக இருப்பார் என்று பாருங்கள். இவர் ஊரில் உள்ள தொலைபேசியை எல்லாம் ஒட்டுக் கேட்பார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல, இவரது நெருங்கிய நண்பரான கனிமொழியின் தொலைபேசி உரையாடலையே மத்திய அரசு ஒட்டுக் கேட்டு வெளியிட்டது குறித்து ஜாபர் சேட் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் உடனடியாக உளவுத்துறையில் உள்ள ரகசிய ஒட்டுக் கேட்பு உரையாடல்களை மிகப் பத்திரமாக வைக்கும் படி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மீண்டும் திமுக ஆட்சி வருவது சந்தேகம் என்று முடிவுக்கு வந்து விட்ட ஜாபர் சேட், தோட்டத்தின் பக்கம் தூது அனுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிமுக தலைவி ஜெயலலிதாவே ஜாபர் சேட்டைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு உள்ளதால், இவரோடு தொலைபேசியில் பேசுவதற்கே பெரும்பாலான அதிமுக தலைவர்கள் அஞ்சுவதாக தெரிகிறது.
ஆனாலும், திருச்சி எஸ்.பி.கலியமூர்த்தி மூலமாக தனது முயற்சிகளை தொடர்ந்து வருவதாக தெரிகிறது.