முல்லைப் பெரியாறு அணை, தமிழகமெங்கும் பற்றியெரியும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது நம் அனைவருக்கும் தெரியும். தன்னிச்சையாக அரசியல் சார்பில்லாமல் வெகுண்டெழுந்த விவசாயிகள் தங்கள் உரிமையை நிலைநாட்ட தேனி மாவட்டத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதையும் நாம் அறிவோம். இந்தப் பிரச்சினையை கையாள, தென்மண்டல ஐஜியாக இருக்கும் ராஜேஷ் தாஸ் தேனியில் முகாமிட்டுள்ளார். இவர் மற்றொரு காவல்துறை அதிகாரியிடம் பேசும் போது, “தலையில் அடிக்காதீர்கள்” கையையும் காலையும் உடைத்து விடுங்கள் என்று கூறுகிறார். அந்த வீடியோ தொகுப்பு இதோ
{youtube}Ne_HtwMBnpg{/youtube}
இதே ராஜேஷ் தாஸ்தான் பரமக்குடியில் 6 தலித்துகளின் இறப்புக்கு காரணமானவர் என்பதும், ஏழை மக்களை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், இவர் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசனின் மருமகன் என்பது கூடுதல் செய்தி.