Mission: Impossible Ghost Protocol
முதன் முதலில் Mission: impossible அமெரிக்காவில் 60 களில் தொலைக்காட்சி தொடராகத்தான் ஆரம்பம் ஆனது.இதை எழுதி தயாரித்தவர் Bruce Geller.இதனால் இவருடைய பெயர் நேற்று வெளியான Mission : impossible ன் நான்காம் பாகமான MI:Ghost protocol லும்
வந்துள்ளது.MI ன் புகழ் பெற்ற theme music, அந்த தொலைக்காட்சி தொடரிலேயே பட்டய கிளப்பியுள்ளது.
MI:Ghost protocol படம் ஏறக்குறைய 2 மணி நேரம் ஒடியது. திரையில் வைத்த கண்ணை எடுக்காமல் படம் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. ஒரு நல்ல spy thriller என்று சொல்லலாம். படத்தின் பெரிய plus point, படம் நெடுகவே வந்து கொண்டிருக்கும் கிச்சு கிச்சு மூட்டல் காமெடிகள். கடைசி 20 நிமிடங்கள் (இந்தியாவில் நடக்கும் சம்பவங்கள்) தவிர்த்து, ஆரம்பம் முதலே இறுக்கமாக பின்னப்பட்ட, அவ்வப்போது தவனை முறையில் அவிழ்க்கப்படும் சஸ்பென்ஸ் காட்சிகளால் ’சும்மாவது செல்பேசியை எடுத்து பார்ப்பது’ என்ற விஷயம் தோன்றவேயில்லை.
MI:Ghost protocol லின் கதை ஹங்கேரியின் தலைநகரான ப்யூடாபெஸ்டில் (Budapest) ஆரம்பிக்கிறது. IMF (Impossible Mission Force) ஏஜெண்ட் ஒருவர் ‘கோபல்ட்’ என்ற ரகசிய பெயர் கொண்டவனின் ஆட்களிடம் ரகசிய ஃபைல்கள் கொண்ட bag ஓன்றை கைப்பற்றி, அப்படியே காத்தாட தெருவில் எதிரில் ஒரு பெண்ணை சைட் அடிக்க ஆரம்பித்த அடுத்த செகண்டே அவளால் சுட்டு கொல்லப்படுகிறார். அந்த ரஷ்ய (அழகியே தான்) பெண் அவரிடம் இருந்த bag யும் எடுத்துக் கொள்கிறாள். இதன் பிறகு IMF ன் ஒரு team ரஷ்ய சிறையில் இருக்கும் Tom Cruise ஐ வெளிக்கொண்டு வருகிறார்கள். டீமில் ஒருவர் IMF ல் புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கும் Simon Pegg. செகண்டிற்க்கு செகண்ட் மாறும் அவரின் முக பாவங்கள் too comical… Hacker மற்றும் எலெக்ட்ரானிக் கருவிகளில் கில்லாடி. இன்னொருவர்,பெண் Paula Patton .ப்யுடாபெஸ்டில் இவர் கண்ணெதிரே தான் அந்த ஏஜெண்ட் இறந்தார்.
சிறையில் இருந்து வெளிவந்த Tom Cruise ஐ தலையாக கொண்டு இந்த டீம், ரஸ்யாவில் க்ரெம்ளின் மாளிகயில் உள்ள காப்பகத்தில் இருக்கும் ‘கோபல்ட்” யார்? என்ற விவரம் இருக்கும் ஃபைலை அடிக்க திட்டம் போடுகிறார்கள். Tom Cruise & Simon Pegg இருவரும் க்ரெம்ளின் மாளிகையில் உள்ளே வந்து விடுகிறார்கள். ஒரு பெரிய காரிடர். சற்று தூரத்தில் பெரிய டேபிளெல்லாம் போட்டு செக்யூரிடி. படத்தின் முதல் high light காட்சி இதிலிருந்து ஆரம்பம். ஒரு screen வைத்து hologram effect ல் அந்த செக்யூரிட்டியை Tom Cruise & Simon Pegg னும் ஏமாற்ற முயற்சிக்கும் இந்த 4 நிமிட காட்சியில் மொத்த தியேட்டரும் திரில்லாகி உட்கார்ந்திருந்தது. இவர்கள் உள்ளே போவதற்குள் இன்னொருவர் அந்த விஷயங்களை லவுட்டி விடுகிறார். அது மட்டுமல்லாமல் க்ரெம்ளின் மாளிகைக்கும் வெடிவைத்து விடுகிறார். இன்னொரு ’மட்டுமில்லாமல்’ என்னென்னா, IMF ன் ரேடியோ அலைவரிசையிலேயே, ரஷ்யர்களிடம் இவர்கள் தான் வெடி வைத்தது போல் ஒத்து ஊதி விடுகிறார்.
பூரா பழியும் Tom cruise & team மேல் வீழ்கிறது. உள்ளூர் போலீஸ் நெருக்குகிறது. அமெரிக்க அரசாங்கம் மறைமுகமாக, IMF ஐ கொண்டு Operation Ghost Protocol ஐ ஆரம்பிக்கிறது – ’கோபல்ட்’ டின் தடம் அறிந்து அவனை அழிப்பது. Tom Cruise Team மிற்கு ‘கோபல்ட்’ என்பது ரஸ்ய நியூக்ளீயர் திட்ட வகுப்பாளன் (strategist) Michael Nyqvist தான் என்பதும், கெர்மிளினிருந்து அவன் சம்பந்தப்பட்ட விவரங்களை அழித்தது மட்டுமில்லமல் அங்கிருந்த nuclear launch-control யும் சூட்கேசில் போட்டு கொண்டு தன்வசமாக்கி கொண்டான் என்பதும் தெரிய வருகிறது. படத்தின் ஆரம்பத்தில் IMF agent ஐ சுட்ட ரஸ்ய பெண்ணிடம் உள்ள ஃபைலில் இருக்கும் ரகசிய குறீயீடுகளை, ’கோபால்ட்’ இந்த nuclear launch-control ல் பதிந்தால் சான் ப்ரான்ஸிஸ்கோ காலி.
அந்த ஃபைல் துபாயிலுள்ள உலகின் மிக உயர்ந்த (2717 அடி) கட்டிடமான புர்ஜ் காலிஃபாவின் 136 மாடியில் வைத்து கோபல்ட்டின் ஆட்கள் ரஸ்யபெண்ணிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும் Tom Cuise Team அங்கு ஆஜர். டீமில் இப்போ இன்னொரு IMF ஆண் சேர்ந்தாச்சு. மென்மையான Intelligence analyst Jeremy Renner.
என்னனப்பா..? கதை சொல்லிட்டு இருக்கும் போது என்ன குறுக்கு கேள்வி..சரி சொல்லு …
இல்ல ..அதென்ன சம்பந்தமிலாம துபாயில போயி அவ்ளோ ஒசரத்தில ஃபைல வாங்கறது ..
அப்படி இல்லீனாக்கா நாம எப்ப புர்ஜ் காலிஃபாவை பாக்கறது.. எப்படி Tom Hanks அந்த கட்டிடத்தில் சாகஸமெல்லாம் பண்றது ..
பொதுவா இந்த மாதிரி சாகஸ படங்களில் எல்லாம் கதை என்பது, படத்தில் அங்கங்கே வரும் high light காட்சிகளை ‘just like that’ என இணைத்து கொண்டு போகும் மெல்லீசான லாஜிக்குகள் கொண்ட நூல் அவ்வளவே.
ஆனாலும் Imax format ல் படப்பிடிப்பு நடத்தபட்ட புர்ஜ் காலிஃபா காட்சி படத்தின் இன்னொரு highlight.( இந்த Imax Format பற்றி படிச்சப்ப ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.3D யெல்லாம் தூக்கி சாப்டுரும் போல…அடிக்குறிப்பில் இருக்கு படிங்க.) 136 மாடி உயரத்தில் Tom cruise டூப் இல்லாமல் செய்ததாக daily mail,UK படத்துடன் சொல்கிறது.
Tom cruise 49 வயதில் என்னமா fit டா இருக்கார் !!! அந்த கட்டிடத்தை அறிமுகம் செய்யும் முதல் shot excellent. செமத்தியான ஏரியல் ஷாட்.
படத்தின் இந்த பகுதியில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம்… அந்த ரஷ்ய பெண்ணிடம் கோபல்டின் ஆட்கள் ஃபைலை வாங்க போவதாக தகவல். So,Tom cruise & team ன் புது நபர் Jeremy Renner இருவரும் கோபால்டின் ஆட்களாக ஒரு அறையில் வைத்து அந்த ரஷ்ய பெண்ணை சந்திக்க போகிறார்கள். இன்னொரு அறையில் Tom cruise ன் டீமில் இருக்கும் பெண் ஏஜெண்ட் Paula Patton உண்மையான கோபால்டின் இரு ஆட்களை சந்திக்கிறார். கோபல்ட் ஆட்களிடம் இருக்கும் வைர சுருக்கு பையை இன்னொரு அறையில் இருக்கும் Tom cruise, ரஸ்ய பெண்ணிடம் கொடுத்தால் தான் அந்த ரகசிய குறியீடுகள் கொண்ட பேப்பர் கிடைக்கும். இரு அறைகளுக்கும் இடையே சர்வராக காமெடியன் Simon Pigg. நால்வரிடமும் மைக் மற்றும் இயர் ஃபோன்..தொடர்ந்து இணையாக வெட்டி வெட்டி வரும் இந்த இரு காட்சிகளும் செம டென்சன் பில்டப் கொடுக்கிறது.
கடைசியில் கோபால்ட் ஜெயித்து அந்த ரகசிய குறியீடுகள் கொண்ட பேப்பருடன் எஸ்கேப்.
கோபால்ட் இருப்பிடம் மும்பை என தெரிந்து Tom cruise team இண்டியா வருகிறார்கள்.கோபால்ட், இண்டியா வருவதற்கான லாஜிக்: ஒரு செயலற்ற சோவியத் இராணுவ செயற்கைக்கோளை இந்திய தொலைத்தொடர்பு தொழில் அதிபரான அனில்கபூரிடம் விற்பனை செய்யவும், அந்த செயற்கைக்கோள் மூலமாகவே nuclear launch-control ஐ இயக்கி சான் ஃபிரான்ஸஸிஸ்கோவை அழிப்பதும்…அதான் ’கோபால்ட்’ கிட்ட ரகசிய குறியீடுகள் தான் வந்திடுச்சே..
ஏகப்பட்ட பில்டப்புகளுடன் அனில்கபூரின் ஹாலிவுட் பிரவேசம் பற்றிய செய்திகளை படித்து விட்டு படம் பார்த்தால், வடிவேலுடன் வரும் துணை சிரிப்பு நடிகர் ரேஞ்சிற்கு தான் படத்தில் வர்றார். பெங்கலூருவில் உள்ள சன் நெட்வொர்க் தான் அனில்கபூர் அலுவலகம்.இங்கு வந்து ’கோபல்ட்’ சாட்டிலைட்டை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து அந்த நியூக்ளியர் ஏவுகணையை உசுப்ப, அது காத்திலேயே பறந்து பறந்து சான் ஃபிரான்ஸஸிஸ்கோ நோக்கி போய்கினே இருக்க, இங்கு பெங்களுரு சன் டிவி அலுவலகத்தில் வைத்து Tom cruise ,கோபால்டை புரட்டி புரட்டி எடுக்க. அப்பால இடம் மாறி நவீன கார் பார்க்கிங்கில் வைத்து திரும்ப சண்டை. கடைசியில் கோபால்ட் கண் திறந்தே சாகிறான்.
கார் பார்க்கிங் இடம் செமத்தியாக இருக்கு…படத்தோட art director கீழ் வேல பார்க்கும் பசங்கெல்லாம் செம டயர்டா ஆய்டாங்க போல.. கதைப்படி இந்த சண்டை இந்தியாவில் நடக்கிறது..ஆனால் கார்களின் நெம்பர் பிளேட்டெல்லாம் ஷுட்டிங் எடுத்த அந்நிய நாட்டின் நெம்பர் பிளேட்டுகளுடன் தொம் தொம் என கீழே விழுகிறது.
படம் இந்தியா வந்த உடனேயே தொங்க ஆரம்பிக்கிறது. இது வரையில் சுவார்ஸ்யபடுத்திக் கொண்டிருந்த மெல்லிய சிரிப்புகள்,
சஸ்பென்சுகள்,சின்ன சின்ன எலெக்ட்ரானிக் கருவிகளின் அசத்தல்கள் ஏதும் அற்ற நேரிடையான மிக பழைய ஹீரோ வில்லன் சண்டையாக போனதால் இந்தியா பகுதி கதையில் தொய்வு. இருந்தாலும் ரொம்ப மொக்கையாக இல்லை.
சின்ன எலெக்ட்ரானிக் சுவாரஸ்யங்கள் பற்றி சொல்லியே ஆகனும்.பழைமையான தெருவோர ஃபோன் பூத் Tom Cruise பேசும் போது சின்ன மானிட்டருடன் கூடிய high tech device ஆக மாறுவது, எல்லா தகவல்களையும் அளித்து விட்டு அடுத்த 5 நொடிகளில் தன்னை தானே அழித்து கோள்ள வேண்டும். Tom Cruise பார்த்து கொண்டே இருக்க ஒன்றுமே நடக்கவில்லை என்பதால் ரிஸீவரை எடுத்து திரும்ப வைக்க ஒரு சிறு சத்தத்துடன் தன்னை அழித்துக் கொள்கிறது. இது மாதிரி அனைத்து எலெக்ட்ரானிக் கருவிகளை சுற்றியும் சுவாரஸ்யங்கள் பின்னப்பட்டிருப்பது திரைக்கதையின் பலங்களில் ஒன்று.. கண்ணில் பொருத்தப்படும் contact lense மூலம் படித்தால் இன்னொரு இடத்தில் இருக்கும் device ல் அது பதியப்படுவது..அந்த hollogram screen இன்னும் நிறைய …இவைகளூம் Simon pegg -ன் மிக சிறிய நறுக் வசனங்களூம் படம் நெடுக கிச்சு கிச்சு மூட்டல்களுக்கு காரணம்.
அந்த பாலைவன புயல் கிராஃப்பிக்ஸ் ’ஸ்டார் வார்ஸ் ஜார்ஜ் லூக்கா’ஸின் நிறுவனம் செய்திருந்தாலும் சுமார் ரகமே. கடைசியில் அந்த லான்ச்சர் வலுவிழந்து சர்ச் கோபுரம் போல் ஒன்றில் மோதி கடலில் விழுவது சீரியசான கிராஃப்பிக்ஸ் காமெடி.
Tom Cruise ரஷ்ய சிறையில் இருப்பதற்கான காரணம், மென்மையான Intelligence analyst ஆக வரும் Jeremy Renner திடீரென சண்டை போடுதலுக்கு பின்னால் அவர்கள் குழுவில் ஏற்படும் வாக்குவாதம், Tom Crusie யிடம் Jeremy Renner முன்னால் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருவது, படத்தின் கட்டே கடைசியில் காட்டப்படும் எல்லோரும் இறந்ததாக நினைத்து கொண்டிருக்கும் Tom Crusie ன் மனைவி தூரத்தில் இருந்து Tom Crusie யை பார்த்து சிரித்து செல்வது… இவைகள் அனைத்ததையும் இணைக்கும் திரைக்கதையின் ஒரு sub plot, வலுவானதாக இருந்திருந்தால் Peace Maker படம் போல் சாஸகசங்கள் கலந்த உணர்வுபூர்வமான படமாக MI:Ghost Protocol அமைந்திருக்கும்.
படத்தின் இயக்குநர் Brad Bird, The Incredibles , Ratatouille போன்ற அனிமேஷன் படங்கள் மட்டுமே செய்திருக்கிறார்.இது தான் அவரின் முதல் live action படம். Imax format ன் காதலர். ஆஸ்கார் வெற்றியாளரான Rabert Elswit ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் வரும் ஏரியல் ஷாட்டுகள் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. மற்றபடி ஒளிப்பதிவு, தரமான ஆக்ஷன் படத்திற்கு உண்டான ஒளிப்பதிவாக மட்டுமே உள்ளது.
என்னிடம், ஹாலிவுட் நடிகர்களின் நடிப்பு பற்றி ஒரு பொதுவான கருத்து உண்டு. தரமான படங்கள், அது என்ன வகையான படமாக இருந்தாலும், நடிகர்களின் நடிப்பில் ஒரு மில்லி அளவு கூட செயற்கையான மிகைப்படுத்தல் நடிப்பு என்பது இல்லாமலேயே இருக்கிறது. இது என்னை அடிக்கடி வெகுவாக Inspire செய்யும் விஷயமாகவே இருந்து கொண்டிருக்கிறது.
Final Opinion : ‘Mission : Satisfied’
அடிக்குறிப்பு :
Imax Format என்பது, தனியாக Imax camera,கிட்டத்தட்ட 70 MM அளவிற்கான ஃபிலிம்… இவைகளை வைத்து படப்பிடிப்பு நடத்துவது… இதையெல்லாம் தாண்டி இந்த வகையில் எடுக்கப்பட்ட படங்களை நாம் அதற்கான Imax திரை அரங்குகளில் மட்டுமே பார்க்கவேண்டும். ஃபிலிமின் அளவு அதிகமாக இருப்பதால் அது பதிவு செய்து கொள்ளும் detail களும் மிக அதிகம். MI:Ghost Protocol லில் வரும் புர்ஜ் காலிஃபா காட்சியில் 136 மாடி உயரத்தில் இருக்கும் Tom Cruise ஒட்டி இருக்கும் கண்ணாடி ஜன்னலில் கீழே ஊர்ந்து கொண்டிருக்கும் Traffic கூட தெரியும் என்கிறார் படத்தின் இயக்குநர். So,இந்த அளவு detail வுடன் சும்மா தம்மாத்துண்டு திரையில் பார்க்காமல் இதற்காக அமைக்கப்பட்ட ராட்ச்சச திரையில், அதுவும் அந்த பார்வையாளரின் இருக்கை அமைப்பு என்பது திரைக்கு அருகில் உயரத்தில்…நம் காலடியிலும் படம் ஓடிக்கொண்டிருக்கும். இந்த நேரத்தில் Tom Cruise 136 மாடியில் இருக்கும் போது நம்மாலும் அந்த உயரத்தை உணர முடியும் என்பது என்ன மாதிரியான சிலிர்க்கும் அனுபவம் !!!
Imax format ல் எடுக்கப்பட்ட Nolan னின் dark Night ஐ ஆஸ்திரிலேயாவில் இருக்கும் நண்பர் ஒருவர் பார்த்து கொண்டிருக்கும் போது இந்த மாதிரியான உயர காட்சியில் இருக்கையில் இருந்து கீழே விழுவது போல் பயந்து கத்தி அமர்க்களபடுத்தி இருக்கிறார். MI: Ghost Protocol லில் மொத்தம் 30 நிமிட படம் Imax format ல் எடுக்கப்பட்டது தான்.