என்ன இது திடீரென்று சவுக்கு அன்னதானம் வழங்கப் போகிறதா என்று பார்க்கிறீர்களா ? அதெல்லாம் இல்லை. இந்தப் பாடல் உடுமலை நாராயண கவியின் பாடல்.
இந்தப் பாடல் இடம் பெற்ற படம் பராசக்தி. விதியின் விளையாட்டாக இந்தப் படத்தின் கதை வசனமும் முத்துவேல் கருணாநிதி தான்.
இந்தப் பாடலை சிறிது பார்ப்போம்.
கா கா கா கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க – அந்த
அனுபவப் பொருள் விளங்க – காக்கை
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க – காக்காவென
ஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க
கா கா கா
இதே போல நேற்று காகங்கள் சென்னையில் ஒன்றாகக் கூடின. எங்கே என்று கேட்கிறீர்களா. சென்னை தியாகராய நகரில் உள்ள பிட்டி தியாகராய நகர் அரங்கத்தில் தான் காகங்கள் இப்படி ஒன்றாக கூடின. சொன்னால் நம்பமாட்டீர்கள்.. …. அந்த காகங்கள் நாங்கள் கூடப் போகிறோம் என்பதை அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரமாக வேறு கொடுத்திருந்தன.
நகைச்சுவை போதும். நேற்று சென்னை நகரில் ஊடகப் பேரவை என்ற அமைப்பின் சார்பாக “சில ஊடகங்கள் ராசாவை தாக்குவது ஏன் ?“ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் மானமிகு (மானங்கெட்ட சிறியர்) ஆசிரியர் கீ.வீரமணி, பேராசிரியர் (பேராசைஇயர்) சுப.வீரபாண்டியன் (லொடுக்கு பாண்டியன்) ரமேஷ் பிரபா (நிலைய வித்வான்) ஏ.எஸ்.பன்னீர்செல்வம், அருட்தந்தை ஜெகத் கஸ்பர் (இருள் தந்தை) கலந்து கொண்டு வீர உரையாற்றினர்.
மூத்த காவல்துறை அதிகாரிகளும், மூத்த பத்திரிக்கையாளர்களும், சவுக்கின் எழுத்து நடையில் கவனம் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கண்டிப்பவதால், ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு சவுக்கு பண்பாக எழுதுகிறது.
முதலில் இந்த அமைப்பு குறித்து பார்ப்போம். இந்த தமிழ் ஊடகப் பேரவை என்ற அமைப்பை தொடங்கியவர் வளர்தொழில் பத்திரிக்கையின் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன். இவர் திராவிடர் கழக தலைவர் குஞ்சாமணிக்கு மிகுந்த நெருக்கம். (இந்த பெயர் சவுக்கு வாசகர் ஒருவர் வீரமணிக்கு வைத்த பெயர். சவுக்குக்கு இந்தப் பெயர் மிகவும் பிடித்திருக்கிறது) இதன் பொருளாளர் பொருளாளர் முத்துப் பாண்டி. தலைவர் கோ.வி.லெனின். மற்ற முக்கிய நிர்வாகிகள் சிற்றறசு மற்றும் திருஞானம்.
இந்த தமிழ் ஊடகப் பேரவையின் நிதி நிலைமை மிக மிக பரிதாபமானது.
இந்த கூட்டம் தொடர்பாக தமிழகத்தில் வெளி வரும் அனைத்து ஊடகங்களிலும் கால்பக்க விளம்பரங்கள் கொடுக்கப் பட்டிருந்தன. கலைஞர் தொலைக்காட்சியில் நாள் முழுக்க இது தொடர்பான விளம்பரங்கள்.
தினத்தந்தியில் அனைத்து பதிப்புகளிலும் கால் பக்க விளம்பரம் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை ஆகும். தினமணியில் 40 முதல் 50 ஆயிரம். தினமலர், தினகரனில் 70 முதல் 80 ஆயிரம். இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ்களில் குறைந்தது 70 ஆயிரம் ஆகும். மற்ற ஏற்பாட்டுச் செலவுகளையும் சேர்த்தால், இந்தக் கூட்டம் நடத்தி முடிக்க மொத்தத்தில் 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை ஆகியிருக்கும். தமிழ் ஊடகப் பேரவையின் நிதி நிலைமை பற்றி சொல்லப் பட்டது. ஆ.ராசா ஊழலே செய்யவில்லை என்று சொல்வதற்காக நடத்தப் பட்ட கூட்டத்தில் எத்தனை ஊழல் பார்த்தீர்களா ?
விளக்க விளக்கமாக நீரா ராடியா சரக்கடிப்பதைப் பற்றியெல்லாம் எழுதும் காமராஜ், இந்தக் கூட்டத்தின் செலவு கணக்குகளையும், இதற்கு யார் பணம் கொடுத்தது என்ற விபரத்தையும் வெளியிடுவாரா ?
அடுத்த விவகாரம். ஜெயகிருஷ்ணனைத் தவிர, மற்ற தமிழ் ஊடகப் பேரவை நிர்வாகிகளுக்கு இது போன்ற ஒரு கூட்டம் நடத்துவது தெரியாது. குறிப்பாக கோ.வி.லெனின் இந்தக் கூட்டம் தொடர்பான விபரங்களை நாளிதழை பார்த்துதான் தெரிந்து கொண்டாராம். இதனால் கடுப்படைந்த கோ.வி.லெனின், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறப் படுகிறது.
முதலில் ரமேஷ் பிரபா பேசினார். அவர் வட இந்திய ஊடகங்கள் ராசா மீது உள் நோக்கத்தோடு செய்தி வெளியிடுகின்றன. ராசா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழல் எப்படி செய்திருக்க முடியும் ? செய்தி வெளியிடும் வட இந்திய தொலைக்காட்சி சேனல்களின் பார்வையாளர் எண்ணிக்கை இதுதான் என்று ஒரு புள்ளி விபரத்தையும் வெளியிட்டார்.
டைம்ஸ் நவ் 0.13
என்டிடிவி 0.12
சிஎன்னஐபிஎன் 0.16
தூர்தர்ஷன் 0.32
இவற்றை யாருமே பார்ப்பதில்லை என்றும், ஏறக்குறைய அனைத்து சேனல்களுமே நஷ்டத்தில் ஓடுகின்றன என்றும் குறிப்பிட்டார். அவர் பேசிய மற்றொரு விஷயம், ஒரு அமைச்சர் நடந்து செல்லுகையில் ஒரு பெண், குறுக்கே வந்து விழுந்து வேண்டுமென்றே அதை செய்தியாக்க வேண்டும் என்பதற்காக விழுவதுதான் இன்றைய ஊடக நிலை என்று கூறினார். இவர் குறிப்பிடும் அந்த நிகழ்வு, ஹெட்டைன்ஸ் டுடேவின் நிருபரான ஒரு பெண் பற்றியது. விமான நிலையத்திலிருந்து ராசா இறங்கி வருகையில், தொடர்ந்து அந்தப் பெண் மைக்கை நீட்டிக் கொண்டு “சார் உங்கள் கருத்து என்ன ?“ என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அப்போது ராசாவே அந்தப் பெண்ணை தள்ளி விட்டதில் அந்தப் பெண் கீழே விழுந்தார்.
இந்த நிகழ்வின் பின்னணி, ராசா உலகில் பேட்டி எடுக்க யாருமே இல்லை என்ற போது கேட்கப் பட்ட கேள்வி அல்ல. ராசா நீரா ராடியா உரையாடலை முதன் முதலில் ஹெட்லைன்ஸ் டுடே ஊடகம் வெளியிட்டது. அந்த உரையாடல் தொடர்பாக என்ன கூறுகிறீர்கள் என்றுதான் அந்த நிருபர் கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் தள்ளி விட்ட ஆ.ராசா செய்தது சரி என்று பேசும் ரமேஷ் பிரபா என்பவரின் தரத்தை சவுக்கு வாசகர்களே…. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ரமேஷ் பிரபாவின் பேச்சைப் பற்றி கருத்து கேட்ட போது, ஒரு பெண் பத்திரிக்கையாளர் இந்த ரமேஷ் பிரபா, ஜெகத் கஸ்பரேல்லாம் எப்படி பத்திரிக்கையாளர்கள் ஆவார்கள் ? ஒரு காலம் செய்தி எழுதத் தெரியுமா இவர்களுக்கு ? ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு காலம் தள்ளும் இவர்களுக்கு, தெருத் தெருவாய் செய்திக்காக அலையும் செய்தியாளர்களின் வலி புரியாது. இவர்கள் குறிப்பிடும் செய்தி ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டிருந்தால், அந்த ஊடகங்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்காமல், எதற்காக கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்…. ? அனைத்து ஊடகங்களும் ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டதால்தான் அரங்கக் கூட்டம் போட்டு புலம்புகிறார்கள் என்று கூறினார்.
மற்றொரு பெண் பத்திரிக்கையாளர், ஆணோ பெண்ணோ, ஒருவர் முன்பு விழுந்து அதை செய்தியாக்கும் அளவுக்கு சுயமரியாதை இல்லாதவர்கள் கிடையாது. குறிப்பாக எந்தப் பெண்ணும் இதைச் செய்ய மாட்டாள். எந்தச் சூழலில் ராசாவிடம் கருத்து கேட்கப் பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். என்னை எப்படியாவது மந்திரியாக்குங்கள் என்று ஒரு தரகரிடம் ராசா கெஞ்சிக் கொண்டிருப்பது ஒலி பரப்பானது பற்றி ராசாவிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது என்றார் அவர்.
அடுத்து இருட் தந்தை ஜெகத் கஸ்பர். இந்த போலிப் பாதிரியின் முகத்திரையை சவுக்கு முன்பே கிழித்திருக்கிறது. இந்தப் போலிப் பாதிரியை சாமான்யமாக எடை போட்டு விடக் கூடாது. மிக மிக தந்திர சாலி. மிக சாமர்த்தியமாக மேடையில் உரையாற்றக் கூடியவர். மிக சாமர்த்தியமாக பேசக் கூடியவர். இல்லையென்றால் 15 வருடங்கள் வெளிநாட்டில் ஒரு கிறித்துவ வானொலியில் பணியாற்றி விட்டு, இந்தியா வந்த பத்து வருடங்களுக்குள் பல கோடி ரூபாய்க்கு அதிபதி ஆக முடியுமா ? திமுக அரசின் முக்கியப் புள்ளியாக ஆக முடியுமா ? சுருக்கமான சொல்லப் போனால், இவர் ஒரு ஆண் நீரா ராடியா. தமிழ் மையம் என்ற ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தமிழக அரசின் கோடிக்கணக்கான நிதியையும், சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறை மாணவர்களின் உழைப்பையும் சுரண்டித் தின்று, ஈழத் தமிழர்களின் ரத்தத்திலும் காசு பார்க்கும் இழி பிறவி.
இந்தப் போலிப் பாதிரி பேசும் போது ஆ.ராசா சமூக நீதிப் போராளி. சமூக நீதியைப் பற்றி ஐந்து மணி நேரம் பேசச் சொன்னாலும் பேசுவார் (யார் சார் கேப்பா ?) என்று கூறினார். ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது என்பது மிக மிக பாராட்டத் தக்கது என்றார். ஆ.ராசாவை வேட்டை நாய்கள் போல ஊடகங்கள் வேட்டையாடுகின்றன. விபச்சாரிக்குக் கூட நியாயம் வேண்டும் என்றால் ஏசு பிரான். (இவர் பண்ணியது அதை விட மோசம் இல்லையா ஃபாதர் ?) ஆனால் ராசாவின் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே அவரை சிலுவையில் அறைகிறார்கள் என்றார். பர்க்காதத், அர்நாப் கோஸ்வாமி, ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்கள், அடுத்தவரின் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பு கூறும் பாசிஸ்டுகளாய் மாறி வருகிறார்கள் என்றார். (பாதர் நீரா ராடியா மூலமா பர்க்காகிட்ட பேசி, மந்திரி பதவி கேக்கும்போது அவங்க பாசிஸ்ட் இல்லையா பாதர் ?) நீரா ராடியா போல நூற்றுக் கணக்கான தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் நஷ்டத் தொகை ஒரு உத்தேசமான தொகையாகும். ஒரு பாட்டில் தண்ணீர் 12 ரூபாய் விற்கிறது. அந்த நிறுவனத்துக்கு பத்து லட்சம் லாபம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கமே தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்காமல் இருப்பதால் அரசுக்கு பத்து லட்ச ரூபாய் நஷ்டம் என்று சொல்ல முடியுமா ? அது போலத்தான் இதுவும் என்றார். (இவர் வெறும் பாதர் இல்லை. காட் ஃபாதர்) தொலைபேசி நிறுவனங்கள் மட்டும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கவில்லை. தொலைக்காட்சி நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கின்றன. அவற்றை திருப்பித் தரத் தயாரா என்று கேட்டார்.
இதை அடுத்து போட்டார் பாருங்கள் ஒரு போடு. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து வருவாயைத் தருமாம். முற்றான விற்பனை இல்லையாம் அது. ஆனால் 3ஜி ஸ்பெக்ட்ரம் முற்றான விற்பனையாம். அதிலிருந்து தொடர் வருமானம் வராதாம். பிறகு, ராசா பதவி ஏற்கும் போது செல்பேசி இணைப்புகள் 30 கோடியாக இருந்ததாம். ராசா பதவியை விட்டு இறங்கும் போது 70 கோடியாம். மேலும், ராசா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. பிரதமர் தலைமையிலான தேசிய வளர்ச்சிக் குழுமம் எடுத்த முடிவைத்தான் அவர் செயல்படுத்தினார். ராசா தொலைபேசி நிறுவனங்கள் கூட்டுக் குழுவாக செயல்பட்டதை உடைத்தார். அதனால் பதவியை இழந்தார் என்றார். (மூத்த பத்திரிக்கையாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் மன்னிக்க) இந்த மசுரையெல்லாம் மன்மோகன் சிங்கிடம் சொல்லாமல் எதற்காக ராஜினாமா செய்தார் ராசா ? (சும்மா சொல்லக் கூடாது. வாங்குன காசுக்கு நல்லாவே குரைக்கிறீங்க பாதர்)
அடுத்ததாக ஏ.எஸ்.பன்னீர்செல்வம் என்ற பத்திரிக்கையாளர் பேசினார். இவர் சிறிது காலம் அவுட்லுக் பத்திரிக்கையில் வேலை பார்த்தார். அப்போது அரசு, அணு சக்தி தொடர்பாக கூறும் பொய்களை அம்பலப்படுத்தியவர் என்று கூறுகிறார்கள். இவரை பத்திரிக்கையாளர் என்கிறார்களே, இவர் எந்தப் பத்திரிக்கையில் வேலை செய்கிறார் என்று ஒருவர் கேட்ட போது, “கல்யாணப் பத்திரிக்கை“ என்று பதிலளித்தார் ஒருவர்.
இந்தப் பன்னீர்செல்வன் பேசியது, மத்திய கணக்காயரின் அறிக்கை முழுக்க முழுக்க பொய்யாலும் முரண்பாடுகளாலும் ஆனது என்றார். அந்தப் அறிக்கையின் முன்னுரையில் 2009-2010 ஆண்டுக்கான ஆய்வு என்று குறிப்பிட்டு விட்டு, அறிக்கு முழுக்க 2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான ஆய்வை நடத்தியிருப்பதாக குறிப்பிட்டார். சவுக்கும், அந்த அறிக்கையில் அப்படித்தான் இருக்குமோ என்று நினைத்துக் கொண்டு அறிக்கையை பார்த்தால் This audit covers the period from 2003-2004 to 2009-2010 அதாவது, இந்த அறிக்கை 2003-2004 ஆண்டு முதல் 2009-2010 வரை உள்ள காலத்துக்கான அறிக்கை என்று உள்ளது. இப்போது பன்னீர் செல்வன் எந்த அளவிற்கு தெளிவாக இந்த அறிக்கையை படித்திருக்கிறார் என்பது புரிகிறதா ?
அதற்குப் பிறகு பன்னீர் செல்வம், அந்த அறிக்கையில் அது சொத்தை, இது சொள்ளை என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். மத்திய கணக்காயர் தவறாக அறிக்கை அளித்திருந்தால், பாராளுமன்ற கணக்குக் குழுவிடம் திமுக எம்பிக்களை விட்டு புகார் கொடுக்க வேண்டியதுதானே…. ? இங்கே எதற்கு வந்து பன்னீர் செல்வம் கத்திக் கொண்டு இருக்கிறார். எல்லோரும் இந்த அறிக்கையை படிக்க வேண்டும் என்று கூறினார். சவுக்குக்கு இந்த நபர் ஒரு வேளை சேம் சைடு கோல் போடுகிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது. கணக்காயரின் அறிக்கையை படித்துப் பார்த்தால் ஆவணங்களோடும், ஆதாரங்களோடும் தெள்ளத் தெளிவாக ராசாவின் ஊழல் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. மேலும், மத்திய கணக்காயருக்கு ராசாவின் மீது தனிப்பட்ட கோபம் இருக்க வாய்ப்பில்லை. தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு உரிய வாய்ப்பு வழங்கப் பட்டு, அத்துறை அளித்த பதில்கள் திருப்தி இல்லாத காரணத்தாலேயே, இந்த முடிவுக்கு அந்தத் கணக்காயர் வந்திருக்கிறார். இங்கே வந்து நம்மிடம் சொல்லும் காரணங்களை பன்னீர் செல்வம், கணக்காயரிடம் எடுத்து வைத்தாலாவது இந்த அறிக்கை ஒரு வேளை வந்திருக்காது.
அடுத்து பேசிய சுப.வீரபாண்டியன். இந்த நபரை பேராசிரியர் என்று அழைக்க மனது வரமாட்டேன்கிறது. இவரை பேராசிரியர் என்று சொன்னால், பேராசிரியர் கல்யாணியை எப்படி அழைப்பது. சுப.வீரபாண்டியனை சவுக்கு முதன் முதலில் சந்தித்தது 15 ஆண்டுகளுக்கு முன்பு. தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் நடந்த ஒரு நலச்சங்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் உரையைக் கேட்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலிர்த்துக் கொண்டு, சார் நாங்கள் உடனடியாக ஒரு சங்கம் தொடங்கி சமூக சேவை செய்யப் போகிறோம் என்றார்கள். அப்படி ஒரு பேச்சு. அதன் பிறகு சில நாட்கள் நந்தன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார் சுபவீரபாண்டியன். அப்போது வடபழனினில் உள்ள அவர் அலுவலகத்தில் சுபவீரபாண்டியனை சவுக்கு சந்தித்து, பத்திரிக்கை ஒன்று தொடங்க வேண்டும் எப்படி என்று கேட்ட போது, பத்திரிக்கை நடத்துவது சுலபமல்ல, அதனால் நீங்கள் என்ன எழுத வேண்டுமோ, அதை எழுதி என்னிடம் கொடுங்கள் நான் நந்தனில் வெளியிடுகிறேன் என்று கூறினார். அதன் பிறகு சவுக்கும் எழுதிக் கொடுக்கவில்லை. அத்தோடு அவர் தொடர்பு இல்லை. ஜெயலலிதா அரசாங்கத்தில் சுபவீரபாண்டியனும் போடா சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்ட போது, சுபவீரபாண்டியனின் கைது சவுக்கை மிகவும் வருந்தச் செய்தது.
அதன் பிறகு, சுபவீரபாண்டியன் சிறையில் எப்படி நிர்வாகத்துக்கு சாதகமாகவும், காவல்துறையினருக்கு சாதகமாகவும் நடந்து கொண்டார் என்ற விபரங்களை சிறையில் சவுக்கு அறிந்த போது, அவர் மீது இருந்த மரியாதை தகர்ந்தது. பிறகு, 2006 முதல், கருணாநிதிக்கு அல்லக்கையாகவே சுபவீரபாண்டியன் மாறியதும், அவரைப் பற்றி நினைப்பதோ பேசுவதோ நேர விரயம் என்று தோன்றியதால் நினைவிலிருந்தே அகன்றார்.
அவர் நேற்று பேசிய ஒரே ஒரு விஷயத்தை சவுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறது. இன்று அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட வேண்டுமாம். ஏனென்றால், பிரதமர் ராசா முதுகில் தட்டிக் கொடுத்தார் என்று செய்தி போட்டாராம். பிரதமர் ராசா முதுகில் தட்டிக் கொடுத்தது, குற்றம் சாட்டப் பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் முறையற்ற செயல் என்று முதலில் பேட்டி கொடுத்தது, பிரகாஷ் ஜாவ்டேக்கர் என்ற பிஜேபி தலைவர். அவரை கைது செய்யாமல் வைத்தியநாதனை எதற்கு கைது செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கு முன், இதே வைத்தியநாதனை செம்மொழி மாநாட்டுக் குழுவில் போட்டு, அழகு பார்த்து, தினமணி நாளேடே பாராட்டி உள்ளது என்று மேடையில் முழங்கினாரே கருணாநிதி… ? அப்போது வைத்தியநாதன் இனித்தாரா ?
வைத்தியநாதனை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென்றால், நேர்மையான அதிகாரியான உமா சங்கர் மீது, பொய் வழக்கு போட்டு, இடை நீக்கம் செய்த கருணாநிதியை ஏன் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது ? மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, 17 தலித்துகளை அடித்து ஆற்றில் தூக்கிப் போட்டதே கருணாநிதியின் காவல்துறை, அதை நியாயப் படுத்திப் பேசினாரே கருணாநிதி… அவரை ஏன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது ? நீங்கள் இவ்வளவு கீழ்தரமாக போயிருக்கக் கூடாது சுபவீரபாண்டியன்…
அடுத்து நம்ப குஞ்சாமணி… இந்த குஞ்சாமணியைப் பற்றி தனியே ஒரு பதிவு எழுதப் பட வேண்டியிருக்கிறது. அதனால் இந்த நபர் பேசியதை மட்டும் சொல்லி விடுகிறேன்.
பெரியார் கண்ட கனவை நனவாக்கியவர் ஆ.ராசாவாம்… ( அப்புறம் வாயில நல்லாத்தான் வருது…) பிறகு இது ஆரிய திராவிட போராம். திராவிடர்கள் ஆட்சி நடப்பதை (கருணாநிதி திராவிடராஆஆஆஆஆம்) பொறுக்காத ஆரியர்கள் இப்படி சதி செய்து ஆ.ராசா மீது பொய்க் குற்றம் சாட்டுகிறார்களாம். கணக்காயர் பிராமணராம். ஊடகத் துறையில் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாம். அதனால்தான் ராசா மீது கோபமாம். ஒரு தலித் இப்படி முன்னேறுவதை கண்டால் அவர்களுக்கு பொறுக்கவில்லையாம். உமா சங்கர் இடை நீக்கம் செய்யப் பட்ட போதும், அஷோக் குமார் காவல்துறையினரால் தாக்கப் பட்ட போதும் இந்தக் குஞ்சாமணி என்ன செய்து கொண்டிருந்தது. ?
அடுத்து நம்ப காமராஜ். இந்த நிகழ்ச்சியின் எழுத்து, ஆக்கம், ஊக்கம், ஏக்கம் எல்லாமே நம்ப காமராஜ் தான். நிகழ்ச்சி தொடங்கும் போது மேடைக்கு மிக அருகில் நாற்காலியை போட்டுக் கொண்டு, பேச்சுக்களை அவ்வப் போது குறிப்பெடுத்துக் கொண்டு மிகவும் கவனமாக எழுதிக் கொண்டிருந்தார். (காமராஜு.. எப்படி இருந்தாலும் நக்கீரன்ல பொய்தானே எழுதப் போற… அப்புறம் எதுக்கு இந்த நோட்செல்லாம் …. ?)
கடந்த வாரம் சென்னையில் ஒரு ரகசிய இடத்தில், கருணாநிதி, ஜாபர் சேட், ராஜமாணிக்கம், காமராஜ் கலந்து கொண்ட ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ராசா மீது ஊடகங்கள் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களை எப்படி சமாளிப்பது என்று ஒரு கலந்துரையாடல் நடந்தது. அந்தக் கலந்துரையாடலில் விளைவே நேற்று நடந்த கூட்டம்.
காமராஜ் பற்றி இந்த இதழ் நக்கீரனில் அவர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகளை சவுக்கு பிரசுரிக்கிறது.
காமராஜ் மீட்டிங்க எப்படி முக்கியமா கெவினிச்சு குறிப்பெடுக்குறாருன்னு பாருங்க.
“அதிகாரத்தில் உள்ள நபருடன் தொடர்பு கிடைத்தவுடன் பேச்சுவார்த்தையை இனிமையாகத் தொடங்குவார் நீரா. டீலிங்கை நிச்சயம் முடித்து விடலாம் எனப் புரிந்து கொண்டுவிட்டாரென்றால் மீட்டிங் ஸ்பாட் எதுவாக இருந்தாலும் தயங்காமல் செல்வார். வெளியிடங்களில் ரகசியமாக நடக்கும் சந்திப்புகளின்போது, முழங்கால் அளவுக்கே டிரஸ் அணிந்திருப்பார். மேலே ஒரு டாப்ஸ். சிம்பிள் பியூட்டி என்பது போல அவருடைய உடையலங்காரம், எதிரில் உள்ளவர்களை கவர்ந்திழுக்கும். (நக்கீரனை ஏன் நவீன சரோஜாதேவி என்று சவுக்கு கூறுகிறது என்று இப்போது புரிகிறதா ? நாடே மிகப் பெரிய ஊழலைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கும் போது, நீரா ராடியாவின் ஸ்கர்ட், டாப்ஸ், ஜட்டி, பாடி என்று காமராஜுக்கு எதில் அக்கறை என்று புரிகிறதா ? நக்கீரன் வாசகர்களை எந்த அளவுக்கு கீழ்த்தரமாக காமராஜ் நினைக்கிறார் என்பது புரிகிறதா ? சிம்பிள் ப்யூட்டியாம்…)“
“யாருடன் டீலிங் பேசுகிறாரோ அந்த நபர் சிகரெட் பிடித்தால், அவருடன் தம் அடிப்பார். சியர்ஸ் சொல்ல வேண்டுமென்றால் கம்பேனி கொடுப்பார். எதிரில் இருப்பவர் அதற்கு மேல், என்ன எதிர்ப்பார்க்கிறார் என்பதையும் புரிந்து கொண்டு அதனையும் நிறைவேற்றத் தயங்காதவர் நீரா என்கிறார்கள் டெல்லி அதிகார வட்டத்தில் டீலிங் பேசும் மற்ற முக்கிய புள்ளிகள் (காமராஜ் சார் நீங்க முக்கிய புள்ளி இல்லையா சார் ?) அதிகார மையத்தின் டேஸ்ட் அறிந்து அதற்குத் தகுந்தாற் போல ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் நிரா ராடியாவால் டாடா நிறுவனமும் முகேஷ் அம்பானி நிறுவனமும் பெற்ற லாபங்கள் மிக அதிகம் என்கிறது தொழிலதிபர்கள் வட்டாரம்.
முகேஷ் அம்பானி நிறுவனத்தின் வேகமான வளர்ச்சியை கவனித்து அதிர்ச்சி அடைந்த அவரது கூடப்பிறந்த தம்பியான அனில் அம்பானி, எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பது போல நிரா ராடியாவை சிக்க வைத்தால் தன் அண்ணனின் வியாபார வேகத்தை கட்டுப் படுத்த முடியும் என யோசித்து இது தொடர்பாக அமலாக்கத் துறையை நாடினார். நிரா நடத்தும் நிறுவனத்திற்கு வெளிநாடுகளுடன் நிறைய தொடர்புகளும் முதலீடுகளும் அதிகம். “
நமக்கு கெடச்ச பங்கு போயிடுமோன்னு எவ்ளோ கவலையா பாக்குறாரு பாருங்க காமராஜ் அண்ணாச்சி
அமலாக்கப் பிரிவுதான் நீரா ராடியா தொலைபேசியை பதிவு செய்ததாம். எப்படி இருக்கு. தெருவுக்குத் தெரு விற்றுக் கொண்டிருக்கும் அவுட்லுக் இதழிலும், தினமணி நாளிதழிலும், இந்தியன் எக்ஸ்பிரசிலும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களிலும் நீரா ராடியாவின் தொலைபேசியை பதிவு செய்தது வருமான வரித் துறை என்று இருக்கும் போது காமராஜுக்கு மட்டும் பதிவு செய்தது அமலாக்கப் பிரிவு என்று எப்படித் தெரியும் ?
கூசாமல் எப்படி பொய்யை அச்சடித்து 8 ரூபாய் விலை வைத்து விற்கிறார்கள் பார்த்தீர்களா ?
அடுத்த முக்கியமான விஷயம் இந்தக் கூட்டத்தில் பேசிய ஒருவரும் 1.10.2007லிருந்து 25.09.2007க்கு கடைசி தேதி மாற்றப் பட்டது ஏன் என்று பேசவியேல்லை. பிறகு இந்த விஷயத்தில் காங்கிரசின் பங்கு என்ன என்பது பற்றியும் பேசவேயில்லை. காங்கிரஸ் திமுக கூட்டணி உடைந்தது என்று ஒரு செய்தி வரட்டுமே…. இந்த காகங்கள் கூட்டம் எப்படிப் பேசுகிறது என்று பாருங்களேன்…..
இப்போது சொல்லுங்கள்… இது காகங்களின் கூட்டம் தானே… ?