மனமகிழ் மன்றங்கள் என்றவுடன், ஏதோ தமிழ்நாட்டில் உள்ள கிளப்புகளையும், கேளிக்கை விடுதிகளையும் பற்றி சவுக்கு எழுதப்போகிறது என்று நினைத்து விடாதீர்கள். சவுக்கு தற்போது எழுதப்போவது, நீதிமன்றங்களைப் பற்றி.
நேற்றைக்கு கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த, ட்ராலி பாய்ஸ் என்று சவுக்கு வாசர்களால் அன்போடு அழைக்கப்படும் பாண்டியன், வினோதன் மற்றும் கணேசன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, சோதனைகளை நடத்தியதை அறிந்திருப்பீர்கள். இது குறித்து சவுக்கு, பாதுகாப்புக்கே பாதுகாப்பு என்ற தலைப்பில் ஆகஸ்ட் 2010ல் கட்டுரை எழுதியது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கைப் பற்றியும் எழுதியது.
பாண்டியன், விநோதன் மற்றும் கணேசன், ஆகியோர் கருணாநிதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளாக (Personal Security Officers) 2006 முதலாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, கருணை வள்ளல் கருணாநிதி கடந்த 2008ம் ஆண்டில் ஆளுக்கு தலா 4800 சதுர அடி உள்ள மனையை கருணாநிதி ஒதுக்கீடு செய்கிறார். இந்த மனைகள் ஒவ்வொன்றும் வீட்டு வசதி வாரிய விலையின் படி 75 லட்சம். மாதம் 10 முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் இவர்கள் எப்படி 75 லட்சத்தை ஒரே தவணையில் கட்டியிருக்க முடியும் ? இதைத்தான் சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வி கேட்டார் ? சாதாரண இன்ஸ்பெக்டராக இருக்கும் ஒருவர் 75 லட்சத்தை ஒரே தவணையில் கட்டி எப்படி வீட்டு மனை வாங்கினார். ஆகையால் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்று புகார் மனு ஒன்றை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு 07.09.2009 அன்று அளிக்கிறார். ஏறக்குறைய ஒரு வருடம் ஆகியும், தனது புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.
அந்த வழக்கு நீதியரசர் (????) சி.டி.செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. எடுத்த எடுப்பிலேயே நான் இந்த வழக்கை தள்ளுபடி செய்யப்போகிறேன் என்று கூறினார். பிறகு மனுதாரர் சார்பில் ஆஜரான ராதாகிருஷ்ணன், இந்த மனுவை லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரணை செய்திருக்க வேண்டும். பொது வாழ்வில் நேர்மையை கடைபிடிக்கத் தவறுபவர்கள் விசாரணையை சந்திக்க வேண்டும் என்றார். அரசு வழக்கறிஞர் சரவணன், இது விளம்பரத்திற்காகவே போடப்பட்ட வழக்கு என்றார்.
இறுதியாக மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதியரசர் சி.டி.செல்வம். அவர் மனுவை தள்ளுபடி செய்து அளித்த தீர்ப்பில், பொதுநல வழக்கு என்ற பெயரில் மனுத்தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பவர்களைக் கண்டிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். அந்தத் தீர்ப்பு, அஷோக் குமார் பாண்டே என்பவர் தொடுத்த வழக்கில் வழங்கப் பட்ட தீர்ப்பு. அது என்ன வழக்கு என்று பார்ப்பதற்கு முன், அவர் குறிப்பிட்ட தீர்ப்புப் பகுதியைப் பார்ப்போம்.
When there is material to show that a petition styled as a public interest litigation is nothing but a camouflage to foster personal disputes, said petition is to be thrown out. Before we grapple with the issue involved in the present case, we feel it necessary to consider the issue regarding public interest aspect.
ஒரு வழக்கை பொதுநல வழக்கு என்ற போர்வையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தீர்த்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது என்றால், அதைத் தூக்கி எறிய வேண்டும். இந்த வழக்கின் விவகாரங்களுக்குள் செல்லும் முன், பொது நலம் என்றால் என்ன என்பதைப் பற்றி பரிசீலிப்போம்.
செல்வராஜ் தொடுத்த வழக்கு, இதில் எதிலும் சேராது. அவருக்கும் பாண்டியன், விநோதன் மற்றும் கணேசனுக்கு என்ன தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கிறது ?
Public Interest Litigation which has now come to occupy an important field in the administration of law should not be “publicity interest litigation” or “private interest litigation” or “politics interest litigation” or the latest trend “paise income litigation”. If not properly regulated and abuse averted it becomes also a tool in unscrupulous hands to release vendetta and wreck vengeance, as well.
நீதிபரிபாலனத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் பொது நல வழக்குகள் தற்போது, விளம்பரம் விரும்பும் வழக்கு, தனிப்பட்ட பகைகளை தீர்த்துக் கொள்ளும் வழக்கு, அரசியல் ஆதாயத்துக்கான வழக்கு மற்றும் வருவாய் தேடும் வழக்குகளாக மாறி விட்டன. இதை வரைமுறைப்படுத்தாவிட்டால், இது தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்துக்காக வீணானவர்களின் கைகளில் சிக்கி விடும்.
ஏற்கனவே சொன்னது போல, செல்வராஜுக்கும், கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் எந்தவிதமான கொடுக்கல் வாங்கலும் இல்லை. அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சொத்து சேர்த்ததை அம்பலப்படுத்துவதற்கும், விசாரணை நடத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் மட்டுமே தொடுக்கப்பட்ட வழக்கு இது.
There must be real and genuine public interest involved in the litigation and not merely an adventure of knight errant or poke ones into for a probe. It cannot also be invoked by a person or a body of persons to further his or their personal causes or satisfy his or their personal grudge and enmity. Courts of justice should not be allowed to be polluted by unscrupulous litigants by resorting to the extraordinary jurisdiction.
ஒரு பொதுநல வழக்கில், உண்மையான பொது நலம் இருக்க வேண்டுமே தவிர, சாகசச் செயலில் ஈடுபடுவது போன்றும், விளையாட்டுப் போக்கிலும் இருக்கக் கூடாது. ஒருவருடைய அல்லது ஒரு அமைப்புடைய தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்காகவும், சொந்தக் காரண காரியங்களுக்காகவும் பொதுநல வழக்குகள் தொடரக் கூடாது. நீதிமன்றங்கள் விளையாட்டுத்தனமாக வழக்கு தொடர்பவர்கள் பயன்படுத்தும் இடமாகிவிடக் கூடாது.
இந்த வழக்கை செல்வராஜ் சாகச் செயலாகவோ, பொதுநலம் இன்றியோ தொடரவில்லை. சமூகத்தின் மீது உண்மையான அக்கறையோடு, பொதுவாழ்வில் நேர்மைத் தன்மையை ஊர்ஜிதப்படுத்த வேண்டும் என்ற காரணத்திலேயே அந்த வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கை அவர் விளையாட்டுத்தனமாகவும் தொடுக்கவில்லை. தீர்ப்புதான் விளையாட்டுத் தனமாக வழங்கப்பட்டிருக்கிறது.
A person acting bona fide and having sufficient interest in the proceeding of public interest litigation will alone have a locus standi and can approach the Court to wipe out violation of fundamental rights and genuine infraction of statutory provisions, but not for personal gain or private profit or political motive or any oblique consideration.
உள்நோக்கமில்லாமல் பொது நல வழக்கில் போதுமான அக்கறை உள்ள நபரே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்து அடிப்படை உரிமை மீறலையும், சட்ட மீறல்களையும், தனிப்பட்ட நலனுக்காகவோ, ஆதாயத்துக்காகவோ, அரசியல் நோக்கத்தோடோ, வேறு உள்நோக்கத்தோடோ இல்லாமல் வழக்கு தொடுக்க வேண்டும்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் ஒரு அமைப்பின் செயலர் என்ற முறையிலேயே செல்வராஜ் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அந்த அமைப்போ, செல்வராஜோ உள்நோக்கத்தோடு இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள் என்ற ஆதாரம் ஏதும் இல்லாமல், நீதிபதி செல்வம், இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை இந்த வழக்கில் எப்படி எடுத்தாள முடியும் ? 10 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்கும் ஒரு இன்ஸ்பெக்டர் ஒரே நாளில் 75 லட்ச ரூபாயை வீட்டு வசதி வாரியத்திற்கு செலுத்தியதற்கான ஆதாரம் கிடைத்த பிறகு, ஊழலை ஒழிப்பதற்காக பாடுபடும் ஒரு அமைப்பு புகார் கொடுக்கக் கூடாதா ? அந்த அமைப்பு இல்லை என்றாலும், ஒவ்வொரு குடிமகனின் கடமை அல்லவா அது ?
A writ petitioner who comes to the Court for relief in public interest must come not only with clean hands like any other writ petitioner but also with a clean heart, clean mind and clean objective.
பொதுநல வழக்கு தொடுப்பதற்காக நீதிமன்றம் வரும் மனுதாரர், மற்ற வழக்கின் மனுதாரர்களைப் போலவே சுத்தமான கரங்களோடு மட்டுமல்ல, சுத்தமான மனதோடும், சுத்தமான நோக்கத்தோடும் வர வேண்டும்.
மனுதாரர் செல்வராஜுக்கு பொதுநலனைத் தவிர வேறு உள்நோக்கம் எதுவும் இல்லாதபோது, சுத்தமான மனதோடு அவர் வரவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும் ?
சரி… இது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதி. இந்தப் பகுதியை சுட்டிக்காட்டியே செல்வராஜின் வழக்கை தள்ளுபடி செய்தார் நீதியரசர் சி.டி.செல்வம்.
சரி.. உச்சநீதிமன்றம் அந்த வழக்கில் ஏன் அப்படித் தீர்ப்பு சொன்னது… ? வழக்கு தொடுத்தவரின் மேல் இப்படி கடும் கோபம் கொள்ள வேண்டிய அவசியம் என்ன ?
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அஷோக் குமார் பாண்டே என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கிறார். அது எதற்காகவென்றால் அவர் தொலைக்காட்சியை பார்த்துக கொண்டிருந்தபோது, தனஞ்சோய் சாட்டர்ஜி என்பவரை தூக்கில் போட முடிவெடுத்திருப்பதாகவும், அது தாமதாவதாகவும், அது தாமதமாவதால், தனஞ்சோய் சாட்டர்ஜிக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அவர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த வழக்கை தொடுத்திருந்தார்.
தனஞ்சோய் சாட்டர்ஜியின் மரண தண்டனை, கல்கத்தா உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட பின், அவரது கருணை மனு குடியரசுத் தலைவராலும் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு தொடுக்கப்பட்ட வழக்கு.
இந்த வழக்கு விளம்பரத்திற்காக போடப்பட்டதோ இல்லையோ, அடிப்படைகள் இல்லாமல் போடப்பட்ட வழக்கு. குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரித்த பின், குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரித்ததில் நீண்ட தாமதம் இருந்தாலோ, தவறாக தள்ளுபடி செய்திருந்தாலோ மட்டும்தான் உச்சநீதிமன்றத்தை ஒருவர் அணுக முடியும். மேலும், உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்கு, போதுமான சட்ட முகாந்திரங்கள் வேண்டும். டிவியைப் பார்த்தேன்…. அவர் தூக்கு தாமதமாகிறது என்று உச்சநீதிமன்றத்தை அணுகுவது நிச்சயம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயலே… ….
அதற்கும் செல்வராஜ் தொடுத்த வழக்குக்கும் என்ன சம்பந்தம் ? செல்வராஜ் டிவியைப் பார்த்து விட்டு வழக்கு தொடுத்தாரா ? ட்ராலி பாய்ஸ் மூன்று பேரும், ஒரே நாளில் 75 லட்ச ரூபாய் பணம் கட்டியிருந்ததற்கான ஆதாரத்தை காண்பித்திருந்தாரே…
இந்த வழக்கை நீதியரசர் செல்வம் தள்ளுபடி செய்ததற்கான காரணத்தைப் பார்ப்போம்.
Learned Government Advocate has produced for our perusal, a communication of the DGP informing that a discreet enquiry by a competent authority found the allegations leveled to be not proved. The persons complained against being unable to make payments of the huge cost out of their own funds had entered into joint venture partnerships, where under the promoter had paid the money due to the Government body. In lieu thereof, the persons complained against were to get a portion of the building to be constructed upon the properties. In such circumstances, no case of holding disproportionate assets was found attracted. As rightly contended by the learned Government advocate, the offence u/s 13 (1) (e) stood attracted not because a public servant held property but because he is not able to account there for. There was a need to protect public servants from needless harassment and insidious attacks and that is why it is considered it appropriate that before a charge u/s 13 (1) (e) is leveled against a public servant, a preliminary enquiry ought to be conducted.
தமிழக டிஜிபியின் கடிதத்தை நம் முன்னே அரசு வழக்கறிஞர் கொடுத்துள்ளார். அதன்படி, டிஜிபி நடத்திய ரகசிய விசாரணையில் ஊழல் புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் (பாண்டியன், விநோதன் மற்றும் கணேசன்) ஆகியோர் தங்களால் பணம் கட்ட முடியாது என்பதால் நிலத்தை வாங்குபவரோடு ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்து (Joint Venture) அதன்படி, நிலத்தை வாங்குபவர் இவர்கள் சார்பாக அரசுக்கு பணம் செலுத்துவார். அந்த ஒப்பந்தத்தின் படி, கட்டப்படும் கட்டிடத்தில் ஒரு பகுதியை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெறுவார்கள். இந்தச் சூழ்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டு வருவதில்லை. அரசு வழக்கறிஞர் சொல்வது போல, ஒருவர் சொத்து வாங்கியதாலேயே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் வராது, அவர் அதற்கு கணக்கு காண்பிக்காமல் இருந்தால்தான் இந்தப்புகார் வரும். அரசு ஊழியர்களை தேவையற்ற புகார்களில் இருந்து காப்பாற்றவே பூர்வாங்க விசாரணை நடைபெறுகிறது என்று கூறி, செல்வராஜின் மனுவை தள்ளுபடி செய்தார் நீதியரசர் செல்வம்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரை விடுங்கள்…. நீதியரசரின் முன்பாக எடுத்து வைத்த வாதத்தின்படியே ஒரு குற்றச்செயலை செய்திருக்கிறார்களே..
கையில் பணம் இல்லாதவர்கள் எப்படி ஜாயின்ட் வென்ச்சர் போட முடியும் ?
பணம் இல்லாதவர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதை வீட்டு வசதி வாரிய விதிகள் தடை செய்கிறதே… ?
இவர்கள் சொல்வது போல ஜாயின்ட் வென்ச்சரும் போடப்படவில்லையே ? நடந்தது விற்பனையாயிற்றே ?
நீதியரசர் சொல்வது போல, கட்டப்படும் கட்டிடத்தில் இவர்களுக்கு எந்தப்பகுதியும் ஒதுக்கப்படவில்லையே…. ?
அந்த ஆவணங்களை வாங்கி பார்வையிட்டிருந்தாலே நிலம் விற்பனை செய்தது தெரிய வந்திருக்குமே.. ?
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த அன்று, நிலம் ட்ராலி பாய்ஸ் கையிலிருந்து பத்மாவுக்கு மட்டும் போகவில்லை… பத்மாவிடமிருந்து அது மற்றொரு கை மாறி விற்பனையும் ஆகி விட்டது.. கையில் பத்து பைசா இல்லாமல் ட்ராலி பாய்ஸ் மூவரும் நிலத்தை விற்ற வகையில் தலா 20 லட்ச ரூபாய் லாபமடைந்திருக்கிறார்கள் என்ற விபரமும் அவர்கள் பணிப்பதிவேட்டில் (Service Book) பதிவு செய்யப்பட்டிருந்தது. இது போல அவகாசமே கொடுக்காமல் இப்படி அவசர அவரசமாக இந்த வழக்கை முடிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் நீதியரசர் செல்வத்துக்கு ஏன் வந்தது ?
தற்போது, செல்வராஜ் என்ன குற்றச்சாட்டுகளைச் சொன்னாரோ, அதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தானே லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது ?
பாண்டியன், விநோதன் மற்றும் கணேசன் ஆகிய மூவரும் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யுமாறு அரசுக்கு 6 மார்ச் 2008 அன்று விண்ணப்பம் அளிக்கின்றனர். நான்கே நாட்களில் 10 மார்ச் 2008 அன்று வீட்டு மனை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்படுகிறது. இந்த அடிப்படையில், வீட்டு வசதி வாரியம் மனை ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட வேண்டும். இந்த ஆணை 18 மார்ச் 2008 அன்று வெளியிடப்படுகிறது. இந்த ஆணை வெளியிடப்படுவதற்கு முன்பாகவே, 16 மார்ச் 2008 அன்றே பத்மா என்பவரோடு இவர்கள் மூவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அதன்படி, பத்மா என்பவர், இவர்கள் மூவர் சார்பில் வீட்டு வசதி வாரியத்துக்கு பணத்தைச் செலுத்துகிறார்.
ஆவணங்களை சமர்ப்பியுங்கள் என்று அரசுக்கு உத்தரவிட்டு கோப்புகளை பார்த்திருந்தாலே இந்த உண்மை வெளிவந்திருக்குமே..? இதை ஏன் செய்யத் தவறினார் நீதியரசர் செல்வம் ?
06.08.2010 அன்று குற்றவியல் அசல் மனு 17935/2010ல் நீதியரசர் செல்வம் வழங்கிய தீர்ப்பு உள்நோக்கம் கொண்டதல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் ?
இதே போன்ற மற்றொரு வழக்கு ஐபிஎஸ் அதிகாரி சுனில் குமாரைப் பற்றியது.
உத்தரப்பிரதேச உத்தமப்புத்திரன் என்ற கட்டுரையில் சவுக்கு சுனில் குமார் வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்த விபரங்களை ஆவணம் மற்றும் புகைப்பட ஆதாரங்களோடு, கடந்த அக்டோபர் 2010ல் பதிவு செய்திருந்தது. அப்போது சுனில் குமார் என்ன பணியில் இருந்தார் தெரியுமா ? லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநர்.
இந்த ஆதாரங்களையெல்லாம் புகார் மனுவாக தயார் செய்து, தலைமைச் செயலாளருக்கு அனுப்பி சுனில் குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று 15.10.2010 அன்று புகார் அனுப்பப்பட்டது. கருணாநிதி அரசு எந்தப்புகாரில் நடவடிக்கை எடுத்துள்ளது ?
இந்தப்புகாரிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ட்டி.ராஜா, 15.03.2011 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார்.
அந்தத் தீர்ப்பில்
“8. From the file made available to this Court, it is seen that, by confidential letter No.SC/6971-1/2010 – dated 10.11.2010, of the Principal Secretary to Government, the petition, dated 15.10.2010, received from the petitioner herein, was sent to the Director General of Police, with a request to send a report in that regard to the Government, whereupon, the DGP, requested the Inspector General of Police, Intelligence, Chennai, to conduct an enquiry into the matter and send a report on the allegations to the Chief Office immediately as a reply was due to the Government in that regard. Consequently, the said Officer conducted a discreet enquiry and came to a conclusion that ‘all the properties owned by the 4th respondent and his family members were intimated properly to the Government and recorded’.
In the course of the discreet enquiry, the IG Intelligence categorically found thus:-
“It is learnt that Tr.A.Shankar (petitioner) while he was working in V&AC, Chennai, was arrested by CB CID in connection with the Phone Tapping case and the case is P.T. Meanwhile, he had approached the Madras High Court to delay the departmental proceedings against him and also to drag on the case. It is learnt that the Joint Director, V&AC, Chennai in his official capacity pursued the same and got the petition dismissed and proceeded with the enquiry in the phone tapping case. It is learnt that in order to thwart the attempt of the Joint Director V&AC in taking action against him (petitioner) he had sent the petition in question. By way of summary, the IG Intelligence ultimately concluded as follows:-
“ The allegations levelled against Tr.Sunil Kumar, IPS,JD, V& AC, Chennai are totally false, motivated and baseless. The petition might have been sent to tarnish the image of the senior police officer, who is known for his unblemished service and high integrity. The discreet enquiry report, dated 16.12.2010, of the IG Intelligence was sent to the Government on 21.12.2010, by the DGP vide letter C.No.319/S&C1/2010.”
அதாவது என்ன சொல்கிறார் என்றால், மனுதாரர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றியபோது, தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். சுனில் குமார் அவர் மீது துறை நடவடிக்கை எடுத்தார். இதை எதிர்த்து மனுதாரர் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார். இந்தத் தடையை நீக்க சுனில் குமார் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் உள்நோக்கத்தோடு இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறையின் ஐஜி ஒரு “ரகசிய விசாரணையை” நடத்தியுள்ளார். அந்த விசாரணையின் படி, சுனில் குமார் மீதான புகார் ஆதாரமற்றது, உள்நோக்கம் கொண்டது, பொய்யானது. இந்த புகார் மனு, ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்தோடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கை அரசுக்கு 21.12.2010 அன்று அனுப்பப்பட்டது”
கைது, சித்திரவதை, சிறைவாசத்தை சந்தித்த ஒரு நபர், ஒரு சாதாரண துறை நடவடிக்கைக்கு அஞ்சினார், அதனால் சுனில் குமார் மீது புகார் கொடுத்தார் என்பதே முட்டாள்த்தனமானது. சுனில் குமார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வேறு ஒரு அதிகாரி நடவடிக்கை எடுக்கப்போகிறார். சுனில் குமார் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வேறு அதிகாரியே இல்லையா என்ன ?
ரகசிய விசாரணையை நடத்திய அதிகாரி யார் தெரியுமா ? ஜாபர் சேட். வேலிக்கு ஓணான் சாட்சி. ஜாபர் சேட்டின் ஊழல்களே நாறுகிறது. இதில் அவர் மற்றொரு அதிகாரி மீது விசாரணை நடத்தினாராம். வேடிக்கை…. வேடிக்கை…
Therefore, before a public servant, whatever be his status, is publicly charged with acts of dishonesty which amount to serious misdemeanour or misconduct of the type as alleged in this case and a first information is lodged against him, there must be some suitable preliminary enquiry into the allegations by a responsible officer. The lodging of such a complaint against a person, especially one who like the 4th respondent occupying a top position in the Directorate, even if baseless, would do incalculable harm not only to the officer in particular but to the department he belonged to, in general. Keeping the same in mind, in the present case, since at the instance of the Government, the DGP nominated the IG-Intelligence, a responsible top-ranking Police Officer to find out the correctness or otherwise of the allegations in the complaint made by the petitioner, no exception can be taken to such enquiry, prima facie, proceeded in a fair and reasonable manner.
ஒரு பொது ஊழியர் மீது ஊழல் புகார் தொடுக்கப்படும் முன்பாக பூர்வாங்க விசாரணை நடத்தப்பட வேண்டும். சுனில் குமார் போல, லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநராக இருக்கும் ஒருவர் மீது புகார் தொடுப்பது, அடிப்படை ஆதாரம் இல்லாத புகாராக இருந்தாலும், அவருக்கு மட்டும் அல்லாமல் அந்த துறைக்கே சேதத்தை ஏற்படுத்தும். இதை மனதில் வைத்துக் கொண்டு பார்க்கும் போது, டிஜிபி, உளவுத்துறை ஐஜி என்ற ஒரு பொறுப்பான அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரணை நடத்தியிருப்பதால், விசாரணை நியாயமாக நடந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
பூர்வாங்க விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதில் சவுக்குக்கும் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் அதை யார் நடத்த வேண்டும் ?
ஊழல் புகார்களை விசாரிப்பதற்கென்றே இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையா ? அல்லது தமிழ்நாட்டில் நடந்த அத்தனை ஊழல்களுக்கும் பொறுப்பாக, ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் ஜாபர் சேட்டா ?
ஊழல் புகாரை விசாரிப்பதற்கென்றே இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்காமல், டிஜிபிக்கு அந்தப் புகாரை அனுப்பியதற்கான காரணம் என்ன என்பதை நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்க வேண்டாமா ? இதுதான் நீதிபரிபாலனத்தின் லட்சணமா ?
உயர் அதிகாரிகள் அவதூறான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகக் கூடாது என்றால், தன்னுடைய மொத்த சொத்துப்பட்டியலையும் பகிரங்கமாக வெளியிட்டு இதற்கு மேல் சொத்து இருந்தால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று பகிரங்கமாக அறிவித்த உமா சங்கர் ஐஏஎஸ் மீது இன்று வரை ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருவதற்கான காரணம் என்ன ?
புகார் கொடுத்தவரை விசாரிக்காமலேயே ஜாபர் சேட் விசாரணையை முடித்ததற்கான காரணம் என்ன என்பதை நீதிமன்றம் ஏன் கேள்வி கேட்கவில்லை ?
பொய்யான புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஏன் உத்தரவிடவில்லை ?
புகார்கள் ஆதாரமற்றது என்று சொல்லிய ஜாபர் சேட், சுனில் குமாரை விசாரித்தாரா இல்லையா என்பதை நீதிமன்றம் ஏன் கேள்வி கேட்கவில்லை ?
அந்தப்புகாரில் குறிப்பிட்டிருந்த சொத்துக்கள் யாருக்குக் சொந்தமானவை என்பதை ஏன் நீதிமன்றம் விசாரிக்கவில்லை ?
இந்த லட்சணத்தில்தான் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. உள்நோக்கத்தோடு வழக்கு தொடுப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், உளசுத்தியோடு, சமுதாயத்திலும், பொதுவாழ்விலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நீதிமன்றத்தில் நியாயம் வேண்டுபவர்களை அதிகார வர்க்கத்தின் உத்தரவுக்கு கீழ்படிந்து ஆட்சியாளர்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் எழுதும் நீதிமன்றங்கள் எப்படி நீதி வழங்கும் மன்றங்களாக இருக்க முடியும் ?
நடந்து செல்லும் போது, முன்னால் ஒருவர் தடியோடு, உஸ்ஸு, உஸ்ஸூ என்று கத்திக் கொண்டே செல்ல, பிரம்மாண்டமான அரசு பங்களாவில் குடியிருந்து கொண்டு, குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு, ஆட்சியாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லும் இந்த நீதிமன்றங்கள் நீதிபதிகளின் மனமகிழ் மன்றங்களே….
மதிப்பிற்குரிய சவுக்கு சங்கர் அவர்களுக்கு வணக்கம்
எங்கள் கிராம பஞ்சாயத்தில் Rs.1,50,000,00 அளவில் முறைகேடு நடந்துள்ளது அதுபற்றி நிறைய புகார்கள் அளித்துள்ளேன் மணிலா லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் அளித்துள்ளேன் எந்த நடவடிக்கையும் இல்லை நான் பொதுநல வழக்கு தொடரவேண்டும் எவ்வாறு மனு அனுப்புவது என்று தெரியவில்லை எனக்கு வழிமுறை தங்கள் சொல்லவேண்டும்…
மதிப்பிற்குரிய சவுக்கு சங்கர் அவர்களுக்கு வணக்கம்
எங்கள் கிராம பஞ்சாயத்தில் Rs.1,50,00,000 அளவில் முறைகேடு நடந்துள்ளது அதுபற்றி நிறைய புகார்கள் அளித்துள்ளேன் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் அளித்துள்ளேன் எந்த நடவடிக்கையும் இல்லை நான் பொதுநல வழக்கு தொடரவேண்டும் எவ்வாறு மனு அனுப்புவது என்று தெரியவில்லை எனக்கு வழிமுறை தங்கள் சொல்லவேண்டும்…
அருமை சவுக்கு அவர்களே. அற்புதமான அதிகார துஷ்ப்ரயோகம் செய்பவர்களை தோலுரிக்கும் கட்டுரை. நெஞ்சம் நிமிர்கிறது உங்கள் கட்டுரையால். இந்த சுனில் குமார், ஜாபர் சேட், சி.டி. செல்வம் ஆகிய ஊழல் பெருச்சாளிகள் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து இன்னும் என்னென்ன கூத்தடித்தார்கள் தெரியவில்லை. அரசியல் செல்வாக்கு, நீதிமன்ற செல்வாக்கு, காவல் துறை செல்வாக்கு என்று அனைத்து நாட்டின் நீதி பரிபாலனை செலுத்தும் துறைகளிலும் கொடியவர்கள் அமர்ந்துகொண்டு அட்டூழியம் செய்வதை மிக சிலரே இணையத்தில் வெளிப்படுத்தி மக்களுக்கு தெரியபடுத்தும் அவலநிலை. இந்த நிலை மாறவேண்டும். பத்திரிகைகள் ஜனநாயகத்தின் தூண்கள் என்ற நிலை மாறி அரசியல்வாதிகளின் எடுபிடியாக செயல்படுகின்றன. சவுக்கு கட்டுரைகள் படிப்பதால் எனென்ன வகையில் ஊழல் நடைபெறுகிறது என்று தெரிந்து கொள்ள முடியறது.