தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரனுக்கு சங்கக் கட்டிடம் கொடுக்க இடம் ஒதுக்கியதற்கு வழக்கறிஞர்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ஒதுக்கப்பட்ட இடத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு சென்னை உயர்நிதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப்பணிகள் நடைபெறும் கட்டிடத்தில், “கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் பணிகளை உடனே நிறுத்தவும்” என்று சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகப் பதிவாளரின் உத்தரவு ஒட்டப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து உங்களுக்கு வழங்கப்பட்ட கட்டிடத்தை ஏன் திரும்பப் பெறக்கூடாது என்று தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தடை உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி, பிரபாகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மதியம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டனர்.