கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தை ஒடுக்கவும், நீர்த்துப்போகச் செய்யவும், காவல்துறை செய்து வந்த பகீரதப்பிரயத்தனங்கள், தோல்வியில் முடிந்துள்ளன. போராட்டத்துக்கு தலைமையேற்று நடத்தும் உதயக்குமார் மற்றும் புஷ்பராயனை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று, காவல்துறை எடுத்த வரும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
போராட்டம் நடக்கும் இடத்தில் நள்ளிரவில் புகுந்து இவர்கள் இருவரையும் கைது செய்யலாம் என்றால், ஆயிரக்கணக்கான பெண்களையும், குழந்தைகளையும் தாண்டி அந்த இடத்துக்கு செல்ல முடியாது. மக்களிடம் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி, அதன் மூலம் உதயக்குமாரையும், புஷ்பராயனையும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தலாம் என்றால், மக்கள் காவல்துறை சொல்லும் பொய்யையும் புனைசுருட்டையும் நம்பத் தயாராக இல்லை.
ஊடகங்களில் நாளுக்கு நாள் வரும் செய்திகளும், காவல்துறையின் கபட நாடகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவதாகவே இருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களை தடுக்கவில்லை என்று காவல்துறையினர் கதறிக் கூறினாலும், ஊடகங்கள், இடிந்தகரை மக்களின் அவதியை பற்றி எழுதியே வருகின்றன.
இது காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஊடகங்களின் இந்தச் செய்தியை மறுக்கவும் வேண்டும். ஜெயலலிதா உத்தரவிட்டது போல, இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் வேண்டும். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல், காவல்துறையினர் விழித்தக் கொண்டு இருக்கின்றனர்.
ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை மறுப்பதற்காக, செய்தியாளர்கள் சந்திப்புக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜ் இன்று கூடங்குளத்தில் ஏற்பாடு செய்திருந்தார். செய்தியாளர்கள் கூட்டம் என்றதும், புகைப்படக் காரர்களும், வீடியோ கேமராமேன்களும், சென்றதும் செய்தியாளர்களைத் தவிர (ரிப்போர்ட்டர்கள்) வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று ஜார்ஜ் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள். வீடியோ எடுக்கக் கூடாது. புகைப்படம் எடுக்கக் கூடாது. ஆனால், செய்தியாளர்களை மட்டும் ஜார்ஜ் சந்தித்து பேசுவாராம், அதை அவர்கள் வெளியிட வேண்டுமாம்.
இது எதற்கென்றால், இன்று ஏதாவது ஒன்றை பேசி விட்டு, நாளை எதை வேண்டுமானாலும் மறுக்கலாமே… அதற்காகத்தான். தொலைக்காட்சி கேமராவில் பதிவாகி விட்டால், அதை மறுக்க முடியாதல்லவா ? அதற்காகத்தான்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், கூடங்குளத்தில் நிலைமை அமைதியாக உள்ளது. 144 தடையுத்தரவை நீக்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார். சட்டவிரோதமான நடவடிக்கைகள் இல்லையென்றால், பொதுமக்களை போலீஸ் துன்புறுத்தாது. சட்டத்தை மீறுபவர்கள் குறித்து, சட்டம் தன் கடமையைச் செய்யும். சாலையையும், செல்லும் பாதைகளையும் மறிக்கப்டுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கருதியே பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அத்தியாவசியப் பொருட்கள் செல்வதை காவல்துறையினர் தடுக்கிறார்கள் என்பது பொய். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது தனித்தனியே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அணு உலையை திறக்க முடிவு செய்திருக்கிறது. இதில் காவல்துறைக்கு எந்தப் பங்கும் இல்லை என்று தெரிவித்தார்.
இதை நேரடியாக ஒளிப்பதிவு செய்திருந்தால் தான் என்ன ? என்ன காரணமென்றால், காவல்துறையின் அட்டூழியங்களை ஒரு சில மனசாட்சியுள்ள பத்திரிக்கையாளர்கள் நேரடியாக கேள்வி கேட்டால், ஜார்ஜ் பொய் சொல்வது அம்பலமாகி விடுமே என்பதற்காகத்தான்.
இன்று மாலை சன் நியூஸ் செய்தியில் சன் டிவியின் மூத்த செய்தியாளர் ராம.செல்வராஜ் ஒரு செய்தித் தொகுப்பை வழங்கினார்.
கண்ணாடி அணிந்திருப்பவர்தான் ராம.செல்வராஜ்
தீவிரவாதிகளோடு உதயக்குமாருக்கு தொடர்பா ? என்பதுதான் அந்த செய்தியின் தலைப்பு. இது குறித்து நேரடியாக செய்தியை வழங்கிய ராம.செல்வராஜ், மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் மற்றும் சிங்கூர் கிராமங்களில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றதற்கு காரணம், அந்தப் போராட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியிருந்ததே. அந்த அடிப்படையில் கூடங்குளம் போராட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஊடுருவல் இருக்குமா என்பதை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்த போது, நக்சலைட்டுகள் ஊடுருவியிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முகிலன் என்பவர், நீண்ட நாட்களாக நக்சலைட் இயக்கத்தில் உள்ளார். இவர் கூடங்குளம் போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்து வருவதாக வந்த தகவலை அடுத்த போலீசார் அவரைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னால் ஊத்தங்கரையில் ஆயுதப்பயிற்சி பெற்ற நக்சலைட் இயக்கத்தினர் கைது செய்யப்பட்ட போது, அவர்களோடு கைது செய்யப்பட்டவர் சதீஷ் குமார் என்பவர். இவரும் கூடங்குளம் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கும் மாவோயிஸ்ட் இயக்கங்களோடு தொடர்பு இருக்கம் காரணத்தாலேயே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன், பத்திரிக்கையாளர்களை சந்தித்த கூடங்குளம் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார், தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், இந்தப் போராட்டத்தை இளைஞர்கள் வழி நடத்துவார்கள் என்று தெரிவித்திருந்தார். இவர் இளைஞர்கள் வழிநடத்துவார்கள் என்று குறிப்பிட்டது, நக்சலைட்டுகளையே என்று தெரிவிக்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். இந்தக் கோணத்திலும், கூடங்குளம் போராட்டத்தில் நக்சலைட்டுகளின் ஊடுருவல் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் என்று பேசினார் ராம.செல்வராஜ்.
முகிலன் என்பவர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர். சில காலம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் பணியாற்றி விட்டு, பிறகு அதிலிருந்து விலகி, தனியாக செயல்பட்டு வருபவர்.
சதீஷ் என்பவர் ஊத்தங்கரையில் கைது செய்யப்பட்டது உண்மைதான். அதன் பிறகு ஒரு சில ஆண்டுகள் சிறையில் இருந்தவர், வெளியில் வந்ததும் வெளிப்படையாகவே செயல்பட்டு வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்திலும், வழக்கறிஞர் அலுவலகத்திலும், இவரை அடிக்கடி காண முடியும். வெகு இயல்பாக வெளிப்படையாக செயல்படுபவர். மக்கள் பிரச்சினைகளைக் கையில் எடுத்து குரல் கொடுத்து வருபவர். சமீபத்தில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் சென்னையில் என்கவுன்டருக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட, இவர் கலந்து கொண்டு பேசினார்.
வன்னி அரசு, பல ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வருபவர். இவரை நக்சலைட் என்றால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரே நகைப்பார்கள். அந்த அளவுக்கு, வெளிப்படையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக தொடர்ந்து வெளிப்படையாக பணியாற்றிக் கொண்டு வருகிறார்.
வன்னி அரசு
இந்தச் செய்திகளெல்லாம், சன் டிவியின் மூத்த பத்திரிக்கையாளரான ராம செல்வராஜுக்கு தெரியாதா என்றால், தெரியாதுதான். பத்திரிக்கையாளராக இருப்பவரின் முதல் தகுதி, தகவல்களை சந்தேகப்படுவது. அதுவும், காவல்துறையினர் நம்மிடம் வழங்கும் தகவல்களை நிச்சயமாக சந்தேகிக்க வேண்டும். காவல்துறையினர் வேறு ஏதோ ஒரு தகவலையோ அல்லது உண்மையையோ மறைப்பதற்காகவே இப்படி ஒரு தகவல்களைத் தருகிறார்கள் என்று சந்தேகிப்பது ஒவ்வொரு பத்திரிக்கையாளரின் கடமை.
ஆனால் இது போன்ற சந்தேகங்கள் மூளை உள்ள பத்திரிக்கையாளர்களுக்குத்தான் வரும். ராம. செல்வராஜ் போன்றவர்கள் காவல்துறையின் கைக்கூலிகள். காவல்துறையினர் வழங்கும் பணத்தையும், சலுகைகளையும் எதிர்பார்த்து, அவர்களிடத்தில் கையேந்தி நிற்பவர்கள். மூளையும் சுயமரியாதையும் உள்ள ஒரு பத்திரிக்கையாளன், காவல்துறையிடம் பிச்சை எடுக்க மாட்டான். ஆனால், செல்வராஜுக்கு அதெல்லாம் இல்லாத போது, அவர் காவல்துறையினர் சொல்வதை அப்படியே ஒப்பிப்பார் தானே… ? அதனால், அவரைத் திட்டாதீர்கள்.
ராம.செல்வராஜ் சன் டிவியின் கிரைம் நிருபராக பல காலமாக பணியாற்றி வருகிறார். இதனால், இவருக்கு பல காவல்துறை அதிகாரிகளோடு நெருக்கமான தொடர்புகள் உண்டு. சமீபத்தில், ஒரு நட்சத்திர ஓட்டலில் விபச்சாரத் தடுப்பு போலீசார் ஒரு ரெய்டு நடத்தினார்கள். அந்த ரெய்டு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ராம.செல்வராஜுக்கு, அந்த வழக்கில் சிக்கிய ஒரு பெண்ணோடு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கம் இன்று வரை தொடர்கிறது. செல்வராஜுக்கு காவல்துறை அதிகாரிகளோடு உள்ள செல்வாக்கால், இவர்கள் இருவரும் ஜோடியாக எங்கு சென்றாலும் காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று நம்மாலும் செய்தி போட முடியும். ஆனால், ராம.செல்வராஜ் போல, பத்திரிக்கைத் தொழிலை பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழிமுறையாக நாம் பரர்க்கவில்லையே…
இப்படி ஒரு பொய்ச்செய்தி எத்தகைய பாதிப்பை உண்டு பண்ணும் என்பதை, தன்னைப் பற்றி இப்படி ஒரு செய்தி வந்தால்தான் ராம.செல்வராஜ் உணர்வார்.
அதுவரை, காவல்துறையினர் போடும் பிச்சைக்காசுக்காக, அவர்கள் சொல்வதை அப்படியே ஒப்பித்துக் கொண்டுதான் இருப்பார்.
aaaaa mais je vois, en fait tu veux nous mettre aussi dans le rouge pour qu;uqsro&on créer un groupe mdr, non franchement super le site, merci pour le lien!!