எதற்காக வாழ்த்துக்கள் ? அந்த விவகாரத்துக்குள் செல்வதற்கு முன்னால், சிரமம் பாராமல் கீழ்கண்ட இரண்டு கட்டுரைகளைப் படித்து விடுங்கள்.
படித்து விட்டீர்களா .. … மத்திய அமைச்சர் ஜெகதரட்சகனின் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி அனுமதி பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில், இக்கல்லூரியின் தாளாளரான ஜெகதரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் உள்ளிட்ட ஏழு பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றிய பல மூத்த மருத்துவர்கள், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றியது போல மத்திய ஆய்வுக்குழு வரும் அன்று நடித்து, அப்படி ஒரு நாள் நடித்ததற்காக 20 ஆயிரம் பணம் வாங்கியதும், பக்கத்து கிராமங்களில் இருந்த பொதுமக்களை அழைத்து, வெளி மற்றும் உள்நோயாளிகள் போல நடிக்க வைத்ததும் சிபிஐ தனது குற்றச்சாட்டுகளில் தெரிவித்து உள்ளது.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, இரண்டு பேட்ச் மருத்துவர்கள் படிப்பை முடித்து விட்டு வெளியேறி விட்டார்கள். சவுக்கு வாசகர்கள் இனி மருத்துவரிடம் சென்றால், எங்கே படித்தீர்கள் என்று தயங்காமல் கேளுங்கள். ஜெகதரட்சகனின் லட்சுமி நாராயணா அல்லது பாலாஜி மருத்துவக் கல்லூரி என்று சொன்னால், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுங்கள். காய்ச்சல் என்று சொன்னால் காது ஆபரேஷன் செய்வதற்கும், இருமல் என்றால் இதய ஆபரேஷன் செய்வதற்கும்வாய்ப்புகள் மிக அதிகம்.
சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதே இந்த வாழ்த்துக்களுக்கான காரணம். நமக்கு வேறு யார் வாழ்த்த சொல்ல வேண்டும் ? நமக்கு நாமே வாழ்த்து சொல்லிக் கொள்ளலாமே…
மத்திய அமைச்சர் ஜெகதரட்சகன் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவியவர். சத்யபாமா பொறியியல் கல்லூரி நடத்தும் ஜேப்பியார் போல, அந்தக்காலத்திலேயே கல்வித்தந்தை ஆனவர். அதிமுகவிலிருந்து வெளியேறி, வன்னியர்களுக்கென்று தனிக்கட்சி தொடங்கி நடத்திக் கொண்டிருந்தபோதுதான், 2006 என்று நினைவு திமுகவுக்குத் தாவுகிறார். கருணாநிதி ஜெகதரட்சகனை திமுகவில் சேர்த்துக் கொண்டது, வன்னியர் வாக்குகளை மட்டும் குறிவைத்தல்ல. கல்வித் தந்தை ஜெகதரட்சகனிடம் இருந்த அளவிட முடியாத பணமும் ஒரு காரணம்.
2ஜி ஊழலில் கருணாநிதியின் இரு குடும்பங்களுக்கும் வந்த பங்கில் ஒரு பெரும் தொகை, ஜெகதரட்சகனிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஜெகதரட்சகனுக்கு ஆண்டுதோறும் வரும் கணக்கிலடங்காத பணத்தில் 2ஜி பணத்தை சம அளவில் கலந்து, அதில் வரும் கலப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கித் தர வேண்டும் என்பதே கட்டளை என்று கூறப்படுகிறது.
2ஜி விவகாரம் வெளியான கடந்த இரண்டு வருடங்களாக, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் உதவியாளர்கள் ஆகியோர் குறைந்தது 400 தடவைக்கு மேல் டெல்லி சென்று திரும்பியிருப்பார்கள். இவர்கள் யாரும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யப்போவதில்லை. பிசினெஸ் கிளாஸ்தான். இன்றைய நிலவரப்படி பிசினெஸ் கிளாஸில் சென்னையிலிருந்து டெல்லிக்கு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா ? 35 ஆயிரம். ஒரு வருடத்திற்குள் பெரிய அளவில் விலை மாற்றம் இல்லை. அப்படியே வைத்துக் கொண்டாலும் சராசரியாக 30 ஆயிரம் ஆகியிருக்கும். இதைத் தவிரவும், இக்குடும்பத்தினர் டெல்லிக்குச் சென்றால், அங்கே ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அவர்களைத் தங்க வைப்பது, அவர்களுக்கு சொகுசு கார்களை ஏற்பாடு செய்வது ஆகிய அனைத்துச் செலவுகளையும் செய்வது ஜெகதரட்சகன்தான். வாய்கிழிய இவ்வளவு பேசும் கருணாநிதி, பாக்கெட்டிலிருந்து 10 பைசாவை எடுக்க மாட்டார் என்பது அவரோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். அதைத் தவறு என்றும் சொல்ல முடியாது. என்னால்தானே இவ்வளவு சம்பாதிக்கிறாய். செலவு செய் என்பதே அதன் காரணம்.
இவ்வாறு கடந்த இரண்டாண்டுகளாக போக்குவரத்து மற்றும் இதர செலவுகளைத் தவிர்த்து, ஜெகதரட்சகன் கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கேட்ட ஒரு பெரிய தொகையையும் கொடுத்திருக்கிறார் என்பதே திமுக வட்டாரத் தகவல். ஜெகதரட்சகனின் சொத்துக்கள் இரண்டே ஆண்டுகளில் எப்படி அசுரத்தனமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதே, இந்த கல்வித் தந்தை எப்படி ஊழல் சொத்துக்களை குவித்திருக்கிறார் என்பதற்கு ஒரு அற்புதமான உதாரணம்.
2009ல் 5.9 கோடியாக இருந்த ஜெகதரட்சகனின் சொத்து, இரண்டே ஆண்டுகளில் 2011ல் 64.5 கோடியாக, அதாவது 1092 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஒரு நபரின் சொத்து எப்படி இத்தனை வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மன்மோகன் சிங் கண்டுகொள்ளவில்லை. இந்த வளர்ச்சிக்கு காரணம், ஜெகதரட்சகனின் பாரத் பல்கலைகழகம். இந்தப் பல்கலைகழகத்தில் வழங்கப்படும் கல்வி வகைகளை மட்டும் பாருங்கள்.
இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து விளையும் கருப்புப் பணம்தான், கருணாநிதி குடும்பத்திற்கு செலவு செய்வதற்கும், நமக்கு தேர்தல் நேரத்தில் வழங்க லஞ்சமாகவும் திருப்பித் தரப்படுகிறது.
ஜெகதரட்சகனுக்கு இருக்கும் பணத்தினாலும், செல்வாக்கினாலும், சிபிஐ அதிகாரிகளையும், நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் விலைக்கு வாங்கி, இந்த வழக்கு குழிதோண்டி புதைக்கப்பட்டு, அந்தக் கல்லறையில் எப்போதோ புல் முளைத்திருக்கும். அந்த அளவு இந்த வழக்கில் பணம் தாராளமாக கரை புரண்டோடியது. அரசியல் குறுக்கீடுகளும் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது.
ஏனைய ஊழல் வழக்குகளைப் போலவே இந்த வழக்கிலும், ஜெகதரட்சகனின் மகன் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே. இந்த வழக்கிலிருந்து ஒரு விடுவிப்பு மனு (Discharge petition) போட்டோ, அல்லது இக்குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய (Quash petition) போட்டோ, ஜெகதரட்சகன் தப்பிக்கக் கூடும். அவருக்கு பாண்டிச்சேரி நீதிபதியும் உதவி செய்யக் கூடும். ஆனால், இந்த வழக்கு, பெரிய மருத்துவர்கள் என்று முகமூடி போட்டுக் கொண்டு வலம் வரும் பெரிய மனிதர்கள், 20 ஆயிரம் பணத்துக்காக, பேராசிரியர்களாக நடித்த அவலத்தையும், மருத்துவக் கல்லூரி என்ற பெயரில், போலி மருத்துவர்களை தயார் செய்து சமூகத்தில் உலவ விடும் நபர்களையும், கல்வி என்ற பெயரில் நடைபெறும் மோசடியையும், சந்திக்குக் கொண்டு வரும். ஜெகதரட்சகனுக்கு சிறிது காலத்துக்காவது தலைவலியை ஏற்படுத்தும்.
நம்முடைய தொடர்ந்த முயற்சிகளால், இந்த வழக்கை புதைக்கப்பட எடுக்கப்பட்ட முயற்சிகளை தடுப்பதில், நம்மால் முடிந்த சில நடவடிக்கைகள் மூலமாக தடுத்திருக்கிறோம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். ஜெகதரட்சகன் போன்ற பண முதலைகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், என்று யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்குவார்கள். பணம் பத்தும் செய்யும் என்றால் இவர்கள் பத்தாயிரம் செய்ய வைப்பார்கள். இதையும் தாண்டி, இவ்வளவு பெரிய பண முதலைகளை சட்டத்தின் முன் நிறுத்த நாம் உதவியாக இருந்திருக்கிறோம் என்பதில் நமக்குப் பெருமைதானே… ?
அரசியல் அழுத்தங்களையும், லஞ்ச அழுத்தங்களையும், மிரட்டல்களையும், சமாளித்து இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகளையும் இந்நேரத்தில் பாராட்டுவது நமது கடமை. நாடே ஊழல் போதையில் உழன்று கொண்டிருக்கும் நேரத்தில், நம்பிக்கை அளிக்கக் கூடிய சில அதிகாரிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள் ? முகம் தெரியாத அது போன்ற அதிகாரிகளே, நாம் நமது பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கான ஊக்கம். அது போன்ற அதிகாரிகளே, நமக்கு நம்பிக்கை அளித்து சோர்வடையாமல் காப்பாற்றுகிறார்கள். அந்த அதிகாரிகளே, ஜனநாயகத்தை இறந்து போகாமல் அரணாக காத்து நிற்கிறார்கள்.
அந்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களைச் சொல்வதோடு, நமக்கு நாமே வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வதில் தவறில்லைதானே ?
உண்மையாகவே நீங்கள் தைரியசாலிதான். ஆனால் மனைவி குழந்தைகளின் பாதுகாப்பு??.