எலிப்பி தர்மாராவ். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி.
1999ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆந்திர மாநிலத்தில் நியமிக்கப் பட்டு, 2000ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாறுதலில் வருகிறார்.
இந்த நீதியரசர்தான், பன்னாட்டு பகாசுர நிறுவனமான, நமது பூமியை வன்புணர்ச்சி செய்து கொண்டிருக்கும், ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட உத்தரவிட்டவர்.
இன்று இந்த நீதியரசர், சென்னை அண்ணாசாலையில் உள்ள, எஸ்கேப் திரையரங்கத்தில், அம்பேத்கர் தமிழ் படத்தை தனது குடும்பத்தோடு பார்த்திருக்கிறார்.
அவர் திரையரங்கிற்கு செல்லுகையில், பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லாமல், அவராகவே சென்று திரையரங்கில், சாமான்ய மக்களோடு மக்களாக டிக்கெட் வாங்கி படத்தை பார்த்திருக்கிறார்.
சாதாரண காவல்துறை ஆய்வாளர் செய்யும் பந்தாவை பார்த்திருப்பீர்கள். காவல்துறை ஆய்வாளரே பந்தா பண்ணும் போது, உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
மொத்த சமூகமும், நேர்மைக்கான விழுமியங்களை இழந்து அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஒரு சூழலில், எலிப்பி தர்மாராவ் போன்ற நீதிபதிகள் இப்படி எளிமையாக நடந்து கொள்வதைப் பார்க்கும் போது, மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்பிக்கை வருகிறது.
அநீதியை எதிர்த்து தொடர்ந்து போராட ஊக்கம் தருவது, எலிப்பி தர்மாராவ் போன்ற நீதிபதிகளே…
நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்களுக்கு சவுக்கு தனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது. உரிமையோடு, சவுக்கின் வாசகர்கள் சார்பாகவும், தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.