வெகு தூரத்தில் இருக்கும் ஈழ மக்களுக்காக மாநாடு நடத்தவார்கள், கொடி பிடிப்பார்கள், கோஷம் போடுவார்கள்… ஆனால், தப்படி தூரத்தில் பல ஆண்டுகளாக முகாம் என்ற பெயரில், கொடுஞ்சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்காக துரும்பைக் கூட எடுத்துப்போட மாட்டார்கள். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு மத்தியில், பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு முகாமில் உள்ள அகதிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை வைத்து இன்று பூந்தமல்லி முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதாகி சற்று முன் விடுதலையாகியுள்ளார் தோழர் வைகோ. அவரோடு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் தோழர் புகழேந்தியும், மே17 இயக்கத்தோழர் திருமுருகனும் கைதாகி விடுதலையாகியுள்ளனர்.

தோழர் வைகோ அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.