“அம்மா… இன்னைக்கு என்னை மிஸ் வெரி குட்னு சொன்னாங்கம்மா” என்று பள்ளியிலிருந்து துள்ளிக்கொண்டு வரும் குழந்தையை தாயோ தந்தையோ வாடி செல்லம் என்று அள்ளிக் கொஞ்சுவது பல வீடுகளில் நாம் பார்க்கும் ஒரு இயல்பான காட்சி. நம் வீடுகளிலும் இது போன்ற காட்சிகளை நாம் பார்த்திருப்போம். நமது குழந்தைகளையும் இதே போல அள்ளிக் கொஞ்சியிருப்போம். அந்தக் குழந்தைகள் அவர்கள் உலகத்தில் நடந்த பல்வேறு விஷயங்களை ஆர்வத்தோடு விவரிக்கையில் சற்று நேரம் நம் கவலைகளை விலக்கி வைத்து விட்டு, அவர்கள் உலகத்தில் நுழைந்து அவர்களோடு வாழ்ந்து வெளியே வருவோம்.
தினமும் பள்ளியிலிருந்து குழந்தை எப்போது வீடு திரும்பும் என்று ஆவலோடு எதிர்ப்பார்த்துக் காத்திருக்கையில், உங்கள் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து உள்ளோம் என்ற முதல் தகவலும், பிறகு குழந்தை இறந்து விட்டது என்ற தகவலும் வந்தால் நமக்கு எப்படி இருக்கும். இதுதானே நடந்தது குழந்தை சுருதி விவகாரத்தில் ?.
நமது அன்றாட வாழ்வில் விபத்துகள் என்பது சர்வ சாதாரணம். இன்று நடக்கும் போக்குவரத்து விபத்துக்களையே எடுத்துக் கொண்டால், பல விபத்துக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர்களைக் காவு வாங்குகின்றன. நம் எதிரிலோ பின்னாலோ வருபவர், தவறாக வண்டியை ஓட்டி வந்து நம்மை இடித்து அவரால் நமக்கோ நமக்கு நெருக்கமானவர்களுக்கோ உயிரிழப்போ அங்ககீனமோ ஏற்பட்டால் நாம் அவரைச் சும்மா விடுவோமா ? தவறாக ஓட்டி வந்தாலே சும்மா விடமாட்டோம். நன்றாக குடித்து விட்டு, நடக்க முடியாத நிலையில் வண்டியை ஓட்டி வந்து, நம் வண்டி மீது மோதி நம் குழந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்தால் அவரைச் சும்மா விடுவோமா ? அந்த நபரே இரண்டு மாதமாக வண்டியில் ப்ரேக்கே இல்லாமல் ஓட்டி வருகிறார் என்பது தெரிந்தால் என்ன செய்வீர்கள் அவரை ?
அவர் மீது வன்முறையை பிரயோகிப்பதை விட்டு விடுவோம். சட்டப்படி அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் ?
இந்திய தண்டனைச் சட்டம் இதுபோன்ற நேர்வுகளில் என்ன பிரிவை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.
304A. Causing death by negligence.—Whoever causes the death of any person by doing any rash or negligent act not amounting to culpable homicide, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
CLASSIFICATION OF OFFENCE
Punishment—Imprisonment for 2 years, or fine, or both—Cognizable—Bailable—Triable by Magistrate of the first class—Non-compoundable.
304-A என்ற சட்டப்பிரிவு என்ன கூறுகிறதென்றால், கவனக்குறைவான ஒரு செயலால் ஒருவர் மற்றொருவருக்கு மரணத்தை நேர்விப்பாரேயானால், அவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகிறது.
304 (ii) Whoever commits culpable homicide not amounting to murder shall be punished with 1[imprisonment for life], or imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine, if the act by which the death is caused is done with the intention of causing death, or of causing such bodily injury as is likely to cause death,
or with imprisonment of either description for a term which may extend to ten years, or with fine, or with both, if the act is done with the knowledge that it is likely to cause death, but without any intention to cause death, or to cause such bodily injury as is likely to cause death.
CLASSIFICATION OF OFFENCE
Para I
Punishment—Imprisonment for life, or imprisonment for 10 years and fine—Cognizable—Non-bailable—Triable by Court of Session—Non-compoundable.
Para II
Punishment—Imprisonment for 10 years, or fine, or both—Cognizable—Non-bailable—Triable by Court of Session—Non-compoundable.
304 (ii) பிரிவு ஒருவர் மற்றொருவருக்கு மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்றால் அல்லது ஒருவர் செய்யும் செயல் மரணத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும் (an act done with the knowledge that is likely to cause death, but without any intention to cause death, or to cause such bodily injury as is likely to cause death.) அல்லது மரணத்துக்கு இணையான கொடுங்காயத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும் ஒரு செயலை செய்தால் அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்பதே இந்தப் பிரிவு.
இரண்டு மாதங்களாக வண்டியில் ப்ரேக்கே இல்லாமல், நன்றாக குடித்து விட்டு வண்டியை ஓட்டி வந்து உங்கள் குழந்தைக்கு ஒருவன் மரணத்தை ஏற்படுத்தினால் அவனை 304-Aவில் கைது செய்ய வேண்டுமா அல்லது 304 (ii) வில் கைது செய்ய வேண்டுமா ? நீங்களே சொல்லுங்கள்.
இதுதான் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது. மாணவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி வாகனம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளத் தவறிய சீயோன் பள்ளியின் தாளாளர் மற்றும் நிர்வாகி விஜயன் அச்சிறுமி ஸ்ருதியின் மரணத்துக்கு முழுப்பொறுப்பாவார். நான் தாளாளர்தானே பேருந்து எப்படி ஓடுகிறது எந்த நிலையில் இருக்கிறது என்பது தனக்குத் தெரியாது என்று அவர் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு பள்ளிக்காக மாணவர்களை அழைத்து வருவதற்காக ஓடும் ஒரு வாகனம் எந்த நிலையில் இருக்கிறது, எப்படிச் செயல்படுகிறது என்பது ஒரு பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பே. வாகனத்தைப் பற்றி எனக்குத் தெரியாது என்று வண்டி ஓட்டத் தெரியாத, லைசென்ஸ் இல்லாத ஒரு நபரை ஓட்டுனராக நியமித்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா ?
அந்த வகையில் சீயோன் பள்ளியின் தாளாளர் விஜயன், சிறுமி சுருதியின் மரணத்திற்கு முழுப் பொறுப்பாவார். ஏனென்றால், ஒவ்வொரு வாகனமும், எப்.சி என்று அழைக்கப்படும் பிட்னெஸ் சர்ட்டிபிகேட் வாங்க வருடா வருடம் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குச் செல்லும்போது, யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கணக்கிட்டு அந்தத் தொகையைத் தருவது பள்ளி நிர்வாகமே. ஆர்.டிஓவுக்கான லஞ்சத்தை வண்டியின் ஓட்டுநரோ, கிளினரோ, தரப்போவதில்லை. ஒரு மனிதன் லஞ்சம் எப்போது கொடுப்பான் ? தன்னிடம் உள்ள குறையை மறைக்கவும், ஓட்டைகளைச் சரிசெய்யவும்தானே கொடுப்பான். ஆதலால், பள்ளியின் தாளாளர் விஜயனுக்கு அவருடைய பள்ளி வாகனம், முழு உறுதித்தன்மையோடு அல்லது முழுக்க முழுக்க சரியாக இல்லை என்பது நன்கு தெரியும். அவருக்கு லஞ்சம் கொடுப்பதில் எந்த தயக்கமும் இருக்காது. லட்சக்கணக்கில் நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கும் தொகையில், ஆர்டிஓ அலுவலகத்துக்கு கொடுக்கப்படும் லஞ்சத்தை வசூலித்து விடுவார்.
ஆக, அந்தப் பள்ளியின் தாளாளர், வண்டியின் ஓட்டுநர், கிளீனர், வண்டி சரியாக உள்ளது என்று சான்றளித்த மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகிய அனைவர் மீதும் “ஒருவர் செய்யும் செயல் மரணத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும், அல்லது மரணத்துக்கு இணையான கொடுங்காயத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும் ஒரு செயலை செய்தால் அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும்“ என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதானே முறை ?
சிறுமி சுருதி மரணமடைந்ததும் பொதுமக்கள் கொதிப்படைந்து பள்ளி வாகனத்தைக் கொளுத்தினார்கள். கடையடைப்பு நடத்தினார்கள். அந்தப் பகுதியே கொதிப்படைந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய பென்ச் திடீரென்று ஆவேசமடைந்து தானாக முன்வந்து இவ்வழக்கை கையில் எடுத்து, அரசு அதிகாரிகளை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
பொதுமக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட தமிழக அரசு, உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகி உள்ளிட்டவர்களை கைது செய்தது. இது குறித்து நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சீயோன் பள்ளியின் நிர்வாகி விஜயன் உள்ளிட்டோர் இன்று சிறையில் இருக்கிறார்கள்.
இச்சம்பவம் ஏற்படுத்திய அதிர்சி அடங்குவதற்குள் ஏற்பட்ட அடுத்த சம்பவம் சிறுவன் ரஞ்சனின் மரணம். சிறுமி சுருதியின் மரணத்தை விட மோசமான மரணம் ரஞ்சனின் மரணம்.
சிறுவன் ரஞ்சன் அவர்கள் பெற்றோர்களின் முதல் குழந்தை. செல்லம் என்றால் அப்படி ஒரு செல்லம். திரைப்பட இயக்குநரான அவன் தந்தை ஒரு நாளைக்கு மூன்று வேளை அவனோடு போனில் பேச வேண்டும். அவன் படித்ததோ சென்னை நகரின் மிக மிகப் பிரபலமான ஒரு பள்ளியில். பத்மா சேஷாத்ரி பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைப்பது என்றால் ஒவ்வொரு பெற்றோருக்கும் தாங்கள் பிள்ளையைப் பெற்றதே இதற்காகத்தானோ என்று உவகையடையும் அளவுக்கு புகழ் பெற்ற ஒரு பள்ளிக்கூடம்.
பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி என்று அழைக்கப்படும் ராஜலட்சுமி பார்த்தசாரதி தமிழகத்தின் பார்ப்பன அதிகார மையத்தின் முக்கியப்புள்ளியாகத் திகழ்ந்து வருபவர். அந்த அதிகார மையத்தில் இருப்பதால், இவரின் செல்வாக்குக்கு குறைவே இல்லை.
அவர் எப்படிப்பட்ட தில்லாலங்கடி என்பதை அவரது பள்ளியின் இணையத்தளத்தில் அவர்களே எழுதியிருக்கிறார்கள் பாருங்கள்.
Missionary Zeal, visionary focus, indefatigable energy, indomitable will, innovative outlook, phenomenal memory, extraordinary ideas, fearless outlook, constructive criticism, exuberant creativity, ebullient spirit, implicit faith in God, explicit opinion, brutal frankness are some of the salient features of the woman in a millennium, a global educationalist and a universal human being. This attempt is after all a humble description of Vidya Seva Ratnam Dr. Mrs. Y.G. Parthasarathy, fondly called Rashmi by journalists and Rajamma by her dear friends and relatives.
Not many know that her full name is Rajalakshmi Parthasarathy, for this doyen of Chennai’s cultural circles identifies herself as, quite simply, Mrs. YGP (which itself is a short way of saying her husband YG Parthasarathy’s name). But not for one moment can it be concluded that she is the type who is contented with role-playing – here’s a woman who scripts her own life and if she is happy being called the Mrs., its because she has no time for isms of any kind. Now a grand old lady who is articulate as she is passionate about her ideals, she may be aging in chronological terms but she’s as young at heart as her children. As the founder, trustee, formerly Principal and presently Dean and Director the legendary inspiration of one of Chennai’s best-loved premier schools – the PSBB, she obviously treats her job as a part of herself.
It wasn’t all that simple always but Mrs. YGP has never been one to choose the easy way. Granddaughter of Dewan Bahadur T. Rangachari, she wasn’t even expected to graduate. But to every ones surprise she went on to be the first woman P.G. Diploma holder in Journalism (with Distinction as well). And then, still testing the ground, she caused a minor (well, it seems that way now) upheaval in the family by joining The Mail as a journalist. In the year 1948, she decided to marry a civil servant and theatre personality Y.G.Parthasarathy. Those were the days of consistent exposure to the finer aspects of Indian culture and stalwarts like M.S.Subbulakshmi and Bade Gulam Ali Khan graced Mrs.YGP’s memories with their unforgettable talent in their home at Sait colony, Egmore.
After her marriage she continued with her work joining The Hindu, meeting and interviewing people like even Indira Gandhi, widening her perspectives and unknowingly honing her skills for her eventual cause. The innate flair in her for writing propelled her to take up journalism with gusto and she wrote under the pen name ‘Rashmi’. she wrote for The Hindu and the Tamil weekly ‘Kumudam’. Journalism was a preparation for her larger mission i.e., education.
அவரைப் பற்றி எழுதியுள்ள புகழுரையை மொழிபெயர்க்கலாம் என்றால் தலை சுற்றுகிறது.
Missionary Zeal, visionary focus, indefatigable energy, indomitable will, innovative outlook, phenomenal memory, extraordinary ideas, fearless outlook, constructive criticism, exuberant creativity, ebullient spirit, implicit faith in God, explicit opinion, brutal frankness are some of the salient features of the woman in a millennium, a global educationalist and a universal human being. இந்தப் பத்தியை மீண்டும் ஒரு முறை படித்தீர்களென்றால் இவர் எவ்வளவு பெரிய தில்லாலங்கடி என்பது உங்களுக்குப் புரியும்.
இவ்வளவு திறமை பார்த்தீர்களா
இவர் உமன் ஆப் தி மில்லனியம் என்றால், புரட்சித் தலைவி அம்மா யார் ? அம்மாவின் அடிமைகள் இந்த வரிகளை கூர்ந்து கவனிக்கவும். அம்மா இருக்கையில் இன்னொரு உமன் ஆப் தி மில்லனியமா ?
இப்படிப்பட்ட தில்லாலங்கடியான ராஜலட்சுமி அவர் நடத்தும் பள்ளியை எப்படி நடத்த வேண்டும் ? உலக நாடுகளிலேயே தலைச்சிறந்த பள்ளியாக அல்லவா நடத்த வேண்டும் ? மாணவர்களை வாட்டி வதைக்காமல், அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கி அவர்களை பத்திரமாக பாதுகாத்து, நல்ல கல்வியை அளித்து, நாட்டிலேயே தலைச்சிறந்த பள்ளியாக அல்லவா இதை உருவாக்கியிருக்க வேண்டும் ?
பத்மா சேஷாத்ரி பள்ளி மத்திய அரசின் சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தின் படி நடத்தப்படுவது. சிபிஎஸ்ஈ துறை 31.05.2006 அன்று எல்லா சிபிஎஸ்ஈ பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்புகிறது. அந்தச் சுற்றறிக்கையில், ஒவ்வொரு பள்ளியிலும் ஹெல்த் கிளப் என்ற ஒன்றைத் தொடங்க வேண்டும் என்றும், அந்த ஹெல்த் கிளப்பில் மாணவர்களுக்கான உடற்பயிற்சி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தெந்த வகுப்புகளுக்கு என்னென்ன பயிற்சிகள் என்று அதில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, 1 முதல் 4ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு என்னென்ன பயிற்சிகள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கல்விப் பாடம் தொடங்குவதற்கு முன்பு ஆரம்பக்கட்ட உடற்பயிற்சிகள், பிராணயாமம், யோகாசனம், ட்ரில், ஏரோபிக்ஸ் மற்றும் ஓட்டம்.
நீச்சல் பயிற்சி என்பது 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே. இது சிபிஎஸ்ஈ தலைமையகத்தின் சுற்றறிக்கை. இந்தச் சுற்றறிக்கையை பின்பற்றாவிட்டால், சிபிஎஸ்ஈ அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அபாயம் உண்டு.
ஆனால் தில்லாலங்கடி ராஜலட்சுமியின் பள்ளியில் என்ன நடைமுறை தெரியுமா ? மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கே நீச்சல் கட்டாயம். சில மாணவர்களுக்கு தண்ணீரைக் கண்டால் அலர்ஜி என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போன்ற மாணவர்கள், நீச்சல் பயிற்சியை தவிர்க்க வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட மாணவனுக்கு தண்ணீர் அலர்ஜி என்று மருத்துவரின் சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே அந்த மாணவனுக்கு விலக்கு அளிக்கப்படும்.
மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி கட்டாயம் என்பதை பள்ளிக் காலண்டிரில் அச்சடித்தே வினியோகித்திருக்கிறார் தில்லாலங்கடி ராஜலட்சுமி.
சரி. நீச்சல் பயிற்சி கட்டாயம் என்றே வைத்துக் கொள்வோம். ஒரு பள்ளியில் நீச்சல் பயிற்சி வழங்குகையில் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன என்பது குறித்து, 2004 ஜுலையில் சிபிஎஸ்ஈ நிறுவனம், அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில் விளையாட்டு மைதானங்கள் பற்றிய பகுதியில் கீழ்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டள்ளன.
Safety in the Playground
1. Is your playground safe for the students to play games? Are they being maintained well?
2. Who ensures that there are no hazardous materials like rusted nails etc., on the ground that will physically hurt them?
3. Do you have a swimming pool? Have you taken adequate precautions for the safety of the students? Are lifeguards available to help the students?
4. What management systems you have in place to meet any emergency?
இதில் மூன்றாவது கேள்வியைப் பாருங்கள். உங்கள் பள்ளியில் நீச்சல் குளம் உள்ளதா ? மாணவர்களின் பாதுகாப்புக்காக போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்களா ? போதுமான உயிர்பபாதுகாவலர்கள் (Life guards) உள்ளனரா ? லைப் கார்ட்ஸ் என்றால் என்னவென்பதை யூட்யூபில் பே வாட்ச் என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த தில்லாலங்கடி ராஜலட்சுமி படித்தவர்தானே. படிக்காமல்.. அவர்தான் உமன் ஆப் தி மில்லனியம் ஆயிற்றே.. இந்த சுற்றறிக்கையைப் படித்து விட்டு பின் என்ன ………….. க்கு நீச்சல் குளத்தையும், பயிற்சி உட்பட அத்தனை விஷயங்களையும் அவுட்சோர்ஸ் செய்தார் ராஜலட்சுமி ?
ஆம் தோழர்களே.. பத்மா சேஷாத்ரி பள்ளியில் உள்ள நீச்சல் குளம், அதன் பராமரிப்பு, பயிற்சி ஆகிய அத்தனையும் அவுட்சோர்ஸ் செய்துள்ளார் இந்த ராஜலட்சுமி என்றால் நெஞ்சம் கொதிக்கிறதா இல்லையா ? அவுட்சோர்ஸ் செய்துவிட்டு பின்னர் எதற்காக லட்சக்கணக்கில் பெற்றோர்களிடம் நன்கொடை வாங்க வேண்டும் ? அவுட்சோர்ஸ் செய்த ஒரே காரணத்துக்காக இந்தக் கிழவியை சிறையில் தள்ள வேண்டாமா ?
தில்லாலங்கடி ராஜலட்சுமியைப் பார்த்து சவுக்கு ஒன்றே ஒன்றைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறது. ராஜலட்சுமி… உங்கள் மகன் ஒய்.ஜி.மகேந்திரன் இதே போல ஒரு பள்ளியின் நீச்சல் குளத்தில் இறந்து கிடந்தால் பொறுத்துக் கொள்வீர்களா ? உங்கள் மகன் ஒய்.ஜி.மகேந்திரனின் உயிரைப்போன்றதுதானே சிறுவன் ரஞ்சனின் உயிரும் ?
இந்தப் பள்ளி நிர்வாகம் செய்த மற்றொரு அயோக்கியத்தனம் என்ன தெரியுமா ? சிறுவன் இறந்ததும் அவனுக்கு காக்காய் வலிப்பு நோய் இருக்கிறது என்று ஒரு வதந்தியைப் பரப்பி விட்டார்கள். இது பத்திரிக்கையாளர்கள் மூலமாக பரவத்தொடங்கியது. ஆனால், விசாரணையில் இந்த விசாரணை வெளியே வரும் என்பது தெரிந்ததும் ப்ளேட்டை அப்படியே திருப்பிப் போட்டார்கள். அதாவது ரஞ்சன், நீச்சல் பயிற்சியின் போது நீச்சல் குளத்தின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லைக்கு சென்று திரும்பி விட்டு, மீண்டும் இரண்டாவது முறை செல்கையில் களைப்பு காரணமாக மயங்கி விழுந்தானாம். உடனே அருகில் இருந்த பயிற்சியாளரும் மாணவர்களும் அவனை தூக்கி முதலுதவி செய்தபோது கூட அம்முயற்சிகள் பலனிக்காமல் அவன் இறந்து விட்டானாம்.
சிறுவன் ரஞ்சன் கடந்த இரண்டாண்டுகளாக நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவன். அவன் இறந்த அன்று காலை கூட, பள்ளிக்குச் செல்லும் முன், “அப்பா ஜாலி.. இன்னைக்கு ஃபர்ஸ்ட் பீரியடே ஸ்விம்மிங்” என்று சொல்லி விட்டுத்தான் சென்றிருக்கிறான்.
அப்பள்ளியின் முதல்வர் இந்திரா வைத்தியநாதன் இந்து நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், “ரஞ்சன் பள்ளிக்கு வந்தபோது நன்றாகத்தான் இருந்தான். மூன்றடி பகுதியில் அவன் நீச்சலடித்தபோது இருமத் தொடங்கினான். உடனே அவனைஅருகில் உள்ள கே.எம்.நர்சிங் ஹோமுக்கு எடுத்துச் சென்றோம். பிறகு விஜயா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். நாங்கள் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தோம். நீச்சல் பயிற்சியின் போது வகுப்பு ஆசிரியர், உயிர்க்காப்பாளர், மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் அருகில் இருந்தனர்.
அன்று என்ன நடந்தது என்றால், நீச்சல் பயிற்சி முடிந்து அனைவரும் வகுப்புக்கு திரும்பியிருக்கின்றனர். வகுப்புக்குச் சென்று மாணவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்தபோது ஒருவர் குறையவே மீண்டும் நீச்சல் குளத்துக்கு சென்று பார்த்தபோது ரஞ்சன் இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது.
தண்ணீரில் மூழ்கும் நபரை உடனடியாக வெளியே எடுத்து முதலுதவி செய்தால், உயிர் காப்பாற்றப்படும் என்பது, அடிப்படை மருத்துவ உண்மை. முதலுதவி செய்தோம் என்று சொல்லுவதே பச்சைப்பொய்.
சிறுவன் ரஞ்சனின் உடல் விஜயா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டும் கூட, பத்மா சேஷாத்ரி நிர்வாகத்தினரின் அயோக்கியத்தனம் ஓயவில்லை. கவலையோடு கதறியபடி குழுமியிருந்த ரஞ்சன் குடும்பத்தினரிடம், புகார் கொடுத்தால் போஸ்ட் மார்ட்டம் செய்வார்கள். அதனால் புகார் கொடுக்காமல் உடலை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேசியிருக்கிறார்கள். அவர்கள் மறுக்கவே, அடுத்த ஆலோசனையாக, நீச்சல் பயிற்சியாளரின் கவனக்குறைவால் ரஞ்சன் இறந்து விட்டான் என்று புகார் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால் ரஞ்சன் பெற்றோர், என் மகனின் மரணத்துக்கு காரணமானவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருக்கின்றனர்.
சீயோன் பள்ளியின் தாளார் விஜயனை இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 304 (2)ன் கீழ் கைது செய்து சிறையிலடைத்த சென்னை மாநகரக் காவல்துறையின் நடவடிக்கைகள் நியாயமானது மட்டுமல்ல… பாராட்டத்தக்கதும் கூட.
இப்படி நியாயமாக நடவடிக்கை எடுத்த திரிபாதி பத்மா சேஷாத்ரி பள்ளி விஷயத்தில் ஏன் இத்தனை குளறுபடிகளை அரங்கேற்றினார் ? ராஜலட்சுமியிடம் சரிபாதி பெற்றாரா திரிபாதி என்பது தெரியவில்லை. அந்த நீச்சல்குளத்தை ராஜலட்சுமி அவுட்சோர்ஸ் செய்தபோது, அந்த காண்ட்ராக்டை எடுத்த ராஜசேகரன், அருண்குமார், ரங்காரெட்டி, குளத்தை சுத்தம் செய்யும் ரவி மற்றும் பயிற்சியாளர் ரவிச்சந்திரன் ஆகியோரை இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 304Aன் படி வழக்கு பதிவு செய்து கைது செய்து, அன்று மாலையே ஜாமீனில் விடுவித்தது சென்னை மாநகர காவல்துறை.
பொது மக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் அழுத்தம் காரணமாக மறுநாள் இரவு ஷீலா ராஜேந்திரன் அதே பிரிவில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தன் வயிற்றுப் பிழைப்புக்காக குளத்தை சுத்தம் செய்யும் ஒருவர் எப்படி சிறுவன் ரஞ்சனின் மரணத்துக்கு பொறுப்பாக முடியும் ? சரிபாதிக்கு … மன்னிக்கவும் திரிபாதிக்கு எல்லா மனிதர்களுக்கும் இருக்க வேண்டிய மூளை என்ற பொருள் இருக்கிறதா இல்லையா ? நீச்சல் குளத்தை கழுவுச் சுத்தம் செய்து தன் வாழ்க்கையை ஓட்டும் ஒருவன் சிறுவன் ரஞ்சன் சாவுக்கு எந்த வகையில் பொறுப்பாவான் ? அவன் கைது செய்யப்பட்டால், அது தொடர்பான வழக்குச் செலவுகளுக்கு என்ன செய்வான் என்பதை கொஞ்சமாவது யோசித்தாரா திரிபாதி ?
வங்கியைக் கொள்ளையடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஐந்துபேரை இருட்டறைக்குள் சுட்ட வீரர்கள் திரிபாதிக்கும், சண்முக ராஜேஸ்வரனுக்கும், ஒரு கிழவியைக் கைது செய்யத்துப்பில்லை. கைது செய்ய துப்பில்லாமல் இல்லை. கைது செய்தால் ஜெயலலிதா துப்பி விடுவார் என்ற அச்சமே காரணம். நியாயமாக நடவடிக்கை எடுத்து, 304 (2)ன் கீழ் வழக்கு பதிவு செய்து, ராஜலட்சுமியையும், ஷீலா ராஜேந்திரனையும் புழல் சிறையில் அடைத்தால், சண்முக ராஜேஸ்வரனின் இடத்தில் வேறு இணை ஆணையரும், திரிபாதி இடத்தில் வேறு ஆணையரும் அல்லவா வந்து விடுவார்கள் ? அதற்குப் பதிலாக நீச்சல் குளத்தை சுத்தம் செய்பவனைக் கைது செய்து, உண்மைக் குற்றவாளியைக் கைது செய்தால் அவர்கள் பதவி காப்பாற்றப்படும் அல்லவா ? என்ன ஒரு பிழைப்புவாதம் ? நாயும் பிழைக்குமையா இந்த பிழைப்பு.
கதறி அழும் அந்தப் பெற்றோரின் முகத்தைப் பாருங்கள். இரவில் உறங்க முடிகிறதா உங்களால் ? உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா ? ஐந்து பேரை படுகொலை செய்து விட்டு, எவ்வித உறுத்தலுமில்லாமல் நடமாடும் உங்களுக்கு எப்படி உறுத்தும். பதவிக்காக கொலையும் செய்யத் தயங்காத உங்களிடம் மனசாட்சியைப் பற்றிப் பேசுவது சவுக்கின் தவறுதான்.
ராஜலட்சுமியைக் கைது செய்ய வேண்டும் என்று சொன்னால், சீறுகிறார்கள் சில தோழர்கள். சவுக்குக்கு சாதி வெறி. ஒரு வயதான பெண்மணியை இப்படிக் கைது செய்யச் சொல்கிறாயே இது நியாயமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். ராஜலட்சுமி மீது சவுக்குக்கோ, தமிழக மக்கள் உரிமைக் கழகத்திற்கோ கொடுக்கல் வாங்கலும் கிடையாது. வாய்க்கா தகராறும் கிடையாது. ராஜலட்சுமி வயதானவர்தான். யாரும் மறுக்கவில்லை. இந்த வயதில் அவர் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு, வீட்டில் ஓய்வெடுத்திருக்க வேண்டும். விடாப்பிடியாக பள்ளி நிர்வாகத்தை தொடர்ந்து நான்தான் பார்ப்பேன் என்று பிடிவாதம் பிடித்து, சமச்சீர் கல்விக் குழு உறுப்பினராகப் போட்டால், அதில் கலந்து கொண்டு, சமச்சீர் கல்வி வந்தால் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்று அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தால், நடந்த குற்றத்திற்கு பொறுப்பேற்று சிறைக்குத்தான் செல்ல வேண்டும். அவர் நிர்வாகியாக இருப்பதால் அவர்தான் செல்ல வேண்டும். அவருக்குப் பதில் வேறு யார் செல்ல முடியும் ?
ஜெயலலிதா ஔவையார் விருது கொடுத்தபோது இனித்த முகத்தோடு அதை வாங்கியவர், சிறுவன் மரணம் என்றதும் ஓடி ஒளிந்து கொள்கிறார். முதுமை என்ற போர்வையை போர்த்திக் கொண்டு தப்பிக்கப் பார்க்கிறார்.
சிறுவன் ரஞ்சனின் மரணம் குறித்து 304 (2)ன் படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இவ்வழக்கில் ராஜலட்சுமியை குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்றும், உண்மைக் குற்றவாளிகக் கைது செய்யாமல், உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யாமல் தன் கடமையிலிருந்து தவறிய கே.கே.நகர் காவல்நிலைய ஆய்வாளர் மீது துறை நடவடிக்கை எடுக்கக்கோரி பொது நல வழக்கு ஒன்று தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது வியாழனன்று விசாரணைக்கு வர உள்ளது.
சிறுமி சுருதி. சிறுவன் ரஞ்சன். இவர்களின் இருவரின் உயிரில் யாருடைய உயிர் மதிப்பு மிக்கது யாருடைய உயிர் மதிப்பு குறைந்தது ? இருவருடைய உயிரும் விலை மதிக்க முடியாததுதான் அல்லவா ? இருவருமே தங்கள் பெற்றோருக்கும், இச்சமுதாயத்திற்கும் விலை மதிக்க முடியாது சொத்துக்கள் அல்லவா ? பிறகு ஏன் இந்தப் பாரபட்சம் ? ஏன் இந்த உயிர்ப்பேதம் ?
1 Response
[…] இறந்தது குறித்து, சவுக்கில் உயிர்ப்பேதம் என்ற கட்டுரையில் விரிவாக […]