சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா வரும் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு, மாநில முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு தலைமை நீதிபதியால் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கை சந்தித்து வரும் ஒருவர் எப்படி நீதிமன்ற விழாவில் கலந்து கொள்ளலாம் என்று திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இத்தகவல் அறிந்த ஜெயலலிதா, விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்து, விழாவுக்காக ஒரு கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளாராம்.
இதனிடையே, ஜெயலலிதாவை எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வைக்க நீதிமன்றத் தரப்பில் முயற்சி நடந்து வருகிறது. விழா நடந்து முடியும் வரை அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தாத வகையில், பொது நல வழக்குகளை நம்பர் பண்ண வேண்டாம் என்று நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா ஒரு வேளை விழாவுக்கு வருகை தந்தால், கருப்புக் கொடி காட்டுவது பற்றி, திமுக வழக்கறிஞர் அணி யோசித்து வருகிறது..